Jump to content

97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்ற சண்­மு­கேஸ்­வரன்: சாதனை பயணம் பற்றி கூறியதென்ன..?


Recommended Posts

97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார்.

ஆண்­க­ளுக்­கான 10 ஆயிரம்  மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கேற்ற இரா­ணு­வத்தைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முத­லிடம் பிடித்தார். இதன்மூலம் நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்கு தகு­தி­ பெற்றுள்ளார்.



virakesari.jpg

தனது வெற்றி குறித்து ‘வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்டு’ க்கு பிரத்­தி­யே­க­மாக கருத்து தெரி­விக்­கையில்,

“இந்த வெற்றி எனக்கு  மிகுந்த உத்­வே­கத்தை தந்­தது. தெற்­கா­சியப் போட்­டியில் பங்­கு­கொண்டு இலங்­கைக்கு தங்கப் பதக்­க­மொன்றை பெற்­றுக் கொ­டுப்­பதே எனது இலட்­சி­ய­மாகும்.  இப்­போட்டி பிற்­ப­கல் ­வே­ளையில் நடை­பெற்­றமை ஓடு­வ­தற்கு கடி­ன­மாக இருந்­தது. எனது எதிர் போட்டியாளர்களுடன் கடுமையாக போராட வேண்டியிருந்தது. நானும் எதிர்­கா­லத்தில் மேலும் முன்­னேற்­ற­ம­டைந்து சிறந்த நேரப் பெ­று­தியில் ஓடி தேசிய சாத­னையை முறி­ய­டிக்க எதிர்­பார்த்­துள்ளேன்” என்றார்.

இப்­போட்­டியின் இரண் டாம் இடத்தை எம்.யூ. குமா­ரவும் மூன்றாம் இடத்தை குமார பண்டாரவும் பெற்றுக் கொண்டனர். 

https://www.virakesari.lk/article/62876

Link to comment
Share on other sites

தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை 

(சுகததாச அரங்கிலிருந்து எம்.எம்.சில்ஸெ்டர்)

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில்  பெண்களுக்கான  1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி  லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும். 

hiruni_celebrates.JPG

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார்.

கொழும்பு சுகததாச  விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது  தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது.

தேசிய சாதனை படைத்த நிமாலி

Nimali_liyanarachi_-_No_641.JPG

பெண்களுக்கான 1500  மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித்  தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42  செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர்.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம்

SAFREEN_AHAMED_-_TRIPLE_JUMP.jpg

போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். 

தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார்.

யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு

himasha_heshan_100_meter.JPG

கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார்.

முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா 

ANITHA_3RD_PLACE.JPG

நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால்  தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது.

அனிதாவுக்கு மூன்றாமிடம்  

DAKSHITHA_2ND_PLACE.JPG

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார்.

இறுதிக்கு முன்னேறிய பவிதரன்

PAVITHARAN.JPG

போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில்  காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற  பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார்.

100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம் 

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும்,  வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை 

பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது.

400 மீற்றர் ஓட்டப்போட்டி

himasha_heshan_100_meter.JPG

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அசத்திய ஹிருனி விஜேரட்ண

 

அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார். 

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார். 

https://www.virakesari.lk/article/62885

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.