Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது உண்மையாக இருக்குமா????

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இதை பற்றி உங்களிடம் கேட்க வேணும் என்று வரும் போது நீங்களே எழுதி இருக்கிறீர்கள் 😄
 

இவரது பதிவுகளை நான் ஏற்கனவே வாசித்து இருக்கிறேன் 

உதை  கேட்பதற்காகவே இன்னொரு ஐடி கிரியேட் பண்ணி வரோணுமா 😃
 

அட எனக்கு விளங்கல்லையே. இவரா அவர்?????😀

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் அவர் ஐடி இன்று  கூட ஏசியிருக்கான் பாருக்களன்  இதனை பகிர்ந்தவர்களுக்கும் காவித்திரிந்தவர்களுக்கும் 

 

 

எனக்கென்றால் இந்த ஐடியா எமது இலங்கைத் தமிழர்களுக்கு வரவே வராது. யாரோ இந்தியத் தமிழரின் பதிவில் இருந்து இவர் Suhir Sathya கொப்பி அடித்ததாகத்தான் இருக்கும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/31/2020 at 8:33 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ??
ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர்.

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

*இத்தகவலின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள் யாரேனும் விளக்கவும்* நன்றி
நன்றி sriskantharaja

இது உண்மையான தகவலாகக் கூட இருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் புதிதாகத் தோன்றியது என்று யாரும் கூறவில்லையே.😀

 

 

இதை வற்சப் குழுமத்தில் சிறீஸ்கந்தராஜா என்பவர் பதிந்திருந்தார்.

Image may contain: one or more people, text that says 'அரசன் என்ற சொல்லே ராஜன் ஆனது ராஜ ராஜ சோழன் தமிழ் பெயரே அரசன் = ராசன் = ராசா = ராஜா'

பழங்காலத்தில் சித்தர்களே அந்தந்த பகுதியை வழிநடத்தி ( ஆட்சிசெய்து) வந்தனர் ‌

மாதம் இருமுறை அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வருகைதந்து , பொதுவான ஒரு இடத்தில் ( நீர்நிலைகளான ஆற்றங்கரை அல்லது குலக்கறைக்கு அருகாமையில் உள்ள அரசமரத்தடியில் ) அமர்ந்து, சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடியிருக்க, அவர்களுக்கான தீர்வை வழங்குவார்கள்.

சித்தர்கள், அறிவியல், மருத்துவம் , மொழி, கலைகள் , மற்றும் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவர்.

இவ்வாறு , அரசமரத்தடியில் இருந்து மக்களை ஆட்சி செய்ததால், அவர் அமர்ந்திருந்த அரசமரத்தின் பெயராலேயே #அரசன் என்று அழைக்கப்பட்டார்னர் ( சித்த மரபு வழக்கொழிந்த பின்பு , ஞானம் + செல்வம் இரண்டின் தத்துவார்த்த உருவகமாக சித்தர்களை குறிக்கும் விநாயகர் சிலைகள் அரசமரத்தடியில் வைக்கப்பட்டு , சித்தர்களின் நினைவாக மக்கள் போற்றி வழிபட்டனர் என்பது தனிக்கதை ).

அரசன் என்ற சொல்லின் , முதல் எழுத்தான #அ ஒலி மறைந்து. அடுத்த எழுத்து #ரா என்று நெடில் பெற்று #ராசன் ஆனது. இதையே ராசா என்றும்,
பிறகு வடமொழிச் சொல் கலந்து #ராஜா என்றும் ஆனது.

அதவாது
அரசன் = ராசன் = ராசா = ராஜா

இப்படி இந்த மண்ணை ஆண்ட சித்த அரசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், 4000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை தலைநகரமாக கொண்டு பரதகண்டத்தை ஆண்ட சித்த பேரரசர் #வீட்டிணன் எனும் #விஷ்ணு ( இவர் ஒரு விண்ணாய்வு சித்தர்)

பரத கண்டத்தை ( தெற்காசியா முழுமைக்கும்)
ஆண்ட பரத அரசனான விஷ்ணு சித்தரே,
#பரத_அரசன் என்றும் அதுவே #பரத_ராசன் என்றும், பிறகு மறுவி #வரத_ராஜ பெருமாள் ஆனார்.
திருவரங்கம் சயன கோலம் , அவர் படுத்துக்கொண்டு விண்னை ஆய்வு செய்யும் விண்ணாய்வு சித்தர் கோலம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோலம், அவரின் அரசர் கோலம்.

பிற்காலத்தில் கோட்டை கொத்தளங்களுடன் நாட்டை ஆட்சிபுரிந்த அரசர்கள் அனைவருக்கும், சித்த அரசர்களின் பெயரை அடியொற்றியே அரசன் என்று அழைக்கப்பட்டனர்.

இதே வரிசையில்,
தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் என்பது
அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று பொருள்படும் பேரரசன் ஆவார்.
இது தமிழ் பெயரே தவிர , வடமொழிச்சொல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

பழங்காலத்தில் சித்தர்களே அந்தந்த பகுதியை வழிநடத்தி ( ஆட்சிசெய்து) வந்தனர் ‌

மாதம் இருமுறை அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வருகைதந்து , பொதுவான ஒரு இடத்தில் ( நீர்நிலைகளான ஆற்றங்கரை அல்லது குலக்கறைக்கு அருகாமையில் உள்ள அரசமரத்தடியில் ) அமர்ந்து, சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடியிருக்க, அவர்களுக்கான தீர்வை வழங்குவார்கள்.

இந்த விளக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? தொல்காப்பியம் போன்ற பழைமையான ஆவணங்கள் எவற்றிலாவது இவ்வாறான விளக்கம் தரப்பட்டு உள்ளதா? அரச மரத்துக்கு ஏன் அரச மரம் என்று பெயர் வந்தது? அரசன் அமர்ந்திருக்க நிழல் தந்த மரம் என்ற காரணமா? ராஜா, ராசாவாகி, பின்னர் ராசன், அரசன் என்று ஆகியிருக்கலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட எனக்கு விளங்கல்லையே. இவரா அவர்?????😀

எனக்கென்றால் இந்த ஐடியா எமது இலங்கைத் தமிழர்களுக்கு வரவே வராது. யாரோ இந்தியத் தமிழரின் பதிவில் இருந்து இவர் Suhir Sathya கொப்பி அடித்ததாகத்தான் இருக்கும்.

சுமோ நீங்கள் ஒரு எழுத்தாளர். இலங்கையை சேர்ந்தவர் ...நீங்களே இப்படி சொல்லலாமா?... அவர் மட்டுவை சேர்ந்தவர்...அவர்களது எழுத்து நடை , பேச்சு வழக்கு கொஞ்சம் முஸ்லீம்களது  நடை சார்ந்து இருக்கும்...இதை உண்மையாகவே அந்த தம்பி தான் எழுதினார்...அதை வாசித்து விட்டு  உண்மையாகவே அந்தப் பாட்டு சிலப்பதிகாரத்தில் இருக்குதாக்கும் என்று நினைத்தேன்....அவர் எழுதினவுடனேயே பலர் அந்தப் பாட்டை மட்டும் எடுத்து தங்களுடைய  மு.பு பதிந்தார்கள்...அதில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள் , பெரிய எழுத்தாளர்கள் ,ஏன் இந்தியர்கள் கூட அதில் இருந்தார்கள்...நீங்கள் அவரது  மு.பு போய் பார்க்கலாம் திறந்து தான் இருக்கு.


அவர் இந்த பதிவை எழுத   காரணம் அப்துல் மஜித் என்பவர் குரோணா வைரஸ் பற்றி குரானில் சொல்லி இருக்கு என்று பதிவு போட்டு இருந்தார்....அவருக்கான நக்கல் பதிவு தான் இந்த சத்யா என்பவர் எழுதியது..


எப்பவும் நாங்கள் மட்டுமே திறம் என்று நினைக்க கூடாது 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.