Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை.

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை.

பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அன்று மாலை அரச வானொலியில் வெளியான தகவலின் அடிப்படையில் அச்செய்தி வரையப்பட்டிருந்தது. தவறான செய்தி வெளியானமைக்கு வருந்துகிறோம்.

கொழும்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதினக் கூட்டம் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையிலேயே நடைபெற்றது. பார்படோஸ் நாட்டில் தாங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங் கிருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றிருக்கிறார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

-Uthayan-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் ஏன் இன்னும் மகிந்தவை அன்புடன் "சனாதிபதி" மகிந்த என்று அழைக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் ஏன் இன்னும் மகிந்தவை அன்புடன் "சனாதிபதி" மகிந்த என்று அழைக்குது?

உதயன் எங்களைப் போல வெளி நாட்டில் இருந்து கொண்டு வரும் ஊடகமல்ல. அதற்கு பல நெருக்கடிகள் உண்டு. அதனால் தான் இப்படியாக சனாதிபதி என்று பதில் அளிக்கவேண்டிய நிலையில் அப்பத்திரிகை இருக்கிறது

அரசபடைகளினாலும் ஒட்டுப்படைகளினாலும் அப்பத்திரிகையின் ஊழியர்கள் பலர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டும் யாழ்ப்பாண மக்களுக்கு உண்மைச் செய்திகளை வெளியிடுகிறது.

வெளினாடுகளிலுக்கு ஒடி ஒளித்துக் கொண்டிருக்கும் (என்னையும் சேர்ந்துத்தான் சொல்கிறேன்) நாங்கள் இவ்வூடகத்தில் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

உதயன் ஏன் இன்னும் மகிந்தவை அன்புடன் "சனாதிபதி" மகிந்த என்று அழைக்குது?

அவர்கள் இருப்பது அமெரிக்கவில் இல்லை யாழ்ப்பாணத்தில்

  • தொடங்கியவர்

மகிந்த கோமாளி தான் ஆனால் நடுநிலையான கருத்துக்களை வெளியிடுவது தான் சிறந்த பத்திரிகை நிறுவனத்துக்கு அழகு அதை தான் உதயன் செய்கிறது.

Edited by யாழ்வினோ

அண்ணாச்சி நாடு திரும்ப விமானசேவைகள் இன்றி தவிக்கிறாரோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருக்கு பயம் தனது குறிபார்த்து சுடும் படையினர் தனது விமானத்தையே சுட்டு விடுவார்கள் என்டு. :unsure: :P :P

மகிந்து எங்காச்சும் போன இடத்திலை அசைலம் அடிச்சிட்டு அங்கினை நிண்டுட்டாரோ தெரியேல்லை.

  • தொடங்கியவர்

இலங்கை அணி கோப்பை எடுத்தால் நாட்டுக்கு திரும்பி வரும்போது விமான நிலையத்தில் கம்பளம் விரிப்பார்கள் அதில் நெஞ்சை நிமித்திக்கொண்டு நடந்து வரலாம் என்று கனவு கண்ட மகிந்தவுக்கு அவுஸ்ரேலியா அணியினர் வைத்தார்கள் ஆப்பு.

  • தொடங்கியவர்

இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்புவதற்கு விமானம் கிடைக்காமல் காத்திருப்பதாக வீரகேசரி ஒன் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்புவதற்கு விமானம் கிடைக்காமல் காத்திருப்பதாக வீரகேசரி ஒன் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

"நாடு திரும்புவதற்கு விமானம் கிடைக்காமல் ஜனாதிபதி காத்திருக்கிறார்" என்ற செய்தி வந்திட கூடாது என்று தான் மகிந்த பார்படோசில் இருந்து வேற நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் யாராச்சும் வெஸ்ரிண்டீஸ் அவசர பொலீசிண்ட போன் நம்பரை தந்து உதவியளா?? ஏனெண்டால் பாகிஸ்த்தான் அணி தோத்த உடன, அந்த நாட்டு பயிற்சியாளரை கழுத்து நெரித்து கொலை செய்தமாதிரி, இலங்கை அணி மண்ணை கவ்வின உடன, மகிந்தர் தோளிப போட்டிருக்கிற கோவ*** மன்னிக்கவும் துண்டால நெருச்சு கொண்டு இருப்பாங்களோ எண்டு புலனாய்க்கு சந்தேகமா இருக்களேய், பாடியை வேற மண் தோண்டி புதைச்சிட்டாங்களோ எண்டு வேற பயமா இருக்களேய்.... :(:)

மஹெ அம்மே மஹிந்த மாத்தையா புட்டுக்கிட்டாரா? எதற்கு நிதர்சத்தை தொடர்பு கொண்டு கேட்பமா? இல்லை வேண்டாம், பிறகு விளக்கப்படத்துடன் வில்லங்கமா சா விளக்கமா பதிலை சொல்லி விட்டுடுவாங்கள்... :):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிரச்சனையே உங்களுக்கு இல்லை மகிந்த கொழும்பு வந்து கொழும்பை சுற்றி பார்வையிட்டு விட்டார்.

அடுத்தமுறை இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிங்க தான் போய் இந்தக் காரியத்தில இறங்கனும்

வான்புலித் தாக்குதலில் சிக்கிய கொழும்பை சுற்றிப் பார்வையிட்ட மகிந்த

[புதன்கிழமை, 2 மே 2007, 20:55 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பு நகரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுற்றிப் பார்வையிட்டார்.

தலைநகர் கொழும்பில் இருக்கும் அரச தலைவர், கொழும்பை சுற்றிப் பார்த்தது குறித்து சிங்கள ஊடகங்கள் இன்று முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளன.

வான் புலிகளின் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச வெளிநாட்டில் இருந்தார்

http://www.eelampage.com/?cn=31631

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலித் தாக்குதலில் சிக்கிய கொழும்பை சுற்றிப் பார்வையிட்ட மகிந்த

[புதன்கிழமை, 2 மே 2007, 20:55 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தலைநகர் கொழும்பில் இருக்கும் அரச தலைவர், கொழும்பை சுற்றிப் பார்த்தது குறித்து சிங்கள ஊடகங்கள் இன்று முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளன.

http://www.eelampage.com/?cn=31631

:(:(:D

மகிந்தவை இப்படியே வெளிநாட்டில் வைத்திருப்பதென்றால் அங்கிருந்து புறப்படுகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் மீண்டும் கட்டுநாயக்கா மீது தாக்குதல் நடத்தினால் சரி. அவர் திருட்டுத்தனமாக இலங்கைக்குள் நுழைய வழியேற்படுத்த வேண்டும்.

Sri Lanka's losers return

Thursday, 03 May 2007

Sri Lanka's cricketers returned to Colombo on Thursday, after spending several days stranded in London.

Their scheduled flight with the Emirates Airlines was canceled after the carrier stopped flying to the island.

Instead they had to use a hastily arranged Qatar Airways flight to return to Colombo.

Qatar Airways is the cheapest of the carriers that fly to Colombo, and is usually exclusive to Sri Lanka's servant population that scrubs toilets in Middle Eastern homes. As such, it is not frequented by VIPs.

Meanwhile, elaborate ceremonies are being planned following a Sports Ministry announcement that according to 'intercepted radio communications' it was actually Sri Lanka that won the Cricket World Cup.

www.tamileditors.com

இப்ப லேட்டஸ்ட் ஆன செய்தி என்ன? மந்திக்குட்டி நாடு வந்து சேர்ந்துவிட்டதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.