Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை மாணவன் கி. முகேஷ் தலைக்கவசம் கண்டுபிடிப்பு

Featured Replies

விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு கிழக்கு மாகணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் கணித பிரிவு கி.முகேஷ் ராம்(வயது- 17) என்ற மாணவன் தனது கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்து கூறுகையில்

இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன்.

41_01102019_SSF_CMY_0.jpg?itok=P1I2jjcQ

எனது கண்டுபிடிப்பானது விபத்துக்கள் நடைபெற்ற இடத்தினை தெரியப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடுகை மென்பொருளை பயன்படுத்தி பாதிப்புக்கள் சம்பந்தமான குறுஞ்செய்தி மூலம் கைத்தொலைபேசிக்கு தகவல்கள் அறிவுறுத்தப்படும் வகையில் 5000.00 ரூபாய்க்குட்பட்ட விலையில் வடிவமைக்க பட்டுள்ளது. 

பெளதீகவளங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான மாணவர்களது கண்டுபிடிப்பானது பாராட்டத்தக்க விடயமாகும்.

பாடசாலைகளுக்கு பெளதீக வளங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படுமானால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் நம் நாடு மேலும் வளர்ச்சியடையும் என கல்லூரியின் அதிபர் அருட்தந்தை எஸ். சந்தியாகு கருத்து தெரிவித்தார். 

பாறுக் ஷிஹான்

https://www.thinakaran.lk/2019/10/02/தொழில்நுட்பம்/41327/கல்முனை-மாணவன்-கி-முகேஷ்-தலைக்கவசம்-கண்டுபிடிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நான் கற்ற எனது பாடசாலை என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதமும் சந்தோஷமும் அடைகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான.... நல்லதொரு கண்டுபிடிப்பு. பாராட்டுக்கள்... முகேஷ் ராம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவன் சாதனை!

இந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

73049727_753754231761840_442723242449305

இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் . இவர், அதிகரித்துவரும் சாலை விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் வகையில், மோட்டார் சைக்களில் பயணம் செய்வோர் அணியும் பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை கண்டு பிடித்தார்.

இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி, ஹெல்மெட்டில் ஏற்படும் அதிர்வை கணித்து, அது விபத்தினால் ஏற்பட்ட அதிர்வா அல்லது சாதாரணமாக ஏற்பட்ட அதிர்வா என்பதை கண்டுபிடித்து, விபத்தாக இருக்கும்பட்சத்தில் உறவினருக்கோ அல்லது போலிஸாருக்கோ குறுஞ் செய்தி அனுப்பும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு அவருடைய உயிரை காப்பாற்ற முடியும்.

இந்நிலையில், இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த 9 ஆம் திகதி ஆரமபமாகி 12 ஆம் திகதி வரை சர்வதேச அளவிலான 19 வயதிற்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி நடைபெற்றது.

இதில், இலங்கையிலிருந்து 12 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில், பாதுகாப்பான தலைக்கவசம் கண்டுபிடித்த கல்முனை மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று  நடைபெற்றது. 

72474497_562551127824642_215175760861095

72830158_653971422087824_671328724376879

இதுகுறித்து மாணவர் முகேஷ் ராம் கூறுகையில், 

ஆசிய நாடுகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இதனால் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிகமானோர் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். இவற்றை தவிர்க்கும் நோக்கில் எனது கண்டுபிடிப்பு அமைந்ததால், சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/67114

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.