Jump to content

பொருளாதார வளர்ச்சியைப் போலவே நல்வாழ்வும் முக்கியமானது: ஸ்ரேர்ஜன்


Recommended Posts

பொருளாதார வளர்ச்சியைப் போலவே நல்வாழ்வும் முக்கியமானது: ஸ்ரேர்ஜன்

 

by : shiyani

110598611_ae20782c-a77f-461f-9ec7-bd47d5

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் போலவே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போலவே மக்களின் நல்வாழ்வையும் மூலாதாரமாகக் கேச பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக வெற்றிகரமான தேசமாக இருப்பதன் அர்த்தத்தை ஸ்கொட்லாந்து மறுவரையறை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஸ்ரேர்ஜன் மற்ற தலைவர்களுடன் இணைந்து நல்வாழ்வுக்கான நிகழ்ச்சிநிரலை ஊக்குவித்தார்

ஐஸ்லாந்து பிரதமர் கத்ரின் ஜாகோப்ஸ்டோடிர் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் ஆகியோர் ஸ்ரேர்ஜனுடன் இணைந்து பாரம்பரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவுகளுக்கு அருகில் புதிய சமூக குறிகாட்டிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இன்று எடின்பெர்க்கில் இடம்பெறும் நல்வாழ்வு பொருளாதார கூட்டணி மாநாட்டில் பேசிய ஸ்ரேர்ஜன் இந்த பிரச்சினையை சமாளிப்பதில் ஸ்கொட்லாந்து பிரதான பங்கு வகிக்குமெனவும் அனைத்து பொருளாதாரக் கொள்கையின் குறிக்கோளும் நோக்கமும் கூட்டு நல்வாழ்வாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/பொருளாதார-வளர்ச்சியைப்-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.