Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்டமூரி விரேந்திரநாத்

Featured Replies

மீனா’ தெலுங்குப் படத்துக்கும் தமிழ் நாவல் உலகில் எண்டமூரி விரேந்திரநாத் பெயரில் நடந்த மோசடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

எண்டமூரி விரேந்திரநாத்?

ஆம். 70 - 80 - 90ஸ் கிட்ஸின் ஹாட் கேக்.

1980களில் தமிழ் வெகுஜன தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

‘துளசி தளம்’, ‘மீண்டும் துளசி’ ஆகிய எண்டமூரி விரேந்திரநாத்தின் நாவல்கள் சுசீலா கனகதுர்க்காவின் மொழிபெயர்ப்பில் தமிழகத்தில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

இவ்விரு நாவல்களின் வெற்றியை தொடர்ந்து எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய பல நாவல்கள் தமிழ் வார இதழ்களில் தொடர்கதைகளாகவும் நேரடி நாவல்களாகவும் வெளிவந்தன. லெண்டிங் லைப்ரரியில் தவறாமல் இடம்பெற்று வாசகர்களின் ஆதரவை பெற்றன.

அப்படி வெளியான நாவல்களில் ஒன்றுதான் ‘முள்பாதை’.

கிட்டத்தட்ட தமிழில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல், தொடர்கதையாக எந்த பத்திரிகையிலும் வெளியாகவில்லை. நேரடி நாவலாகவே அச்சாகி பல பதிப்புகளை கண்டன. முன்னணி பதிப்பகம் ஒன்று சுசீலா கனகதுர்காவின் மொழிபெயர்ப்பில் இதை பிரசுரம் செய்திருந்தது.

‘முள் பாதை’க்கு கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாகாரர்களையும் புருவம் உயர வைத்தது.

விளைவு, சென்னை தூர்தர்ஷனில் 13 வார சீரியலாக இந்த நாவலை பொன்வண்ணன் திரைக்கதை அமைத்து இயக்கினார். ஹீரோ அவரே. யுவராணி, ஹீரோயின்.

ஆனால் -

1990களின் இறுதியில்தான் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

ஆமாம். ‘முள் பாதை’யை எழுதியவர் எண்டமூரி வீரேந்திரநாத் அல்ல. யத்தன்னபூடி சுலோசனாராணி என்னும் பெண் நாவலாசிரியை. 1960, 70, 80களில் தெலுங்கு நாவல் உலகை ஆண்ட ராணி இவர்.

இவரது 13 நாவல்கள் தெலுங்கில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் 1973ல் ரிலீசான ‘மீனா’ தெலுங்கு படம்.

வார இதழில் தொடர்கதையாகவும் வெளிவந்து வெற்றி பெற்ற நாவலைதான் அதே பெயரில் படமாக எடுத்திருந்தார்கள்.

இந்த ‘மீனா’தான் தமிழில் ‘முள் பாதை’ என எண்டமூரி வீரேந்திரநாத் பெயரில் வெளிவந்து பல பதிப்புகளை கண்டது.

பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த புகழ்பெற்ற தமிழ் பதிப்பகம் மன்னிப்பு கேட்டதுடன் அச்சான பிரதிகளையும் வாபஸ் பெற்றது.

‘முள் பாதை’ தனது பெயரில் தமிழில் வெளிவந்து சக்கைப்போடு போட்டிருக்கிறது என்ற விவரமே எண்டமூரி விரேந்திரநாத்துக்கு தெரியாது என்பதுதான் இதில் ஹைலைட்!

இந்தப் பிரச்னைக்கு பிறகுதான், தனது பெயரில் பெரும் வணிகம் தமிழில் நடப்பதே எண்டமூரிக்கு தெரிந்தது.

உடனடியாக தனது அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்க்கும் உரிமையை கெளரி கிருபானந்தனுக்கும் அவற்றை வெளியிடும் உரிமையை ‘அல்லயன்ஸ் பதிப்பக’த்துக்கும் எண்டமூரி விரேந்திரநாத் அளித்தார். அத்துடன் வேறு எந்த தமிழ்ப் பதிப்பகமும் தனது எந்த படைப்பையும் வெளியிடக் கூடாது என்றும்... இதுநாள் வரை ‘அப்படி’ வெளியிட்ட நாவல்களை எல்லாம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கடிதம் அனுப்பி சட்டப்படி நடவடிக்கையும் எடுத்தார்!

இப்போது ‘முள் பாதை’ என்னும் பெயரில் தெலுங்கு மூலம்: யத்தனபூடி சுலோசனாராணி; தமிழாக்கம்: கெளரி கிருபானந்தன் என தெளிவாக அச்சிட்டு இந்த ‘மீனா’ தெலுங்கு நாவலை இரு பாகங்களாக தமிழில் ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கிறது.

‘மீனா’ தெலுங்குப் படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியதுடன் ஹீரோயினாகவும் நடித்திருப்பார் விஜய நிர்மலா.

ஹீரோவாக நடித்தவர் மகேஷ் பாபுவின் அப்பாவான கிருஷ்ணா.

அதுநாள் வரை மாஸ் ஹீரோவாக இருந்த கிருஷ்ணாவை ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் கொண்டு சென்ற முதல் படம் இதுதான்.

மட்டுமல்ல, பின்னாளில் கிருஷ்ணா - விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையில் இணையவும் இந்தப் படமே பிள்ளையார் சுழி போட்டது.

தன் வாழ்நாளில் 44 படங்களை விஜய நிர்மலா இயக்கியிருக்கிறார். அதன் வழியாக அதிக படங்களை டைரக்ட் செய்த பெண் இயக்குநர் என்ற சிறப்புடன் கின்னஸ் ரிக்கார்டிலும் இடம் பெற்றிருக்கிறார்.

முக்கியமான விஷயம், முதன் முதலில் விஜய நிர்மலா டைரக்ட் செய்தது இந்தப் படத்தைதான். முதல் நாளே ஆறு காட்சிகளை ஷூட் செய்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். ‘ராட்சஷி’ என சக நடிகர்கள் இவரை செல்லமாக அழைக்க இவரது இந்த அசுரவேகம்தான் காரணம்.

டிராலி, Zoom Back / In என அன்றைய தொழில்நுட்பத்தை எல்லாம் கச்சிதமாக ‘மீனா’வில் பயன்படுத்தி குறுகியகாலத்தில் படமாக எடுத்து முடித்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட ‘முள் பாதை’ நாவலை எண்டமூரி வீரேந்திரநாத் பெயரிலும், யத்தன்னபூடி சுலோசனாராணி பெயரிலும் வாசித்திருக்கிறேன். ‘மீனா’ படத்தையும் பார்த்திருக்கிறேன்.

ஆயிரம் பக்க நாவலின் முக்கியமான அனைத்து கட்டங்களும் இரண்டரை மணிநேர ‘மீனா’ படத்தில் இடம்பெற்றிருந்தை பார்த்து வியப்பு ஏற்பட்டது. ஒன்றை கூட இயக்குநர் மிஸ் செய்யவில்லை.

அதனால்தான் ‘என் நாவலை சிதைக்காமல் பிரமாதமாக விஜய நிர்மலா எடுத்திருக்கிறார்...’ என யத்தன்னபூடி சுலோசனாராணி புகழ்ந்திருக்கிறார்.

ரூ.6 லட்சத்தில் உருவான இந்தப் படம், ரூ.45 லட்சம் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

பிறகு இந்த ‘மீனா’ கதை பல்வேறு வடிவங்களில் உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் தெலுங்கு சினிமாவில் தலைகாட்டியிருக்கிறது... தலைகாட்டியும் வருகிறது.

ஆம். Present Tenseதான்.

2016ம் ஆண்டு த்ரிவிக்ரம் ‘கதை திரைக்கதை’ வசனம் எழுதி நிதின் - சமந்தா நடிப்பில் இயக்கியிருந்த ‘அ ஆ’ (அனுசுயா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹாரி) படம், அப்படியே ‘மீனா’தான். ஒன்றிரண்டு காட்சிகள் அல்லது கட்டங்கள் அல்ல... முழுப்படமும்!

‘அ ஆ’ ரிலீசான பிறகு ரசிகர்கள் ரவுண்ட் கட்டி த்ரிவிக்ரமை அடித்தார்கள். பிறகு அவர் யத்தன்னபூடி சுலோசனாராணியின் ‘மீனா’ நாவலைதான், தான் படமாக இயக்கியதாக ஒப்புக் கொண்டார்.

டைட்டிலில் இதை குறிப்பிட்டதாகவும் ரிலீஸ் நேரத்தில் ‘தவறுதலாக’ அது விடுபட்டுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்ததுடன் யத்தன்னபூடி சுலோசனாராணயின் வாரிசுகளிடம் ஒரு தொகையையும் வழங்கினார்...

எதையோ இணையத்தில் தேடப் போக... ‘முள்பாதை’ என்னும் சொல் கண்ணில் பட...

கோர்வையாக இல்லாமல் சிதறலாக இப்படியொரு ஸ்டேட்டஸ்...

கே என்சிவராமன - FACE BOOK 

  • தொடங்கியவர்

"எண்டமூரி வீரேந்திரநாத் தாகூர்- ன், புத்தகங்களை அநேகமாக நான்
"சுசீலா கனகதுர்க்கா" மொழி பெயர்ப்பில் வந்தவற்றையே படித்து இருக்கிறேன்

படித்தவற்றில் இன்றும் எனக்கு பிடித்தவற்றில்
கண்சிமிட்டும் விண்மீன்கள், துளசி தளம் மீண்டும் துளசி, லேடீஸ் ஹாஸ்டல் ,

(ராட்ஸசன்? ,வித்தியாசமான மனிதன்? பணம்?) சரியான பெயர்களோ தெரியவில்லை நினைவிலிருந்து எழுதி இருக்கிறேன் ),

அண்மையில் படித்த வர்ணஜாலம் வரை அடங்கும்.. இன்டஸ்டெல்லர் படம் பார்த்துவிட்டு கண்சிமிட்டும் விண்மீன்கள் மீண்டும் ஒருமுறை படிப்போம் என ஒன்லைனில் தேடினேன் கிடைக்கவில்லை

இவரின் கதை என நான் விரும்பி படித்திருந்த (5 தடவை யாவது,என்ன அப்படி அக்கதையில் இருக்கிறது என கேட்காதீர்கள் எனக்கும் தெரியல ஆனால் பிடித்திருந்தது/ பிடித்திருக்கிறது இப்பவும், )

"புஷ்பாஞ்சலி" வேறு ஒருவரின் கதையாக அண்மையில் படித்தேன் அந்த எழுத்தாளர் தெலுங்கின் இன்னொரு புகழ் பூத்த எழுத்தாளரான " எத்தனபூடி சுலோச்சனா ராணி" உண்மையில் இக்கதை இவருடையதாம் மொழிபெயர்ப்பாளர்கள்/ பதிப்பாளர்கள் தான் ஏதோ உல்டா பண்ணிவிட்டுருக்கிறார்கள்.

புஷ்பாஞ்சலி யின் கதை நாயகியின் பெயர் "ஸ்ராவனி" மொழிபெயர்ப்பாளர் வைத்த பெயரா கதாசிரியர் வைத்த பெயரா என்பது தெரியா

  • கருத்துக்கள உறவுகள்

நான் என் பதின்ம வயதில் அதிகம் வாசித்த புத்தகங்கள் இவருடையதே. அவரது சமூகம் சார்ந்த எண்ணங்கள் வரவேற்கத்தக்கதும் சிந்திக்கவைப்பதும். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அபராஜிதன் said:

அண்மையில் படித்த வர்ணஜாலம் வரை அடங்கும்.. இன்டஸ்டெல்லர் படம் பார்த்துவிட்டு கண்சிமிட்டும் விண்மீன்கள் மீண்டும் ஒருமுறை படிப்போம் என ஒன்லைனில் தேடினேன் கிடைக்கவில்லை

நான் kindle ரசிகை இல்லை.. அதனால் புத்தகடைகளில்அலைந்து தேடும் போது இவரது புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அருமை. 

தலைப்புகள் நினைவில் இல்லை ஆனால் சில கதைகள் மனதை விட்டு இன்னமும் அகலவில்லை...

நான் வாசிக்க எடுத்து வைத்திருக்கும் அடுத்த நாவல் இவருடைய “ மீண்டும் துளசி”..

  • தொடங்கியவர்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் kindle ரசிகை இல்லை.. அதனால் புத்தகடைகளில்அலைந்து தேடும் போது இவரது புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அருமை. 

தலைப்புகள் நினைவில் இல்லை ஆனால் சில கதைகள் மனதை விட்டு இன்னமும் அகலவில்லை...

நான் வாசிக்க எடுத்து வைத்திருக்கும் அடுத்த நாவல் இவருடைய “ மீண்டும் துளசி”..

மீண்டும் துளசிக்கு முதல் துளசி தளம் வாசித்தால் நல்லது..

கிண்டிலில் அவரின் நூல்கள் இருக்கிறதா தெரியவில்லை நான் தாயகத்தில் இருக்கும் போது நூலகங்களிலும் சிங்கப்பூரில் யாரடமிருந்தோ பெற்ற மின்நூல் ஆகவுமே வாசித்திருந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

மீண்டும் துளசிக்கு முதல் துளசி தளம் வாசித்தால் நல்லது..

கிண்டிலில் அவரின் நூல்கள் இருக்கிறதா தெரியவில்லை நான் தாயகத்தில் இருக்கும் போது நூலகங்களிலும் சிங்கப்பூரில் யாரடமிருந்தோ பெற்ற மின்நூல் ஆகவுமே வாசித்திருந்தேன்

உண்மைதான்..மீண்டும் துளசியின் முன்னுரை கூட அப்படித்தான் கூறுகிறது. “துளசி” என்ற நாவலை “மீண்டும் துளசி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளதாக.

ஆனால் என்னிடம் “துளசிதளம்” இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள புத்தக்கடைகளில் தேடி நல்லூரில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்த எண்டமூரி  வீரேந்திரநாத்தின் நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியை வாங்கிவிட்டேன், நாவல்களின் தொடர்புகளை கவனிக்கவில்லை, ஏனெனில் இவருடைய புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அருமை. 

மின்னூல் புத்தகங்களில் அதிகம் நாட்டமில்லை. அதனால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கும் வாயப்புகளையும் சில சமயங்களில் இழக்கவேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எண்டமூரியின் தீவிர ரசிகை ...அவரின் புத்தகங்கள் சுசீலா மொழி பெயர்த்தது தான் அதிகம் வாசித்திருக்கிறேன்...முதல் ,முதலில் சுண்டுக்குளி லைப்ரரியில் தான் இவருடைய நூல்களை வாசிக்க தொடங்கினேன்...அதிகம் கிரைம் நாவல்கள் தான் பிடிக்கும்...அதில் ஒரு கதை பெயர் மறந்து விட்டது பாம்பு 4,5 பேரை தேடித் திரிந்து பழி வாங்கும்...கொஞ்ச புத்தகங்கள் வைத்திருக்கிறேன் 

14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்..மீண்டும் துளசியின் முன்னுரை கூட அப்படித்தான் கூறுகிறது. “துளசி” என்ற நாவலை “மீண்டும் துளசி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளதாக.

ஆனால் என்னிடம் “துளசிதளம்” இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள புத்தக்கடைகளில் தேடி நல்லூரில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்த எண்டமூரி  வீரேந்திரநாத்தின் நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியை வாங்கிவிட்டேன், நாவல்களின் தொடர்புகளை கவனிக்கவில்லை, ஏனெனில் இவருடைய புத்தகங்கள் கிடைப்பது மிகவும் அருமை. 

மின்னூல் புத்தகங்களில் அதிகம் நாட்டமில்லை. அதனால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கும் வாயப்புகளையும் சில சமயங்களில் இழக்கவேண்டி உள்ளது.

நான் இந்த முறை யாழில் போய் தேடியும் இவரது நூல்கள் கிடைக்கவில்லை? ...நல்லூரில் எங்கு உள்ளது பூபாலசிங்கம்?...கோயிலுக்கு பக்கத்தில் இருக்குதே அதா?...அதில் இவருடைய நாவல்கள் இருந்ததா ? ...யாழில் புத்தகக் கடையில் வேலை செய்ப்பவர்களுக்கு புத்தகங்களை பற்றி தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நான் இந்த முறை யாழில் போய் தேடியும் இவரது நூல்கள் கிடைக்கவில்லை? ...நல்லூரில் எங்கு உள்ளது பூபாலசிங்கம்?...கோயிலுக்கு பக்கத்தில் இருக்குதே அதா?...அதில் இவருடைய நாவல்கள் இருந்ததா ? ...

F9359-AE3-03-A8-4-DEE-8-B1-F-B01-DF88-C0

நான் இந்த வருடம் சித்திரையில் போயிருந்த போது பூபாலசிங்கம் புத்தகசாலை லிங்கம் ஜஸ்கிறீம் கடைக்கு பக்கத்தில் அமைந்திருந்தது. கடையை மூடப்போவதாக கூறினார்கள், மூடிவிட்டார்களோ தெரியவில்லை.

ஆனால் மீண்டும் யாழ்ப்பாணம் போகும் போது கிழே உள்ள இந்த இரண்டு கடைகளிலும் தேடிப்பாருங்கள், நிறைய நல்ல புத்தகங்களை வாங்க முடியும்

1- யாழ்ப்பாணத்தில் All Ceylon distributors புத்தக கடையில்(K.K.S வீதியில்) நிறைய புத்தகங்கள் உண்டு, ஆனால் விரும்பிய புத்தகங்களை தேடி எடுப்பதற்கு நிறைய  பொறுமையும் நேரமும் வேண்டும்.

2- குயின்சி புத்தக்கடையிலும்(K.K.S வீதி) நிறைய நல்ல புத்தகங்கள் உண்டு, இங்கே ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பதால், புத்தகங்களை வேண்டுவதற்கு அதிகம் நேரம் தேவையில்லை. ஆனால் சிலசமயம் தேடுவது இருக்காது.

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

F9359-AE3-03-A8-4-DEE-8-B1-F-B01-DF88-C0

நான் இந்த வருடம் சித்திரையில் போயிருந்த போது பூபாலசிங்கம் புத்தகசாலை லிங்கம் ஜஸ்கிறீம் கடைக்கு பக்கத்தில் அமைந்திருந்தது. கடையை மூடப்போவதாக கூறினார்கள், மூடிவிட்டார்களோ தெரியவில்லை.

ஆனால் மீண்டும் யாழ்ப்பாணம் போகும் போது கிழே உள்ள இந்த இரண்டு கடைகளிலும் தேடிப்பாருங்கள், நிறைய நல்ல புத்தகங்களை வாங்க முடியும்

1- யாழ்ப்பாணத்தில் All Ceylon distributors புத்தக கடையில்(K.K.S வீதியில்) நிறைய புத்தகங்கள் உண்டு, ஆனால் விரும்பிய புத்தகங்களை தேடி எடுப்பதற்கு நிறைய  பொறுமையும் நேரமும் வேண்டும்.

2- குயின்சி புத்தக்கடையிலும்(K.K.S வீதி) நிறைய நல்ல புத்தகங்கள் உண்டு, இங்கே ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பதால், புத்தகங்களை வேண்டுவதற்கு அதிகம் நேரம் தேவையில்லை. ஆனால் சிலசமயம் தேடுவது இருக்காது.

All Ceylon distributors புத்தக கடையில் நான் புத்தகங்கள் வாங்கினேன்.குயின்சி புத்தக  கடை பற்றி தெரியவில்லை ...இரண்டும் கே கே எஸ் றோட்டில் இருந்தும் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை...நன்றி 
 
  • 7 months later...

கௌரி கிருபானந்தன் சென்னையிலிருந்து/ கடந்த இருபது வருடங்களாக எண்டமூரி வீரேந்திரநாத் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வருகிறேன். அவருடைய படைப்புகள் amazon kindle லில் மின் புத்தகமாக கிடைக்கின்றன.

https://www.amazon.in/s?k=gowri+kirubanandan&crid=2B90PCPB9XRKT&sprefix=gowri+kiru%2Caps%2C280&ref=nb_sb_ss_ts-a-p_1_10

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 11:14, Gowri Kirubanandan said:

வாழ்த்துகள், தமிழிற்கு உங்கள் சேவை தொடர்க. நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் நூல்களை படித்தது முடிக்கும்வரை தூக்கமே வராது. மந்திர மாயம் மோகினிகள் பற்றிய வர்ணனை இன்றுவரை மனதில் அப்படியே பதித்து போயிருக்கிறது.

On 14/7/2020 at 04:14, Gowri Kirubanandan said:

கௌரி கிருபானந்தன் சென்னையிலிருந்து/ கடந்த இருபது வருடங்களாக எண்டமூரி வீரேந்திரநாத் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வருகிறேன். அவருடைய படைப்புகள் amazon kindle லில் மின் புத்தகமாக கிடைக்கின்றன.

https://www.amazon.in/s?k=gowri+kirubanandan&crid=2B90PCPB9XRKT&sprefix=gowri+kiru%2Caps%2C280&ref=nb_sb_ss_ts-a-p_1_10

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
On 14/7/2020 at 11:14, Gowri Kirubanandan said:

கௌரி கிருபானந்தன் சென்னையிலிருந்து/ கடந்த இருபது வருடங்களாக எண்டமூரி வீரேந்திரநாத் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வருகிறேன். அவருடைய படைப்புகள் amazon kindle லில் மின் புத்தகமாக கிடைக்கின்றன.

https://www.amazon.in/s?k=gowri+kirubanandan&crid=2B90PCPB9XRKT&sprefix=gowri+kiru%2Caps%2C280&ref=nb_sb_ss_ts-a-p_1_10

நன்றிகள் மேடம் ,உங்களின் தகவலுக்கும் யாழ் களத்திற்கான உங்கள் வருகைக்கும்

ஆம் இப்போது தான் கிண்டிலில் உங்கள் பெயரினை சுட்டி தேடி பார்த்தேன் 

1) சிவதாண்டவம்1&2

2)நாலாவதுதூண்

3)விஸ்வரூபம்

4)அவள் செதுக்கிய சிற்பம் 

5)ருத்ரநேத்ரா

6)பந்தம் பவித்ரம் 

7)ஒருமழைகாலத்து மாலைநேரம் 

8)சாரதாவின் டைரி

9)துளசிதளம் 

10) வர்ணஜாலம் 

என என்டமூரி வீரேந்திர நாத் ன் அநேகமான நூல்களும் வேறு தெலுங்கு எழுத்தாளர்களின் (யத்தனபூடி சுலோசனா ராணி போன்ற)நீங்கள் மொழி பெயர்த்த நூல்களும் இருக்கின்றது..

கிண்டில் அன்லிமிட்டெட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 0.₹ போல  

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.