Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

 
 

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

துப்பாக்கிதாரி கப்றியேல் வோற்ட்மான்
துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான்

துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார்.

23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்ட அதிகாரியாவார். இவருடன் பணியாற்றிய இன்னுமொரு அதிகாரி இச் சம்பவத்தின்போது காயப்பட்டுள்ளார்.

இக் கொலைகள் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு, நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் சுயாதீன காவற்துறைக் கண்காணிப்பு அலுவலகத்திடம் (Serious Incident Response Team (SIRT)) கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது காவற்துறையினர் சம்பந்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களிலேயே சுயாதீன கண்காணிப்பு அலுவலகம் தலையிடுவது வழக்கம்.

 
 

இச் சம்பவம் Hwy 102 / Portapique Rd. அருகே நடைபெற்றிருக்கிறது

இச் சம்பவம் எழுந்தமானமாக நடைபெற்ற ஒன்றல்ல எனவும், துப்பாக்கிதாரி ஆர்.சீ.எம்.பீ. பாவிக்கும் வாகனத்தைப்போல ‘உருமாற்றிய’ வாகனமொன்றில், அக் காவற்துறைக்குரிய சீருடை போன்று ஒன்றை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சனி மாலை 11 மணிபோல் இச் சம்பவம் நடைபெற்றதாகச் சாட்சிகள் மூலம் தெரியவருகிறது. இன்று (ஞாயிறு) காலை இச் சம்பவம் பற்றிய தகவல்கள் காவற்துறையினரால் வெளியிடப்பட்டிருந்தன. (சீ.பி.சீ செய்திகள்)

https://marumoli.com/நோவா-ஸ்கோஷியாவில்-துப்பா/?fbclid=IwAR27ufhWcMus4FERaIm8B6_eU-q_N55NeaeQ6oBxF5jclCytFRIMfST8GSc

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை உயர்வு; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ்

 

கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ் அதிகாரி
பதிவு: ஏப்ரல் 20,  2020 08:22 AM
என்பீல்டு
 
கனடா நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.  போலீஸ் போல் உடையணிந்து  வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார்
 
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை போலீசார் சுட்டு கொன்றனர். தற்போது  இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்து உள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லாக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த துப்பாக்கி சூட்டில்  23 வயதான பெண் காவலர் ஹெய்தி ஸ்டீவன்சன் என்ற பெண் போலீசும் பலியாகி உள்ளார்.ஹெய்டி அங்கு வந்துள்ளார்.
 
மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல் நடத்தியவரை  எதிர்த்து அவர் போராடி உள்ளார். அப்போது தான் ஹெய்டி  சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
 
இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹெய்டியின் மரணம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பலரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த அவர் கனடாவின் ரியல் ஹிரோ என பலரும் சமூகவலைதளங்களில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பயங்கரம்: மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு - 16 பேர் பலி- இதுவரை வரலாற்றில் இல்லாத தாக்குதல்

 

கனடா நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 16 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 6க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.

1587350790298.jpg

போலீசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தீயும் வைத்துள்ளார். இந்தத் தாக்குதல் அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாதது. போர்ட்டாபிக் என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடலக்ள் சிதறிக் கிடந்தன. இந்த ஊர் ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் உள்ளது.

மற்ற இடங்களிலும் உடல்கள் கிடந்தன. முதலில் தன் விரோதியை இலக்கு வைத்து பிறகு கண்மூடித்தனமாக சுட்டிருக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக போலீஸார் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கும் விதமாக கதவுகளைப் பூட்டிக் கொண்டு இருக்குமாறு எச்சரித்தனர். இப்பகுதியில் பல வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

‘அர்த்தமற்ற வன்முறை’

துப்பாக்கி சூடு நடத்தி தானும் மாண்ட அந்த நபர் கேப்ரியல் வார்ட்மேன், இவருக்கு வயது 51. இவர் பகுதி நேரமாக போர்டபிக்கில் வாழ்பவர் என்று தெரியவந்துள்ளது. போலீஸார் போல் சீருடை அணிந்து போலீஸார் பயன்படுத்தும் ராயல் கனடியன் போலீஸ் வாகனம் போன்ற ஒன்றில் வந்துள்ளார்

முதலில் அவரை கைது செய்ததாக அறிவித்த கனடா போலீஸார், “கனடா வரலாற்றில் இல்லாத ஒரு மோசமான அர்த்தமற்ற வன்முறைச் செயல்” என்று வேதனை தெரிவித்தனர்.

அமெரிக்கா போல் இல்லாமல் மக்களை கொன்றழிக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் கனடாவில் மிகவும் அரிதானது. 1989-ல் நடந்த தனிமனித பைத்தியகார துப்பாக்கிச் சூட்டில் 14 பெண்கள் பலியானதையடுத்து அந்த நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.

இப்போது கனடாவில் பதிவு செய்யாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.

“ஒரு நாடாக இது போன்ற தருணஙளில் நாம் ஒன்றாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம். நாம் சேர்ந்து பலியான குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்போம். அவர்களுக்கு உதவுவோம்” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு தெரிவித்துள்ளார்

 

https://www.hindutamil.in/news/world/550425-16-killed-in-shooting-rampage-deadliest-in-canadian-history-2.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனா பயத்திலை.... சனம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் போது... 
இந்தக் கிறுக்குப் பயல்களின் அட்டகாசம், ஒரு பக்கம் கடுப்பை ஏத்துது.  😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.