Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்
விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இதில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜனும் தனது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்கியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு இது தொடர்பாக பல கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.

ஆனால், தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதற்குப் பிறகு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் யூனியன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் கட்சிகளுடன் பேசினர். இடையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.

இந்த 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இரு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத நிலையில், வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதிலிருந்து விலகியது.

யாருக்கும் வாக்களிக்கும்படி தான் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் மக்கள், தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என அறிவித்துவிட்டது.

இதற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. கூட்டமைப்பிற்குள் உள்ள டெலோ சஜித் பிரேமதாஸவை ஆதரித்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அக்கட்சியின் யாழ் மாவட்டப் பிரிவு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

எம்.கே. சிவாஜிலிங்கம் Image captionதமிழர் ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இப்படியாக வடக்கில் செயல்படும் தமிழ்க் கட்சிகள் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றாலும், கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை சஜித் பெறக்கூடும். இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?

"அடக்குமுறை இல்லாத ஆட்சி நீடிக்கும் என்பதே முதல் எதிர்பார்ப்பு. தவிர, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கின்றன" என பிபிசியிடம் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, "இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேசினோம். அவர்கள் அதற்கு முன்பு வகித்த பதவிகளில் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விவாதித்தோம். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்" என்றார் சுமந்திரன்.

ஆனால், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு வளர்ச்சியைக் கிடைக்கச் செய்யும் என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

"கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். ஆனால், பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்துவிட்டார். தவிர, போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது" என்கிறார் அங்கஜன்.

ஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புதான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான நிலாந்தன்.

"இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் Presidential electionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிறார் நிலாந்தன்.

தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான ஜனாதிபதியாக மஹிந்த பார்க்கப்படுகிறார். வடக்கில் வசிக்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவை மனதில் வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்கிறார்கள்.

"இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. யுத்தம், அதன் முடிவு ஆகிவற்றை வைத்து தேர்தலை விவாதித்தால், தொடர்ந்து ராஜபக்ஷ தரப்பு முன்னிலையிலேயே இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்பு இந்த பாணியிலிருந்து விலகி, தனது பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்" என்கிறார் நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50410923

வட மாகாணத்தில் சஜித்துக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்கும். ஆனாலும் கடந்த தேர்தலில் மைத்திரிக்கு கிடைத்ததை விட இம்முறை சஜித்துக்கு குறைவாக கிடைக்கும், மறுபக்கம் கடந்த தேர்தலில் மகிந்தவுக்கு கிடைத்ததை விட இம்முறை கோத்தாவுக்கு அதிகம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

2015 தேர்தலில் வட மாகாணத்தில்,

மைத்திரி - 394,991

மகிந்த - 108,831

வாக்குகளை பெற்றிருந்தார்கள்.

55 minutes ago, ஏராளன் said:

போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது என்கிறார் அங்கஜன்.

மகிந்த & கோ தான் அனைத்து விடயங்களையும் கையாண்டது.

சரணடையும் புலிகளை கொல்லுமாறு சவேந்திர சில்வாவுக்கு பணித்ததும் கோத்தபாய ராஜபக்ச.

Edited by Lara

1 hour ago, ஏராளன் said:

"இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன்.

ஆம், தமிழ் மக்கள் அதிகளவில் அளிக்க உள்ளது வெறுப்பு வாக்கு, விருப்பு வாக்கல்ல. அந்த வகையில் ஏன் ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்தவில்லை என நிலாந்தன்  கூறவில்லை.

1 hour ago, ampanai said:

ஆம், தமிழ் மக்கள் அதிகளவில் அளிக்க உள்ளது வெறுப்பு வாக்கு, விருப்பு வாக்கல்ல. அந்த வகையில் ஏன் ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்தவில்லை என நிலாந்தன்  கூறவில்லை.

நீங்கள் பொது வேட்பாளராக யாரை பரிந்துரை செய்கிறீர்கள்?

 

3 hours ago, ஏராளன் said:

இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள்.

இவ்வாறான (இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற ) கொள்கை உடையவர் ஒருவரை பொது வேட்ப்பாளராக போட்டியிட்டு இருக்கலாம்.

36 minutes ago, Lara said:

நீங்கள் பொது வேட்பாளராக யாரை பரிந்துரை செய்கிறீர்கள்?

 

2 hours ago, ampanai said:

இவ்வாறான (இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற ) கொள்கை உடையவர் ஒருவரை பொது வேட்ப்பாளராக போட்டியிட்டு இருக்கலாம்.

அது தான் யாரை பொது வேட்பாளராக பரிந்துரை செய்கிறீர்கள் என கேட்டேன். பெயரை குறிப்பிடுங்கள்.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அவர் வந்தால் அதை செய்வார் என்றில்லை. ஆனால் உள்ளது.

Edited by Lara

வாக்களிப்போரின் கவனத்திற்கு,

EJEAfV5U4AAihQp?format=jpg&name=900x900

சஜித்துக்கு வாக்களிக்குமாறு ஹக்கீமின் கோரல்.

EJRmn6kWkAIkZ-c?format=jpg&name=large

73375613_10221106088544649_8945944310906

வாக்களிக்கும் மக்கள் கவனத்திற்கு,

EJDSE8zUUAAd-N8?format=jpg&name=900x900

EJDSE83UEAU9dT3?format=jpg&name=900x900

EJDSE80UwAAQvZl?format=jpg&name=large

தமிழில்... (எழுத்துப்பிழைகளை தவிர்த்து வாசிக்கவும்)

EJDSNM0VUAEpatx?format=jpg&name=900x900

EJDSNMyU8AUEgiI?format=jpg&name=900x900

EJDSNMxU4AAT4wO?format=jpg&name=large

அதாவது சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்துக்கு   "x"  அல்லது "1"  என்று போடனும் என்று சொல்றியல்

3 hours ago, Lara said:

EJDSNMxU4AAT4wO?format=jpg&name=large

 

1 hour ago, Gowin said:

அதாவது சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்துக்கு   "x"  அல்லது "1"  என்று போடனும் என்று சொல்றியல்

சிவாஜிலிங்கத்துக்கு கட்டுப்பணம் செலுத்திய அனந்தி முன்னர் கூறியது இவ்வாறு.

அதேவேளை, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் எங்கள் நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிவாஜி அண்ணாவுக்கு முதலாவது வாக்கையும், ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகச் சொல்லும் பேரினவாத மனநிலை இல்லாத ஒரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கையும் செலுத்தும் போது தேர்தல புறக்கணிப்புக்கு ஒப்பான கருத்துநிலையையே ஒரு தமிழ் வாக்காளர் வெளிப்படுத்துவார்.

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

அங்கஜன் கோத்தாவுக்கு ஆதரவு. அங்கஜனின் கட்சியுடன் இணைந்து செயற்படும் அனந்தி நேரடியாக கோத்தாவுக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியவில்லை போல. 😀

2010 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் 9,662 வாக்குகளை பெற்றார். இம்முறை அனந்தி, ரெலோவின் யாழ் மாவட்ட குழுவின் ஒரு பகுதியினர், வவுனியாவிலுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் போன்றோர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க கேட்பதால் முன்பை விட அதிகமாக இம்முறை வாக்குகளை பெறுவார் என நினைக்கிறேன்.

மகிந்த கேட்டது போல் 25,000 வாக்குகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 😀

Edited by Lara

பயனுள்ள தகவல்கள். நன்றி லாரா !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.