Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில ஞாபகங்கள் -5

Featured Replies

வாழ்க்கை  கனவுகள் நிறைந்தது.

சிலசமயம் அது மெய்யாகிறது
 
முன்னொரு காலத்தில் நடந்தது.
 
கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது.
 
முதன்மை  பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் .
படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார்.
 
வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை.
பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார்.
 
முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற  எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன்.
 
நியமன கடிதம் கைக்கு வந்தது. முடிந்தவரை தெரிந்தவர்களுக்கு வேலை கிடைத்த கதையளந்தேன். கண்ணில்  படாதவர்களுக்கு நல்ல காலம். தப்பித்தார்கள்.
 
கண்டியில் மகியங்கனை பஸ் ஏறினால் மூன்று மணிநேரத்தில் வில்கமுவ வந்து சேரும். சாரதிக்கும் நடத்துனருக்கும் இடையில் வேறு சோலியிருந்தால் நாலோ ஐந்து மணித்தியாலமாக மாறினாலும்  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
 
பதினெட்டு வளைவுகளோடு நீள்கிற மகியங்கனை வீதியில் முதன்முதலாக பயணிப்பது திகில் அனுபவம்.  180 பாகையில் திரும்புகிற வளைவுகள் கூடவே குத்தென இறங்கும். சாரதிகள் சாகசம் செய்வார்கள். பயணிகள் கடவுளை கூப்பிடுவார்கள். பயணித்தவர்களுக்கு புரியும். மற்றவர்கள் கூகில் மாமாவை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்- Daha ata wanguwa (18 Bend Road).
 
வில்கமுவ தனி சிங்கள கிராமம். மருந்துக்கும் தமிழ் கிடையாது. அங்கு ஆமத்துருவுக்கும் கடவுளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தபால்காரனும் கிராமசேவகரும் விரும்பிய நேரத்தில் வேலை செய்வார்கள். குளிப்பதற்கு குளம் இருந்தது. மரவள்ளி கிழங்கும் கட்ட சம்பலும் காலை சாப்பாடானது. இரவு முழுக்க நுளம்பு காதுக்குள் ரீங்காரமிடும். விரும்பினால் இடைக்கிடை கடித்தும் பார்க்கும். என்ன செய்வது. முதல் வேலை. எல்லாவற்றையும் பொறுத்தாக வேண்டும்.
 
விடிந்ததும் வேலைக்கு போனால் படித்ததில் பத்து வீதமும் வேலையில் உதவாது. பண்டாரவையும் செனிவரட்ணவையும் மேய்பதே பெரும்பாடு.
 
பண்டார முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமானதுறையில் இருப்பவன். எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து மேஸ்திரியாகி இப்போது சுப்பவைசராக  இருப்பதில் அவனுக்கு பெருமை. எனக்கு கொடுமை.  வேலை சூக்குமங்களை அனுபவம் சொல்லிகொடுத்திருந்தது.   யாரையும் பெரிதாக மதிக்கமாட்டான். இன்ஜினியர்மார் புத்தகபூச்சிகள் என்பது அவன் எண்ணம். சிலசமயங்களில் அதில் கொஞ்ச உண்மையும் இருந்தது.
 
வரைபடத்தை பார்த்து தூணுக்குள் வருகிற கம்பியின் அளவை சொல்வேன். பண்டார சிலசமயங்களில் பார்காமலே சரியாக சொல்வான். பிறகு என்னை பார்த்து சிரிப்பான். சிரிப்பில் நக்கல் தெரியும். முதல் வேலை பொறுத்தாக  வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தூக்க வேண்டியவர் பட்டியலில் முதலாக  இருந்தான்.
 
செனிவரட்ன இன்னொரு வகை. பண்டாரவுக்கு நேர்எதிர். ஒவ்வொரு வசனத்துக்கும் மாத்தையா சொல்லுவான். சொன்னதை மட்டும் செய்வான். அடிக்கடி சொன்ன வேலையில் சந்தேகம் கேட்பான்.  வேலையில் நேர்த்தி இருக்காது. இருந்தாலும் நிறைய மரியாதை தருவான். அவன் எல்லா மேலதிகாரிகளுக்கும் நல்ல பிள்ளை. தூக்கவேண்டியவர் பட்டியலில் இல்லை.
 
அன்றைக்கு ce க்கு காட்டு இறைச்சி சாப்பிடுகிற ஆசை வந்திருக்ககூடும். வில்கமுவுக்கு   அறிவிக்காமல் வந்தார். அன்றைய பின்னேரம் ce யுடன் நிறைய இறைச்சியும் கொஞ்ச தண்ணீரும்  சேர்ந்து  குடித்தேன். பழைய பேராதனை கதைகள் பேசி சிரித்தார்.சில பேராசியர்களின் பெயர்களை கேட்டார்.   கிடைத்த இடைவெளியில் பண்டார வேலைக்கு சரிபட்டுவராது  என்றேன் .
சிரித்துக்கொண்டு உனக்கு அனுபவம் போதாது என்றார்.
கட்டிடத்தின் பிரதான ஒப்பந்தக்காரர் அமைச்சரின் நண்பர் என்பது தெரியுமா எனக் கேட்டார். பண்டார ஒப்பந்தகாரரின் ஒரு கை என்றார். படிக்க நிறைய இருப்பது புரிந்தது.
 
பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.
 
பின்னாளில் வேலையும் வேலையிடங்களும் மாறினாலும் முதல் வேலையும் வில்கமுவ கிராமும் பண்டாரவும் செனிவரட்ணவும்  இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, pri said:

பண்டார முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமானதுறையில் இருப்பவன். எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து மேஸ்திரியாகி இப்போது சுப்பவைசராக  இருப்பதில் அவனுக்கு பெருமை. எனக்கு கொடுமை.  வேலை சூக்குமங்களை அனுபவம் சொல்லிகொடுத்திருந்தது.   யாரையும் பெரிதாக மதிக்கமாட்டான். இன்ஜினியர்மார் புத்தகபூச்சிகள் என்பது அவன் எண்ணம். சிலசமயங்களில் அதில் கொஞ்ச உண்மையும் இருந்தது.

வரைபடத்தை பார்த்து தூணுக்குள் வருகிற கம்பியின் அளவை சொல்வேன். பண்டார சிலசமயங்களில் பார்காமலே சரியாக சொல்வான். பிறகு என்னை பார்த்து சிரிப்பான். சிரிப்பில் நக்கல் தெரியும். முதல் வேலை பொறுத்தாக  வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தூக்க வேண்டியவர் பட்டியலில் முதலாக  இருந்தான்.
 
செனிவரட்ன இன்னொரு வகை. பண்டாரவுக்கு நேர்எதிர். ஒவ்வொரு வசனத்துக்கும் மாத்தையா சொல்லுவான். சொன்னதை மட்டும் செய்வான். அடிக்கடி சொன்ன வேலையில் சந்தேகம் கேட்பான்.  வேலையில் நேர்த்தி இருக்காது. இருந்தாலும் நிறைய மரியாதை தருவான். அவன் எல்லா மேலதிகாரிகளுக்கும் நல்ல பிள்ளை. தூக்கவேண்டியவர் பட்டியலில் இல்லை.
 
அன்றைக்கு ce க்கு காட்டு இறைச்சி சாப்பிடுகிற ஆசை வந்திருக்ககூடும். வில்கமுவுக்கு   அறிவிக்காமல் வந்தார். அன்றைய பின்னேரம் ce யுடன் நிறைய இறைச்சியும் கொஞ்ச தண்ணீரும்  சேர்ந்து  குடித்தேன். பழைய பேராதனை கதைகள் பேசி சிரித்தார்.சில பேராசியர்களின் பெயர்களை கேட்டார்.   கிடைத்த இடைவெளியில் பண்டார வேலைக்கு சரிபட்டுவராது  என்றேன் .
சிரித்துக்கொண்டு உனக்கு அனுபவம் போதாது என்றார்.
கட்டிடத்தின் பிரதான ஒப்பந்தக்காரர் அமைச்சரின் நண்பர் என்பது தெரியுமா எனக் கேட்டார். பண்டார ஒப்பந்தகாரரின் ஒரு கை என்றார். படிக்க நிறைய இருப்பது புரிந்தது.
 
பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.

அருமை.... நல்ல தொரு, பதிவு. :)

  • தொடங்கியவர்
9 hours ago, தமிழ் சிறி said:

அருமை.... நல்ல தொரு, பதிவு. :)

நன்றி தமிழ் சிறி .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

1 hour ago, Sasi_varnam said:

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

53 minutes ago, நிழலி said:

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

பிரி....  "வசிட்டர்  வாயால், பிரம்மரிஷி பட்டம்"  கிடைத்தது என்று சொல்வார்கள்.
அந்தத் தகுதி, உங்களுக்கும் கிடைத்து விட்டது.
இனியென்ன... பூந்து, விளையாடுங்கள்.  :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
13 hours ago, suvy said:

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

நன்றி suvy .

12 hours ago, Sasi_varnam said:

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

நன்றி sasi _ varnam 
 
11 hours ago, நிழலி said:

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

நன்றி நிழலி .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 1:05 AM, pri said:

பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.

அருமையான பதிவு.

முதல் வேலை அனுபவம் படிக்க இன்னமும் அதிகம் இருக்கின்றது என்ற ஞானத்தைத் தரும்!

  • 1 month later...
  • தொடங்கியவர்
On 1/26/2020 at 8:19 AM, கிருபன் said:

அருமையான பதிவு.

முதல் வேலை அனுபவம் படிக்க இன்னமும் அதிகம் இருக்கின்றது என்ற ஞானத்தைத் தரும்!

நன்றி கிருபன்.

  • 2 weeks later...

இன்றுதான் உங்களது இப்பதிவை வாசித்தேன்.  எழுத்துநடை அழகு. பிடித்துப் போனதால்் மற்றவைைைக ளையும் வாசித்துப் பாார்த்தேன். நல்ல பதிவுகள்.

தொடர்ந்தும் எழுதுங்கள்

சில ஞாபகங்கள் - 1ஐக் காணவில்லை. அதனால் அதை வாசிக்கவில்லை

  • தொடங்கியவர்
On 3/26/2020 at 1:29 PM, நாஞ்சில் said:

இன்றுதான் உங்களது இப்பதிவை வாசித்தேன்.  எழுத்துநடை அழகு. பிடித்துப் போனதால்் மற்றவைைைக ளையும் வாசித்துப் பாார்த்தேன். நல்ல பதிவுகள்.

தொடர்ந்தும் எழுதுங்கள்

சில ஞாபகங்கள் - 1ஐக் காணவில்லை. அதனால் அதை வாசிக்கவில்லை

நன்றி  நாஞ்சில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.