Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தி

Featured Replies

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும். 

EMq_P4_UwAEXib3.jpg

இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின்றனர். 

அதற்கமைய பிரதான நினைவு கூறல் நிகழ்வு முப்படையினர் , பொலிஸார் மற்றும் பொது மக்களின் பங்குபற்றலுடன் காலி - தெல்வத்த சுனாமி நினைவு தூபிக்கருகில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இன்றைய தினம் காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை சுனாமி மற்றும் வெவ்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

அனைத்து அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றில் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்படும். 

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதோடு, உயிரிழந்த மக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களிலும் , அவர்களது குடியிருப்புக்கள் உள்ள இடங்களிலும் , சுனாமியின் போது புகையிரத விபத்துக்கள் ஏற்பட்ட இடங்களிலும் நினைவு கூறல் நிகழ்வினை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

நினைவு கூறல் மாத்திரமின்றி சுனாமி உள்ளிட்ட ஏனைய ஏதேனுமொரு அனர்த்தங்கள் ஏற்படும்பட்சத்தில் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக 25 மாவட்டங்களிலுமுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக விஷேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. 

அத்தோடு பொதுமக்களுக்கு இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

EMq-us2WoAEdvVV.jpg

EMrXFreXsAAvnTQ.jpg

https://www.virakesari.lk/article/71793

  • தொடங்கியவர்

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனை

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15 ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இன்று காலை 7.30மணியளவில் இடம்பெற்றது.

 

SUNA.jpg

 

சிவகுகநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

IMG-ef57c99a41376017214c6cc0ff00e333-V.j

நிகழ்வில் சிவஶ்ரீ, பிரபாகரகுருக்கள், மயூரக்குருக்கள், திவாகரகுருக்கள், இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குகனேஸ்வரசர்மா, ஆலயக்குருமார்கள், பரிபாலன சபையினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

IMG-ec9db72a8fdd505039e0e7de887f7e53-V.j

IMG-a6062b75772fa363ba3660ff9867465b-V.j

IMG20191226075449.jpg

IMG20191226075337.jpg

IMG-7f6e72a01e2d09e15210c9072aa76ce0-V.j

IMG-4ee74ae34e03692e551ec7acb69a4934-V.j

  • தொடங்கியவர்

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 15 வருடமாகியும் இதுவரை கையளிக்கப்படவில்லையென மக்கள் கவலை

Published by T Yuwaraj on 2019-12-26 16:35:43

 

 

 

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

01.jpg

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பிரதேச மக்களின் நலன் கருதி சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம் இதுவரை மக்களுக்கு கையளிக்கப்படாமல் உள்ளது.

சுனாமி பேரலையின் கோரத் தாண்டவத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக் கணக்கான வீடுகள் அழிந்தொழிந்தன. அக்கரைப்பற்று-பத்ர் நகர்ப் பிரதேசத்திலேயே சுனாமியின் பாதிப்புக்கள் பதிவாகி இருந்தன.

03.JPG

இதற்கமைவாக, முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃபின் முயற்சியின் பயனாக சவுதி அரேயிய நாட்டின் ஸகாத் நிதியினைக் கொண்டு சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நுரைச்சோலைப் பிரதேசத்தில் சுமார் 60 ஏக்கர்  நிலப்பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதான நவீன வீடமைப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத் திட்டத்தினை உருவாக்கும் பொருட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்பிரகாரம் சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியினைக் கொண்டு நவீன முறையில் 500 வீடுகள் இங்கு நிர்மாணப்பட்டன. சில காரணங்களின் அடிப்படையில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 14 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை இவ்வீடுகள் உரியர்களுக்கு வழங்கப்படாமலிருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

08.JPG

இக்கிராமத்தில் மகளிர் பாடசாலை, ஆண்கள் பாடசாலை, நவீன வைத்தியசாலை, பாரிய மண்டபத்துடனான சனசமூக நிலையம், பள்ளிவாசல், பஸ் தரிப்பு நிலையங்கள், விளையாட்டு மைதானம், நவீன சந்தைக் கட்டடங்கள் மற்றும் நவீன ஒய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட இங்குள்ள வீடுகளும் பொது நிறுவனங்களின் கட்டடங்களும் விலங்கு, பறவைகள் மற்றும் விசஜெந்துக்களின் வாழிடமாக மாறி வருகின்றன.  இக்கட்டடங்களில் பெருந் தொகையான நிதி கொண்டு பொருத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானவை சேதமடைந்தும் காணப்படுகின்றன.

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு விஷ ஜெந்துக்களின் உறைவிடமாகவும் மாறியுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

06.JPG

இவ் வீடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் இவ்வீடுகள் கையளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், இவ்வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இவ்வீடுகள் இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க, அவ் இன விகிதாசாரம் என்பது இலங்கையின் இன விகிதாசாரமா?, மாவட்டத்தின் இன விகிதாசாரமா?, பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களின் இன விகிதாசாரமா? என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்காமையால் இவ்வீடுகள் பகிர்ந்தளிப்பில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

உறவினர்கள் இல்லங்களிலும், அயலவர்கள்; நண்பர்கள்; வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பல்வேறு இன்னல்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதுடன், வீடுகள் கிடைக்காமல் சிலர் மரணமடைந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக உள்ளது. சொல்லொண்ணா துயருடன் தமது வாழ்வினை நகர்த்தி வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் கையளிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

https://www.virakesari.lk/article/71857

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு ஆழந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் ..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

 

நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட இங்குள்ள வீடுகளும் பொது நிறுவனங்களின் கட்டடங்களும் விலங்கு, பறவைகள் மற்றும் விசஜெந்துக்களின் வாழிடமாக மாறி வருகின்றன.  இக்கட்டடங்களில் பெருந் தொகையான நிதி கொண்டு பொருத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானவை சேதமடைந்தும் காணப்படுகின்றன.

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு விஷ ஜெந்துக்களின் உறைவிடமாகவும் மாறியுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

06.JPG

இவ் வீடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் இவ்வீடுகள் கையளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், இவ்வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இவ்வீடுகள் இன விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க, அவ் இன விகிதாசாரம் என்பது இலங்கையின் இன விகிதாசாரமா?, மாவட்டத்தின் இன விகிதாசாரமா?, பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களின் இன விகிதாசாரமா? என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்காமையால் இவ்வீடுகள் பகிர்ந்தளிப்பில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எப்படியும்.... இந்த வழக்கு, இன்னும் 25 வருசத்துக்கு இழுத்துக் கொண்டு போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்......! 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
6 hours ago, தமிழ் சிறி said:

எப்படியும்.... இந்த வழக்கு, இன்னும் 25 வருசத்துக்கு இழுத்துக் கொண்டு போகும்.

உலகம் முழுவதும் மக்கள் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அளித்த உதவிகள் அவர்களை உரிய முறையில் சென்றடையவில்லை. இதில் உலக அளவிலான சர்வதேச தொண்டர் அமைப்புக்களும் அடங்கும். 

எமது மக்களுக்காக குரல்கொடுக்க அரசும் இல்லை பிரநிதிகளும் இல்லை. 

  • தொடங்கியவர்

300 பேரின் உடற்பாகங்கள் வைத்தியசாலையில்

சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத நிலையிலான 300 பேரின் உடற்பாகங்கள், குறித்த அனர்த்தம் ஏற்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், காலி - கராபிட்டிய வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரி பீ.ருவன்புர தெரிவித்துள்ளார்.    

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி  ஆழிப்பேரலையின் பின்னர், 1,200 பேரின் சடலங்கள் கராபிட்டிய  வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.    

இதன்போது, 200 பேரின் சடலங்களை, அப்பகுதி கிராம அலுவலர்  அடையாளங்கண்ட பின்னர், உறவினர்களால் அந்தச் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.  பின்னர், மேலும் 500 சடலங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், 450 சடலங்களை  அடையாளம் காண்பதற்கு எவரும் முன்வரவில்லை.    

இதனையடுத்து, சடலங்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதன்  பின்னர், உடற்பாகங்களின் மாதிரிகள், கராபிட்டிய வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளன.    

இவ்வாறு ஆவணப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களில் 150  சடலங்கள், உறவினர்களின் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, எஞ்சிய சடலங்களின் உடற்பாகங்கள், தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த நம் நாட்டு உறவுகளை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில், இன்று (26) அஞ்சலி செலுத்தப்பட்டன.    

சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்காக, நேற்றுக் காலை 9.25 மணியளவில், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தவாறு, அஞ்சலி செலுத்தியிருந்தார்.    

சுனாமியை நினைவுகூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான நிகழ்வு, ஹிக்கடுவ - தெல்வத்த, பேரெலிய பகுதியில் நடைபெற்றது.    

தென்மாகாண ஆளுநர் விலி கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், முப்படையினர், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.   

சுனாமி ஆழிப் பேரலையில், இலங்கையில் 30,000 பேர் வரை உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/300-பரன-உடறபகஙகள-வததயசலயல/175-243067

  • தொடங்கியவர்

image_9b6506d354.jpg 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.