Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

கொழும்பு புத்தக கண்காட்சிக்கு சென்ற நபருக்கும் கொரோனா

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் கடந்த 23ம் திகதி பங்கேற்ற சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் 23ம் திகதி குறித்த நபர் கோட்டையில் உள்ள பஸ் டிப்போவுக்கு பயணம் செய்ததாகவும், மேலும் 30ம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

https://newuthayan.com/கொழும்பு-புத்தக-கண்காட்ச/

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்

மன்னார் நிருபர்

மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்..

89-1-8.jpgமன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன் கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது.

அதற்கமைவாக குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெண்னப்புவ பகுதியை சேர்ந்த மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மான வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர் பணியாற்றிய மற்றும் நடமாடிய தொடர்புகளை பேணிய இடங்கள் மற்றும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோன தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நபருடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் கொரோனா அச்சம் என சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்றைய தினம் மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது

https://thinakkural.lk/article/78324

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply

மறுஅறிவித்தல் வரை அனலைதீவு முடக்கம் !அரசாங்க அதிபர் தெரிவிப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

அனலைதீவுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணத்தால் முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.

அந்தவகையில் இன்றில் இருந்து யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 186 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. அதில் மன்னாரைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/அனலைதீவுக்கான-போக்குவரத/

ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை

மினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்டதாக தோன்றிய பின்னர் மினுவாங்கொடையில் மீண்டும் நோய் பரவல் காணப்படுவது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

garment.jpg
இ;ந்த பிரச்சினைக்கு கருணையுடன் உணர்வுபூர்வமான விதத்தில் தீர்வை காணவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேலைவாய்பினை வழங்கும் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றளர் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் அவர்கள் மினுவாங்கொட கட்டுநாயக்க சீதுவை வெலிசரையில் தொழில் புரிகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளன.
இந்த தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலையின் நிரந்தர தொழிலாளர்கள் இ;ல்லை இவர்கள் பல தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மேலும் குறிப்பிட்ட தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவேளை தொழிற்சாலை அதனை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sri-Lankan-Garment-Factory-691x394-1.jpg
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் அதிகாரிகள் தங்கியிருந்தனர் அவர்கள் நிறுவனத்தின் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் சென்றனர் அந்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக பொது கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான பரவலை தடுப்பதற்காக தொழிற்சாலைகளில் நோய் பரவலை கண்டுபிடிப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://thinakkural.lk/article/78428

திருமலை சென்று கொழும்பு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா!

October 9, 202000
SHARE0
202004220538160374_Modern-tool-for-easy-
 

திருகோணமலை – கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேச கொரோனா நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (09) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வழங்கினார்.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்த போது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்

https://newuthayan.com/திருமலை-சென்று-கொழும்பு/

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் பல ஆடைத் தொழிற்சாலைகளை மூட தீர்மானம்

கொக்கலையில் அமைந்துள்ள பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது, பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் அனைத்து கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டு நாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள்ள பல ஆடை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என முத லீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது, நாட்டின் சூழ்நிலை கருத்திற் கொண்டு கொவிட் -19 பரவு வதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் செய்தி தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/சிறீலங்காவில்-பல-ஆடைத்-த/

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 
1-7-696x261.jpg
 38 Views

மன்னாரில் மேலும் 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 27 நபர்களுக்கு முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத் டி.வினோதன் தெரிவித்தார்.
 
குறித்த 5 பேரூம் வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
 
நேற்றைய தினம் பட்டிதோட்டம் பகுதியில் கட்டிட நிர்மாண வேலைக்கு என வருகை தந்த நபர்கள் குறித்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேரூக்கு முதல் கட்டமாக ‘கொரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஏனையவர்களுக்கான முடிவு இதுவரை வெளியாகவில்லை.
 
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது வரை நிலமைகள் கட்டுப்பாட்டுகுள் இருப்பதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதுடன் காரணம் இன்றி வெளி நடமட்டத்தை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு சென்ற இருவருக்கு கொரோனா; ஆபத்தான நிலையில் 80 கடைகள்  

தம்புள்ளை பொருளாதார மையத்திற்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றார் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர்கள் மீது மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய படபொல பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

44447.jpg

குறித்த நபர்கள் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருடன் கதிர்காமத்திற்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

கொரோன தொற்றுக்குள்ளான இருவரும் தம்புள்ளை பொருளாதார மையத் தின் சுமார் 80 கடைகளுக்கு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/78716

கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் தலைமறைவு; படையினர் தொடர்ந்தும் தேடுதல்

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடுகின்றோம் என்று கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நேற்று தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று வரை 5 ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் எனவும் அவர் கூறினார். கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளன எனவும், அதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/78689

இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று; இராணுவத் தளபதி தகவல்

1-10-6.jpgமினுவங்கொட பிரென்டிக்‌ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த இருவர் உள்ளிட்ட 103 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.

https://thinakkural.lk/article/78682

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாறும் தேசிய கல்வியியற்கல்லூரிகள்!

 
WhatsApp-Image-2020-10-11-at-4.08.18-AM-
 20 Views

வடக்கு கிழக்கில் உள்ள தேசிய கல்வியியற்கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் என்பன தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

குறித்த கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நாளைய தினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

WhatsApp-Image-2020-10-11-at-4.08.22-AM.

இராணுவத்தின் கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சின் அனுமதியுடன் குறித்த கல்லூரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இங்குள்ள விடுதிகள் முதற்கட்டமாக இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அதே வேளை நாட்டில் உள்ள ஏனைய தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கும் அமைச்சினால் குறித்த அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த முறை கோரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
அயல் கிராம மக்கள்  ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்காமல் இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2020-10-11-at-4.08.44-AM.

இலங்கையில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களை தனிமை படுத்தும் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/தனிமைப்படுத்தும்-நிலையங/

 

கொரோனா நோயாளர்களை தேடும் இராணுவம்?

 
1-34-696x387.jpg
 29 Views

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடுகின்றோம் என்று கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நேற்று தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று வரை 5 ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் எனவும் அவர் கூறினார். கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளன எனவும்இ அதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 1000 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் அதேவேளையில், 3000 வரையிலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 119 பேர் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

 

https://www.ilakku.org/கொரோனா-நோயாளர்களை-தேடும்/

மன்னாரில் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மன்னாரில் இரண்டு கிராமங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
பள்ளித்தோட்டம் பெரியகடை கிராமங்களை உடனடியாக முடக்குவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

quarantine.01-300x181.png
மறுஅறிவித்தல் வரை இந்தகிராமங்களுக்குள் யாரும் நுழைய முடியாது அந்த கிராமங்களில் இருந்து வெளியேற முடியாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78836

மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இராணுவத் தளபதி

saventhirasilva.jpgமினுவாங்கொடையில் மேலும், 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 79 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 22 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 689 ஆகபதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 306 பேர் குணமடைந்து வீடுகளுக்குத்திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 308 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/78836

முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை; வருகின்றது வர்த்தமானி அறிவித்தல்

FACEMASK-.pngதனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது.

அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சிஷேட வர்த்தமானி இரண்டு தினங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/78829

 

கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு பூட்டு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

அதன் படி குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்குப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களில் நான்கு துறவிகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

gampaha-1.jpg

 

இதற்கிடையில், கம்பஹா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணி யாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் , குறித்த வைத்தியசாலையில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்குட் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 70 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/78812

யூனியன் பிளேஸ் ஆடம்பர தொடர்மாடியில் வசிப்பவர்களிடம் பிசிஆர் சோதனை

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள ஒன்320 தொடர்மாடியின் குடியிருப்பாளர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தொடர்மாடியில் வசிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தொடர்மாடியில் குடியிருப்பவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ள அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்மாடியில் குடியிருப்பவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

on320-300x225.jpg

டவர் இரண்டில் வசித்தவரே பாதிக்கப்பட்டுள்ளார் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களை வெளியே செல்லவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்மாடியை முற்றாக முடக்கவில்லை,ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயலவர்கள் ஒருவரையொருவர் தொடர்கொள்ளவில்லை,மக்களை பதட்டப்படவேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் அங்கு வசிப்பவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள சில நாட்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

covid-testing-300x177.jpg
பாதிக்கப்பட்டவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர் அவரது சகாவொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார், அவரின் சகோதரர் மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் பணியாற்றுபவர் இதன் காரணமாக நோய் எங்கிருந்து பரவியது என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தொடர்மாடிக்குடியிருப்பில் வசிப்பவர்களில் எவராவது இருமல் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த தொடர்மாடியில் இராஜதந்திர சமூகத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவு வசிப்பது குறிப்பிடத்தக்கது

https://thinakkural.lk/article/79171

தொற்றில்லாத நிலையிலும் கட்டாய தனிமைப்படுத்தல் - ஊவா வெல்லச பல்கலை மாணவர்கள் விசனம்

 

கொழும்பு பாடசாலை மாணவிக்கு கொரோனா

கொழும்பு  மகளிர் பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், வெயங்கொட  – எலுவபிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி உட்பட  அவரது குடும்ப உறுப் பினர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக  மேல் மாகாண பொலிஸ் நிலையம் தெரி வித்துள்ளது
 

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 90 பேர் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப் படுத்தல் நிலை யங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள துடன், ஏனைய 50 பேரும் அவர் களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள் ளார்.

 

saventhirasilva.jpg

 

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோ னா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 1,397ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித் துள்ளது.

இந்நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாகத் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 90 பேர் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப் படுத்தல் நிலை யங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள துடன், ஏனைய 50 பேரும் அவர் களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள் ளார்.

https://thinakkural.lk/article/79199

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக பரவும் கொரோனா- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை

October 13, 2020
 
 
Share
 
 
1-43.jpg
 31 Views

Covid 19 நோயாளிகள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ள சிவப்பு வலயத்தில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச முடக்கத்தினை ஏற்படுத்துதல் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களது அறிக்கையில்

தற்போதுள்ள சூழ்நிலையில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்களினால் Covid 19  வைரஸ் பெருகி வருகின்றது
இதிலே பிரதானமாக சுகாதார கொள்ளளவை பாதுகாப்பதிலும் அந்த கொள்ளளவை அதிகரிப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.

தகுந்த முறைகளால் நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்ய முடியாது போனால் அல்லது எங்களுடைய சுகாதார கொள்ளளவை மீறினால் முன்னைய காலத்தில்  கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியது போல் முகாமைத்துவம் செய்ய முடியாமல் போய்விடும்.

இதிலே மூன்று பிரதான கூறுகளின் பங்களிப்பும், முடிவெடுத்தலும் இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த அத்தியாவசியமாகின்றது.

அவை,
⑴ அரசியல் தலைவர்களின் பங்களிப்பு
⑵ சுகாதாரத்துறையின் கொள்ளளவு
⑶ பொதுமக்களின் ஒத்துழைப்பு

தற்பொழுது கொரோனா வைரஸ் பரம்பலை முகாமைத்துவம் செய்யும் முகமாக இன்றுவரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது பரிந்துரைகளை தகுந்த அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

⑴ சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் Covid 19 இணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பித்தல்

⑵ Covid 19 நோயாளர்கள் மற்றும் தொடர்பு பட்டவர்களின் பரம்பலை GPS தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்தல்

⑶ Covid 19 நோயாளிகள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ள சிவப்பு வலயத்தில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச முடக்கத்தினை ஏற்படுத்துதல் (Zonal Lockdown)

4)தொற்றுநோய் தடுப்புபிரிவின் அதிகாரி வைத்தியர். சுதத் சமரவீர பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் (DDG-) பதவியிலிருந்து விடுவித்து பதிலாக தகுந்த பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு வேலைப்பளுவை குறைத்து தெற்று நோய்த்துறையில் உரிய கவனம் செலுத்துதல்.

⑸ PCR பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவினை மேலும் விரிவு படுத்தல்.

⑹ சகல வைத்தியசாலைகளையும் தொடர்புபடுத்தி சுகாதாரத்துறையின் சகல தரப்பிரிவின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புகுழு ஒன்றினை உருவாக்குதல். அதன் மூலம்  பாதுகாப்பு சம்மந்தமான முடிவுகளை விரைவில் எடுக்க முடியும்.

⑺ சுகாதார சேவைகளுக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை(PPE) தேவையான அளவு வழங்குவதன் மூலம் வைத்தியர் உட்பட சுகாதார ஊழியர்கள் உறுதியுடன் சேவை செய்ய அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

⑻ சுகாதார சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் விதத்தில், வைத்தியசாலையில் நடைபெறுகின்ற நாளாந்த நிகழ்வுகளை தற்காலிகமாக தளர்த்தி அதன் முலம் சுகாதார சேவையை வினைத்திறனாக ஆற்றுவதற்கு வழிவகுத்தல்.

⑼ சுகாதார சேவையில் உள்ளோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு சுகாதார சேவையில் அவர்களை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் முறை மற்றும் PCR பரிசோதனைகள் செய்யும் முறைகள் பற்றிய வழிமுறைகளை உருவாக்குதல்.

⑽ தனிமை படுத்தும் போதும், கொரோனா நோய்த்தொற்றை இனம் காணும் பொருட்டும் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறிமுறை, இராணுவப் புலனாய்வுப்பிரிவு என்பவற்றின் சரியான செயற்பாடுகளை  உறுதிப்படுத்தல்

⑾ பொதுமக்கள் தேவையற்ற ரீதியில் நடமாடுவதை தவிர்க்கவும்.
⑿ சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகளையும் மற்றும் நீதிக்கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தல்.

⒀ முடியுமானவரையில் தனியார் மற்றும் அரச துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் விதத்தில் நிறுவனங்களை அறிவுறுத்தல்.

⒁ கொரோனா நோய் அறிகுறிகள் வெளிப்பட்டால் சேவை நிலையத்திற்கு வராமல் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுதல்.

⒂ கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் என்பவற்றை பிற்போடல்.

⒃ இந்தக் காலத்தில் முன்களத்தில் சேவையாற்றுகின்ற சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் உச்ச சேவையினை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களின் அடிப்படை வசதிகளை உச்சநிலையில் ஏற்படுத்தி கொடுத்தல்.” என
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/வேகமாக-பரவும்-கொரோனா-அரச/

இன்று194 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்- இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000 த்தினைதாண்டியது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 194 பேர் இன்றுஅடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000த்தினை கடந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஏனைய 114 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள்.

corona-update-300x168.jpg
இதன்காரணமாக ஒக்டோபர் நான்காம் திகதி தெரியவந்த மினுவாங்கொட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1591 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் வெலிசரை கடற்படை முகாம் கொத்தணியில் அதிகளவாக 950 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மினுவாஙகொடையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Minuwangoda-Apparel-Factory-300x161.jpg
மினுவாங்கொடை கொத்தணி குறித்த விபரங்கள் வெளியானவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் உட்பட் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை கொழுமபிலும் பலர் கண்டுபிடிக்கப்பட்டுளளனர்.
மினுவாங்கொட கொத்தணி சமூக தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 194 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையி;ல இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5003 ஆக அதிகரித்துள்ளது.

https://thinakkural.lk/article/79453

மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற அனைவரும் தனிமைப்படுத்தல்

11-1.pngமினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை பதிவுத் திருமணம் செய்வதற்காகச் சென்ற மாப்பிளை, திருமணப் பதிவாளர் உட்பட பதினான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பதிவுத் திருமணத்துக்காக இவர்கள் கடந்த 2 ஆம் திகதி மினுவாங்கொடைக்குச் சென்றமை தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பியகம நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

மினுவாங்கொடைக்கு கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்யத் தனது உறவினர்களுடன் இளைஞன் ஒருவர் சென்று திரும்பிய சில நாட்களில் குறித்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞர் உட்பட அவருடன் சென்ற 14 பேருக்கும் கடந்த 10 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்த சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் உட்பட திருமண சாட்சிக்குக் கையொப்பமிட்ட இருவர் கடந்த 10 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி இளைஞரும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், 9 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டதையடுத்து, அதற்குச் சென்றவர்களை தனிமைப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/79415

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல…

October 14, 2020

Vijitha-Herath.jpg

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத், தற்போது காணப்படும் நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடுமெனவும் எச்சரித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே, கடந்த காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்பட்டனவெனவும் உண்மையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டிருந்தமையாலேயே இரண்டாவது அலையொன்று உருவெடுத்துள்ளதெனவும் சாடினார்.

கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக கட்டுப்படுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்துள்ளதென அரசாங்கம் மார்த் தட்டிக்கொண்டதாகத் தெரிவித்த அவர், மறு திசையில் முன்பு இருந்ததை விடவும் உக்கிரமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறதெனவும் சாடினார்.

இவ்வாறிருக்க பிரெண்டிக்ஸ் கொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணால் கொரோனா வைரஸ் பரப்பட்டதென ஊடகங்களில் சில தகவலை கட்டமைக்க முற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என்ற உண்மையை சுகாதார துறையினர் தற்போது வெளிப்படுத்தியுள்ளனரெனவும் கூறினார்.

“இவ்வாறிருக்க இந்தியாவுக்குச் சென்று வந்த பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 14 பேர் தங்களுடைய மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடும்” எனவும், விஜித்த ஹேரத் எச்சரித்தார்.

 

https://globaltamilnews.net/2020/151824/

பிலியந்தல விகாரையில் 74 பௌத்த குருமார் உட்பட 90 பேரிற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு

பிலியந்தல சிலுமின விகாரையை சேர்ந்;த 74 பௌத்த மதகுருமார் உட்பட90 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிலியந்தலையில் உள்ள ககாபொல சிலுமின மகாவிகாரையின் தலைமை மதகுரு உட்பட 90 பேரையே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

corona-update-300x168.jpg
கிம்புலாவலயிலிருந்து குறிப்பிட்ட விகாரைக்கு சென்ற ஒருவர் கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் மகன் குறிப்பிட்ட விகாரையின் மதகுரு எனவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

https://thinakkural.lk/article/79609

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

O
face-mask.600.jpg
 29 Views

மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவல் காரணமாக சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தணியில் 194 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறீலங்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக அதிகிரித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணி குறித்த விபரங்கள் வெளியானவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் உட்பட் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 328 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருப்பதாவது,

பொது விடுதிகளில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணி புரிந்து வருபவர்கள் இதுகுறித்து பணிபுரியும் தமது நிறுவனத்திடம் அறிவிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றெனத் தெரிவித்த இராணுவத் தளபதி இதுவியத்தில் தொடர்புடைய அனைவரும் இவ் அறிவித்தலை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

https://www.ilakku.org/சிறீலங்காவில்-5000க்கும்-மே/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

October 15, 2020
 
 
Share
 
 
2b4e39ba-1495-47a5-a3dd-22d54c547f6c-1-6
 38 Views

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் எதிர்வு கூறியுள்ளது.

உலகத்தின் பலசாலிகளாகக் கூறப்படும் நாடுகளும், நபர்களும் COVID-19 தொற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் COVID-19 நோயினை எளிமையாக எடைபோட்டுவிடக் கூடாது.

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு COVID-19 தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் மீண்டும் COVID-19 பரவக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான போதியளவு விளக்கங்கள் ஏற்கனவே மக்களிடையே வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றாமை கொரோனா வைரஸ் பாரிய அளவில் பரவுவதற்கான காரணமாகும். அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாமையும் இன்னொரு காரணமாக அமைந்துள்ளது. உதாரணமாக திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் (Brandix) இருந்து ஏற்பட்ட தொற்றை கூறலாம்.

இம்முறை இரு நாட்களிலும் 1000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் இந்நோய் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாக காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்த மற்றும் வெளிமாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர்களில் தான் இந்த தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வடக்கு மாகாணத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதுடன், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் அறிவுறுத்தலிற்கமைய மேற்பார்வைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் முன்னேற்பாடாக வடக்கு மாகாணத்தில் 5000 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண தொற்றாளருடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால் அவர்களுக்கு PCR பரிசோதனை செய்வதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் 2ஆவது அலையினை கட்டுப்படுத்துவது தொடர்பான COVID-19 Exit Strategy ஆவணம் ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தாலே கொரோனா வைரஸை சரியான முறையில் கட்டுப்படுத்தலாம்.

அரசாங்கத்திற்குரிய அறிவுறுத்தல்கள் 2020.10.05 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 10 அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளோம். அதாவது;

  1. COVID-19 நோயாளர்களை சரியாக இனங்காணும் பொறிமுறையை வலுவாக்குதல். இதற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறிமுறையையும் புலன்விசாரணைத் துறையினையும் இணைத்து குழுவாகப் பணியாற்றுதல் (Contact Tracing).
  2. இயன்ற உச்சபட்ச கொள்ளளவில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளல்; மற்றும் அக் கொள்ளளவினை விரைவில் விரிவாக்குவதற்குத் தேவையான சகல வசதிகளையும் உறுதிப்படுத்தல்.
  3. நோயாளர்களையும் தொடர்பாளர்களையும் தேடியறிந்து PCR பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் சந்தேகத்திற்குரிய தொடர்பாளர்களை தனிமைப்படுத்தி மீண்டும் மீண்டும் பரிசோதிப்பதன் மூலம் PCR பரிசோதனையின் உணர்திறனை அதிகரித்துக்கொள்ளல் (Aggressive Testing Strategy மற்றும் Test! Test! Test! Test! Strategy)
  4. நோயாளர்கள் அறியப்பட்ட பிரதேசங்களை (சிவப்பு வலயம்) தனிமைப்படுத்துவதன் மூலம் நோயாளர்கள் அறியப்படாத பிரதேசங்களுக்குள் (பச்சை வலயம்) வைரஸ் புகுவதைத் தடுத்தல். (Zonal Lockdown).
  5. விஞ்ஞான முறைமைக்கு அமைய முழு நாடும் உட்படும் விதத்தில் எழுந்தமானமாக சமூகக் குழுமங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் நோயின் உண்மையான பரவல் நிலை தொடர்பான சரியான நிலையை அனுமானித்தல் (RandomCommnity Sample Surveillance).
  6. கடற்படை முகாம் மற்றும் கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தினை ஒட்டிய COVID-19 நோயாளர்களில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமானது, அபாயகரமான நிலையங்களோ குழுமங்களோ ஒன்றுகூட்டப்படும்போது, சிறு குழுமங்களாகப் பிரிக்கப்படுவதன் மூலம் ஒரே தடவையில் பெரிய குழுவொன்றுக்கு நோய் பரவாமல் தடுத்துக் கொள்ளலாம் என்பதாகும். (Compartmentalization).
  7. DReAM கொள்கைக்கு அமைவாக பொதுமக்கள் அடிப்படைச் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றல் கட்டாயமானது.

D – Distancing/ சமூக இடைவெளி

Re – Respiratory Etiquette/ சுவாச ஒழுங்குமுறை

A – Aseptic technique / தொற்றின்றிய நுட்பம் (கிருமிநீக்கமும் கை கழுவுதலும்)

M – Mask/ முகக் கவசப் பாவனை

  1. சுகாதார அமைச்சினது COVID-19 தொழிநுட்பக் குழுவானது வாராந்தம் அல்லது தேவைப்படின் நாளாந்தம் கூடி தொழினுட்ப தீர்மானங்களை தாமதமின்றி மேற்கொள்ளல்.
  2. சுகாதார வீரர்கள் என அறியப்பட்ட சுகாதாரத் துறையினர் மனவுறுதியுடன் கடமையாற்றுவதற்காக வழங்கப்பட்ட வசதிகளையும் ஊக்குவிப்புகளையும் தடையின்றி வழங்கலை உறுதிசெய்தல்.
  3. சுகாதாரத் துறையினர், முப்படையினர், விமான மற்றும் பயணிகள் போக்குவரத்துத் துறையினர் போன்ற சேவை வழங்கும் துறைகள் உட்பட அதி அபாயக் குழுமங்களை அடிக்கடி PCR பரிசோதனைக்கு உட்படுத்தல். ஏன்பனவாகும்.

சமூக தொற்றாக மாறினால் பொரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது எந்தெந்த பகுதிகளில், எப்பகுதியினரை தாக்கும் என குறிப்பாக எதிர்வு கூறுவது கடினமானது. அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

வைத்தியகலாநிதி T. காண்டீபன்,

வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

https://www.ilakku.org/இலங்கையில்-மீண்டும்-தோன்/

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் கொரோனா; மினுவாங்கொட கொத்தணியில் நேற்றும் 113 பேருக்குத் தொற்றியது

 
corona-test-900-696x377.png
 43 Views

மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் 113 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் சிக்கி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 113 பேரும், தொழில்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஐவர் என இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,721 ஆக அதிகரித்துள்ளது.

https://www.ilakku.org/அதிகரிக்கும்-கொரோனா-மின/

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் 1098 நபர்கள் தனிமைப்படுத்தல்

 
IMG_8679-696x392.jpg
 47 Views

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களைச் சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்று  நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலை காணப்படுகின்றது . அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும். யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களைச் சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோனோ தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும். நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படுமாயின்இஅவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள். எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன. எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அது மட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.

எனவே அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் அதிக விலையில் விற்கப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தொலைபேசி இலக்கமான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவலைத் தர முடியும்.

பொது மக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்படும் என அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/யாழ்-மாவட்டத்தில்-1098-நபர்க/

கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

gmoa-2-300x300.jpg
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
நாளொன்றிற்கு பத்தாயிரம் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை செய்வதற்கு கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளை தரமுயர்த்தவேண்டும்,சரியான சோதனை கொள்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/80025

மினுவாங்கொடையில் மேலும் மூன்று கிராமங்கள் இன்று முடக்கப்பட்டன

மினுவாங்கொடையில் மேலும் மூன்று கிராமங்களை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர்.
ஹனிகிமுல்ல,பெரலந்தவத்தை,ஹெலகந்தான ஆகிய கிராமங்களையே அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Minuwangoda-Brandix-employees-L-300x200.
கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் இந்த கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த கிராமங்களை முடக்கியுள்ளனர்.
மினுவாங்கொடையில் மேலும் பிசிஆர் பரிசோதனைகளை அதிகாரிகள் இன்று மேற்கொண்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/80003

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் குற்றவாளிகளா? -மனித உரிமை அமைப்புகள்  கேள்வி

garment-workers.jpg
ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

இது குறித்து  டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி கூறுகையில், “ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்துள்ளன, அவர்கள் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர். இராணுவத்தினர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று சோதனையிடுவதுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு செல்வதற்கு ஐந்து பத்துநிமிடங்களில் தயாராகவேண்டும் என உத்தரவிடுகின்றனர்.

அந்த இடத்தில் சுகாதார பரிசோதகர்கள் எவர்களையும் காணமுடிவதில்லை. தாம் எங்கு கொண்டுசெல்லப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

முககவசம் இல்லாத நிலையில் அவர்களை, அவர்களது குழந்தைகளுடன் அழைத்து செல்கின்றனர். அவர்களை ஒரு பேருந்திலிருந்து இன்னொருபேருந்திற்கு மாற்றுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து மிக அதிகம்.

ஏன் அவர்களை இரண்டாம்தர பிரஜைகள் போல நடத்துகின்றனர்.  சிறிய அறைகளில் இரண்டு அல்லது மூன்று பேர் வாழ்கின்றனர் சுமார் 100 முதல் 150 பேர் ஒரே கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர்.

சமூகத்தின் உயர்மட்டத்தினர் விசேட சிறந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் அதேவேளை, இவர்கள் மிக மோசமான நிலைமைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.  நிறுவனங்கள் செப்டம்பர் முதல் அவர்களிடமிருந்து வேலைகளை பெற்ற போதிலும் அவர்களுக்கு விடுப்பினை வழங்கவில்லை.

நோய் பரவுவதற்கான காரணம், இந்தியாவில் காணப்படும் நிலைமை இந்த விவகாரம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு, என்னவென்பது போன்ற முக்கியமானவிடயங்கள் குறித்து நாங்கள் ஆராயவுள்ளோம்.

இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை கொண்டுவரும் மிகப்பெரிய தொழில்துறையின் உயிர்நாடிகள் இந்த தொழிலாளர்கள் என்பதால், அவர்களை புறக்கணிக்ககூடாது.  இதன் காரணமாக ஊடகங்களும்அரசாங்கமும் அவர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை நிறுத்தவேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இந்த நிலைமைக்கு இலங்கை முதலீட்டு சபை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொழில்திணைக்களம் ஆகியவற்றையே குற்றம் சாட்டவேண்டும்”  என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.ilakku.org/ஆடை-தொழிற்சாலை-ஊழியர்கள்/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி |  Athavan News

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஓகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-மூன்றாவது-அலையின்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.