Jump to content

அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி


Recommended Posts

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் வழங்கப்படும். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மானியக் கடன் உள்ளிட்ட வகைகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் வழங்கப்படும்.

https://www.polimernews.com/dnews/104911/அமெரிக்காவில்வீழ்ச்சியடைந்தபொருளாதாரத்தைச்-சீரமைக்க-2லட்சம்-கோடி-டாலர்-நிதியுதவி

 

 

Link to comment
Share on other sites

கோவிட் 19 ஆல் உருவாகியுள்ள அசாதரண சூழ்நிலை ஒரு பொருளாதார யுத்தமும் கூட. 

இலங்கை உட்பட பலா நாடுகளில் விலை 20-30% குறைந்துள்ள  உள்ள தேசிய வளத்துடன் சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்களின் பங்குகளை சீன அரசு வேண்டியவண்ணம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

கோவிட் 19 ஆல் உருவாகியுள்ள அசாதரண சூழ்நிலை ஒரு பொருளாதார யுத்தமும் கூட. 

இலங்கை உட்பட பலா நாடுகளில் விலை 20-30% குறைந்துள்ள  உள்ள தேசிய வளத்துடன் சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்களின் பங்குகளை சீன அரசு வேண்டியவண்ணம் உள்ளது. 

தவிச்ச  முயல் அடிப்பது போல் சீனர்கள்  பங்குகளை வாங்கி குவிப்பதுதான் எல்லா நாடுகளுக்கும் பிரசனையாகி விட்டது .

Link to comment
Share on other sites

ஐரோப்பாவிலும் பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறத்தாள அரைவாசியாகச் சரிந்துள்ளது. பணம் உள்ளவர்கள் இப்போது வாங்கிக் கொண்டால் சில மாதங்களில் நிலமை ஓரளவு சரியாகினாலும் கொள்ளை இலாபம் ஈட்டலாம். 

Aribus பங்குகள் 123 ஈரோவிலிருந்து ஒரு மாதத்தில் 55 ஈரோவாக வீழ்ந்துள்ளது.

aribus.png

Link to comment
Share on other sites

Negative rates come to the US: 1-month and 3-month Treasury bill yields are now negative

The coronavirus crisis has brought another first to U.S. financial markets — negative yields on government debt.

Yields on both the one-month and three-month Treasury bills dipped below zero Wednesday, a week and a half after the Federal Reserve cuts its benchmark rate to near-zero and as investors have flocked to the safety of fixed income amid general market turmoil.

The U.S. now joins large swaths of Europe and Japan that also have negative-yielding debt.

In Germany, the move was even more prevalent, with all government fixed income instruments except the 30-year bond carrying rates below zero.

https://www.cnbc.com/2020/03/25/negative-rates-come-to-the-us-1-month-and-3-month-treasury-bill-yields-are-now-negative.html

Link to comment
Share on other sites

அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவு

கடந்த மூன்று நாட்களில் பெரிய அளவில் ஏற்றங்களை சந்தித்த அமெரிக்க பங்குச் சந்தைகள், இன்று மீண்டும் சரிவை எதிர்கொண்டுள்ளன.

இரண்டு மில்லியன் டாலர் அளவு சலுகைகளை அமெரிக்க அரசு அறிவித்த பின்னர் பங்குச்சந்தைகள் அங்கு ஏற்றம் கண்டன.

எனினும் உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்பு கொண்ட நாடக அமெரிக்கா உருவெடுத்தபின் சரிவு மீண்டும் தொடங்கியது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.