Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூறாண்டு பழைமையான பள்ளிவாசலில், புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahara-1-720x450.jpg

நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம்

மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகம, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டடத்தில், சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் தனவந்தர் ஒருவரினால் நன்கொடை செய்யப்பட்ட காணியிலேயே இப்பள்ளிவாசல் இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளது.

ராகம பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காகப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பள்ளிவாசலுக்கு மக்கள் தொழுகைக்காக வருவதைத் தடை செய்திருந்தனர்.

இதேவேளை, இப்பள்ளிவாசலைச் சுத்தம் செய்யவோ அல்லது அங்கிருந்து பொருட்களை எடுக்கவோ, எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த பள்ளிவாசல் கட்டடம், அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் புனரமைக்கப்பட்டு, ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளதுடன், உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mahara-2.jpg

Mahara-3-360x480.jpg

http://athavannews.com/மஹர-சிறைச்சாலையில்-100-வருட/

4 hours ago, தமிழ் சிறி said:

ராகம, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டடத்தில், சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாழ்க புத்தர்சிலை கலாச்சாரம்!

நீங்க மற்ற ஆட்களின்ட சிலைகளை உடைக்கிறீங்க!
அவங்க மற்ற ஆட்களின்ட இடங்களில சிலைகளை வைக்கிறாங்க!
இன்னொரு கோஷ்டி மற்ற ஆட்களின்ட இடங்களில சொத்துக்களை அடிச்சு உடைக்கிறாங்க.
உலகில உள்ள 3 மதவெறி கோஷ்டி சுதந்திரமா பரவுது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கிழக்கில் மன்னாரில் உடைத்த கோவில்களுக்கு என்ன கணக்கு....

6 hours ago, தமிழ் சிறி said:

Mahara-1-720x450.jpg

6 hours ago, தமிழ் சிறி said:

 

Mahara-2.jpg

 

 

காவல் தெய்வங்களே கையில் தெய்வத்தை கொண்டு வைத்து.... 

மனிதர்கள்  தெய்வங்களிடம் முறையிடலாம் .. தெய்வங்கள் ?

இது இவர்களுடைய ஆட்சிக்காலத்தில்  நடந்த ஒரு சம்பவம்। அப்போது  சும்மா இருந்துவிட்டு இப்போது ஓலமிடுகிறார்। தேர்தல் வர வர இன்னும் பலமாக ஓலமிடுவார்। 

ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை தொடர்பில் ரிஷாட் கண்டனம்

கொழும்பு இசிபதான மாவத்தையில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகக சிஐடியில் முன்னிலையாகியியுள்ளார்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (26) அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு இசிபதானவிலுள்ள வீட்டில் பல்வேறு காணி உறுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சில காணி உறுதிப்பத்திரங்கள் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரில் இருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.

 

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.thinakaran.lk/2020/02/27/குற்றம்/48918/ரிஷாட்-பதியுதீனின்-மனைவி-cidயில்-வாக்குமூலம்

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் ட்விற்றர் பக்கத்திலும் இந்தக் கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

I request H.E. the President @GotabayaR and Hon. Prime Minister @PresRajapaksa to take expeditious action against all those who were involved in this illegal act and uphold the constitutional ethics of this Democratic Country. 2/2 #Srilanka

— Rishad Bathiudeen (@rbathiudeen) February 26, 2020

15 hours ago, ampanai said:

ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்

கொழும்பு இசிபதான மாவத்தையில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகக சிஐடியில் முன்னிலையாகியியுள்ளார்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (26) அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு இசிபதானவிலுள்ள வீட்டில் பல்வேறு காணி உறுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சில காணி உறுதிப்பத்திரங்கள் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரில் இருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.

 

 

இது வரைக்கும் பத்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள்। இன்றைக்கும் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது।

இன்றைக்கு இலங்கையில் உள்ள மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் றிஷாத்தும் ஒருவர்। அவர் நேர்மையாக உழைத்து பணக்காரராக வருவதில் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை।

இவர் ஒரு தடவை பாராளுமன்றில் பேசும்போது , புலிகள் தங்களை வடக்கிலிருந்து துரத்தியதாகவும் , தான் அப்போது ஒரு சொப்பிங்க் பையுடன் ஊரிலிருந்து வெளியேறியதாகவும் கூறி இருந்தார்। அப்படி இருந்தவர் அரசியல்வாதியான பின்னர்தான் இவளவு பணமும் வந்தது। தொழில் என்று எதுவுமே செய்ததில்லை।

அவருடைய தராதரம் ஜிகாத் இயக்கத்தில் இருந்ததுதான்। இன்று இவருக்கு கொழும்பில் வீடுகள், பல இடங்களில் பெட்ரோல் நிலையங்கள், பண்ணைகள், தோட்ட்ங்கள், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகள், வாகனங்கள் இப்படியாக நிறைய சொத்துக்கள்।

அநேகமான தமிழர்களின் காணிகள் கள்ள உறுதி முடிக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளன। எனவே நிச்சயமாக இவருக்கு சிங்களவன் ஆப்பு வைப்பான்।

நமது தமிழ் அரசியல் வாதிகளும் , பத்திரிகைகளும் இவை பற்றி பேசுவதுமில்லை எழுத்துவதுமில்லை। நக்கினார் நவிழந்தார் ।

ஒரு ரொஹிங்கா முஸ்லீம்களை காக்க பல நாடுகள் முன்வந்தன. கம்பியா வழிகாட்ட அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிகேட்டும் செல்லகூடியதாக இருந்தது. 

ஆகவே, ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் முஸ்லீம் நாடுகளிடம் முறையிடலாம். நீதி கேட்கலாம். 

மஹர ஜும்ஆப் பள்ளி விவகாரம்; புத்தர் சிலையை அகற்ற சிறைச்சாலை ஆணையருக்கு பணிப்பு

மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தம்மிடம் கூறியதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி நேற்று தெரிவித்தார்.  

மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் இப்பள்ளிவாசலில் அப்பிரதேச முஸ்லிம்கள் பல தசாப்த காலமாக ஐவேளைத் தொழுகையிலும் ஜும்ஆ தொழுகையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.  

என்றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இப்பள்ளிவாசலை ஓய்வு இடமாக பாவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.    

http://www.thinakaran.lk/2020/03/04/உள்நாடு/49118/மஹர-ஜும்ஆப்-பள்ளி-விவகாரம்-புத்தர்-சிலையை-அகற்ற-சிறைச்சாலை-ஆணையருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.