Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது

Featured Replies

algiri_759.jpg

மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர்.

மதுரையில் பெரும் வன்முறையில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே யார் சிறந்தவர் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தயாநிதி மாறன்தான் நம்பர் ஒன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.

இது கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியல் என்று பொங்கினார் ராமதாஸ்.

இந்த நிலையில், இன்று வெளியான கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படும் அழகிரிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியைப் படித்ததும் மதுரையில் இன்று அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.

பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநாத்தம் உள்ளிட்ட அனைத்துப் பேருந்து நிலையங்கள் முன்பும் கூடி தினகரன் நாளிதழ்களைப் போட்டுக் கொளுத்தினர்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர்.

சாலை மறியலிலும் அவர்கள் திடீரென குதித்தனர். அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டம் நடந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

karuna-dayanidhi_759.jpg

Stalin_759.jpg

வன்முறையின் உச்ச கட்டமாக மதுரை உத்தங்குடியில் உள்ள சன் டிவி அலுவலகம், தினகரன் அலுவலகம் (அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன) மீது ஒரு கும்பல் புகுந்து தாக்கியது.

இதில் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து தாக்கியதால், ஊழியர்கள் நிலைகுலைந்து உயிர் தப்ப அங்கிருந்து வெளியேறி ஓடினர். இந்த சமயத்தில் அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து பலத்த சப்தத்துடன் அலுவலகம் தீப்பிடித்து யத் தொடங்கியது. இதில் கோபி மற்றும் வினோத் ஆகிய இரு ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இவர்களில் கோபி சம்பவ இடத்திலேயே பலியானார். வினோத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

மேலும் அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மேயர் தேன்மொழி தினகரன் நாளிதழ்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து எரித்து போராட்டம் நடத்தினார்.

அழகிரி ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.

நன்றி-தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்

கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?-சர்வே

ஸ்டாலின்-70%, கனிமொழி-2%, அழகிரி-2%

மே 09, 2007

முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் ஸ்டாலினுகு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆழகிரிக்கு வெறும் 2 சதவீதம் தான் ஆதரவு கிடைத்துள்ளது.

சன் டிவி, தினகரன் பத்திரிக்கைககளுக்காக உலகப் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் ஆய்வு மையம் தமிழக அளவில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 2 சதவீத ஆதரவும், கருணாநிதியின் வாரிசுகள் தவிர மற்றவர்கள் தலைவராக வர வேண்டும் என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் 6 சதவீதம் பேர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சென்னையைப் பொறுத்தவரை அழகிரிக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லை. அவருக்கு முட்டை தான் கிடைத்துள்ளது. கனிமொழிக்கும் 1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

ஸ்டாலின் கோட்டை என்று திமுகவினரால் கூறப்படும் சென்னையில் ஸ்டாலினுக்கு 68 சதவீத ஆதரவு தான் உள்ளது.

ஸ்டாலினுக்கு அதிகபட்ச ஆதரவு கிடைத்திருப்பது கோவை, திருச்சி, வேலூர் பகுதிகளில் தான். இங்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு கிடைத்துள்ளது. மதுரையில் இது 67 சதவீதமாகவும், சேலத்தில் 61 சதவீதமாகவும் உள்ளது.

மதுரையில் இருந்தபடி தென் மாவட்டங்களை ஆட்டிப் படைத்து வரும் அழகிரிக்கு மதுரையில் ஆதரவு குறைச்சலாக உள்ளதாம். ஆனால் நெல்லையில்தான் ஆதரவு அதிகமாம்.

நெல்லையில் 11 சதவீதம் பேரும், மதுரையில் 6 சதவீதம் பேரும் அழகிரியை ஆதரித்துள்ளனர். சென்னை, சேலத்தில் அவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லை.

கனிமொழிக்கு மதுரையில் 5, சேலத்தில் 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நெல்லையில் 3 சதவீதம் பேரும், நாகர்கோவிலில் 2 சதவீதம் பேரும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை, வேலூர், கோவை, புதுச்சேரியில் தலா 1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஸ்டாலின், கனிமொழி, அழகிரி தவிர மற்றவர்களின் பெயர்களை சொன்னவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர். அவர்கள் யார் பெயரை சொன்னார்கள் என்பதை தினகரன் வெளியிடவில்லை (ஒருவேளை தயாநிதி மாறனாக இருக்குமோ?).

அரசியல் அனுபவசாலி என்ற வகையில் ஸ்டாலினுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாம். ஆனால் அழகிரி, கனிமொழியை ஆதரித்தவர்கள் அதற்கான காரணமாக என்ன கூறினார்கள் என்பதை தினகரன் தெரிவிக்கவில்லை.

வென்றது புடவை-சுடிதார் நெக்ஸ்ட்:

அதே போல ஏசி நீல்சன் நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பில், பெண்களுக்கு செளகரியமான உடை எது என்று கேட்கப்பட்டது.

அதற்கு புடவை என்று பெரும்பாலானவர்கள் பதில் தந்துள்ளனர்.

பெண்ண்களுக்கு புடவைதான் பெஸ்ட் என்று 69 சதவீதம் பேரும், சுடிதார்தான் தோது என்று 30 சதவீதம் பேரும், ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேன்ட், சட்டை, டாப்ஸ், ஸ்கர்ட் போன்றவறுக்கு ஆதரவு இல்லையாம்.

நெல்லையில்தான் புடவைக்கு நல்ல மவுசு உள்ளது. அங்கு 82 சதவீதம் பேர் புடவைக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

புதுச்சேரி, திருச்சியில் 80 சதவீதம் பேரும், மதுரையில், 74 சதவீதம் பேரும் புடவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் 62 சதவீதம் பேருக்கு புடவைதான் பிடித்திருக்கிறதாம்.

சென்னையில் 36 சதவீதம் பேரும், தமிழக அளவில் 30 சதவீதம் பேரும் சுடிதாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/09/survey.html

குடும்ப சண்டையா? அப்பாவி சனங்கள் தான் இவர்களின் சண்டைக்கு பலியா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைதான் சொல்லுறது சொந்த செலவில் சூணியம் வைப்பது என்று, பங்காளிச்சண்டை தொடங்கீட்டுது இனி இது ஓய்த மாதிரித்தான். எத்தனை தமிழ்படம் பாக்கிறம் :lol::lol::lol:

அரசியல் பண்னுராங்க, அரச காலம் போல. சும்மா இருந்து வேடிக்கைபார்ப்போம். கன்னட போழித்தமிழர்ள் என்ன செய்கிறார்கல்என்று!

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரிசு அரசியல் வன்முறை ஆரம்பமாகிவிட்டது.

* மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தினகரன்/சன் டிவி அலுவலகத்தின் மேல் பெட்ரோல் குண்டு வீசி 2 (கோபி, வினோத் )பேர் மரணம்.

* பஸ்கள் உடைப்பு

* தயநிதி மாறன் கொடும்பாவி எரிப்பு

* மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக கோஷம்.

* தினகரன் நாளிதழ்களை எரித்து போராட்டம்.

( தினகரன் அலுவலகத்திலிருந்து வந்த தகவல்படி இறந்தவர்க்ள் இரண்டு பேரும் கணினி வல்லுனர்கள் என்று தெரிகிறது )

* 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர்.

* Stupid poll - N.Ram - The Hindu

"அழகிரி ரெளடி''-சன் டிவி கடும் தாக்கு: 'அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி"

வழக்கமாக 1.30 மணிக்கு ஒளிபரப்பாக வேண்டிய சன் செய்தி, பத்து நிமிடங்கள் தாமதமாகத்தான் ஒளிபரப்பானது.

முதல் செய்தியே அழகிரி செய்திதான். இதுவரை இல்லாத அளவுக்கு அழகிரி குறித்து செய்தியில் கடுமையாக குறிப்பிட்டனர்.

அழகிரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி மதுரை மக்கள் தவிப்பதாகவும், மதுரை நகரம் ஸ்தம்பித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டது.

அதைவிட மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனை, அழகிரியின் ரவுடி என்று கடுமையாக குறிப்பிட்டனர். முதல்வரின் மூத்த மகன் அழகிரியை, முதல் முறையாக சன் டிவி மிகக் கடுமையாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் மிகப் பெரும் வன்முறையில் குதித்தனர். அப்போது நூற்றுக்கணக்கான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மக்கள் பீதியடைந்து பயப்படும் நிலை காணப்பட்டது.

ஆனால் அதுகுறித்து சன் டிவியில் அன்று பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

எல்லா அமைச்சர்களும் கலைஞர் வீட்டில் கூடினர்

கலைஞர் Upset. பொன்விழா ஏற்பாடுகள் நிறுத்த சொல்லியிருக்கார்

* இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது ( ஒரு Security, ஒரு office boy )

  • தொடங்கியவர்
pic1.jpg

மக்கள் சுயமாக வாக்கிட்டனரா அல்லது இதுவும் வழக்கம் போல கள்ள வாக்கா ?? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் வாரிசாக வந்தாலென்ன! தமிழகத்தைத் தலைமை தாங்கப் பாறது யார் எண்டிறது தானே முக்கியம்! இதுக்கேன் அடிச்சிக்கிறாங்க?

வாரிசு அரசியல் வன்முறை ஆரம்பமாகிவிட்டது.

* மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தினகரன்/சன் டிவி அலுவலகத்தின் மேல் பெட்ரோல் குண்டு வீசி 2 (கோபி, வினோத் )பேர் மரணம்.

* பஸ்கள் உடைப்பு

* தயநிதி மாறன் கொடும்பாவி எரிப்பு

* மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக கோஷம்.

* தினகரன் நாளிதழ்களை எரித்து போராட்டம்.

( தினகரன் அலுவலகத்திலிருந்து வந்த தகவல்படி இறந்தவர்க்ள் இரண்டு பேரும் கணினி வல்லுனர்கள் என்று தெரிகிறது )

* 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர்.

"அழகிரி ரெளடி''-சன் டிவி கடும் தாக்கு: 'அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி"

வழக்கமாக 1.30 மணிக்கு ஒளிபரப்பாக வேண்டிய சன் செய்தி, பத்து நிமிடங்கள் தாமதமாகத்தான் ஒளிபரப்பானது.

முதல் செய்தியே அழகிரி செய்திதான். இதுவரை இல்லாத அளவுக்கு அழகிரி குறித்து செய்தியில் கடுமையாக குறிப்பிட்டனர்.

அழகிரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி மதுரை மக்கள் தவிப்பதாகவும், மதுரை நகரம் ஸ்தம்பித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டது.

அதைவிட மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனை, அழகிரியின் ரவுடி என்று கடுமையாக குறிப்பிட்டனர். முதல்வரின் மூத்த மகன் அழகிரியை, முதல் முறையாக சன் டிவி மிகக் கடுமையாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் மிகப் பெரும் வன்முறையில் குதித்தனர். அப்போது நூற்றுக்கணக்கான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மக்கள் பீதியடைந்து பயப்படும் நிலை காணப்பட்டது.

ஆனால் அதுகுறித்து சன் டிவியில் அன்று பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

எல்லா அமைச்சர்களும் கலைஞர் வீட்டில் கூடினர்

கலைஞர் Upset. பொன்விழா ஏற்பாடுகள் நிறுத்த சொல்லியிருக்கார்.

* இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது ( ஒரு Security, ஒரு office boy )

* 32 பேர் கைது

* மதுரை மேயருக்கு பங்கு என்று பேச்சு.

மு.க. அழகிரி பேட்டி கருத்துக்கணிப்பு வெளிவந்த அந்த நாளிதழை நான் படிப்பதே இல்லை. தலைவர் (கருணாநிதி) மீது ஆணையாக இதை சொல்கிறேன். கருத்துக்கணிப்பு வெளியிட்ட "ஜென்மங்கள்' நேரில் வரட்டும். தமிழகம் முழுதும் அழைத்துச்செல்கிறேன். எனக்கு எவ்வளவு ஆதரவு, அந்த ஜென்மங்களுக்கு எவ்வளவு ஆதரவு என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதை யார் செய்தார்களோ அவர்கள் மீது தலைவர் நடவடிக்கை எடுக்கட்டும். ஏற்கனவே யாரோ தெரிவித்த தவறான தகவலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்தனர். அதே போல இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் என்னை பற்றி கருத்துக்கணிப்பு எடுக்கலாம். கட்சிப் பதவியிலேயே நான் கிடையாது. இவ்வாறு இருக்கும் போது என் தம்பி (ஸ்டாலின்) இடத்திற்கு வரவேண்டும் என நான் எப்படி நினைப்பேன். கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும் என உழைக்கிறேன். எனவே கட்சி வளர்கிறது.

கருத்துக்கணிப்பை பார்த்து என் தம்பி என்னிடம் பேசி வருத்தப்பட்டார். அதை கண்டித்தார். தமிழ்ப் புத்தாண்டு அன்று தலைவரின் வாழ்த்துச் செய்தியை கூட அந்த நாளிதழ் வெளியிடவில்லை. நான் எதற்கும் ஆத்திரப்படவில்லை. பதவிக்கு வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கருத்துக்கணிப்பை வெளியிட தேவையே இல்லை. இப்போது தேர்தலா வருகிறது? தேர்தல் நேரம் என்றால் நான் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றால் கருத்துக்கணிப்பை வெளியிடலாம்.

"அவர்கள்' நிறைய பணம் வைத்துள்ளனர். பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைக்கின்றனர். அது தவறானது. தலைவருக்கு பொன்விழா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு மனகசப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை. அவர்களாகவே வேண்டும் என்றே இதை செய்திருக்கலாம்

* ஆஸ்பத்திரியில் 25 பேர் சிகிச்சை

* ஜெயா டிவி சிறப்பு செய்திகள் ஒளிபரப்பு

* கலைஞர் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் அவரச ஆலோசனை.

* பொன்விழா நிகழ்ச்சிகள் வேண்டாம் - கலைஞர்.

* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சமாதானப்படுத்திய பின்பு தன் மனதை மாற்றிக் கொண்டார்.

* கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஜென்மங்கள் நேரில் வரட்டும்: மு.க. அழகிரி சவால் ( மேலே )

* எது உண்மை ? சன் டிவி செய்தியா ? ஜெயா டிவி செய்தியா மக்கள் குழப்பம்

மக்கள் சுயமாக வாக்கிட்டனரா அல்லது இதுவும் வழக்கம் போல கள்ள வாக்கா ?? :lol::lol::lol:

உங்களுக்கு அரசியல் புரியவில்லை என்று நினைக்கிறேன், இப்படி பட்ட கறுத்துக்கணிப்பு தொடங்குபோதே அவர்கள் இது போன்று நடக்கும் என்று சித்திதுதான் செய்து இருப்பார்கள், மாறன் குடும்பமே கருணானிதியின் அரசியல் வாரிசாக வரவேண்டும் என்பதே மாறன் குடும்பத்தினரின் விருப்பம் அதற்க்கு முதல் அச்சாரமாக அண்ணன் தம்பியிடையே மோதலை உறுவாக்கிவிட்டனர்.

அடுத்து முதல்வர் கலானிதி மாறன், மாறன் குடும்பத்தை பகைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது கருணானிதியின் குடும்பத்தினரால்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வன்முறையா அதுவும் இரு அப்பாவி பொதுமக்கள் கொலையா இருக்காதே அப்படி ஏதும் நடந்தால் புலிகள் தானே காரணமாக இருக்குமா?? அப்பிடியெண்டால் புலிகள் அழகிரியின் ஆதரவாளர்களா??? என்னிலை கோவிக்காதையுங்கோ ஏணெண்டால் அண்மை காலமாக ஆழும் கட்சி எதிர் கட்சி காவல்துறை எண்டு எல்லாம் புலிகள் தான் தமிழகத்திலை வன்முறைக்கு காரணம் எண்டவை அதுதான் நானும் அந்த செய்திகளையே தொடந்து படிச்சதாலை வன்முறை எண்டதும் இப்பிடி யோசிச்சிட்டன் சரி வாழ்க அழகிரி அண்ணன் வருங்கால முதலமைச்சர் அழகிரியே சே இதிலை எதுக்கு கஞ்சதனம் வருங்கால இந்திய பிரதமர் அழகிரி வாழ்க :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியில் ஈழத்தமிழர்களில் முகர்ஜி குற்றம் சாட்டுவார் கருணாநிதி அதிர்ச்சி தெரிவிப்பார்.

இதெல்லாம் தமிழக அரசியலில் சகஜமப்பா

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வாரிசு கருத்துக் கணிப்பு தேவையா?

சென்னை: முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது திமுகவினரால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், அதுபோன்ற ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது அவசியமா என்ற கேள்வியை பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் எழுப்பியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் அவரது அடுத்த வாரிசு யார் என்ற கேள்வியைக் கேட்பதே முதலில் சிறுபிள்ளைத்தனமான ஒரு விஷயமாக திமுகவினரால் கருதப்படுகிறது.

காரணம், ஸ்டாலின்தான் கருணாநிதியின் வாரிசு என்பது திமுகவினரால் ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில் (சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வந்தபோதிலும் கூட), மு.க.அழகிரியும் அதை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அந்தக் கேள்வியை கேட்டு ஏன் ஒரு கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கேள்விதான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாநிலத்தில் கருணாநிதி, மத்தியில் முரசொலி மாறன் என்பது நீண்ட காலமாக திமுகவில் நிலவி வந்த ஒரு வழக்கம். அதேபோல மாநிலத்தில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், மத்தியில், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என்பது கருணாநிதி எடுத்த முக்கிய முடிவு.

இந்த முடிவை திமுகவினரில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தயாநிதி மாறனை தூக்கி விடுவதை மு.க.அழகிரி ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்தார்.

குறிப்பாக தயாநிதி மாறனுக்கு 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்தபோது அதை எதிர்த்து வெளிப்படையாகவே கருணாநிதியிடம் கருத்து தெரிவித்தாராம் அழகிரி. இருப்பினும் அவரை சமாதானப்படுத்தினார் கருணாநிதி.

அதேபோல ஸ்டாலினுக்கும் அவருக்கும் நீண்ட காலமாக புகைச்சல் இருந்து வந்தது. இதன் காரணமாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் (தூத்துக்குடி நீங்கலாக) ஸ்டாலினால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

மேலும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கே அதிக ஆதரவு கொடுத்ததாலும், தனது ஆட்களை கட்சி மேலிடம் புறக்கணித்ததாலும் அதிருப்தி அடைந்த அழகிரி, 2001 சட்டசபைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக நிறுத்தி திமுக வேட்பாளர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்தார்.

இதையடுத்து அழகிரியுடன், ஸ்டாலின் சமரசத்திற்கு வந்தார். இருவரும் சந்தித்துப் பேசி இணைந்து செயல்படவும் முடிவு செய்தனர். அத்தோடு பிரச்சினை முடிந்ததாகத்தான் திமுகவினரும், கருணாநிதியும் நினைத்தனர்.

ஆனால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உருவில் புதிய பிரச்சினை வந்தபோது மீண்டும் ஒரு தலைவலியை திமுக சந்தித்தது. அழகிரியை மாறன் சகோதரர்கள் முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்தனர். இது அழகிரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

மாறன் சகோதரர்களின் வளர்ச்சி அழகிரியை மட்டும் பாதிக்கவில்லை. ஸ்டாலின், ஏன், கருணாநிதியையும் கூட அது சற்றே உரசிப் பார்த்தது. நான் சொல்வதை சன் டிவி கேட்பதில்லை என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதியே சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.

அதேபோலத்தான் ஸ்டாலினையும் ஒரு தூரத்தில் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது சன் குழுமம். இப்படி கருணாநிதி குடும்பத்திற்கும், சன் டிவிக்கும் இடையிலான தூரம் அதிகரித்து வந்த நிலையில் இப்போது மதுரையில் அது பெரும் குண்டாக வெடித்து கட்சிக்கும், கருணாநிதிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.

குடும்பமா, கட்சியா என்ற பெரும் குழப்பத்தில் கருணாநிதியை தள்ளி விட்டிருக்கிறது மதுரை வன்முறை. உண்மையில், சன் குழுமத்தால் கருணாநிதிக்கு பெரும் தர்மசங்கடம்தான்.

கர்நாடகத்தில் உதயா, கேரளாவில் சூர்யா, ஆந்திராவில் ஜெமினி என சன் குழுமத்தின் சானல்கள் வியாபித்து பெரும் சாம்ராஜ்யமாக மாறி நங்கூரமிட்டு நிற்கின்றன. இங்கெல்லாம் சானல்களை நிர்வகிப்பது கருணாநிதி குடும்பத்தினர்தான்.

எனவேதான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என எதிலுமே உறுதியான, சம்பந்தப்பட்ட மாநிலங்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் ஈடுபட முடியாமல், கருணாநிதி தயங்குகிறார், தடுமாறுகிறார், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். இதே புகாரைத்தான் ஜெயலலிதாவும் சமீப காலமாக மிகக் கடுமையாக கூறி வருகிறார். இதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

கருணாநிதி சில முக்கிய முடிவுகளை, உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. அவர் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறார், என்ன முடிவு எடுக்கப் போகிறார், எப்படி இதை அணுகப் போகிறார் என்பதை திமுகவினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.

-தற்ஸ் தமிழ்

இறுதியில் ஈழத்தமிழர்களில் முகர்ஜி குற்றம் சாட்டுவார் கருணாநிதி அதிர்ச்சி தெரிவிப்பார்.

இதெல்லாம் தமிழக அரசியலில் சகஜமப்பா

வெக்கம் கெட்டவங்கள், குடும்பத்து சண்டைய தெருவுக்கு கொண்டுவந்து 4 அப்பாவிய கொலை பண்ணிட்டாங்களே, இவங்களுக்கெல்லாம் ஈழத்தை பற்றியும் புலிகளைப்பற்றியும் பேசுரத்துக்கு என்ன வக்கு இருக்கு :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rmsachitha நிஙகள் சாணக்கியண்தாணே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைபெறும் போக்கை நன்றாக உற்றுநோக்குபவர்களுக்கு இது தெரியும். அடுத்த தமிழக அரசில் தொடரோட்டத்தில் மாறன் குடும்பம்தான் பிரதான பங்கேற்கப்போகிறது. இந்தப் பிரச்சனையின் முதற்காரணியான வில்லை எடுத்தவர்களே இவர்கள்தான். பாவம் அப்பாவிகள்! இது அண்ணன் தம்பித்தகராறாக வெளிப்படுத்தப்படுகிறது.

1. மாறன் குடும்பத்தில் பார்ப்பனியம் இருப்பதால் இந்தியம் இருக்கும். திராவிட பாரம்பரியம் முடிவுக்குவரும்.

2. கலைஞரின் கடைசிக்கால நிகழ்வுகள் அவரை மகிழ்வுறவிடாது. இதுதான் நல்லதே நினைத்து நல்லதே செய்யவேண்டும் என்பார்கள்.

3. மதுரையில் குண்டு வெடித்ததால் ஜெயா டீவீ இலங்கைத் தமிழர்களின் கைவரிசை என்று சொல்லாமல்விட்டது ஆச்சரியமானது.

4. பொதுவான தொடர்பூடகத்தை வைத்து எப்படி கருத்துருவாக்கலை உருவாக்குகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இது இன்று உலகு முழுவதும் நடைபெறும் உத்திமுறை. விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பெருக்கிய முதலாளியம் இன்று அரசியலிலும் அதே உத்தியைக் கையாளுகிறது.

5. காவிரி போன்ற (நதிநீர்), குமரி மீனவர்களின் உயிர்ப்பிரச்சனைகளைத் தொடாமல், இதற்கான பொதுமக்கள் உணர்வுகளைக் காட்டாமல் வெறும் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் விபரணங்கள் தேவைதானா?

இவற்றை தூர தேசமொன்றிலிந்து நோக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது

இதிலை எதுக்கு கஞ்சதனம் வருங்கால இந்திய பிரதமர் அழகிரி வாழ்க

சாத்திரி, இதிலையும் எதுக்கு கஞ்சதனம் வருங்கால செவ்வாய் கிரக அதிபர், வாழ்க வாழ்க. :rolleyes:

இப்போயெல்லாம் ******க்கு ***கெல்லாம் பேருந்தையும் மக்களையும் கொலுத்த ஆரம்பிச்சிட்டாங்கய்யா

கழிகாலம். :angry:

rmsachitha நிஙகள் சாணக்கியண்தாணே

நான் அவ(ர்)ன் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கம் கெட்டவங்கள், குடும்பத்து சண்டைய தெருவுக்கு கொண்டுவந்து 4 அப்பாவிய கொலை பண்ணிட்டாங்களே, இவங்களுக்கெல்லாம் ஈழத்தை பற்றியும் புலிகளைப்பற்றியும் பேசுரத்துக்கு என்ன வக்கு இருக்கு :angry: :angry:

இந்தப் பிரச்சனைக்கும் ஈழத்துக்கும் முடிச்சு வேண்டாமே! :D

தங்களுக்காக மற்றவர்களைக் கொல்வது என்பது ஒருஅரசியல் கலாச்சாரம். செயலலிதா ஒரு தடவை தர்மபுரியில் பள்ளிமாணவிகள் 3 பேரை பஸ்சில் வைத்து எரித்துக் கொன்றார். இவ்வளவு நாளும் திமுக அதை வைத்து ஜெயலலிதாவைத் திட்டுவார்கள். இப்போது ஜெயலலிதாவிற்கு திமுகவைத் திட்ட நல்லதொரு விடயம் கிடைத்துள்ளது. அவ்வளவு தான் இது அரசியலில் உள்ள மாற்றமே தவிர, மக்கள் சாகடிக்கப்படுவது என்பது பிரச்சனையான ஒன்றாகக் கருதமாட்டார்கள்.

தயாநிதிக்கு எதிராக அணி திரளும் கருணாநிதி

குடும்பம்: பதவி பறிக்கப்படுகிறது?!

சென்னை அழகிரி-மாறன் குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதே போல பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரை வன்முறை திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு பிள்ளையார் சுழி போல அமைந்து விட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது.

இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பின்னரும் அழகிரிக்கு முதல்வர் கருணாநிதி முழு ஆதரவு தருவதாக தயாநிதியும் அவரது அண்ணனும் சன் டிவி நிறுவனருமான கலாநிதியும் கருதுகின்றனர்.

இதனால் அழகிரி மீது கருணாநிதி நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே அவர்கள் நினைக்கின்றனர்.

இந் நிலையில் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அழகிரி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு கருணாநிதி குடும்பத்திலும் ஆதரவு வலுத்துள்ளதாம்.

தயாநிதி மாறன் முதுகில் குத்தி விட்டார், கலைஞருக்கு துரோகம் செய்து விட்டார் என்று ஒட்டுெமாத்த கருணாநிதி குடும்பமும் கொந்தளித்துக் கிடக்கிறதாம்.

கலைஞர் மற்றும் திமுகவை வைத்து பல பலன்களை அனுபவித்தவர்கள் மாறன் சகோதரர்கள். ஆனால் இன்று கலைஞரையே தூக்கி எறியத் துணிந்து விட்டனர்.

அப்படிப்பட்டவர்களுடன் நமக்கு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கோபமாக கருணாநிதியிடம் கூறியுள்ளனராம்.

அழகிரியின் ேகாரிக்கையை திமுக முன்னணியினரும் வரவேற்றுள்ளனராம். காரணம் தயாநிதியின் வருகையை ஆரம்பத்திலிருந்தே விரும்பாதவர்கள் இவர்கள்.

தயாநிதியின் அசுர வளர்ச்சியால் அவர் மீது எரிச்சலில் உள்ள இந்த திமுக முக்கிய தலைகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கருணாநிதியை நெருக்கி வருகின்றனர்.

குறைந்த பட்சம் அவரது இலாகாவையாவது மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்த வற்புறுத்தல்களால் தயாநிதியை பதவியை விட்டு விலகுமாறு கருணாநிதி கோரலாம் என்று தெரிகிறது.

அழகிரி விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க தயாநிதி எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கருணாநிதியின் பொன்விழா பொதுக் கூட்டத்தை தயாநிதி புறக்கணித்தார் என்கிறார்கள்.

மேலும் இதே காரணத்தில் தான் கருணாநிதியின் பொன் விழா நிகழ்ச்சிகளைக் கூட சன் டிவி நேரடியாக ஒளிபரப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப சன் டிவிக்கு கருணாநிதியே அனுமதி மறுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதனால் இந்த நிகழ்ச்சியையும் காலையில் சட்டமன்றத்தில் நடந்த பொன் விழா நிகழ்ச்சியையும் ராஜ் டிவி தான் நேரடியாக ஒளிபரப்பியது.

இதனால் கருணாநிதியின் பொன் விழா சன் டிவி செய்தியில் 4வது செய்தியாகத் தான் இடம் பெற்றது.

இந் நிலையில் இனி ஆட்சி, கூட்டணி தொடர்பான எந்த முக்கிய விஷயங்களையும் தயாநிதியிடம் தெரிவிக்க வேண்டாம், அதை டி.ஆர்.பாலுவிடம் சொன்னால் போதும் என பிரதமரிடமும் சோனியாவிடமும் கருணாநிதி கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் தயாநிதி தானாகவே பதவி விலகுவார் அல்லது பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று திமுகவில் பலமாகவே கிசுகிசுக்கிறார்கள்.

மதுரை வன்முறைக்குப் பிறகு மாறன் குடும்பத்தினர் யாரும் கருணாநிதி வீட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் தற்ஸ்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.