கைதுசெய்யப்படும் சூழ்நிலை தோற்றம் பெறும் போது   அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் நோயாளியை போன்று    அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறையற்ற கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Rohitha.jpg

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெள்ளைவேன் சாரதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டவர்கள் தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள். அவ்வாறானவர்களுடன் இணைந்தே   முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தனது அரசியல்  குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்தார். 

கடந்த  காலங்களில் தொடர்ந்து பல தரப்பினர் மீது  நிரூபிக்கப்படாத பல குற்றச்சாட்டுக்களைஅவர் முன்வைத்தார். அதன் பிரதிபலனையே இன்று  அனுபவிக்கின்றார்.

கைது செய்வதற்கான பிடியாணை  நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டவுடன் தலைமறைவாகி பின்னர் வைத்தியசாலையில் நோயாளி என்ற போர்வையில்   அனுமதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக தப்பித்துக் கொள்ளும் முறையற்ற அரசியல் கலாசசாரம் இல்லாதொழிக்கப்பட  வேண்டும்.  

இவ்விடயம்தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்   உரிய   கவனம்செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/72117