Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'கடவுளின்' துகளைத் தேடி ஒரு பயணம்.

Featured Replies

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம், எப்படி இங்கு வந்தோம்,உலகம் தோன்றியது எப்படி, மனிதரைக் கடவுள் படைத்தாரா, கடவுள் இருக்கிறார,அப்படியாயின் கடவுளை யார் படைத்தார் போன்ற பல விடை தெரியா வினாக்களுக்கு விடை காண வேண்டுமெனில் நாம் இந்தப் பிரபன்சம் பற்றிய சில அடிப்படையான விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபன்சமும் நாமும் இந்த உலகமும் உலகில் வாழும் அனைத்து சீவராசிகளும்,உலோகங்களும்,மூல

அற்புதன் நல்ல கட்டுரை, தகவலுக்கு நன்றி.

கடவுள் என்பது தாம் அறியாத ஒரு சக்தி என்கிறார்கள் பிறகு அதற்கு புனைவால் வடிவம் கொடுகிறார்கள் ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கு என்று மதங்களையும் கடவுளர்களையும் உருவாக்கிறார்கள்.பின்னர் எனது மதம் தான் உண்மையானது எனது கடவுள் தான் உண்டு என்று சண்டை பிடிகிறார்கள், மற்ற மதத்தவரை கொல்வது முதல் மற்றைய மதத்தை இழிவாக விமர்சிப்பது என மதச் சண்டைகள் தொடர் கதையாக இருகின்றன. மனிதனைக் கடவுள் படைத்தார் என்கிறார்கள்.பின்னர் மனிதன் கடவுளை வணங்க வேண்டும் என்கிறார்கள்.கடவுளை யார் படைத்தார் என்பதையோ, ஒரு சக்தி ஏன் எம்மைப் படைக்க வேண்டும் என்பதையோ அந்த சக்தியை வணக்குவதால் அதற்கு என்ன பயன் என்பதயோ இவர்கள் சிந்திப்பதாக இல்லை.எல்லாம் தாம் என்ன என்று அறியாத ஒரு சக்தியின் பெயரால் சொல்கிறார்கள் செய்கிறார்கள்.

எதோ ஒரு அறியாத சக்தி தான் இருக்கிறது என்று சொன்னால் பின் ஏன் இந்தப் புனை கதைகள் ,ஏன் புனையப்பட்ட ஒரு கடவுளை வணங்க வேண்டும் அதற்கு ஏன் ஒரு வடிவம் குடித்து கோவில் பூசை புனஸ்காரம் எல்லாம்.இவ்வறான கற்பனைகளில் எமது அறிவையும், நேரத்தையும் ,பொருளாதரத்தையும் செலவிட்டு வருவதால் தான் இன்றும் மேற்குலகே அறிவியல் ரீதியாக வளர்ந்து வருகிறது.காரணம் அவர்கள் அறிவியல் விருத்திக்கே முதன்மை குடுகிறார்கள். நாமோ பாடசாலையில் பெற்ற அடிப்படை அறிவியல் அறிவைப் பயன் படுத்திச் சிந்திப்பது கிடையாது.ஏனெனில் எமது பாடசாலைகளும் சுய சிந்தனையை வளர்ப்பது கிடையாது.கல்வித் திட்டமும் அரசியல் மயப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட கற்பனையான நம்பிக்கைகளை வளர்ப்பதிலையே முனைப்புச் செலுத்துகிறது.அவர்கள் பல பில்லியன் செலவு செய்து அணு ஆர்முடுகிகளை அமைக்கிறார்கள்.ஆய்வு மையங்களையும் பல்கலை கழகங்களையும் அமைக்கிறார்கள்.உலகெங்கும் இருக்கும் அறிவாளிகளை தமது பல்கலைக் கழகங்களிற்குள் வரவழைத்து ஆய்வுகளை மேற் கொள்கிறார்கள். நாமோ சாமியார் கழுக்கும் சாதிரிகளுக்கும் மதிப்புக் கொடுகிறோம்,கோவில் கட்டுவதிலும் குட முழுக்குச் செய்வதிலும் திருவிழாச் செய்வதிலும் எமது பொருளாதாரத்தை வீணடிக்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் எமது கற்பனவாத நம்பிக்கைகலில் இருந் விடு பட்டு உண்மையான அறிவுத் தேடலைச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் போது தான் சிறு வயது முதல் எமக்கு ஊட்டப்பட்டு வரும் எமது மூட நம்பிக்கைகளைத் துடைத்து எறிந்து வாழ்க்கையில் சுயமாகச் சிந்தித்து முன் நேறலாம்.இது தனி மனிதருக்கும் முழுச் சமூகத்திற்கும் பொருந்தும்.

அற்புதன்!

உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் "சுயமரியாதையியக்க சூறவாளி" என்னும் நூலில் விடை உள்ளது :D:D:D:D:D:lol::lol::lol::lol:

.எமது கற்பனாவாதக் கடவுளர்களையும் அவர் தம்மை முன் நிறுத்தும் சமயங்களையும் ,சித்தாந்தங்களையும் தூக்கிக் குப்பையில் போடாமல்,நாம் என்றுமே இந்தப் பயணத்தை மேற் கொள்ளப் போவதில்லை.http://aatputhan.blogspot.com/

உங்களது கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன என்ற போதிலும், அவற்றில் நான் மேலே மேற்கோள் காட்டியுள்ள கருத்துத்துக் தான்உங்களது கட்டுரையின் அடிநாதமாக இருக்கும் செய்தி என்று; நான் புரிந்து கொள்வதன் அடிப்படையில் பின்வரும் கருத்தினை முன் வைக்கின்றேன். நீங்கள் சொல்லவந்த செய்தி அது அல்ல என்றால் திருத்தவும்.

நம்மவர்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என இரு பெரிய பிரிவுகள் உள்ளது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் ஏற்றுக் கொண்டு தான்ஆக வேண்டும் ஏனெனில் அது வெளிப்படையான உண்மை. இனி, மேற் சொன்ன இரு பிரிவினருமே கல்வி கற்கின்றார்கள் வாழ்வில் உயர்கின்றார்கள். விவாதங்கள் ஆராய்ச்சிகள் என்று வரும் போதும் இரு சாராரும் ஈடுபாட்டுடன் ஈடுபடுகின்றார்கள். இந்நிலையில், மேற்கத்தையவர் போல் எம்மால் கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள முடியாமைக்கு எமது கடவுள் நம்பிக்கையும் அது சார் சித்தாந்தங்களும் தான் காரணம் என நீங்கள் சொல்கின்றீர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத பிரிவினரிற்கு உங்களின் இந்தக் கூற்று ஏற்புடையது அல்ல என்பதனால், கடவுள் நம்பிக்கை உள்வர்களைப் பற்றித் தான் நீங்கள் கதைக்கின்றீர்கள் என்று கொள்ளலாம். அப்பிடியானால், மறைமுகமாக, மேற்கத்தையாரை வெல்லும் கண்டுபிடிப்புக்களைச் செய்யும் திறன் தற்போது கடவுள் நம்பிக்கை அற்று வாழும் பிரிவினரிற்கு இல்லை என்று தான் நீங்கள் சொல்கின்றீர்கள். அவ்வாறு நீங்கள் சொல்லவில்லை என விவாதிக்க முடியாது ஏனெனில், நீங்களே சொல்கின்றீர்கள் கடவுள் நம்பிக்கை தான் நம்மவரை அத்தகைய கண்டுபிடிப்புக்களை நோக்கி நகராது தடுக்கின்றது என்று.

சரி, அப்படியாயின், கண்டுபிடிப்புக்களை உருவாக்க வல்ல பிரிவு கடவுளை நம்பிச் சீரழிகிறது என்று நீங்கள் சொல்வதன் அடிப்படையில் பாhத்தால், அத்தகைய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வல்ல இந்த அறிவுடைய மனிதர்கள்

ஏன் கடவுளை நம்புகிறார்கள் என்ற கேழ்வி எழும் அல்லவா? அதாவது,

கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவல்ல அறிவுடையோரிற்கு, கண்டுபிடிப்புக்களை நிகழ்தத்த முடியாதோர் எனத் தம்மைத் தாமே அழைப்பவர்களிற்குக்கூடப் புலப்படும்இந்த கடவுள் என்ற தடைபற்றிப் புரியாமலா போகும்?

ஒன்றில், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம்மவரிற்குப் பெருமை சேர்க்க வேண்டும், அல்லாது போனால் நான் மேற்சொன்ன வாதத்தை ஏற்க வேண்டும்.

அதை விடுத்து எம்மால் கண்டுபிடிக்க முடியாது உங்களால் தான் முடியும் ஆனால் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வல்ல அறிவுடைய நீங்கள் அறிவு கெட்டத்தனமாய்க் கடவுளை நம்புகின்றீர்கள் என்பது

எந்தவிதத்தில் பாhத்தாலும் முரண்பாடாய்த் தெரிகிறதே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உச்சந்தலையில் போடுவது என்பது இதைத்தானோ? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வின் மூலம் எதையும் புதிதாக கண்டுபிடித்து விட முடியும் என்று நினனக்கல்ல. வேணும் என்றால் அயன்ஸ் ரீனின் கொள்கையை பரிசோதிதுப் பார்க்கலாம். காரணம்.. அணு அதாவது ஏலவே உள்ள திணிவானது அழிவடையும் போது சக்தியாக வெளிப்படுகிறது. அந்தச் சக்திக்கான (ஏலவே சக்தியுள்ளது) அறுதியிட்ட ஒரு வடிவத்தை விஞ்ஞானம் வரையறுக்கத்தான் முடியுமா...???! முடிந்தால் மட்டுமே கடவுளை (சக்தியை) இனங்காணுதல் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் சாதிக்க முடியும்..! திணிவு என்பது சக்தியின் அடக்கம் என்பதைத்தான் E= mc^2 சொல்லிவிட்டதே..! அப்புறம்... சூரியனிலும் அணு அழிவின் மூலம் நிகழும் சக்தி வெளிப்படலும் துகள் வெளிப்படலும் தான் நிகழ்கிறது. ஏலவே அணு குண்டுகளிலுன் திணிவழிவின் மூலம் சக்தி வெளிப்படுவதை அறிந்தவர்கள்.. வெளிவிடப்படும் சக்தியைக் கொண்டு மீளவும் துணிக்கைகளைப் பெறவும்.. பிளந்த அணுவை மீளப் பெறவும் முடியல்லையே..! :P :lol:

மனிதன் சக்தியை உருவாக்க முடியாது. உள்ள சக்தியைத்தான் அல்லது திணிவைக் கொண்டுதான் அவன் என்ன பரிசோதனை செய்தாலும் செய்ய வேண்டும். எனவே மனிதன் சக்தியை பிரபஞ்சத்துக்கு அறிமுகம் செய்வதாகவோ அவனே கடவுளாகவோ அமைய எனி வாய்ப்பே இல்லை. காரணம் ஏலவே யாரோ உருவாக்கிய சக்தியைக் கட்டி அணு உருவாக்கப்பட்டு விட்டது. அதை வைத்துத்தான் எனி மனிதன் எதைச் செய்தாலும் செய்ய முடியும்...! ஏலவே உள்ள திணிவை.. அல்லது சக்தியை பாவித்துத்தான் மனிதன் பரிசோதனையையே செய்கிறான். அந்த வகையில் அவன் கடவுளை கையாண்டுதான் கடவுளை அறியப்போறான். வேடிக்கையாக இருக்கிறது. இதற்குள் கடவுள் விளக்கம் கொடுப்பது அறிவியலை கேலிக்கூத்தாக்குகிறது. :lol:

எம்மைப் பொறுத்தவரை மனித அறிவியல் பிரபஞ்ச அறிவியலோடு ஒப்பிடும் போது தூசிக்கு சமன்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவர்கள் பாற்கடலைக் கடைகிறார்கள். நஞ்சு பெருக்கெடுத்தோடுகிறது. தேவர்களைக் காக்க அந்த நஞ்சை எம்பெருமான் எடுத்து உண்கிறார். நஞ்சு தொண்டையிலேயே தங்கிவிடுகிறது. இதனால் எம்பெருமானை எல்லோரும் மெய்யன்புடன் நஞ்சுண்டகண்டர் என்கிறோம்.

இனி,

எமது சமூகத்தில் காணப்படும் கல்வி, விஞ்ஞான, அறிவியல், அரசியல் மற்றும் பொருளாதார வங்குரோத்துக்களுக்கு எல்லாம் உண்மையான காரண்த்தைக் ஆராய்ந்துகாணத் துப்பில்லாமல் சமயமே காரணம் என சமயத்தை கண்ணைமூடிக்கொண்டு தாக்குவோரை இனிமேல் செல்லமாக இலக்குத்தவறிய ஏவுகணைகள் (misguided missiles) என அழைப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் என்பது கடவுளை தேடுவதல்ல..! விளக்கங்கள் தேடுவது..! இப்ப அறிவியல் என்பதை இங்கு சிலர் கடவுள் என்ற நம்பிக்கைகளைக் கேலி பண்ண என்று பாவிப்பது அறியாமையே அன்றி அதுவல்ல அறிவியல்..!

நம்பிக்கைகளின் பிறப்பில் இருந்துதான் அறிவியலே பிறக்கின்றது..! தேடலும் தேவையும் மனிதன் விளக்கம் தேட உதவியதே அன்றி.. மனிதன் இல்லாததைக் கொண்டு உருவாக்கம் செய்யவில்லை..! செய்யவும் முடியாது. மனித அறிவியல் என்பது இயற்கையின் எல்லைக்களுக்குள் தான்..! அதைத் தாண்டி..??! பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலைக்குள் இருந்து கொண்டு மிகச் சொற்ப அறிவியலை கொண்டுள்ள மனிதன்.. இன்னும் படிக்க விளங்க முடிவிலி அளவு விடயங்கள் இருக்கிறது. அதற்குள் மனிதனே அழிந்திடுவான் இந்த உலகில் இருந்து. அதைக் காக்கவே வழியில்ல கடவுள் என்றதை தேடி.. அதுவும்.. அணுவை உடைச்சு..சக்தியை கண்டுபிடிச்சு..??! புதிய சக்தியை உருவாக்கி.. மனிதன்ன் சாதனை படைக்கப்போறான்..! :P :blink::blink:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உங்களது கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன என்ற போதிலும், அவற்றில் நான் மேலே மேற்கோள் காட்டியுள்ள கருத்துத்துக் தான்உங்களது கட்டுரையின் அடிநாதமாக இருக்கும் செய்தி என்று; நான் புரிந்து கொள்வதன் அடிப்படையில் பின்வரும் கருத்தினை முன் வைக்கின்றேன். நீங்கள் சொல்லவந்த செய்தி அது அல்ல என்றால் திருத்தவும்.

நம்மவர்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என இரு பெரிய பிரிவுகள் உள்ளது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் ஏற்றுக் கொண்டு தான்ஆக வேண்டும் ஏனெனில் அது வெளிப்படையான உண்மை. இனி, மேற் சொன்ன இரு பிரிவினருமே கல்வி கற்கின்றார்கள் வாழ்வில் உயர்கின்றார்கள். விவாதங்கள் ஆராய்ச்சிகள் என்று வரும் போதும் இரு சாராரும் ஈடுபாட்டுடன் ஈடுபடுகின்றார்கள். இந்நிலையில், மேற்கத்தையவர் போல் எம்மால் கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள முடியாமைக்கு எமது கடவுள் நம்பிக்கையும் அது சார் சித்தாந்தங்களும் தான் காரணம் என நீங்கள் சொல்கின்றீர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத பிரிவினரிற்கு உங்களின் இந்தக் கூற்று ஏற்புடையது அல்ல என்பதனால், கடவுள் நம்பிக்கை உள்வர்களைப் பற்றித் தான் நீங்கள் கதைக்கின்றீர்கள் என்று கொள்ளலாம். அப்பிடியானால், மறைமுகமாக, மேற்கத்தையாரை வெல்லும் கண்டுபிடிப்புக்களைச் செய்யும் திறன் தற்போது கடவுள் நம்பிக்கை அற்று வாழும் பிரிவினரிற்கு இல்லை என்று தான் நீங்கள் சொல்கின்றீர்கள். அவ்வாறு நீங்கள் சொல்லவில்லை என விவாதிக்க முடியாது ஏனெனில், நீங்களே சொல்கின்றீர்கள் கடவுள் நம்பிக்கை தான் நம்மவரை அத்தகைய கண்டுபிடிப்புக்களை நோக்கி நகராது தடுக்கின்றது என்று.

சரி, அப்படியாயின், கண்டுபிடிப்புக்களை உருவாக்க வல்ல பிரிவு கடவுளை நம்பிச் சீரழிகிறது என்று நீங்கள் சொல்வதன் அடிப்படையில் பாhத்தால், அத்தகைய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வல்ல இந்த அறிவுடைய மனிதர்கள்

ஏன் கடவுளை நம்புகிறார்கள் என்ற கேழ்வி எழும் அல்லவா? அதாவது,

கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தவல்ல அறிவுடையோரிற்கு, கண்டுபிடிப்புக்களை நிகழ்தத்த முடியாதோர் எனத் தம்மைத் தாமே அழைப்பவர்களிற்குக்கூடப் புலப்படும்இந்த கடவுள் என்ற தடைபற்றிப் புரியாமலா போகும்?

ஒன்றில், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம்மவரிற்குப் பெருமை சேர்க்க வேண்டும், அல்லாது போனால் நான் மேற்சொன்ன வாதத்தை ஏற்க வேண்டும்.

அதை விடுத்து எம்மால் கண்டுபிடிக்க முடியாது உங்களால் தான் முடியும் ஆனால் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வல்ல அறிவுடைய நீங்கள் அறிவு கெட்டத்தனமாய்க் கடவுளை நம்புகின்றீர்கள் என்பது

எந்தவிதத்தில் பாhத்தாலும் முரண்பாடாய்த் தெரிகிறதே?

இன்னுமொருவன் முதலில் யாழ்க் களத்தில் விதண்டாவாதம் செய்து நான் சொல்வது தான் சரி என்று நிறுவ எனக்கு நேரம் இல்லை,அத்தகைய எண்ணமும் எனக்கு இல்லை.ஆகையால் நீங்கள் மேலே எழுதி இருக்கிற கருத்தில் இருக்கும் சில குழறுபடிகளைச் சொல்லி விட்டுப்போகிறேன்.இங்கு தொடர்ந்து விவாதம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை தான் அது அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட ஒரு விடயம் அல்ல.ஆகவே அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அறிவியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்டதல்ல.எதனையும் கேள்விக்குள்ளாக்குவதே அறிவியலின் அடிப்படை.ஆகவே முதலில் உங்கள் பிரிப்பான கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ,உள்ளவர்கள் என்பது அல்ல நான் சொல்ல வந்த விடயம்.இது வெறும் கடவுள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டும் அன்று.அறிவியல் ரீதியாக நிறுவப்படாதா எதனையும் நம்பாதவர்கள், தெரியாத விடயங்களைத் அறிவியல் ரீதியாகத் தேட விழைபவர்கள் ஒரு பகுதியினர், மற்றவர்கள் இருக்கின்ற நம்பிக்கைகளை தொடர்ந்து காவிச் செல்ல விரும்புபவர்கள், கேள்விகள் இல்லாமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் .இந்த இரண்டு பார்வைகளும் அடிப்படையில் வேறுபாடானவை.

அடுத்து இந்த இரண்டு பிரிவுகளையும் நீங்கள் சரி சமனாகப் பிரித்து உள்ளீர்கள்.இது அடுத்த தவறு.எமது சமூகத்தில் கடவுளை நம்புபவர்களே அதிகம்.அதாவது இருகின்ற நம்பிக்கைகளை அறிவியல் ரீதியிலான தேடல் இன்றி சுய சிந்தனை இன்றி ஏற்றுக்கொண்டு அவற்றையே உண்மை என்று நம்புபவர்கள்.பெரும்பாலனவர்க

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக அரசுகள் நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்லாது அறிவியலின் அடிப்படையிலையே செயற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.அத்தோடு மேற்குலகில் பெரும்பான்மயானவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும் மதங்கள் மீது நம்பிக்கை அற்றவர்களாகவும் இருப்பதையும் அறிவீர்கள்.இந்த வேறு பாடு அவர்களின் சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கும் கல்விச் செயற்பாடினாலும், காலம் காலமாக காவி வந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குள்ளாக்கி அவற்றை மீள் பரிசீலனை செய்வதாலுமே சாத்தியம் ஆனது.

மேற்குலக அரசுகள் அறிவியல் அடிப்படையில் செயற்படுவதாகக் கொண்டால் அனைத்துத் தேவாயலங்களையும் இடித்துத் தள்ளிவிட்டு.. அங்கு பாடசாலைகளைக் கட்டலாமே..??!

மேற்குலக அரசுகள் அறிவியலோடு தான் செயற்படுகின்றதென்றால் பழைமை வாத அம்சங்களை களைந்து எறிந்துவிட்டு அனைத்திலும் புதுமையை மட்டும் பேணிக் கொள்ளலாமே..??!

மேற்குலக அரசுகள் கலோவின் (பேய்களின் ) பண்டிகை நடத்துவதை தடுக்கலாமே..??!

மேற்குலகில் கிறிஸ்மஸ் தொடங்கி அனைத்து சமயம் சார் விடுமுறைகளையும் ரத்துச் செய்யலாமே..??!

அமெரிக்காவில் அநேக மக்கள் மத நம்பிக்கையோடு வாழ்கின்றனர். அமெரிக்கா மதமற்ற நாடு என்று பிரகடனம் செய்யலாமே..??!

மத குருமார்களாக இருந்தும் பல அறிவியல் கண்டுபிடிப்புக்களைச் செய்த.. பிறப்புரிமையியல் தந்தை மெண்டல் தொடங்கி ஐயராக இருந்த இந்தியாவின் கணித மேதை சி வி ராமன் வரைக்கும்.. சிந்தனையற்ற மனிதர்களா.. சிந்திக்க தடுக்கப்பட்டனரா..??!

இங்கு மத எதிர்ப்புக்காக மட்டுமே அறிவியல் என்பது பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது சிந்திக்க அல்ல.. சிதறடிக்க...நடக்கும் மதமற்ற ஒழுக்கமற்ற மனிதர்களின் தேவைகள் வேண்டி நடக்கிறது. மதங்கள் மனிதனை வாழ்க்கையின் வழிப்படுத்துகின்றனவே தவிர சிந்திக்கத் தடுக்கவில்லை. தடுத்திருந்தால் இன்று விஞ்ஞானிகள் இந்தியாவிலும் இல்லை.. அரேபியாபிலும் இல்லை. ஆனால் இருக்கிறார்களே. கிறிஸ்தவ மதப் பற்றுள்ள ரஷ்சியா தான் விண்வெளிக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பிய நாடு..!

அறிவியலையும் நம்பிக்கையையும் வேறுபிரித்தறிந்து அறிவை வளர்க்க முடியாதவர்கள்.. மதத்தின் மீது குறை சொல்லி இயலாமைகளை மறைக்க முனைகின்றனர். மதத்தை தங்கள் அறிவியல் இயலாமைகளை மறைக்க உபயோகிக்கின்றனர் அவ்வளவும் தான்..! சிந்தனை உள்ள மனிதன் இரண்டினதும் தேவைகளை சரியாக இனங்கண்டு செயற்படுவான். சாதிப்பான்..! சிந்திக்கப் பயப்பிடுபவர்கள் தான் மதத்தைக் கண்டு நடுங்குகின்றனர்..! :P :blink::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலக அரசுகள் நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்லாது அறிவியலின் அடிப்படையிலையே செயற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.அத்தோடு மேற் குலகில் பெரும்பான்மயானவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும் மதங்கள் மீது நம்பிக்கை அற்றவர்களாகவும் இருப்பதையும் அறிவீர்கள்.இந்த வேறு பாடு அவர்களின் சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கும் கல்விச் செயற்பாடினாலும், காலம் காலமாக காவி வந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குள்ளாக்கி அவற்றை மீள் பரிசீலனை செய்வதாலுமே சாத்தியம் ஆனது.

இந்த பெரும்பான்மயானவர்கள் என்ற அளவை எங்கு இருந்து பெற்றீர்கள் என அறியலாமா? பெரும்பான்மை என்றால்ல் அது எத்தானை வீதம்? 51% மா? 98 % மா? எந்தக் கணக்கெடுப்பு உங்க்களுக்குச் சொன்னது மேற்குலகில் பெரும்பான்மயானவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்ற விடயத்தை?

அறிவியல் பற்றி கதைக்க வந்த நீங்கள் உங்கள் வாதத்துக்கான சான்றை அறிவுகெட்டதனமாக ஆதாரமில்லாமல் அனுமானமாக தெரிவிக்கலாமா?

:blink:

இன்னுமொருவன் முதலில் யாழ்க் களத்தில் விதண்டாவாதம் செய்து நான் சொல்வது தான் சரி என்று நிறுவ எனக்கு நேரம் இல்லை,அத்தகைய எண்ணமும் எனக்கு இல்லை.ஆகையால் நீங்கள் மேலே எழுதி இருக்கிற கருத்தில் இருக்கும் சில குழறுபடிகளைச் சொல்லி விட்டுப்போகிறேன்.இங்கு தொடர்ந்து விவாதம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

தொடர்ந்து விவாதம் செய்யப் போவதில்லை ஒருக்கால் குட்டிவிட்டு ஓட விடுங்கள் என நீங்கள் கேட்பதனால்

நானும் இது தொடர்பில் எனது மேலதிக கருத்துக்களையும் நேரத்தையும் சேமித்துக் கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.