Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்

Featured Replies

மருத்துவர் சத்தியமூர்த்தி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நடமுறைகளை மக்கள் கைவிடாது தொடர்ந்து பின்பற்றுமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போதும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான இடங்களில் இருந்தவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு கொண்டுவரப்படுகின்றார்கள்.

அவர்களிடம் சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஊடரங்கு தளர்த்தப்பட்டதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை. எனவே மிக கவனமாக இருக்க வேண்டும். வைத்தியசாலை உழியர்களும், பொதுமக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

கொரோனா நோய் தொற்று தொடர்பான அடிப்படையான வேண்டுகைகள், நடவடிக்கைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும்.

தற்போது ஊடரங்கு சட்டம் அமுலில் இல்லை. இதனால் ஓர் இடத்தில் இருப்பவர்கள் இன்னுமொரு இடத்திற்கு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளது.

ஆகவே தொற்றுக்குள்ளானவர் இப்பகுதிக்கு வந்தால் அவரையும், அவருடன் தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டுபிடிப்பதற்காகவே பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையின் அன்றாட அனைத்து சேவைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக சத்திரசிகிச்சைகளும் நடாத்தப்படுகின்றன. இதுதவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் பல்வேறு மருத்துவ கிளினிக் போன்றவையும் நடக்கின்றன.

வைத்தியசாலைக்கு வருபவர்களின் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும், தொற்றாளர்கள் மற்றும் தொற்று அபாய பகுதியுடன் தொடர்புள்ளதா என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இத்தகவல்களைக் கொண்டு இங்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வைத்தியசாலை பணியாளர்களுக்கு கொரோனாவில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டு, நோயாளர்களை அணுகுவது என்பது தொடர்பாக பயிற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகின்றோம் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/142976

  • Replies 134
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வட மாகாணத்தில் போக்குவரத்து சேவை தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பொதுமக்களுக்கான அரச, தனியார் பேருந்து சேவைகள் வடமாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பான அவதானிப்பை அடுத்தே தீர்மானிக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன் வட மாகாணத்தில் ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துகளை இரண்டு வாரங்களுக்கு பின்னரே மீள இயக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பணிப்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் திணைக்களங்களின் தற்போதைய நிலைமைகளை வெளிப்படுத்தியதோடு, தமது திணைக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பத்தில் உள்ள சவால்களையும் முன்வைத்தனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு அமுலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தொழிலதிபர் நோயல் செல்வநாயகம் வழங்கிய 2 மில்லியன் ரூபா காசோலையை கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதம செயலாளரிடத்தில் ஆளுநர் கையளித்தார்.

அதனையடுத்து, வடமாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் வளர்ச்சி தொடர்பான தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார். மாகாணத்தின் திணைக்களங்களில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பில் அந்தந்த திணைக்களத்தின் பணிப்பாளர்கள் அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மாகாணத்தின் அனைத்து திணைக்களங்களிலும் சீரான தன்மையை பின்பற்றுமாறு பரிந்துரைப்பதோடு வளங்கள் மற்றும் வசதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு பதிலாக, தற்போது காணப்படுகின்ற வளங்களையும், வசதிகளையும் வினைதிறனான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் நிறைவுக்கு வந்ததையடுத்த இரண்டு மாதங்களில் ஏற்படவுள்ள உண்மையான சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலான முகாமைத்துவ திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முகாமைத்துவ திட்டங்களை தயாரிப்பதற்கும் தீர்வுகளை காணப்பதற்குமான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். திணைக்களங்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான குழப்பங்களுமின்றி செயற்படுவதற்குரிய பதிவுகளையும், முறைப்படியான பூரணப்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தின் வளர்ச்சியானது அதிகளவில் கல்வியிலேயே தங்கியுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆகவே சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அமைவாக கல்வித்தரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் மாகாணத்தின் கல்வி வளங்களுக்கான தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

மாகாணத்தில் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களை முழுமையாக அளவீட்டுக்கு உட்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு உரிய அலகுகள் ஊடாக விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் மாகாணத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் அமைச்சுக்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகளை முறையாக அதிகாரிகள் பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143193

On 12/5/2020 at 01:53, Rajesh said:

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழில் மீண்டும் கொரோனா என யாரும் பீதியடையத் தேவையில்லை- பணிப்பாளர் சத்தியமூர்த்தி

In இலங்கை     May 15, 2020 8:11 am GMT     0 Comments     1968     by : Litharsan

யாழில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவரும் பீதியடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டதாக (Positive) பொசிற்றிவ் என அறிக்கை வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், “இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டது (Positive) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். அவர்கள் ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளோம். ஐந்து பேருக்கும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எனவே, இதுதொடர்பாக யாழ்ப்பாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என அறிக்கை வந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/யாழில்-மீண்டும்-கொரோனோ-எ/

  • தொடங்கியவர்

சிகிச்சை முடிந்து வந்த அரியாலைவாசிகளுக்கு கொரோனா தொற்று -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்

சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலை வாசிகளிடம் கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,

இன்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 6 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள். இன்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர். ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143253?ref=rightsidebar

  • தொடங்கியவர்

யாழ் மக்களால் வரவிருக்கும் பெரும் ஆபத்து! மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கும் போது, பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்து கொள்வது தான் இதற்கான தீர்வாக அமையும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வுகானில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து அந்நாடு முழுமையாக மீண்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறது.

கொரோனாவை இலகுவாக வெற்றி கொண்டதன் பின்னணியில், சமூக இடைவெளியை தொடர்ச்சியாக பொது மக்கள் பேணி வந்ததாலேயே மிக இலகுவாக தாம் அதிலிருந்து மீண்டதாக சீனா அறிவித்திருக்கிறது.

இதனைப் பின்பற்றி இலங்கையில் தொடர்ச்சியாக போடப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஏதுவான காரணிகள் ஏற்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதனை மையமாக வைத்தும், நாட்டின் பொருளாதார நெருக்கடியினை காரணமாகக் கொண்டும், அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தியது.

ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசாங்கமும் பொலிஸாரும் விதித்திருந்தனர். எனினும், தற்போது பொது மக்கள் கொரோனாவின் பேராபத்தை உணராது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களின் செயல்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட பொலிஸார் பொது மக்கள் தொடர்ச்சியா இவ்வாறு நடந்து கொண்டால் மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதுடன், பொது மக்களுக்காக பொதுப் போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் மக்களும், சந்தைகளுக்குச் செல்பவர்களும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் கொரோனாவை மறந்து செயல்படுகின்றார்கள் என்று கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடருமாயின் கடுமையான சட்டங்களை மீண்டும் இங்கு அமுல்படுத்த நேரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவதான் மூலம் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையினை வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே பொது மக்கள் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143329

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்

In இலங்கை     May 18, 2020 10:59 am GMT     0 Comments     1336     by : Jeyachandran Vithushan

யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே குறிப்பாக உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதில் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் உயிரை காப்பாற்ற கூட முடியாமல் வைத்தியர்களுக்கு போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. எங்கள் பகுதியில் கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள்.

எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார்சைக்கிளினை வாங்கி வழங்கும் பெற்றோர்களும் இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள். குறிப்பாக அவர்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செலுத்துவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது.

ஆகவே அவர்கள் வேகத்தினை தனித்து மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தற்பொழுது பாவனையில் இருக்கின்ற மோட்டார்சைக்கிள்கள் மிக வேகத்தில் இலக்கினை அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாவனைக்கு வருகின்ற மோட்டார் சைக்கிள் ஒவ்வொன்றும் அதன் வேகத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் 100 கிலோமீட்டர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வாறுஅமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இதன் ஆபத்து என்று தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு குடும்பப் பொறுப்பு உள்ளது இவர்களுடைய எதிர்காலம் எங்கே செல்கின்றது.

எனவே பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கொண்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை மேற்கொள்ள மேன்டும்” என வைத்திய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-ஊரடங்கு-தளர்த்தப-2/

  • தொடங்கியவர்

பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாகாணத்தில் நாளையதினம் தொடங்கும் சேவை

வடக்கு மாகாணத்தில் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த நிலையில் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக குறித்த பயண சேவைகள் யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143671

  • தொடங்கியவர்

வடக்கில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவை

யாழில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக குறித்த பயண சேவைகள்யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதாகவும் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து குறித்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-நாளை-முதல்-மட்ட/

  • தொடங்கியவர்

வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் யாழிலிருந்து ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர் சாலையிலிருந்து புறப்படும் பேருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்று அதிகாலை 5.45 மணிக்கு நீர்கொழும்பு வரையான சேவையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நீர்கொழும்பு வரை அனுமதிக்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

அத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு - அக்கரைப்பற்று மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாளை பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144010

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் என்றால் என்ன? யாழ்.மக்களின் பதில்

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதையும் புரட்டிப்போட்டுள்ளது.

இந்த வைரஸ் எங்கிருந்தது வந்தது? கொரோனா வைரஸ் என்றால் என்ன? என்ற கேள்விக்கு யாழ். மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவற்றை கீழே காணொளியில் காணலாம்...

https://www.ibctamil.com/srilanka/80/143999

tamil21.05-corona-copy.jpg

 

tamil24.04-corona-copy.jpg

 

tamil-26.05corona-copy.jpg

65 நாட்களின் பின்னர் குணமடைந்த யாழின் முதலாவது கொரோனா நோயாளியின் நேரடி ரிப்போா்ட்

யாழில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்றைய தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவருடன், எமது ஊடகம் நேர்காணல் செய்திருந்தது.

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

https://www.ibctamil.com/srilanka/80/144138?ref=imp-news

13 minutes ago, Rajesh said:

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

ஒரு நேர்காணலை எவ்வளவு மோசமாக செய்ய முடியும், எவ்வளவு மோசமாக கேள்விகளை கேட்க முடியும் என்டதுக்கு இந்த IBC ஊடகவியலாளர் நல்ல உதாரணம்.

ஒரு நேர்காணலில நல்ல பயனுள்ள விஷயங்களை எடுக்க முடியாத ஊடகவியாளராகவும் இவர் தன்னை வெளிப்படுத்திருக்கிறார். 

tamil-27.05corona-copy.jpg

tamil-28.05corona-copy.jpg

  • தொடங்கியவர்

கொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு

jaffna-1-3.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக, யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனால் எமது சபையின் எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்படடன. இதன் காரணமாக எமக்கு இரண்டு மாதங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வருமானம் இல்லாத நிலையிலும் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா தொற்றின் போது கிருமி தொற்று நீக்கல் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுக்க 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எமக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருந்த இருமாத முடக்கநிலையில் மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நிதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எமது வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் எதிர்பாக்கப்படாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உரிமம் மாற்றத்தினால் கிடைக்கும் 130 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வரையான வருமானம் இழக்கப்படலாம். ஏனெனில் இம்முறை நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.இவ்வாறு வேறு வருமானங்களான வரிகள், சந்தை குத்தகை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், வர்த்தகர்களுக்கு சில வரி விலக்குகளை சில நாட்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் தற்போது கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தனியாரின் உழவு இயந்திரங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். கழிவகற்றல் செயற்பாட்டிற்கு மாநகர சபையின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் நாம் திண்ம கழிவகற்றலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மலையின் காரணமாக டெங்கின் தாக்கம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர எல்லைக்குள் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

எனவே நாம் அது தொடர்பிலும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். சில பகுதிகளுக்கு இப்போதே புகையூட்டிடல்கள் இடம்பெறுகின்றன” என  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-எதிரொலி-யாழ்-மாநக/

tamil-30.05corona-copy-1448x2048.jpg

On 18/3/2020 at 05:20, Vankalayan said:

மற்றைய நாடுகளைவிட இலங்கை அரசு சிறப்பாக இதை கையல்கின்றது

தற்பொழுதும் இலங்கை சிறப்பாக கையாள்கின்றது என எண்ணுகிறீர்களா? 

tamil31.05-corona-copy.jpg

 

tamil01.06-corona-copy-1448x2048.jpg

tamil-02.06corona-copy.jpg

  • தொடங்கியவர்

tamil-03.06corona-copy-1-1448x2048.jpg

tamil04.06-corona-copy.jpg

tamil-07.06corona-copy-1-1448x2048.jpg

இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி- யாழில்13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

In இலங்கை     June 9, 2020 11:22 am GMT     0 Comments     1211     by : Yuganthini

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த இந்திய வியாபாரிக்கு,  கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல், இன்றே உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இந்திய-வியாபாரிக்கு-கொரோ/

  • 2 weeks later...

tamil-08.06corona-copy.jpg

tamil09.06-corona-copy.jpg

tamil-10.06corona-copy-1448x2048.jpg

tamil-11.06corona-copy-1-1448x2048.jpg

tamil-13.06-corona-copy-1448x2048.jpg

tamil-14.06corona-copy-1448x2048.jpg

tamil-15.06corona-copy-1448x2048.jpg

tamil16.06-corona-copy-1448x2048.jpg

tamil7.06-corona-copy-1448x2048.jpg

tamil-18.06corona-copy-1448x2048.jpg

tamil-19.06corona-copy-1448x2048.jpg

 

tamil20.06-corona-copy-1448x2048.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.