Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``தமிழனாய் வாழ்வது பெருமை...!" - ட்விட்டரில் தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்

Featured Replies

`எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும் தமிழர் என்ற உணர்வுதான் தமிழர்களுக்கான தனி அடையாளமாக இருக்கும்' என்பதை தனது ட்விட்டர் பதிவு மூலம் நிரூபித்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்றதுமே நினைவுக்கு வரும் முதன்மையான முகங்களில் மிதாலி ராஜும் ஒருவர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே பெண். 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற, மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதற்காகப் பலரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவித்துவந்தனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், மகளிர் அணியைப் பாராட்டி, ட்விட்டரில், ``சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள், குறிப்பாக 20 ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சர்வதேச அளவிலும் சாதனைகள் படைத்த மிதாலிக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மிதாலி, ஆங்கிலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மிதாலியின் நன்றி பதிவுக்குக் கீழ் ரசிகர் ஒருவர் 'வாழ்த்துகள் தமிழச்சி' எனத் தமிழில் கமென்ட் செய்திருந்தார். அதற்கு மற்றொரு நபர் `மிதாலிக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் தெரியும். தமிழச்சி என்று சொல்லுகிறீர்கள். இதுவரை அவர் ஒரு வார்த்தைகூட எந்த ஊடகங்களிலும் தமிழில் பேசியது இல்லை' எனப் பதிவிட்டிருந்தார்.

Mithali Raj

@M_Raj03

தமிழ் என் தாய் மொழி..
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going
https://
twitter.com/vasugi29/status/1183982090745827328

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அந்த நபரை டேக் செய்து ``தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாகப் பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை" என்று தமிழில் பதிவிட்டிருக்கிறார் மிதாலி. மேலும் `மற்றவர்களின் விமர்சனங்கள்தான் என்னை வளர்க்கிறது' என்றும் குறிப்பிட்டிருந்தார். மிதாலியின் இந்தத் தமிழ் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர். ஹைதராபாத்தில் வசித்துவந்தாலும் மிதாலியின் பூர்வீகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://sports.vikatan.com/sports-news/mithali-raj-twitter-post

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

`எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும் தமிழர் என்ற உணர்வுதான் தமிழர்களுக்கான தனி அடையாளமாக இருக்கும்' என்பதை தனது ட்விட்டர் பதிவு மூலம் நிரூபித்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்றதுமே நினைவுக்கு வரும் முதன்மையான முகங்களில் மிதாலி ராஜும் ஒருவர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே பெண். 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

மிக திறமையான சகல துறை ஆட்ட வீராங்கனை.  இரு முறை உலக கோப்பை கிண்ண போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். 
வாழ்த்துக்கள் 

mithali-raj_750x500_twitter.jpg?itok=QUErMVpV

தமிழ் என் தாய் மொழி..
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை

Awards and honours[edit]

Year Award Notes
2003 Arjuna Award[49]  
2015 Padma Shri India's fourth highest civilian award[50]
2017 Youth Sports Icon of Excellence Award At the Radiant Wellness Conclave, Chennai[51]
2017 Vogue Sportsperson of the Year At Vogue's 10th anniversary[52]
2017 BBC 100 Women list 2017[53]

https://en.wikipedia.org/wiki/Mithali_Raj

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

ஹிந்தியனிடம் எல்லாவற்றையும் வேண்டிவிட்டுதான் இப்படி வாய்திறக்க வேண்டும் 
வேண்டுமட்டும் இவரைப்போல பேசாமல் இருப்பதுதான் நன்று.
முதலே கிலுப்பையை குலுக்க தொடக்கி இருந்தால் அவர்கள் புறம்தள்ளி இருப்பார்கள். 
நல்ல அறிவாளி என்றும் எண்ணுகிறேன். 

See the source image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.