Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தனிமைப்படுத்தல் மையம் மட்டக்களப்பில்தான்: ஏனைய பகுதிகள் இரத்து?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-5.jpg

கொரோனா தனிமைப்படுத்தல் மையம் மட்டக்களப்பில்தான்: ஏனைய பகுதிகள் இரத்து?

கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஹெந்தல பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து, அரசாங்கம் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மட்டக்களப்பு மாத்திரமே செயற்படவுள்ளதாக அறிய வருகிறது.

கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே  ஈரான், இத்தாலி, தென்கொரியாவிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

தென்கொரியா, ஈரான், இத்தாலியிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த பணியை இராணுவமே மேற்கொள்ளும்.

இதுதவிர, உள்நாட்டில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களும் மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://athavannews.com/கொரோனா-தனிமைப்படுத்தல்-ம/

இது ஒரு இனவாத நோக்கோடு எடுத்த தீர்மானமாக தெரிகிறது। இங்கு கூடுதலாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்। சிறிதளவு தமிழர்களும் இந்த பகுதியில் வசிக்கிறார்கள்।

முஸ்லீம் அரசியல்வாதிகள் இதட்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தாலும் அரசாங்கம் இவற்றை கருத்தில் கொள்ளாது। ஹிஸ்புல்லா இதட்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்। 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் புல்லாட கம்பஸ் இப்படியா போகோணும்🤯 ...எப்படியாவது அதை எடுக்கிறதிற்கு கோத்தா டிரை பண்ணுறார்👍 ...பார்ப்போம் கடைசியில் யார் வெல்லுவினம் என்று🙂

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பும் இலங்கையின் ஒர் பகுதிதானே. ஏன் அங்கு தனிமைப் படுத்தும் மையம் அமைக்கக்  கூடாது ? யாராவது காரணத்தைக் விளக்க முடியுமா ?

2 hours ago, Kapithan said:

மட்டக்களப்பும் இலங்கையின் ஒர் பகுதிதானே. ஏன் அங்கு தனிமைப் படுத்தும் மையம் அமைக்கக்  கூடாது ? யாராவது காரணத்தைக் விளக்க முடியுமா ?

இது பொதுவாக உலகம் முழுக்க உள்ள பிரச்சனை. ஆனால், இது வேறாக இருக்கலாம். 

வசதி படைத்தவர்கள், பணம் உடையவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் வீட்டின் பிற்பகுதியில் இப்படியான மையங்கள் நிறுவுவதை எதிர்ப்பார்கள். மேலை நாடுகளில் வீடுகள் இல்லாதவர்களுக்கான வீடுகள் கட்டுதல் ஒரு உதாரணம். 

ஆனால், இலங்கையில் இது அரசியல் நோக்கோடு அமுல்படுத்தலாம். ஆனால், சட்டமைப்பின் எங்கும் இந்த மையம் அமைக்கப்படலாம், ஆய்வு அறிக்கைகளின் படி. ஏற்கனவே சிங்கள ஊரில் திட்டப்பிடப்பட்டது, எதிர்ப்பால் ( இல்லை அப்படி ஒரு நாடகம்) இப்பொழுது இங்கு மாற்றப்பட்டு உள்ளது. 

எங்கு அமைக்கப்பட்டாலும், அம்பந்தோட்டையில் அமைக்கப்படாது. பொதுவாக கனடாவில் சொல்லுவார்கள், குற்றம் இல்லாத வீதியில், நல்ல பாடசாலையில் படிக்க, ஊரில் உள்ள பெரிய காவல்துறை அதிகாரியின் வீதியில் வசிக்கவேண்டும் என்று.   

 

நாடு திரும்பியவர்கள் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைப்பு

தென் கொரியாவில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/236180/நாடு-திரும்பியவர்கள்-மட்டக்களப்பிற்கு-அனுப்பி-வைப்பு

 foreigners and Sri Lankans arriving here after accommodating at least 2000 to 2500 of them for a fortnight in two improvised quarantine Centres in Punani and Kandakadu, in addition to planned accommodation of 300 more in Diyatalawa as well in the event of any emergency

image_545e949dd0.jpg

 

image_ec775b19b2.jpg

 

http://www.dailymirror.lk/caption_story/Quarantine-Centres-now-ready/110-184577

4 hours ago, ரதி said:

கடைசியில் புல்லாட கம்பஸ் இப்படியா போகோணும்🤯 ...எப்படியாவது அதை எடுக்கிறதிற்கு கோத்தா டிரை பண்ணுறார்👍 ...பார்ப்போம் கடைசியில் யார் வெல்லுவினம் என்று🙂

தகரம் இப்பொழுது தங்கம் ஆச்சா ? இல்லை ...

தங்கம் இப்பொழுது தகரம்  ஆச்சா ? புரியவே இல்லை 🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

கடைசியில் புல்லாட கம்பஸ் இப்படியா போகோணும்🤯 ...எப்படியாவது அதை எடுக்கிறதிற்கு கோத்தா டிரை பண்ணுறார்👍 ...பார்ப்போம் கடைசியில் யார் வெல்லுவினம் என்று🙂

 

2 hours ago, ampanai said:

நாடு திரும்பியவர்கள் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைப்பு

தென் கொரியாவில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவாலும்.... தடுக்க முடியவில்லை.  :)

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முடங்கும் ; தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் இத்தாலி நாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை கம்பசில் வைத்து 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

Mokan.JPG

இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ள இந்நிலையில் இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்தாவது,

எமது நாட்டு பிரஜைகள் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிக தேவை எல்லோருக்கும் உள்ளது. அதேவேளை தொற்று வேகமாக பரவி வரும் நாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது. 

எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இந்த நிலையில் ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுவிடும்  இந்த நிலை ஏற்பட்டால் நினைத்துகூட பார்க்க முடிய நிலை மாவட்டத்தில் ஏற்பட்டு விடும் எனவே.

வெளிநாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி  எதிவர்வரும் வியாழக்கிழமை(12.03.2020)  மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் அன்றைய தினம் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி எமது எதிர்பினை வெளிகாட்டுவதுடன் உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நான் பெற இறைவனை வேண்டி பிராந்திப்போம் என மோகன் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/77455

  • கருத்துக்கள உறவுகள்

இது தென் தமிழீழத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய ஆபத்து. சரியான பாதுகாப்பு முறைகள் அற்ற வைத்தியசாலை அல்லாத ஓர் இடத்தில் நோய் சந்தேக நபர்களை தங்க வைப்பதும்.. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் வைரஸ் தொற்றுக்கான சரியான பராமரிப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் மட்டக்களப்பு இந்தத் தேவைக்கு தேர்வு செய்யப்பட்டமையானது.. இனப் படுகொலையின் இன்னொரு வடிவமாகும்.

ஏலவே போர் காலத்தில் வட தமிழீழத்தில்.. கொடிய உயிர் கொல்லி நோயங்கிகள் அடங்கிய வைத்தியசாலைக் கழிவுகள் அடக்கிய மலக் குண்டுகளை வீசிய சிங்கள தேசம்.. இப்போ தென் தமிழீழம் மீது இந்தக் குண்டை வீசுகிறது.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில்.. செப்ரீசிமியா நோய் தாக்கும் பக்ரீரியாக்களின் பெருக்கம் அதிகரித்ததுடன்.. சிறுவர் சிறுமிகள் உட்பட பலர் உயிரிழப்புக்களையும் சந்தித்தனர். அன்று அந்த உயிரியல் ஆயுதம் தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டது... இன்று கொரானாவை உயிரியல் ஆயுதமாக.. தமிழர்களுக்கு எதிராக தமிழர் தாயகத்தில் ஏவி விடுகிறது சிங்களம்.

இலங்கையில் எயிட்ஸ் அற்ற பிரதேசமாவ விளங்கிய வடக்குக் கிழக்கு.. சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பின் பின்.. எயிட்ஸ் மிகு இடங்களில் ஒன்றானதும்.. எயிட்ஸ் கடத்தலில் சிங்கள படைவீரர்கள் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.