Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 வருடங்களின் பின்னர் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் விடுதலை

Featured Replies

பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார்.

இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார்.

இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார்.

A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today.

Five Tamil accused were indicted in the high court under the PTA on December 4, 2013 for the alleged offences purportedly committed on December 1, 2006 at the Kollupitiya Piththala junction.

The trial on the 4th accused Chandrabose Selvachandran was conducted before High Court Judge Pradeep Hettiarachchi.

After having heard the submissions of both parties and evidences, the Judge observed that the confession had been rejected in the voir dire inquiry and there was no other credible evidences forwarded by the prosecution.

After the conclusion of the trial, the high court judge acquitted the 4th accused who is a cancer patient.

K.V. Thavarasha P.C instructed by Ms. Tharmarajah Tharmaja appeared for the accused. Deputy Solicitor General Rohantha Abeysuriya appeared for the state. (S.S Selvanayagam)

http://www.dailymirror.lk/breaking_news/After-14-years-in-jail-Tamil-prisoner-acquitted/108-179898

Edited by ampanai
பிழை திருத்தம்

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
1 hour ago, போல் said:

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

நடக்கும் ஆனால் நடக்காது. 

மேற்குலக நாடுகளில் என்றால் இவ்வாறான  ஒரு நிதி ஆறுதலாக வழங்கப்படும். ஆனால், சிங்கள நாட்டிலே எதுவும் நடக்காது, குறிப்பாக இங்கே பாதிக்கப்பட்டவர் தமிழர். 
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

 

3 hours ago, ampanai said:

நடக்கும் ஆனால் நடக்காது. 

மேற்குலக நாடுகளில் என்றால் இவ்வாறான  ஒரு நிதி ஆறுதலாக வழங்கப்படும். ஆனால், சிங்கள நாட்டிலே எதுவும் நடக்காது, குறிப்பாக இங்கே பாதிக்கப்பட்டவர் தமிழர். 
 

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

  • தொடங்கியவர்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

இருந்தாலும், பயங்கரவாத தடை சட்டம்,  அதன் கொடூரம், இலங்கையின் நீதித்துறையில் உள்ள கோரமுகம் இவற்றை கதைக்கவும், அது அகற்றப்பட வேண்டிய தேவையையும் கூற வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. 


சட்டத்தில் நட்ட ஈடு கோரும் வாய்ப்பும் இருக்கலாம் (  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முடியாமல் இருக்கலாம்), அதையும் ஆராய்ந்து செய்யும் சட்டவல்லுநர்கள் எம் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இருந்தாலும், பயங்கரவாத தடை சட்டம்,  அதன் கொடூரம், இலங்கையின் நீதித்துறையில் உள்ள கோரமுகம் இவற்றை கதைக்கவும், அது அகற்றப்பட வேண்டிய தேவையையும் கூற வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. 


சட்டத்தில் நட்ட ஈடு கோரும் வாய்ப்பும் இருக்கலாம் (  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முடியாமல் இருக்கலாம்), அதையும் ஆராய்ந்து செய்யும் சட்டவல்லுநர்கள் எம் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். 
 

சட்ட வல்லுனர்கள் இருதாலும் ஒன்றையும் செய்ய முடியாது அரசு எடுக்கும் முடிவுக்கு 

  • தொடங்கியவர்

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 20 முற்பகல் 10.50) கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் 'அரச புலனாய்வு சேவை' (SIS) பிரிவை பயன்படுத்தி நாட்டிலுள்ள நீதி அரசர்களின் சகல இரகசியங்கள் உள்ளடங்கிய 'பாதுகாப்பு அறிக்கை' ஒன்றை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பட்டியலில் அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளடங்குவதுடன் தெரிவு செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த பாதுகாப்பு அறிக்கையானது நீதியரசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் ஒன்று அல்ல என்பதை கீழ்காணும் விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். குறித்த நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அவர்களது குடும்ப வரலாறு, தற்போதைய குடும்ப சூழ்நிலை, கடந்தகால மற்றும் தற்கால அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விபரம், அவர்களது உயர் கல்வி காலத்தில் இருந்த சகல தொடர்புகள் விபரங்கள், அரச சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் காணப்படும் உறவுகள் தொடர்புகள், குறிப்பிட்ட காலங்களில் இவர்களுடன் நெருங்கி பழகிய நபர்களது தொடர்புகள் விபரங்கள், நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள வியாபார நடவடிக்கைகள் மற்றும் விபரங்கள், அவர்களது அரசியல் தொடர்பு சம்பந்தமான விபரங்கள், நீதி அரசர்களின் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகள் தொடர்பு வைத்துள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த பாதுகாப்பு அறிக்கையில் கூடிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளாக உள்ளன. அத்துடன் விசேடமாக நீதியரசர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்கள் அடங்கிய தகவல்களும் இதில் சேர்க்கப்பட உள்ளன.

தேவையான நேரங்களில் குறித்த நீதி அரசர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க  வாய்ப்பு உள்ளது. 

அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரிகேடியர் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த புதுமையான 'நீதியரசர்கள் பாதுகாப்பு அறிக்கை' தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (பிரிகேடியர் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார் என லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் வெளியிட்ட செய்தி அரச புலனாய்வு சேவை பிரதானி என திருத்தப்பட வேண்டும்)

https://lankaenews.com/news/233/ta

  • தொடங்கியவர்

கோத்தா கொலை முயற்சி என்ற போர்வையில் பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் வேறு அவர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒரு தமிழ் இளையவனின் வாழ்வியலை அநியாயமாக அழித்து அவனை செய்யாத குற்றத்திற்காக இவ்வாறு தண்டித்தமைக்கு சிங்களத்தில் யார் முதலில் பொறுப்பேற்க்கப் போகிறார்கள்? நான் இங்கு முதலில் என்றே குறிப்பிட்டேன். அதை செய்ய வேண்டிய பட்டியலில் பலர் உள்ளனர். இருக்க விடுதலை என மட்டும் அறிவிக்கும் நீதிமன்றங்கள் நட்டஈடு உட்பட இதற்கான பரிகாரங்கள் எதுவும் குறித்து வாழா இருப்பது ஏன்? தமிழர் என்ற அசமந்தப் போக்கா?

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு 2018 யூலையில் சைவ மதக்குரு சிறீஸ்கந்தராசா 13 வருடங்களின் பின்னர் குறிற்றவாளியல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இதே குற்றத்திற்காக விடுதலை செய்யப்பட்டார் என்பது இங்கு வலியுறுத்த வேண்டிய விடயம். இருவர் விடயத்திலும் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட்னர். தாங்கள் வழங்கிய வாக்குமூலம் தாம் சுயாதீனமாக வழங்கியதல்ல என இருவரும் தெரிவித்ததை அடுத்து மேற்கொண்டு எவ்வித தடயங்களையோ சாட்சியங்களையோ வழங்கத்தவறிய நிலையிலேயே இவ்விடுதலைகள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறாயின் அதற்கு ஏன் முறையே 13 மற்றும் 14 வருடங்கள் சிறீலங்கா நீதித்துறைக்கு தேவைப்பட்டது? இருக்க ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்ட இருவரையும் ஒன்றாக விடாது ஏன் ஒரு வருடம் 5 மாதங்கள் இடைவெளியில் விடுதலை செய்ய வேண்டும்? உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கைத்தீவில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி தான் மீண்டும் காரணமா?

இருக்க இங்கு இன்னுமொரு விடயத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியமாகிறது. கோத்தா மீது 2006 டிசம்பர் 1ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்பட்ட விடயம் குறித்து கோத்தாவின் நெருங்கிய சகாவும் அப்போதைய இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா 2016 மே இல் பாராளுமன்றத்தில் பேசும் போது இவ்விடயம் குறித்து பெரும் குண்டொன்றைத் தூக்கிப் போட்டார். அவர் சொன்னார் கோத்தபாயா மீதான தாக்குதல் உள்ளக வேலை. ராஜபக்ச குடும்பம் மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்கும் வகையிலேயே கோத்தபாயவினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதே அத் தாக்குதல் என்றார். 25 மீற்றருக்கு தள்ளி வைத்து யாராவது குண்டை வெடிப்பார்களா? என வேறு போட்டுடைத்தார். அவ் குண்டு வெடிப்பில் கோத்தா எவ்வித பெரும் காயங்களுக்கும் ஆளாகவில்லை.

இச்சம்பத்தைக் காரணமாகக் காட்டி புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு நோர்வேயைப் பணித்த ராஜபக்ச தரப்பு, பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறி இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர் என்பது வரலாறு. ஆகமொத்தத்தில் தம் சிங்கள மக்களை அணிதிரட்டவும், சர்வதேச சமூகத்தை ஏய்க்கவும் ஆடிய நாடகத்தில் அவர்கள் அனைவரும் பலியானது மட்டுமன்றி, அதை நிஜமெனக்காட்ட பலியாக்கப்பட்ட தமிழர்கள் தற்போது என்னவாகியிருக்கிறார்கள் என்பது மேலும் ஒரு துன்பியல் நிகழ்வு.

(முகநூல்) 

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

நடப்பதை கதைக்கிறது பொழுபோக்கிற கோஸிப் எனப்படும்!

எது நடக்கனுமோ அதைக் கதைக்கிறது முயற்சி எனப்படும்!

 

 

  • தொடங்கியவர்
12 hours ago, Rajesh said:

நடப்பதை கதைக்கிறது பொழுபோக்கிற கோஸிப் எனப்படும்!

எது நடக்கனுமோ அதைக் கதைக்கிறது முயற்சி எனப்படும்!

அழகான கருத்து.  அலட்டல் (கோசிப்) இருந்தாலும் குறிக்கோளில் தீயாய் இருக்க வேண்டும்.   

வீடியோ இணைப்பிற்கு நன்றி. 

  • தொடங்கியவர்

திரு தவராசா அவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும் நன்றிகள். 

சந்திரபோஸ் செல்வச்சந்திரன் முதலாவது அரசியல் கைதியை, 14 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சைக்கு வந்தவரை சிறையில் அடைத்தது சிங்கள புத்த நாடு. அவர் அநாதை என்பது துயர் தரும் செய்தி என்றாலும் அவர் தாய் மண்னில் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும். 

இறுதியாக, இவ்வாறான மற்றைய அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியும். (தமிழ் அரசியல்வாதிகள் ஒதுங்கி இருந்தாலே புண்ணியம்.  ) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.