Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

 
 

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, ராஜகிரி லென் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்றது.

புள்ளி விபரங்களின் படி காலி மாவட்டத்தில் மிகவும் வறிய கிராமமான உடுகம ஹோமாதொள கொத்தலாவலபுர கிராமம் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு இடம்பெறும் மாவட்ட குழுக் கூட்டத்திற்காக செலவாகும் தொகையை மட்டுப்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை கிராமிய மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாகும்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் மாவட்டத்தின் நகர, கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் இடர் முகாமைத்துவ திட்டங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பல்வேறு துறைகளினூடாக கலந்துரையாடப்பட்டது. வறுமையை ஒழித்தல், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சிறந்த கல்வி பின்புலத்தை உருவாக்குதல் மற்றும் விவசாய, மீன்பிடித்துறைகளில் துரித அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியின் இரு பக்கத்திலும் ஒன்றுகூடியிருந்த மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். எண்ணெய்ப்பனை (பாம் ஒயில்) பயிரிடுவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முறையிட்டனர். கலந்துரையாடலின் முதலாவது பிரச்சினையாக இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது. பிரதேசத்தில் எழுந்துள்ள நீர் பற்றாக்குறைக்கு எண்ணெய்ப்பனை பயிரிடுதல் பெரும் பாதிப்பை செலுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையான சுற்றாடல் ஆய்வொன்றை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. எனினும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமானால் இலாபத்தின் மூலம் பயன் இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , உடனடியாக எண்ணெய்ப்பனை பயிரிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். அதன் பெறுபேறாக தென்னைப் பயிர்ச் செய்கையும் அபிவிருத்தி அடையும். இறப்பருடன் தொடர்புடைய பல்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் அவ்வுற்பத்திகளுக்கு தேவையான இறப்பர் போதுமானளவு கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இறப்பர் செய்கையை ஒரு விவசாய நடவடிக்கையாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார். அதனை ஊக்குவிப்பதற்காக இறப்பர் இறக்குமதியை உடனடியாக நிறுத்துவது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

காலி மாவட்டத்தில் கிராமிய பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பிரதேச அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கணிதம், விஞ்ஞானம் பாடங்களையும் போதிப்பதற்கு தேவையான ஆசிரியர்களையும் முறைமைகளையும் முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். மஹிந்தோதய தொழிநுட்ப கூடங்களை உருவாக்கும் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தி புதிய தொழிநுட்பத்தின் மூலம் தற்காலத்திற்கேற்ற வகையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிப்பதற்கான பின்புலத்தை உருவாக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நெலுவ, நாகொடை, உடுகம உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் எழுந்துள்ள குடி நீர்ப் பிரச்சினை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முன்னெடுக்கப்பட்டுள்ள பிரஜா மற்றும் ஏனைய குடிநீர் திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்கி குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார். ஒப்பந்தக்காரர்கள் உரிய முறையில் பணிகளை நிறைவு செய்யவில்லையானால் அவர்களை உடனடியாக நீக்குமாறும் குறிப்பிட்டார்.

திண்மக் கழிவு முகாமைத்துவ பிரச்சினைக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பிரதேச மட்டத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தி கழிவகற்றல் திட்டங்களுக்கு உதவுமாறும் ஜனாதிபதி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

கிராமிய மருத்துவ நிலையங்களை முறையாக செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதிகளை போதுமானளவில் அவற்றுக்கு வழங்கி மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், இதன்மூலம் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சன நெரிசலை பெருமளவு குறைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

காலி மாவட்டத்தில் கிராமிய வீதிகள், பாலங்களை நிர்மாணித்தல், வெள்ளத்தை கட்டுப்படுத்தல், நகர அபிவிருத்தியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் சுற்றுலாத்துறையில் காலி மாவட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது. ஹிக்கடுவை கரையோரப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிரதேசத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். உணவட்டுனவை அண்மித்ததாக சுற்றுலா பொலிஸ் நிலையமொன்றை உடனடியாக நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. மீன்பிடிக் கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தை அண்டிய பிரச்சினைகளை இனங்கண்டு குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இனங்காணப்பட்டுள்ள மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு அச்சந்தர்ப்பத்திலேயே தீர்வுகள் வழங்கப்பட்டன. உடுகம வைத்தியசாலைக்கு தண்ணீர் பவுசர் ஒன்றை வழங்குதல், அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், சிறியளவிலான நீர்வழங்கல் திட்டங்களுக்கான நிலுவை பணங்களை வழங்குதல் ஆகியன இவற்றில் உள்ளடங்கும்.

காலி மாவட்ட தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் மாவட்ட குழுக்கூட்ட தொடருடன் இணைந்ததாக சுற்றாடல் அழிவுகளை குறைக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நடும் திட்டமும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கேற்ப நடைமுறைப்படுத்தப்பட்டது. காலி மாவட்டத்தில் 300 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில் ஜனாதிபதி விகாரை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

கூட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, விகாராதிபதியை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

http://tamil.adaderana.lk/news.php?nid=126227

30 minutes ago, nunavilan said:

ஜனாதிபதி கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக செல்லும் வழியின் இரு பக்கத்திலும் ஒன்றுகூடியிருந்த மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். எண்ணெய்ப்பனை (பாம் ஒயில்) பயிரிடுவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முறையிட்டனர்.

எண்ணெய்ப்பனை (பாம் ஒயில்)

You know these things about oil and your next cultivation ...

எண்ணெய்ப்பனை பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. ...

Read more at: https://tamil.asianetnews.com/agriculture/you-know-these-things-about-oil-and-your-next-cultivati

GDP from the palm oil industry in Malaysia 2011-2018

In 2018, the gross domestic product from palm oil was estimated to be approximately 38 billion Malaysian ringgit. In that year, palm oil was estimated to have contributed around 38 percent of the agricultural sector GDP, and 2.8 percent to the total GDP of Malaysia.

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய்ப்பனை என்பதுதான் அதன் பெயரா?? அல்லது கட்டுரையாளர் தன் விருப்பத்துக்கு ஒரு பெயரை வைத்துள்ளாரா? அதை பார்க்காத தென்னை ஓலை போல் இருக்கு.

புதியதொரு தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெய்ப்பனை என்பதுதான் அதன் பெயரா?? அல்லது கட்டுரையாளர் தன் விருப்பத்துக்கு ஒரு பெயரை வைத்துள்ளாரா? அதை பார்க்காத தென்னை ஓலை போல் இருக்கு.

புதியதொரு தகவலுக்கு நன்றி

ஆங்கிலத்தில் புதிதாக சேரும் வார்த்தைகளை ஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்த்து, அதற்கு அங்கீகாரம் கொடுக்கும்.

நமக்குத்தான் அப்படி ஏதும் இல்லையே. க்ரியாவோ, அறத்தமிழ் அகராதியோ இப்படி செய்வதாக தெரியவில்லை. 

பிறகென்ன free for all தான். எமக்கு பிடித்த மாதிரி, எண்ணைபனை, வெண்ணைபனை, நெய்ப்பனை, ஊறுகாய்ப்பனை, மோர்மிளகாய்பனை என்று எடுத்து விட வேண்டியதுதான் 🤣

On ‎2‎/‎28‎/‎2020 at 6:56 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெய்ப்பனை என்பதுதான் அதன் பெயரா?? அல்லது கட்டுரையாளர் தன் விருப்பத்துக்கு ஒரு பெயரை வைத்துள்ளாரா? அதை பார்க்காத தென்னை ஓலை போல் இருக்கு.

புதியதொரு தகவலுக்கு நன்றி

முள் தேங்காய்

இலங்கை

முள் தேங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளும் பகுதிகளில் அதிகளவிலான நீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க பிபிசிக்கு தெரிவித்தார்.

முள் தேங்காய் மரம் அதிகளவிலான நீரை பெற்றுக் கொள்ளும் எனவும், அதனால் பிரதேசத்திற்கு பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் முள் தேங்காய் செய்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் தென்னை தொழில்துறை பெருமளவு வீழ்;ச்சியை கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஈர வலய பகுதிகளில் செய்கை செய்யப்படும் இறப்பர் செய்கை அழிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் இறப்பர் மற்றும் தென்னை ஆகிய இரண்டு தொழில்துறைகளும் இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்ததாக ஜயந்த விஜேசிங்க கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-51672945

முள் தேங்காய் செய்கைக்கு பெருமளவு ஊழியர்கள் தேவையில்லை என கூறிய அவர், அதனால் நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை ஈட்டிக் கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த தீர்மானத்தை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக முள் தேங்காய் செய்கைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், நிறுவனங்கள் ரகசியமாக அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ளாதிருப்பதற்கு புதிய சட்டங்கள் வகுக்கப்படுவது மாத்திரமன்றி, தண்டனைகளையும் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தொடர்பில் நிறுவனங்களின் பதில்

முள் தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவு குறித்து பிபிசி தமி;ழ், முள் தேங்காய் செய்கையில் ஈடுபடும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான லலான் இறப்பர் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நிஷாந்த செனவிரத்னவை தொடர்புக் கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்தித்து விஞ்ஞான ரீதியிலான விடயங்களை தெளிவூட்ட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பல ஆய்வுகளின் ஊடாக முள் தேங்காய் செய்கையினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை ஜனாதிபதியிடம் சமர்;பித்து, அது தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு தாம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் மலையக தமிழ் மக்களுக்கான வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் இந்த செய்கையை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் லலான் இறப்பர் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நிஷாந்த செனவிரத்ன தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் பனைரகம் தான். இதற்காகவே பிரேசில்,ஆபிரிக்கா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் காடுகளை அழிக்கின்றார்கள்.நல்ல வருவாய் தரும் மரம்.ஆனால் நிலம் எதுக்குமே பாவனையற்றதாகி விடுமாம்.
எமது ஊர் தென்னை பனை போன்ற மரங்கள் இயற்கை தந்த கொடை.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 12:33 PM, ampanai said:

எண்ணெய்ப்பனை (பாம் ஒயில்)

You know these things about oil and your next cultivation ...

எண்ணெய்ப்பனை பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. ...

Read more at: https://tamil.asianetnews.com/agriculture/you-know-these-things-about-oil-and-your-next-cultivati

GDP from the palm oil industry in Malaysia 2011-2018

In 2018, the gross domestic product from palm oil was estimated to be approximately 38 billion Malaysian ringgit. In that year, palm oil was estimated to have contributed around 38 percent of the agricultural sector GDP, and 2.8 percent to the total GDP of Malaysia.

இதன் எண்ணை... உடலுக்கு ஆரோக்கியமில்லை என்று எங்கோ வாசித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.