Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு - இ.குகநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு – கொரோனா புலப்படுத்தும் செய்தி.! இ.குகநாதன்.

learn-800x450.png

கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களுடன் இன்று உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாக செயற்பட்டு நடைமுறைப்படுத்தும் இந்த சமகால சூழலில் உள்ளூர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பேசு பொருள்,  பொதுவெளி உரையாடலில் செயல்முறை ரீதியாக சகல மட்டங்களிலும் மீண்டும் இதனை கொண்டு வருதலென்பது கொரானா கற்றுத்தந்த பாடமாகும்.

நம் முன்னோர்கள் எதிர்கால தேவை கருதி சமூக நன்மைக்காக உருவாக்கிய உள்ளூர் விவசாயம் பொருளாதாரம்,வைத்தியம், கல்வி அனைத்தும் கைத்தவறி போனவையாக நகரமயமாக்கத்தின் ஆதிக்கத்தில் உள்ளூர் அறிவினை அடக்கியாளும் முனைப்புக்கள் மேற்கொண்டு இயந்திர மயமாக்கப்பட்ட முதலாளித்துவ சிந்தனைகளும் கொள்கைகளும் பரப்பப்பட்டு மக்களை நுகர்வுச் சமூகமாக மாற்றி அனைத்துக்கும் வல்லரசுகளை நோக்கி கையேந்தும் நிலைமைக்கு ஆக்கி விட்டது.

ஒரு வல்லரசு நாட்டில் ஏற்பட்ட கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரானது  உலகில் 95 வீதத்திற்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவுகின்றது எனின் அவ்வல்லரசு நாடு எவ்வாறு உலக நாடுகளை தனது காலனித்துவ ஆகிக்கத்தின் கீழ் வர்த்தக தொடர்பினை கொண்டிருக்கின்றது அல்லது அந்நாட்டில் தங்கியதாய் ஏனைய நாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது.

அத்துடன் மனிதர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் உலகம் முழுவதும் பிரயாணங்களை மேற்கொண்டு வலைப்பின்னலாய் அலைகின்றனர். இவை அவசியமானதா இதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டியும் உள்ளது.

இந்நிலையில் சுய சார்பான உள்ளூர் வாழ்வியலை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனிதர்களுக்கு மருத்துவங்களாகவும் , உணவாகவும் , கிருமி எதிர்ப்பு சக்தியாகவும் காணப்பட்ட தாவரங்களையும் மூலிகைகளையும் அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளையும் , பாலங்களும் வீடுகளும், பெரும் கட்டிடங்களும் கட்டிய சூழல் நிலையில் நம் முன்னோர் வீட்டின் வேலிகளாக உருவாக்கிய ஆமணக்கு கிளுவை பூவரசை போன்றனவும் வீட்டின் வளவினுள் நாட்டிய வேப்பை,காட்டுத்தேங்காய் ,முதிரை, இலுப்பை திருக்கொன்றை அது போல காஞ்சிரை அத்தி வில்வை போன்றவையெல்லாம் நோய் எதிர்ப்பு தாவரங்களாகவும் மருத்துவ குணம் உள்ளவையாகவும் பார்க்கப்படுகின்றது.

ஆனால் இன்றைய இளம் சமூகத்தை இவ்வாறான தாவரங்களை அறியாதவர்களாக ஆக்கியிருப்பதென்பது கவனித்தலுக்குரியவை.

இவையோடு இணைத்து முடிதும்பை,மிளகு துளசி, முடக்கத்தான் வாதமடங்கிசீதேவி, செங்களனீர் தீக்குறிஞ்சி,பவளமல்லிகை கொடிக்கள்ளி,கற்பூரவள்ளி கீழ்காய் நெல்லி, வேலிப்பருத்தி குப்பை மேனி, கற்றாளை ஆடாதோடை , முடக்கத்தான் நாயுருவி, நன்னாரி , ஊமத்தை போன்ற பல மூலிகைத் தாவரங்களையும் குறிப்பிடலாம்.

ஊரடங்கு சட்ட முறை அனைவரையும் வீடுகளுக்குள் முடக்கி இருக்கின்ற நிலையில் அது தளர்த்தப்படும் குறுகிய கால நேரத்தில் பொருட்களுக்காக அடித்து பதைத்து முண்டியடித்து அரசினால் விடுக்கப்படும் நோய் பரவும் விதிமுறையை மறந்து நுகர்வாளர்களாய் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை உருவாகின்றது.

தொடர்ச்சியாக இந்நிலை இருக்குமெனின் இறக்குமதி பொருட்களுக்கான நிலைமை என்ன என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. இந்த இடத்தில் வீடுகளில் செய்யும் விவசாயம் பற்றி சிந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. வீடுகளிலே வளர்க்கப்பட்ட தூதுவிளா , முருங்கை, பொன்னாங்கண்னி, வல்லாரை, முல்லை, முசுற்றை கீரை , குறிஞ்சா அகத்தி வாதமடங்கி என நீண்டு செல்லும் இலைக்கறி வகைகள் நினைவுக்கு வருகின்றன. எங்கோ உருவான கொரானா இது பற்றி சிந்திக்க வைக்கும் அளவிற்கு எமது உள்ளூர் அறிவை தொலைத்தவர்களாக மாறிய அபத்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமெனின் கொவிட் மனிதர்களை பாதிக்காது என வைத்தியர்கள் கூறும் நிலையில் நோய் எதிர்ப்பு உள்ளூர் உணவு முறைகளில் உள்ளது என்ற தீர்மானத்தில் பெருங்காயம்,  மஞ்சள், பூண்டு, இஞ்சி கொத்தமல்லி போன்றவற்றிக்கு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி வரும் வரை அதனை எதிர்பார்த்தவர்களாய் நிற்கின்றமை அவதானித்தலுக்குரியவை.

இவை உணவுகளில் மட்டுமன்றி தாவரங்கள் வாழ்வியலில் நாளந்தம் செய்யும் வேலைகள் (துலாத்தில் இருந்து தண்ணி அள்ளுதல், உரலில் நெல்லுக்குற்றுதல்…) சடங்குகள் கலைசார் நிகழ்வுகள் என பலவற்றில் இதன் கூறுகளை கண்டுகொள்ள முடியும்.

இந்நிலையில் ஏலவே உள்ளூர் அறிவியல் சார்ந்து அதன் நடைமுறைகளை தற்காலத்தில் பலர் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை நவீன சிந்தனையில் மேற்கட்டுமானம் கீழ்கட்டுமானம் என்ற கருத்தியலில் அவை சமகாலத்திற்கு ஒவ்வானவை அல்ல என்ற புரிதலில் முறையற்ற விமர்சனங்களை செய்து புறக்கணித்த நிலையும் அண்மைக்காலமாக பல பொது நல கொள்கையாளர்களிடம் காணப்பட்டன. இதனை இவ்விடத்தில் நினைவுபடுத்தல் அவசியம்.

உள்ளூர் அறிவு என்பது உள்ளூர்களுக்கு உரியவை அதற்குள் மட்டும் முடங்கி இருப்பது என்றல்ல இவை உலகம் முழுவதும் வியாபித்து காணப்படுகின்றது. நாங்களும் அனுபவத்து பிறருக்கும் கொடுத்தல். நவீன சிந்தனை கொள்கைகள் உள்ளூர் அறிவை விஞ்ஞான பூர்வமற்றது பாமரத்தன்மையானது என எதுவித ஆய்வுகளும்  புரிதலுகளுமின்றி நிராகரித்தல் என்பது நகைப்புக்குரியவை.

இதே வேளை உள்ளூர் அறிவையும் பொருளாதார முறைமைகளையும் பேணி பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் அரச கொள்கை என்ன ? என்ற கேள்வியும் உருவாகின்றது. திறந்த பொருளாதார கொள்கைகள் உள்ளூர் உற்பத்தி பொருளாதார முறைமையை அழித்த விதம் சார்ந்தும் உள்ளார்ந்து ஆராய வேண்டிய தேவையையும் காலம் உணர்த்தியுள்ளது.

உள்ளூர் அறிவை பாதுகாத்தலுக்காக அரசிடம் சமூக உரிமைகள் வழமைச் சட்டம் உள்ளது என்று சிலர் கூறுகின்ற போதும் எழுதப்படாத வழமைச்சட்டத்தால் அதிக சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக செயற்பட முடிவதில்லை பாரம்பரிய அறிவு பொது மக்கள் சொத்து.

அதை பயன்படுத்த பாதுகாக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்ற கருத்தால் அவை அதிகம் முடக்கப்படுகின்றது. இதனை காரணம் காட்டி அரசு விடுபட்டுக் கொள்ள முடியாது. ஆகவே சமூக அறிவு சொத்து உரிமைகள் சமூகத்தை அடித்தளமாக கொண்ட அறிவுச் சொத்து உரிமை பாரம்பரிய வள உரிமைகள் இயற்றப்பட்டு வலுவான இயங்கியல் தன்மையுடன் அவை நடை முறைப்படுத்த வேண்டும்.

உள்ளூர் அறிவு சார்ந்து வெகுஐன மயப்படுத்தலில் அரச அரசசார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளுதல் தற்கால தேவையாகவும் உள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இம்முயற்சியை முன்னெடுத்தல் அவசியம்.

அதாவது இவ்விடயங்களை மாணவர்களுக்கான கற்றல் மையங்களாக மாற்றி அது சார்ந்தும் செயற்படுதல் என்பதும் அவசியம். மாறாக உள்ளூர் அறிவின் புலமையாளர்களான மருத்துவச்சிகள் மற்றும் அண்ணாவிமார்களை மாணவர்களுக்கு பல்கலைக்கழங்களுக்கு வருவித்து கற்பித்தல் செய்தலுக்கும் அவர்களின் அனுபவங்களை பகிர்தலுக்கு இடமளிக்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவச்சிகள் கற்பிப்பதா? என்ற விதண்டாவாத விமர்சனங்களை செய்யும் கல்வியலாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பாமரர் படிக்காதவர்கள் என்று சொல்லும் மேற்கூறியோரிடத்தில் எவ்வாறு இவ்வறிவு வருகிறது. எனவே பாமரம் படிப்பு என்பது எது? இதன் அளவுகோல் எதனால் நிர்ணயிக்கப்படுகின்றது என்றெல்லாம் ஆராயவேண்டியுள்ளது.

எதிர்வினைகளின்று ஒருமித்து சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய தேவையும் ஏற்படுகின்றன. ஆகவே ஒட்டுமொத்த உலகம் எதிர் கொண்டுள்ள பாரிய சவாலான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் உள்ளூர் அறிவை பாதுகாத்தல் நடைமுறைப்படுத்தல் நம் அனைவரின் கடமையாகும்.

பட்டறிவு இதனை உணர்த்தியுள்ளது. இந்நிலை உணர்ந்தவர்களாய் தற்போது வீடுகளுக்குள் முடங்கி ஓய்வு கிடைத்துள்ள சூழலில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற அமர்ந்து பேசுவதற்கும் உள்ளூர் பயிர்கள் தாவரங்களை நட்டு அதனை பராமரிப்பதற்கான நேரத்தை ஒதுக்குதல் போன்றனவற்றை செய்யுமிடத்து எதிர்கால சவால்களில் இருந்து விடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை உருவாக்கியும் கொவிட் வைரஸ் பரவலுக்கு அரசு செய்யும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முடியும்.

உள்ளூர் அறிவென்பது முன்னோர்கள் சமூகத்தேவை கருதி நம்மிடம் கையளித்தவை இதனை நாம் மட்டும் அனுபவித்தலன்றி அடுத்தடுத்த சமூகத்தின் தலைமுறையினருக்கு கையளித்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இ.குகநாதன்

http://globaltamilnews.net/2020/140014/

13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆனால் இன்றைய இளம் சமூகத்தை இவ்வாறான தாவரங்களை அறியாதவர்களாக ஆக்கியிருப்பதென்பது கவனித்தலுக்குரியவை.

நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

பழசை மறந்தவர்கள் திரும்பி பார்க்க வேண்டிய நேரம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ....!  🤔

Edited by suvy
எ .பிழை.....!

  • 2 weeks later...

I am very much interested to invest in this in Jaffna. I am not sure whether Kuganathan will support

இதில் முதலீடு செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். குகநாதன் பண்ணையை வளர்க்க உதவ முடியுமா?

5 hours ago, AG Shankar said:

I am very much interested to invest in this in Jaffna. I am not sure whether Kuganathan will support

இதில் முதலீடு செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். குகநாதன் பண்ணையை வளர்க்க உதவ முடியுமா?

எனக்கு குகநாதன் பற்றி தெரியாது. ஆனால்,  Jekhan Aruliah 

சிறுவயதில் இங்கிலாந்து வந்து மீண்டும் யாழில் பல பண்ணை உட்பட்ட செயற்பாட்டுகளை முன்னெடுக்கின்றார். வித்தியாசமான சிந்தனையாளர். முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள், பல முதலீடு வழிமுறைகளை சொல்லித்தருவார். 

குறிப்பு : பொறுப்புத்துறப்பு. நானோ இந்த யாழ் களமோ உங்கள் முதலீட்டிற்கு பொறுப்பு அல்ல. நம்ப நட .. நம்பி நடவாதே 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2020 at 13:45, AG Shankar said:

இதில் முதலீடு செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். குகநாதன் பண்ணையை வளர்க்க உதவ முடியுமா?

large.75143058-7772-4304-873C-9F87795965BC.jpeg.1a52a53204e9a144b30a5a04e959f07f.jpeg

இந்த வீடியோவை பார்த்தால், சில அடிப்படை தரவுகளை உங்களுக்கு தரலாம்..யாழ் இணையத்தின்  சுற்றமும் சூழலும் என்ற பகுதியில் இந்த வீடியோ உள்ளது. இந்த தமிழ் பொறியிலாளரின் பெயர்: மாவை நித்தியாணந்தன். திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை. மாவிட்டபுரம். இவை தவர மேலதிகவிபரங்கள் தெரியவில்லை. 

குறிப்பு: பொறுப்புதுறப்பு: உங்களது முதலீட்டிற்கு நானோ இந்த யாழ்களமோ பொறுப்பு அல்ல.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.