Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரியும் அமேசான் காடு

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின் காப்புரிமை Getty Images

2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின் காப்புரிமை Getty Images

அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின்

https://www.bbc.com/tamil/global-49416771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை twitter/EmmanuelMacron

'புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' , ' புகை உயிரைக் கொல்லும்' - இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.

இப்போது ஏன் இந்தக் கதை என்கிறீர்களா?

காரணமாகதான் முகேஷின் நுரையீரல் எப்படி புகையால் பழுதடைந்ததோ... அதுபோல பூமியின் நுரையீரல் பழுதடைந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மிக மிக மோசமாக.

தெளிவாகவே சொல்லி விடலாம்.

பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.

என்ன நடக்கிறது?

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

#PrayForAmazon ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஏன் காட்டுத் தீ?

அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Reuters

இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.

மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.

"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.

பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, "பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்" கூறி இருந்தார்.

பழங்குடிகள்

இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான்.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஏன் நாம் கவலைக் கொள்ள வேண்டும்?

அமேசானில்தானே காட்டுத்தீ. இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @EmmanuelMacron

இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் ட்வீட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார்.

இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என ட்வீட் செய்துள்ளார்.

நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/global-49445166

  • கருத்துக்கள உறவுகள்

250-ml-bisleri-water-bottle-500x500.jpg

ஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்..

93a92f2d2dfaf34ed4d5121bc7f483c7--enviro

இனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.😢

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே...  பிராணவாய்வு  எனப்படும் . "ஒக்சிஜன்"   வழங்கும் காடு,  அமேசன் காடுகள்.
அங்கு... இன்றுவரை... கூட, மனிதரால் கண்டு பிடிக்கப் படாத உயிரினங்கள் வாழும்,
 பூமாதேவியின் வயிற்று பகுதியில்... தீ, பற்றி எரிவது... நல்ல சகுனம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் காட்டுத் தீ: காலநிலை மாற்றம் தொடர்பில் உலகில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ள விடயம்

முன்­னென்றும் இல்­லா­த­ வ­கையில் அமே­சனில்  பர­விக்­கொண்­டி­ருக்கும் காட்­டுத்தீ கால­ நிலை நெருக்­க­டி­யையும் உயிர்ப் பல்­வ­கை­மை­யையும் (Biodiversity) மேலும் மோச­ம­டை­யச் செய்யும் என்று விஞ்­ஞா­னி­களும் சுற்­றாடல் பாது­காப்பு குழுக்­களும்  கவ­லை­ய­டைந்­தி­ருக்கும்  நிலையில், அந்த நெருக்­கடி உலக ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­யாக இடம்­பி­டித்­தி­ருப்­பதைக் காணக்­கூடி­ய­தாகவும் உள்ளது.

"நிர்­மூலம் செய்­யப்­ப­டு­கின்ற எந்தக் காடுமே உயர்ப் பல்­வ­கை­மைக்கும் அதைப் ப­யன்­ப­டுத்­து­கின்ற மக்­க­ளுக்கும் ஒரு அச்­சு­றுத்­தலே. வளி­மண்­ட­லத்­திற்குள் பெரு­ம­ளவு காபன் போகி­றது என்­பதே திண­ற­டிக்­கின்ற அச்­சு­றுத்­த­லாகும்" என்று ஜோர்ஜ் மேசன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சூழ­லி­ய­லாளர் தோமஸ் லவ்ஜோய் 'நாஷனல் ஜியோ­கி­ரபிக்' தொலைக்­காட்சி சேவைக்கு தெரி­வித்தார்.

PRI_81211399.jpg

உலகின் மிகப்­பெ­ரிய வெப்­ப­மண்­டல மழைக்­கா­டான அமேசன், 'உலகின் சுவா­சப்பை' என்று வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. சுமார் 30 இலட்சம் உயி­ரி­னங்கள், தாவ­ர­ வகை­களின் வசிப்­பி­ட­மாக விளங்கும் அந்த காட்டில் பத்து இலட்சம் பழங்­குடி மக்­களும் வாழ்­கி­றார்கள். மழைக்­கா­டு­களின் பரந்­த­கன்ற பகுதி உலகின் சூழல் தொகுதியில்  (Ecosystem) பெரும் பங்கை வகிக்­கி­றது. ஏனென்றால், அவை வளி­மண்­ட­லத்­திற்குள் வெப்­பத்தை திரும்ப வெளி­வி­டாமல் உறிஞ்­சிக்­கொள்­கின்­றன. அத்­துடன் அவை காப­னீ­ரொக்சைட் வாயுவை சேமித்­து­ வைத்­துக்­கொண்டு ஒட்­சிசனை வெளி­வி­டு­கின்­றன. இதன் மூல­மாக கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைத் தணிக்கும் வகையில் குறைந்­த­ளவு காபன் வளி­மண்­ட­லத்தில் வெளி­யி­டப்­ப­டு­வது உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது. 

"உல­க­ளா­விய கால­நிலை நெருக்­க­டிக்கு மத்­தியில், ஒட்­சிசன் மற்றும் உயி­ரி­னப்­பல்­வ­கை­மையின் முக்­கிய மூலா­தா­ர­மாக விளங்கும் அமேசன் காடு­க­ளுக்கு  மேலும் சேதம் ஏற்­ப­டு­வதை  எம்மால் தாங்­கிக்­கொள்­ள­மு­டி­யாது. அமே­சனைப் பாது­காக்­க­வேண்டும்" என்று ஐக்­கிய நாடு கள் செய­லாளர் நாயகம் அன்­ரோ­னியோ குற்­றெரஸ் டுவிட்டர் சமூக ஊடகம் மூல­மாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

_108480666_deforestation.jpg

அமெ­ரிக்­காவின் தேசி­ய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் தர­வு­க­ளின்­படி ஒரு வரு­டத்­துக்கு முன்னர் இருந்த நிலைவ­ரத்­துடன் ஒப்­பி­டும்­போது இவ்­வ­ருடம் ஜன­வரி தொடக்கம் ஆகஸ்ட் வரை பிரே­ஸிலில் காட்டுத் தீ மூண்ட சம்­ப­வங்கள் 82 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. 2019 முதல் 8 மாதங்­களில் அந்த நாட்டில் மொத்­த­மாக 71,497 காட்டுத் தீ சம்­ப­வங்கள் பதி­வாகி­யி­ருக்­கின்­றன. 2018 இதே காலப்­ப­கு­தியில் 39,194 சம்­ப­வங்கள் பதி­வா­கின என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"கடந்த 12 மாதங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பிரேஸில் நாட்டின் அமே­சனில் காட்­டுப் ப­கு­திகள் 20–30 சத­வீ­தத்­தினால் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன" என்று சாவோ போலோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆராய்ச்­சி­யா­ள­ரான கார்லோஸ் நோப்றே ஜேர்­ம­னியின் டியூற்ஷே வெல்  தொலைக்­காட்­சிக்கு கூறினார்.

அமேசன் மழைக்­கா­டு­ களில் காட்­டுத்தீ வேக­மா கப் பர­வு­வ­தற்கு அர­சாங்க சார்­பற்ற அமைப்­புக்­களே காரணம் என்று பிரேஸில் ஜனா­தி­பதி ஜாய்ர் பொல்­சா­னாரோ சில தினங்­க­ளுக்கு முன்னர் குற்­றஞ்­சாட்­டி னார். ஆனால், அந்த குற்­றச்­சாட்டை சூழ­லி­ய­லா­ளர்கள் மறு­த­லித்­தி­ருக்­கி­றார்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்தே காட­ழிப்பு குறித்து அவர்கள் கவ­லை­ வெ­ளி­யிட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். காட­ழிப்­பையும் காட்­டுத்­தீ­யையும்  சுற்றாடல் பாது­காப்­புக்கு விரோ­த­மான அர­சாங்­கத்தின் கொள்­கை­களே தீவி­ரப்­ப­டுத்­தின என்று அவர்கள் கூறு­கி­றார்கள்.

அமேசன் காட்டுத் தீயை ஒரு சர்­வ­தேச நெருக்­கடி என்று கூறி­யி­ருக்கும் பிரான்ஸ் ஜனா­தி­பதி இமா­னுவேல் மக்றோன்,  "ஜி7 நாடுகள் பிரான்ஸில் நடை­பெறும் அவற் றின்   உச்­சி­ம­ா­நாட்டில் இந்த நெருக்­க­டியை அவ­ச­ர­மாக ஆரா­ய­வேண்டும்" என்று வலி­யு­றுத்­தி கேட்­டி­ருக்­கிறார். "எமது வீடு தீப்­பற்றி எரி­கி­றது; எமது கிர­கத்தின் ஒட்­சி­சனில் 20 சத­வீ­தத்தை உற்­பத்தி செய்­கின்ற சுவா­சப்பை தீப்­பி­டித்­தி­ருக்­கி­றது" என்று மக்றோன் டுவிட்­டரில் பதி­வு செ­ய்­தி­ருக்­கிறார்.

பிரான்ஸ் ஜனா­தி­ப­தியின் அந்த பதிவை கண்­டித்­தி­ருக்கும் பிரேஸில் ஜனா­தி­பதி, "பிரே­ஸி­லி­னதும் ஏனைய அமேசன் நாடு­க­ளி­னதும் உள்­வி­வ­கா­ரத்தை பயன்­ப­டுத்தி மக்றோன் தனிப்­பட்­ட­மு­றையில் அனு­கூலம் பெற முயற்­சிப்­பது கவலை தரு­கி­ றது. அவரின் கருத்­துக்­களின் உணர்ச்சி­வசத் தொனி பிரச்­சி­னையைத் தீர்க்க எதையும் செய்யப்போவதில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

190823-amazon-jungle-fire_16cbf66e89d_la

அமேசன்  மழைக்காடுகளில் சுமார் 60 சதவீதமானவை பிரேஸிலுக்கு சொந்த மானவை. அவை பாழாகுவது உலக கால நிலையிலும் மழைவீழ்ச்சியிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

காட்டுத் தீயினால் அழிந்துபோயிருக்கும் பகுதியின் பரப்பளவு இன்னமும் திட்ட வட்டமாக தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், காட்டுத் தீயின் விளைவான நெருக்கடி நிலை பிரேஸிலின் எல்லை களைக் கடந்து பெரூ, பரகுவே மற்றும் பொலிவியாவின் பிராந்தியங்களுக்கும் பரவியிருக்கிறது.

ECgLgvOXkAUYjfv.jpg

 

https://www.virakesari.lk/article/63398

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.