Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Featured Replies

பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெற்றது.

Image result for palali airport

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜின ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்புனர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது  புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://www.virakesari.lk/article/64183

பலாலிக்கு விரைந்த அர்ஜுன

image_b441333333.jpg 

-எஸ்.நிதர்ஷன் 

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர், இன்று (05) நேரில் சென்று ஆராய்ந்தனர். 

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து ஆரம்பச் சேவைகள், ஒக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அதற்கான அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. 

விமான நிலைய அபிவிருத்தியின் போது, ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன், பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது. 

இந்நிலையில், இந்த அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடும் முகமாக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர், நேற்றுக் காலை பலாலிக்கு விஜயம் மேற்கொண்டனர். 

அந்தக் குழுவில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது. 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பலாலிக்கு-விரைந்த-அர்ஜுன/71-237951

4 hours ago, ampanai said:

யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெற்றது.

சீனாக்கு தான் போட்டி என்டு நெச்சுக்கொண்டு இந்தியன்ட அழுத்தம் அந்தமாதிரி இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர்,

80 பேர் கொண்ட குழுவினர்😲...8 பேர் செய்யக்கூடிய project 

  • தொடங்கியவர்
27 minutes ago, putthan said:

80 பேர் கொண்ட குழுவினர்😲...8 பேர் செய்யக்கூடிய project 

உலகின் நாடுகளில் இலங்கை போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதற்கு ஒரு காரணம் நாட்டின் தேசிய உற்பத்தியில் ' உற்பத்தி திறன் ' பற்றியது. 

உதாரணத்திற்கு ஒரு வீட்டிற்கு 'கேபிள்' சிக்கல் என்றால் ஒரு தொழில்திறனாளியே வருவார். ஆனால், பின்தங்கிய நாடுகளில் இரண்டு மூன்று தொழில்திறனாளிகள் வரலாம். 

List of countries by GDP (PPP) per hour worked

Rank Country GDP (PPP)
per hour 2013
1 21px-Flag_of_Norway.svg.png Norway 75.08
2 23px-Flag_of_Luxembourg.svg.png Luxembourg 73.22
3 23px-Flag_of_the_United_States.svg.png United States 67.32
4 23px-Flag_of_Belgium_%28civil%29.svg.png Belgium 60.98
5 23px-Flag_of_the_Netherlands.svg.png Netherlands 60.06
6 23px-Flag_of_France.svg.png France 59.24
7 23px-Flag_of_Germany.svg.png Germany 57.36
8 23px-Flag_of_Ireland.svg.png Ireland 56.05
9 23px-Flag_of_Australia_%28converted%29.s Australia 55.87
10 20px-Flag_of_Denmark.svg.png Denmark 55.75

https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_GDP_(PPP)_per_hour_worked

14 hours ago, putthan said:

80 பேர் கொண்ட குழுவினர்😲...8 பேர் செய்யக்கூடிய project 

அர்ஜுனா ரணதுங்க 1 ஆள் அடிக்க 10 பேரை வைச்சு மேய்ச்ச பழக்கத்துல, 8 பேர் புரொஜெக்ட்டுக்கு 80 பேரை கூட்டி வந்திருப்பார்.

கணக்கு சரியாத் தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியை சுற்றி நல்ல பயனுள்ள காணிகளே உள்ளன. அதனை விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களிடம் இருந்து திருட... எதிர்கால இராணுவத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த விமான நிலையம் விஸ்தரிக்கப்படுகிறது.

வடக்கில்.. பூநகரியில்.. தீவகத்தில் விவசாயத்துக்கு உகந்ததல்லாத நிலங்கள் இருக்க.. பலாலியில் இந்த விமான நிலையம் அமைய வேண்டிய அவசியம் என்ன..??!

இராணுவத்தேவை தான் முதன்மை.

சொறீலங்காவின் அனைத்து விமான நிலையங்களும் இராணுவத் தேவைகளுடன் பொருந்தியே உள்ளன. எவையும் சிவில் விமானப் போக்குவரத்துக்கு 100% பாதுகாப்பு உத்தரவாதம் தர உகந்தவை அல்ல. இருப்பினும்.. சர்வதேச சிவில் விமானப்போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனங்கள் இது விடயத்தில் கண்மூடிகளாக இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சிங்களம் விழுந்தடித்து இவ்வாறான ஒரு 'சர்வதேச'  விமான நிலையத்தை கட்டுவதில் நிச்சயம் தமிழர் மீதான அக்கறை இல்லை என்பது வெள்ளிடைமலை !

இதையும் தொடரும் இனவழிப்பு திட்டத்தின் ஒரு மறைமுகமான, இன்னும் எமக்கு புரியாத ஒரு அத்தியாயம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

சிங்களம் விழுந்தடித்து இவ்வாறான ஒரு 'சர்வதேச'  விமான நிலையத்தை கட்டுவதில் நிச்சயம் தமிழர் மீதான அக்கறை இல்லை என்பது வெள்ளிடைமலை !

இதையும் தொடரும் இனவழிப்பு திட்டத்தின் ஒரு மறைமுகமான, இன்னும் எமக்கு புரியாத ஒரு அத்தியாயம்.  

சிங்களத்தின் தேவையை விட வேறு சக்திகளின் தேவை அதிகம்....

42 minutes ago, putthan said:

சிங்களத்தின் தேவையை விட வேறு சக்திகளின் தேவை அதிகம்....

இது முட்டாள் இந்தியப் பயலுக பேராசைக்கு விருத்தி செய்யப்பட்டு, பிறகு முட்டாள் இந்தியப் பயலுகளுக்கு பெப்பே காட்டி எதிர்காலத்துல சீனாக்காரனுக்கு குடுக்கிற பிளான்.

பிறகு முட்டாள் இந்தியப் பயலுக சீனாக்காரனை வெடிச்சு சிதறும் சந்திராயன்-3 மூலம் வானில இருந்து கணநேரத்துக்கு பாத்து வாயில விரலை சூப்பிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.