Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 10:19 - 0      - 88

கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-4-பரகக-கரன-தறற/150-247923

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள்

கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும்.

02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம்.

03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம்.

04. எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம்.

05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.

06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை "தெளிவின்மைப்படுத்தி" பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.

07. மக்கள் மத்தியில் முறுகல் ஏற்படும் விதத்தில் செய்தி அறிக்கையிடலை தவிர்க்கவும்.

08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/79234

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

2020 ஏப்ரல் 04 , மு.ப. 08:19

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  இலங்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறல-ஐநதவத-நபர-உயரழபப/150-247926

  • தொடங்கியவர்

'கொவிட்19 எனும் கொரோனா வைரஸை ஒன்றிணைந்து ஒழிப்போம், இதற்காக ஒத்துழைப்பு வழங்குவோம்' என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பொலிஸாரால், பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

image_e2fa9ea815.jpg

  • தொடங்கியவர்

வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக நோயாளர்களின் நலன் கருதி, தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளுக்கான விசேட தொலைப்பேசி இலக்கங்களையும், வட்ஸ் அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றை தொடர்பு கொள்வதன் மூலம் நோயாளர்கள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு

1585936788-National-Hospitel-5.jpg

https://www.virakesari.lk/article/79240

  • தொடங்கியவர்

thumb_04-04-2020.gif

 

  • தொடங்கியவர்

No photo description available.

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்
Editorial   / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 10:27 - 0      - 6

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறடன-சசவ-பரசவதத-தய/175-247929

  • தொடங்கியவர்

மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

2020 ஏப்ரல் 04 , பி.ப. 05:01

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூன்று-பேருக்கு-கொரோனா-தொற்று/175-247947

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79277

  • தொடங்கியவர்

No photo description available.

 

No photo description available.

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79291

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

மருதானையில் உயிரிழந்த நபரின் மனைவிக்கு கொரோனா

2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:54

 

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிலாபம் வைத்தியசாலையில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, கொரோனா தொற்றுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டார். இப்பெண், மருதானையில் உயிரிழந்த நபரின் மனைவி எனத் தெரியவந்துள்ளது.

புத்தளம் சாஹிரா கண்காணிப்பு நிலையத்தில், தினமும் 10 பேரின் இரத்த மாதிரிகள் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, இங்கு சேர்க்கப்பட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாஹிராவில் மேலும் 85 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இவர்களில் 78 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 7 பேர் மருதானையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருதானையில்-உயிரிழந்த-நபரின்-மனைவிக்கு-கொரோனா/175-247970

  • தொடங்கியவர்

thumb_05-04-2020.gif

அறிவுறுத்தல்களை பின்பற்றாத அக்குறணை வாசிகள் புனானைக்கு அனுப்பி வைப்பு!

In இலங்கை     April 5, 2020 6:33 am GMT     0 Comments     1168     by : Benitlas

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றாத ஒரு குழுவினர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அக்குறணை பகுதியினைச் சேர்ந்த 144 பேரே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கே ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைத்து மக்களினதும் கடமை என்பதனை நாம் இந்த இடத்தில் ஒருதடவை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://athavannews.com/அறிவுறுத்தல்களை-பின்பற்/

  • தொடங்கியவர்

’1390க்கு அழைப்பை ஏற்படுத்துக’

இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390 என்ற இலக்கத்துக்கு, அழைக்குமாறும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய பின்னர், நோய்அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு 1990 அம்பியூலன்ஸ் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/1390க்கு-அழைப்பை-ஏற்படுத்துக/175-247986

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு குறித்து வெளியானது அதிரடி முடிவு!

யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நாளை 6ம் திகதி காலை 6 மணி முதல் மதியம் வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/ஊரடங்கு-குறித்து-வெளியா/

மீண்டும் “வீட்டில் இருந்து வேலை” வாரம் – சற்றுமுன் அறிவிப்பு!

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் “வீட்டில் இருந்து பணியாற்றும்” விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி மூன்றாவது முறையாகவம் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 30ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்த விடுமுறை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மீண்டும்-வீட்டில்-இரு/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 1245 பேர் கைது

இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் மூவாயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 06 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2020/04/05/ஊரடங்கு-உத்தரவை-மீறிய-மே/

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு

2020 ஏப்ரல் 05 , பி.ப. 07:30

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 3 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-174-ஆக-உயர்வு/175-248014

  • தொடங்கியவர்

’18 பேருக்குக்கும் கொரோனா இல்லை’
Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:51 - 0      - 9

யாழ்.- தாவடி பகுதியில், தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் 18 பேருக்குக்கும், இன்று நடைபெற்ற மருத்துவ பாிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக,  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/18-பேருக்குக்கும்-கொரோனா-இல்லை/71-248009

  • கருத்துக்கள உறவுகள்

C891-B122-E2-D8-42-D6-B8-A1-5-B3-C0-FBEA
இவரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.