Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 17 இங்கு பின்னர் கொரோனாவின் வீரியம் அதிகரிக்கும்;எச்சரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு பின்னர் கொரோனா வைரஸ் மிக வீரியமாக பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே அதுவரைக்கும் தற்போது கடைப்பிடிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் உரியவகையில் பின்பற்றுவதே சிறப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளா

http://thinakkural.lk/article/37921

  • தொடங்கியவர்

புத்தளத்தில் மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

2020 ஏப்ரல் 06 , மு.ப. 06:36

 

புத்தளம்-சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்த மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஸா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையத்தில் இணைக்கப்பட்ட 11,9,5 வயதுகளையுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இச்சிறுவர்களை முல்லேரியாவ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பததளததல-மனற-சறவரகளகக-கரன-தறற-உறத/175-248018

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

லங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 176 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 33 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79365

  • தொடங்கியவர்

நீர்கொழும்பில் நான்கரை வயது சிறுவனுக்கு கொரோனா

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  நான்கரை வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

நீர்கொழும்பு அக்கரபனா பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த 3 ஆம்  திகதி இருமல், சுவாசப் பிரச்சினை  காரணமாக  கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில,; குறித்த சிறுவனுக்கு  கொவிட்-19 நோய் இருப்பது தெரியவந்ததாகவும் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக,  நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அக்கரப்பனா கந்த சுரித்து கம  எனும் இடத்தில் வசிக்கும் குறித்த சிறுவனுக்கே    கொவிட்-19 தொற்று  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச் சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு முன் நீர்கொழும்பு முன்னக்கரை  பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும், அக்கரப்பனா பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிகிச்சைபெற்றுள்ளார்.

அத்துடன், இச்சிறுவரின் குடும்பத்தார் நீர்கொழும்பில் பல இடங்களுக்கும் சென்றுள்ளதால், குடும்பத்தார் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வீடு அமைந்துள்ள வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக,  கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்  யசந்த ரத்னாயக்க  தெரிவித்தார். 
  
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள  சிறுவனின் தாயார் கர்ப்பிணி என்றும் பாட்டி நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள சிறுவனுடன் வைத்தியசாலையில் இருந்தவரென்றும் வீட்டில் மொத்தமாக ஆறு பேர் வசிப்பதாகவும்  கட்டான பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் முன் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு காய்ச்சல்  இருப்பதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பெண்மணி விசேட அம்புலன்ஸ் மூலமாக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/நீர்கொழும்பில்-நான்கரை-வயது-சிறுவனுக்கு-கொரோனா/175-248019

  • கருத்துக்கள உறவுகள்

Dr.Anil_.Jasinghe.jpg

தமிழ், சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை? – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் அசாதாரண நிலை எந்தளவிற்கு கூடும் என கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அடுத்துவரும் ஒருவார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புத்தாண்டு காலப்பகுதிவரை கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனவே கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி மக்களை கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே நிலை தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், வீடுகளில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று தொடர்பான அறிகுறி இருந்தால் 1390 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

http://athavannews.com/தமிழ்-சிங்கள-புத்தாண்டு/

  • தொடங்கியவர்

பன்முகத்திறமையும் சமூக உணர்வும் கூடிய யாழ். பல்கலையின் கிளிநொச்சி மாவட்ட இறுதியாண்டு மருத்துவ மாணவர்களின் எண்ணத்தில் உதித்து, கிளிநொச்சி வைத்தியசாலையின் சுகாதார மேம்பாட்டுப்பிரிவின் அனுசரணையுடன் முழுமைபெற்ற “Corona வை வெல்வோம்” விழிப்புணர்வு கீதம்!!!

 

 

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி பெருந்தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் அறிவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் திணைக்களம் , சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட உற்பத்திகளை பாதிக்கும் வகையில் யாரேனும் செயற்படுவார்களாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.


071-4415160 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக செயலாளர் அருணி ரனசிங்கவை தொடர்பு கொண்டு தகவல்களை தெரியப்படுத்த முடியும். அவர் அவை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவார். மேலும் வாட்ஸ் எப்(WhatsApp), வைபர்(Viber) மூலம் தொடர்பு கொள்வதற்கு 071-1692692 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அதே போன்று mpliandea@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும்.

மேலும், பிரதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தொழிலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79397

  • தொடங்கியவர்

வைத்தியசாலைக்கு Face mask நன்கொடை செய்தவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் - Dr Thangamuthu Sathiyamoorthy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

எவ்வாறு இலகுவாக முகக்கவசம் செய்யலாம்  :  அமெரிக்காவின் முதன்மை வைத்தியர் 

 

 

  • தொடங்கியவர்

thumb_06-04-2020.gif

  • தொடங்கியவர்

கிவுல பிரதேசத்தில் 15 குடும்பங்களுக்கு சுயதனிமை

ஆணமடுவ - கிவுல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டதால், அவர் சிகிச்சை பெற்ற ஆனமடுவ ஆரம்ப வைத்தியசாலையின் அலுவலக சபை உள்ளிட்ட பவும கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, ஆணமடுவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.எம். பத்மினி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான 28 வயதுடையவர் என்றும் இவர் தற்போது ஐ.டி.எச் இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கிவுல-பிரதேசத்தில்-15-குடும்பங்களுக்கு-சுயதனிமை/175-248050

  • தொடங்கியவர்

பேருவளையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று

பேருவளை- மாலிகாஹேன வெத்திமராஜபுர பிரதேசத்தில், 14 தினங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாள்கள் கடந்த நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த ஒருவர் இன்று (06) இனங்காணப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர், கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தோனேசியா சென்று கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றுடைய குறித்த நபர் இனங்காணப்பட்டதையடுத்து, பேருவளையில் இதுவரை 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-மற்றுமொருவருக்கு-கொரோனா-தொற்று/175-248057

  • தொடங்கியவர்

image_e8dbfcb8e0.jpg

  • தொடங்கியவர்

யாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை !

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.
 

dewanesan.jpg

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது.

எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்தி முதலாவது கோரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகள் வரும் போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும்  என்றார்.

https://www.virakesari.lk/article/79433

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Coronavirus5-2.jpg

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை மேலும் இருவர் இலக்கானமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து 34 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் 139 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் 257 பேர் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கையில்-மேலும்-இருவரு/

  • தொடங்கியவர்

அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ! பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்

அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் களநிலை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 6 ஆம் திகதி 12 மணிக்கு இந்த களநிலை அறிக்கை வெளியிடப்பட்ருந்தது.

இதன்படி உலகில் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றானது வீரியமாக பரவிவருகின்றது. அதன் நிமித்தம் இன்றைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே தற்போது இலங்கையில் 12 மணி வரைக்கும் 176 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல எதிர்வுகூறல்களையும் பல பிரேரணைகளையும் நாம் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகின்றோம். அந்தவகையில் இன்றையதினம் இந்த கொரோனா தொற்றை இலங்கையில் தடுப்பதற்கு நாம் என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டுமென்று நாம் கூறியுள்ளோம்.

அண்மையில் சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்ததன் படி இலங்கையில் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான வசதிகளே காணப்படுகின்றன. இந்த எல்லை மீறப்படுமிடத்து எமது சுகாதாரத்துறை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டிராது. வசதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆகவே நாங்கள் இந்த நிலையை 2 ஆயிரத்திற்குட்பட்டவாறே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தற்போதுள்ள சமூக இடைவெளியை 80வீதம் மட்டில் அகில இலங்கை ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை தகுந்த முறையில் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

அத்தோடு சுகாதார செயற்பதடுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தவகையில் தற்போதுள்ள நிலையை மிகவும் தீவிரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில்,

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அவர்களுடன் பழகி அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனையானது 70 வீதம் தான் சரியான முடிவைக் காட்டும். எனவே இந்த நோய் குணம் குறியைக் கொண்டவர்கள் 30 வீதமானவர்கள் சில வேளைகளில் தவறிவிடப்படலாம். ஆகவே இந்த பரிசோதனையை திரும்பத்திரும்ப 3 முறை செய்வதன் மூலம் நோயால் இனங்காணப்பட்டவர்களை நாம் மேலும் இனங்காண முடியும்.

ஆகவே இந்த நடவடிக்கையை விஸ்தரிக்கும் படி நாங்கள் அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கூறியிருந்தோம். ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அதைப் பணித்த போதும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய தொழில்நுட்பக்குழு அந்த நடவடிக்கையை சற்று தாமதிப்பதாக நாங்கள் அறிகின்றோம். இதுவொறு நல்லவிடயம் அல்ல.

அதனை நடைமுறைப்படுத்தும் படி சகல அதிகாரிகளுக்கும் நாம் எமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமூக இடைவெளியை நாங்கள் கூடியவரை பேணுவது, ஆனால் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இடையிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் அந்த சமூக இடைவெளியானது மேலும் குறைக்கப்படுகின்றது.

அத்துடன் தம்புள்ளை பொருளாதார மையங்களுக்கான மற்றும் தங்காலை, நீர்கொழும்பு மீன் சந்தைக்கான வரையறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

அதாவது அரசாங்கம் மாவட்ட மட்டத்திலான போக்குவரத்தை தடைப்படுத்தியபோதிலும் அதனை மீறும் படி சிலசில விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒரு நல்ல விடயமல்ல.

ஆகவே சமூகத்திலுள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை பேண முன்வரவேண்டும். அரசாங்க அதிகாரிகளுக்கும் நாங்கள் இது தொடர்பான அறிவித்தலை வழங்கியுள்ளோம்.

சரியான முறையில் பிழையற்ற முறையில் கைகளை கழுவுவதையும் முகக்கவசம் அணிவதையும் பின்பற்றுதல் . அதாவது சரியான முறையில் உலக சுகாதார அமையத்தால் குறிப்பிடப்பட்ட விதிக்குட்பட்ட வகையில் கைகளை கழுவும் பொதுதான் உண்மையில் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் சாதாரணமாக கைகளை கழுவும் போது அந்தக் கிருமிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படுவதில்லை . ஆகவே கைகழுவும் பொறிமுறையை சரியாக உணர்ந்து அதனை செயற்படுத்த வேண்டும். அத்தோடு முகக்கவசம் அணிவது ஒரு நல்ல விடயம். முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களால் சமுதாயத்தில் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. அதாவது இலங்கையில் கொரோனா தொற்றின் நிலையானது 3 ஆவது நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு முகக்கவசம் சரியான முறையில் அணியும் போது இந்த கொரோனா தொற்றானது 3 B ற்குள்ளேயே மட்டுப்படுத்தப்படுகின்றது. 4 ஆவது நிலைக்கு செல்வது தடுக்கப்படுகின்றது.

அத்தோடு சுகாதாரத் துறையில் காணப்படும் மனித வளத்தையும் பௌதீக வளத்தையும் விஸ்தரிக்க வேண்டும். இது தொடர்பில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதாவது நோயாளர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நோயாளர்கள் தேவையற்ற ரீதியில் வைத்தியசாலைக்குள் வந்து அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளை மறைத்து வருவதனால் அவர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதனால் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட சுகாதார பணியாளர்களை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நிலை நீடிக்குமானால் வெகுவிரைவில் சுகாதார துறையினருக்கான பற்றாக்குறை நிலவும். ஆகவே இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் குறிப்பட்டுள்ள 1390 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த இலக்கத்தின் ஊடாக அவர்களுக்கான தகவல்கள் வழங்கப்படும். தேவையேற்படின் மாத்திரம் அவர்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டும். அல்லது வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அத்துடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கான மேம்படுத்தல் நிலை தொடர்பில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்துமாறு பணித்திருந்தோம். ஆகவே அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு நாங்கள் மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்துமிடத்து. நாங்கள் இந்த கொரோனா நோய்த் தொற்றை வீரியமாக வெற்றிகொள்ள முடியும். அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 )48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். இதை தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79434

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம்: 14 இடங்கள் தொடர்ந்தும் சீல் பண்ணப்பட்ட நிலையில்

lockdown.jpgகொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை போரத்தொட்டை பகுதியும், ஜா – எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும் களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளைப் பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணைப் பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும், கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை , அர்ஜனமாவத்தை ஆகிய பகுதிகளும், குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்தை, கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹூகொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன

http://thinakkural.lk/article/38073

  • கருத்துக்கள உறவுகள்

2500 ஐ தாண்டினால் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டினால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரீத அளுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸின் தாக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் தொடரும் சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் கிராம மட்டத்தில் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

தற்போது நோய் பரவலின் வேகம் குறைந்தளவில் காணப்படுவதாகவும் அடுத்த கட்டமாக அதன் வீரியம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://thinakkural.lk/article/38108

  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் நால்வர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (07) மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 42 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை மேலும் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 132 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 180 ஆகும்.

https://newuthayan.com/சற்றுமுன்-நால்வர்-குணம-2/

 

  • தொடங்கியவர்

போதனா வைத்தியசாலை யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா COVID-19 ற்கான RT-PCR பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

இந்த பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன்பு இக்குழு பல கூட்டங்களையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.

தற்போது, COVID - 19 தொற்று சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்றுளளவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள் பரிசோதித்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு பங்களிப்புக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

Teaching hospital Jaffna with Faculty of Medicine Jaffna has started RT-PCR testing for COVID-19 in Jaffna.
The team had several meetings and arrangement before starting this test.

Currently, all suspected cases and contact screening cases can be tested on the same day.

I thank all dedicated people to start this programm in Jaffna.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று

2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:08

இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, 183ஆக அதிகரித்துள்ளது என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று மட்டும் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 183 பேரில் 135 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்குக்-கொரோனா-தொற்று/175-248130

  • தொடங்கியவர்

thumb_07-04-2020_1.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.