Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை: இராணுவத்தளபதி வலியுறுத்து

ஊரடங்கு தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றையதினம் ஊரடங்கு ஆறு மணிநேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/78923

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை வைத்தியர்களின் அர்ப்பணிப்பு -ஒரு நிமிடம் 38 வினாடிகள் வீடியோவை பாருங்கள்.

 

அம்பாறையில் நகரங்களில் திரண்ட மக்கள்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு தமக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.

கல்முனை பொது சந்தை மூடப்பட்ட போதிலும் பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் சில வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்றது.

அத்துடன், அம்பாறை பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

இதேவேளை, தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர்.

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

Curfew-Released-Time-Ampara-Situation-Co

  • தொடங்கியவர்

thumb_30-03-2020_1.gif

சிலாபத்தில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிலாபத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாத குழந்தை உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சலபததல-ஒர-கடமபததல-ஐநத-பரகக-கரன-வரஸ-தறற/175-247645

  • தொடங்கியவர்

கொரோனா தொற்று; நீர்கொழும்பில் 2ஆவது மரணம்

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களில் ஒருவர், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவது மரணம், இன்று சம்பவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஐடீஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட, 65 வயதுடைய மொஹமட் ஜமால் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற நீர்கொழும்பு - போரதொட்ட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், நெஞ்சுவலி என்று கூறிக்கொண்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

இதன்போது அவர், குறித்த வைத்தியசாலையின் 4ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளரின் நோய் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதன்படி, இன்று மாலை 3 மணியளவில், அங்கொடையிலுள்ள ஐடீஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அதன்போதே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து, குறித்த நபரின் உறவினர்கள், வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்று-நீர்கொழும்பில்-2ஆவது-மரணம்/175-247651

  • தொடங்கியவர்

thumb_30-03-2020_2.gif

  • தொடங்கியவர்

 

 

''சுடு நீரே வழங்கினார்கள்" : கொரோனாவால் குணமடைந்த முதலாவது இலங்கையரின் அனுபவம்

 

  • கருத்துக்கள உறவுகள்

corona-virus-getty.jpg

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இலங்கைக்கு-கொண்டுவரப்பட/

  • தொடங்கியவர்

thumb_31-03-2020.gif

  • தொடங்கியவர்

ஆறுகள், வாவிகள், குளங்களில் குளிப்பதால் கொரோனா பரவுமா? - தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு நிபுணரின் விளக்கம்

(இரா.செல்வராஜா)

ஆறுகள், வாவிகள், குளங்கள் ஆகியவற்றில் குளிப்பதன் மூலமோ நீரை உபயோகிப்பதன் ஊடாகவோ கொரோனா வைரஸ் தொற்றாது என தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதர் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இச்சடலங்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் புகையினால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/79029

  • தொடங்கியவர்

இதுவரை 16 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 122 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

அத்துடன், நாட்டின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இதுவரை-16-கொரோனா-தொற்றாளர்கள்-பூரண-குணம்/175-247680

  • தொடங்கியவர்

அதிகரிக்கிறது ! இலங்கையில் ஒரே நாளில் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இன்று (31.03.2020) அடையாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் மூவர் இன்று பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 132 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79027

 

  • தொடங்கியவர்

எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும் அபாயம் - வைத்தியர் ஜெயருவான்

தற்போதுள்ள நிலையில் இலங்கையில் "கொவிட் -19"கொரோனா நோய் பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார கூறுகின்றார்.

கொரோனா நோயாளர்களின் அவதானிப்பு நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். முதலில் இது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் விதமாகவே கண்டறியப்பட்டது. தனி நபர்களை கண்டறிந்து நிலைமைகளை கட்டுப்படுத்த எமக்கு இலகுவாக இருந்தது.

கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் அவர்கள் வசித்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில நாட்களின் பின்னர் அப்பகுதிகளில் கொரோனா தொற்றளார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

https://www.virakesari.lk/article/79017

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் மாஸ்க் தேவையில்லை - WHO

கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்கள் அல்லது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கவனித்துக் கொள்ளும் நபர்கள் தவிர மற்றவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்கள் முக கவசம் அணிவதால் பயன் கிடைக்கும் என்பதற்கான எந்த குறிப்பிடத்தக்க ஆதாரமும் இல்லை என்று, உலக சுகாதார நிறுவன செயல் இயக்குநர் மைக் ரையான் (Mike Ryan) ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதே நேரம் முக கவசங்களை தவறாகவோ, சரியான முறையிலோ பயன்படுத்தவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இப்போது சர்வதேச அளவில் முக கவசங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டிய அவர், கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான அளவில் முக கவசம் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற அச்சத்தையும் வெளியிட்டார். 

https://www.polimernews.com/dnews/105475/எல்லோருக்கும்-மாஸ்க்தேவையில்லை---WHO

  • தொடங்கியவர்

இலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 142 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79039

  • தொடங்கியவர்

thumb_31-03-2020_2.gif

  • தொடங்கியவர்

பேருவளையில் 12 பேருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 08:43 - 0      - 400
துசித குமார

பேருவளை –பன்னில கிராமத்தில் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மனைவி உள்ளிட்ட மூவர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இன்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

இதனையடுத்து, பேருவளையின் பல இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்குள் பிரவேசிக்கவும் வெளியேறவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, அக்குறணை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இன்று (31) இனங்காணப்பட்டுள்ளது.

இவற்றை நோக்கிமிடத்து, பேருவளையில் இதுவரை 12 பேரும், கண்டி-அக்குறணை பகுதியில் இதுவரை 4 பேரும் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பரவளயல-12-பரகக-கரன-தறற/175-247723

  • தொடங்கியவர்

ஸாஹிராவில் தங்கவைக்கப்பட்ட 10 பேருக்கு கொவிட்19
Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 09:54 - 0      - 69
எம்.யூ.எம். சனூன், அசார்தீன் 

புத்தளம்- ஸாஹிரா தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்ட  கொரோனா சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மத்திய நிலையத்தில தனிமை படுத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு கொவிட்; 19 பொசிட்டிவ் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் மற்றும் வைத்தியர்கள் இன்று இரவு 8.30 மணியளவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 80 க்கும் மேற்பட்டவர்களில் 20 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே, 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

புத்தளம் கடையாங்குளம் பிரதேசத்தில் ஏற்கெனவே இனங்காணப்பட்டவருடன், தற்போது புத்தளத்தில்  மொத்தமாக 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

புத்தளம் நகர மக்கள் தற்போது ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்த நகர பிதா சகல மக்களையும் சுய தனிமைக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸஹரவல-தஙகவககபபடட-10-பரகக-கவட19/175-247726

  • தொடங்கியவர்

பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்.போதனாவில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியினைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டார்.

நெடுந்தீவிற்கு வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆனைக்கோட்டைப் பகுதி யினைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சந்தேகத்துடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இருவரும் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தி யோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை நண்பகல் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

https://valampurii.lk/news/local-news/2020/பொலிஸார்-உட்பட-7-பேர்-யாழ்/

கொழும்பில் வங்கியொன்றை மூடவைத்தது கொரோனா

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வங்கியிலுள்ள ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்தவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும் என அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140279

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:17 - 0      - 95

இலங்கையில் மேலும் 1 கொரோனா வைரஸ் தொற்றாளர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், நேற்று (31) மாத்திரம் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறறளர-எணணகக-143-ஆக-அதகரபப/150-247732

  • தொடங்கியவர்

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு குடும்பம்

திருகோணமலை கண்டி வீதியில் நேற்று (31.03.2020) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 5 ஆம் கட்டைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

நேற்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கொவிட்19 நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த இளைஞனின் குடும்பம் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79065

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து இன்று காலை வெளியேறியுள்ளார்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 142 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79067

  • தொடங்கியவர்

இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றாளர்கள் குறித்த மூவரும் மருதானை,யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் 146 பேர் கொவிட் -19& தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 18 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், தற்போது 126 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு, மருத்துவ கண்காணிப்பில் 231 பேர் உள்ளனர்.

அத்தோடு, இருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79093

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.