Jump to content

பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜேன் வேக்ஃபீல்டு தொழில்நுட்ப செய்தியாளர்
 
  •  
பெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்படத்தின் காப்புரிமை Getty Images

ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக 'பிரைவேசி இன்டர்நேஷனல்' (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்துடன் என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்று ஆராய்வதற்காக பெண்களின் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் செயலிகளில் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களால் என்ன கருத்தடை சாதனம் பயன்படுத்தப்பட்டது, எப்போது மாதவிடாய் வரும், அறிகுறிகள் என்ன ஆகிய விவரங்கள் ஃபேஸ்புக் உடன் பகிரப்படும் தகவல்களில் அடங்கியுள்ளன.

இந்த ஆய்வின்போது, தங்களுடைய செயலியின் தனியுரிமை கொள்கைள் மாற்றிற்கு உள்ளாக்கப்படவுள்ளதாக அந்த செயலிகளில் ஒன்றை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்தது,

உடல்நலம் சார்ந்த தகவல்கள், பாலியல் தரவுகள் தொடங்கி, எண்ணவோட்டம், பயனர்கள் உண்பவை, குடிப்பவை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்ணொருவர் பயன்படுத்தும் சுகாதார பொருட்கள் வரை மிகவும் அந்தரங்க தரவுகளை இந்த மாதவிடாய் செயலிகள் சேகரிக்கின்றன.

இத்தகைய தகவல்களை பெண்கள் அந்த செயலிகளிடம் அளிப்பதற்கு பிரதிபலனாக, அந்த மாதத்தில் அவர்கள் கரு வளத்தோடு இருக்கின்ற நாட்கள் அல்லது அடுத்த மாதவிடாய் காலம் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளும் சேவையை இந்த செயலிகள் அளிக்கின்றன.

ஃபேஸ்புக்கின் கண்காணிப்புபடத்தின் காப்புரிமை PL Image caption இங்கு "Purpose: Get Pregnant" என்று பகிரப்பட்டிருப்பதன் மூலம் விளம்பரம் செய்வோருக்கு இது தொடர்பான பொருட்களை விளம்பரம் செய்வதற்கு வாயப்புக்கள் வழங்கும் என்பதை PL சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்தோடு பகிர்வது சமூக வலையமைப்பின் மென்பொருள் மேம்பாட்டு கூறுகள் (எஸ்டிகே) மூலம் நடைபெறுகிறது. இதன் மூலமாக, விளம்பரம் செய்வோருக்கு தரவுகள் அளிக்கப்படுகின்றன.

இதனால் குறிப்பிட்ட செயலியின் பயனருக்கு என்ன பொருட்களை தேவையோ அவை பற்றிய விளம்பரங்கள் சென்று சேருகின்றன. இவ்வாறு விளம்பரம் செய்வோருக்கு தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் வருவாய் ஈட்டி கொள்கின்றன.

பீரியட் டிராக்கர் (Period Tracker), பீரியட் டிராக் ஃபுலோ (Period Track Flo ) மற்றும் குளு பீரியட் டிராக்கர் (Clue Period Tracker) போன்ற மிகவும் பிரபலமான செயலிகள் இத்தகைய தரவுகளை ஃபேஸ்புக்குடன் பகிர்வதில்லை என்பதை 'பிரைவேசி இன்டர்நேஷனல்' கண்டுபிடித்துள்ளது.

பிளாக்கால் டெக் நிறுவனத்தின் மாயா (Maya) (கூகுள் பிளேயில் 50 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது), மோப்ஆப் டெவலப்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் எம்ஐஏ (MIA) (10 லட்சம் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது) மற்றும் லின்ச்பின் ஹெல்த் நிறுவனத்தின் பீரியட் டிராக்கர் (My Period Tracker) (10 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது) ஆகிய பிற செயலிகள் இத்தகைய அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர்கின்றன.

மாதவிடாய் பற்றிய சேவை அளிக்கும் செயலிகள், பயனர்களின் கரு வளம் பெற்றிருக்கும் நாட்களை அறிவிக்கின்றன.படத்தின் காப்புரிமை Getty Images Image caption மாதவிடாய் பற்றிய சேவை அளிக்கும் செயலிகள், பயனர்களின் கரு வளம் பெற்றிருக்கும் நாட்களை அறிவிக்கின்றன.

'பிரைவேசி இன்டர்நேஷனல்' இது பற்றி தெரிவிக்கையில், "பெருமளவு மக்களை சென்றடைந்துள்ள இந்த செயலிகளை ஆய்வு செய்ததில், உலக அளவில் பல லட்சக்கணக்கான பயனர்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் ஃபேஸ்புக்கோடு பகிரப்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த செயலியை பயன்படுத்துவோரின் சுதந்திரமான மற்றும் நேரடியான சம்மதத்தை, வெளிப்படையாக பெறாமல், பயனர்களின் உடல் நலம் அல்லது பாலியல் வாழ்க்கை போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்படுகிறது என்பதும் தெரிய வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இத்தகைய அந்தரங்க தகவல்களை திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் எஸ்டிகே மற்றும் அனலிடிக்ஸ் எஸ்டிகே ஆகிய இரண்டையும் உடனடியாக அகற்றியுள்ளதாக மாயா செயலி, 'பிரைவேசி இன்டர்நேஷனல்' நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நிறுவனத்தின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளையும், அந்தரங்க கொள்கைளையும் ஒப்புக்கொள்வோருக்கு ஃபேஸ்புக் விளம்பர எஸ்டிகே-யை பயன்படுத்துவதை தொடர்வதாகவும் அது கூறியுள்ளது. ஆனால், தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவுகள் அல்லது மருத்துவ தரவுகள் எதுவும் பகிரப்படாது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

மாயா செயலியால் அணுகப்படும் எல்லா தரவுகளும், இந்த செயலி சரியாக செயல்படுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். மாதவிடாய் சுழற்சியை பொறுத்தவரை தகவல்களை கணிப்பது சிக்கலாது மற்றும் இது ஆயிரக்கணக்கான காரணிகளை சார்ந்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-49681449

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மாதவிடாயை பெண்கள் track  பண்ண வேண்டும்?

ஒழுங்கில் இல்லை என்றால், எப்போதும் தம்முடன் tampons இ வைத்திருப்பதை விட்டுவிட்டு எல்லாவற்றிற்கும் தொழில்நுட்பத்தை நம்பியதின் பலன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.