Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடக்கரடக்கல்

Featured Replies

இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது.
 
இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு
                                    அடக்கல் என்பது “அடக்கி”
 
அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ கூறுவது.
 
எ.கா.
(*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’ என்று கூறுவது வழக்கம்.
(*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, வெளியே போனான்” அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது
(*)  அமங்கலத்தை மங்கலமாகக் கூறுதல் – இறந்துவிட்டார் என்பதை “இறைவனடி சேர்ந்தார் அல்லது “உயிர் நீத்தார்”
(*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர்
(*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான்
 
ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்(euphemism) என்பர்.
 
E.g.
(*) kick the bucket – the death of a person
(*) downsizing - firing employees
(*) special child- disabled/ learning challenged
 
இடக்கரடக்கல் தொடர்பான சுவாரசியமான எடுத்துக்காட்டுகள்/உதாரணங்களை யாழ்தள நண்பர்கள் இங்கு குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் !!
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு வர்மன்.

மங்கல வழக்கு, இடக்கரடக்கலின் ஒரு உப பிரிவா?

சில சொற்களை நாம் பொதுவாக பயன்படுத்தினாலும் அவை இடக்கரடக்கல்களே என நான் நினைக்கிறேன்.

காடாத்தல் ( காடு ஆற்றுதல்) - சாம்பல் அள்ளல்

கொல்லைக்கு போதல் (மலம் கழித்தல்)

வெளிக்கு இருத்தல் (மலம் கழித்தல்)

வீட்டுக்கு தூரம் (மாதவிடாய்)

காற்று கறுப்பு (அனுமாஸ்ய சக்தி/பேய்)

அம்மாள் வந்திருக்கா (அம்மை நோய் )

இறுதி யாத்திரை (சவ ஊர்வலம்)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மலம் என்ற சொல்லையே பகரவி, பவ்வீ என சொல்வதாக படித்த நியாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி மூன்றும் வெவ்வேறு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி மூன்றும் வெவ்வேறு

நன்றி.

குழுஉக்குறி ஏன் வேறு படுகிறது எனப் புரிகிறது.

ஆனால் இடக்கரடக்கலுக்கும் மங்கல வழக்குக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  • தொடங்கியவர்

நண்பர் வாதவூரான் குறிப்பிட்டது சரி.

இடக்கரடக்கல் (1), மங்கலம், குழூஉக்குறி மூன்றும் தகுதி வழக்கின் பிரிவுகள்.

(2) மங்கலம் - மங்கலம் அல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல்

எ.கா. தாலி பெருக்கிற்று - கணவனை இழந்த பெண்ணைக் குறிப்பிடுவது

(3) குழூஉக்குறி - ஒரு குழு அல்லது ஒரு கூட்டத்தாருக்குள் பயன்படுத்தப்படும் வழக்கு, அவர்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளப் பயன்படுத்துவது.

எ.கா. ஆடை - காரை (யானைப்பாகர் பயன்படுத்துவது)

இளைஞர்கள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வார்த்தைகள் இதற்குள் அடங்கும் என நினைக்கிறேன் :)

 

இடக்கரடக்கல், மங்கலம் - இவையிரண்டும் மிக நெருக்கமானவை. மங்கலம்/அமங்கலம் அற்று குறிப்படப்படும் சொற்கள் இடக்கரடக்கலுக்குள் அடங்கும்.

இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார்) என்பது இடக்கரடக்கல் அல்ல, அது 'மங்கலம்' என்ற பிரிவுக்குள் அடங்கும். மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

  • தொடங்கியவர்
5 hours ago, goshan_che said:

நல்ல பதிவு வர்மன்.

மங்கல வழக்கு, இடக்கரடக்கலின் ஒரு உப பிரிவா?

சில சொற்களை நாம் பொதுவாக பயன்படுத்தினாலும் அவை இடக்கரடக்கல்களே என நான் நினைக்கிறேன்.

காடாத்தல் ( காடு ஆற்றுதல்) - சாம்பல் அள்ளல்

கொல்லைக்கு போதல் (மலம் கழித்தல்)

வெளிக்கு இருத்தல் (மலம் கழித்தல்)

வீட்டுக்கு தூரம் (மாதவிடாய்)

காற்று கறுப்பு (அனுமாஸ்ய சக்தி/பேய்)

அம்மாள் வந்திருக்கா (அம்மை நோய் )

இறுதி யாத்திரை (சவ ஊர்வலம்)

 

 

 

நண்பருக்கு வணக்கம், எனது விளக்கத்தை கீழுள்ள மறுமொழிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் அளித்துள்ள எடுத்துக்காட்டுகள் அருமை, மிக்க நன்றி.

இறுதி யாத்திரை - மங்கலம் என்ற பிரிவிற்க்குள் இருக்குமென்று நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அருள்மொழிவர்மன் said:

மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

தவறை உணர்வதற்கும் கூட சான்றாண்மை வேண்டும். அது உங்களிடம் நிரம்ப உள்ளது, அருள்மொழிவர்மன் ! வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் இடக்கரடக்கல் சாதாரணமாக உண்டு. Gone to the rest room, to powder his nose போல. மங்கல வழக்கு அருகியே வரும்; இல்லை எனவே சொல்லலாம். உதாரணம் கூட Indian English ல் தான் தெரிகிறது. இருப்பினும் இடக்கரடக்கல், மங்கல வழக்கு இரண்டும் ஆங்கிலத்தில்  euphemism என்ற ஒரே வகைப்பாட்டிலேயே அமையும் என்று கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 11:33 AM, அருள்மொழிவர்மன் said:

இடக்கரடக்கல்

அருமையான பதிவு வர்மன் பலவற்றை தெரிந்து கொண்டோம்.உங்கள் தமிழ் அறிவு அபாரம் தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க ஆவல்.நன்றியுடன் உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 1:13 PM, சுப.சோமசுந்தரம் said:

தவறை உணர்வதற்கும் கூட சான்றாண்மை வேண்டும். அது உங்களிடம் நிரம்ப உள்ளது, அருள்மொழிவர்மன் ! வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் இடக்கரடக்கல் சாதாரணமாக உண்டு. Gone to the rest room, to powder his nose போல. மங்கல வழக்கு அருகியே வரும்; இல்லை எனவே சொல்லலாம். உதாரணம் கூட Indian English ல் தான் தெரிகிறது. இருப்பினும் இடக்கரடக்கல், மங்கல வழக்கு இரண்டும் ஆங்கிலத்தில்  euphemism என்ற ஒரே வகைப்பாட்டிலேயே அமையும் என்று கேள்வி.

மேலே சொன்ன kicked the bucket, passed away, met his maker, put to sleep  (சாவு) மற்றும் last rites (சாவுக் கிரியை) இப்படி சில உள்ளனவே ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மேலே சொன்ன kicked the bucket, passed away, met his maker, put to sleep  (சாவு) மற்றும் last rites (சாவுக் கிரியை) இப்படி சில உள்ளனவே ஐயா?

உண்மை. இவற்றில் சில Indian English என்றே நினைத்துக் கொண்டேன். நன்றி திரு. கோஷன் சே !

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுவாரசியமான கருத்து பதிவுகள்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.