Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு!

 

 

 

     by : Litharsan

Canada-Coronavirus-Pandemic.jpg

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 903 ஆகப் பதிவாகியுள்ளன.

இதனைவிட, 8 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 17 ஆயிரத்து 368 பேர் ஓரளவு வைரஸால் பாதிக்கப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கனடவில் இதுவரை, 4 இலட்சத்து 54 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 14 ஆயிரத்து 248 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 7 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அல்பேர்டாவில் ஆயிரத்து 870 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 517 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-கடந்த-24-மணித்திய/

3 minutes ago, nunavilan said:

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது.

அதிகம் முதியோர் காப்பக இல்லங்களில். பல காரணங்கள் உண்டு. 

வைத்தியசாலைகளில் எதிர்பார்த்த அளவிற்கு நோயாளர்கள் வரவில்லை என்பது நல்ல செய்தி.  
உடனடியாக வைத்தியசாலைகளில் உள்ள உதவியாளர்களை இந்த முதியோர் காப்பக இல்லங்களுக்கு அனுப்பி உதவ உள்ளார்கள். 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

கனடாவில் ஸ்காபரோவில் COVID-19 நோய்த் தொற்றால் தமிழ் முதிய கணவரும் மனைவியும் பலி!

ஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர்.

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர்.

நன்றி றெறன்டா தமிழ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

கனடாவில் ஸ்காபரோவில் COVID-19 நோய்த் தொற்றால் தமிழ் முதிய கணவரும் மனைவியும் பலி!

ஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர்.

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர்.

நன்றி றெறன்டா தமிழ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா?...இந்த கொரோனா பரவ தொடங்கின பிறகாவது பிள்ளைகள் இவர்களை தங்களோடு கூட்டி வந்து வைத்திருக்கலாம்....ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Three daughters left without parents after Ontario couple dies of COVID-19

safe_image.php?d=AQDRHHS8_xd6NPXV&w=540&h=282&url=https%3A%2F%2Fwww.ctvnews.ca%2Fpolopoly_fs%2F1.4899337.1587065650%21%2FhttpImage%2Fimage.jpg_gen%2Fderivatives%2Flandscape_620%2Fimage.jpg&cfs=1&upscale=1&fallback=news_d_placeholder_publisher&_nc_hash=AQDU1uTuCkYncWvI

https://toronto.ctvnews.ca/mobile/three-daughters-left-without-parents-after-ontario-couple-dies-of-covid-19-1.4899334

A Brampton, Ont. couple who tested positive for COVID-19 have died days apart, leaving three daughters without parents.

A family member told CTV News Toronto that 61-year-old Nagarajah Thesingarajah died in hospital on April 15, just two days after his 56-year-old wife, Pushparani Nagarajah, passed away.

According to family, their three daughters, aged 29, 22, and 19, also tested positive for the virus and remain in isolation in their Brampton home.

Thesingurajah also worked part-time delivering Tamil newspaper "Uthayan" to stores and temples in Brampton, Mississauga and Etobicoke. The newspaper's publisher and editor, Nagamany Logendralingam, described him as a "perfect gentleman" who was always "very keen."

He says he last delivered his paper on March 27, days before he fell ill.

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது...... எல்லாரும் தம்பதிகளாக இறப்பதை  பார்க்க, பெரிய சோகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது மரணங்களை நினைக்க மிகவும் வேதனையாக இருக்கின்றது.......ஆழ்ந்த இரங்கல்கள்.....!  

On 16/4/2020 at 08:54, ampanai said:

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர்.

ஜகவல்லால் நேரு உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

1980 களின் இறுதியில், கனடா வந்த நேரு, தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச் (French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.

https://www.newlanka.lk/news/2294

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.