Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Featured Replies

நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

என்ற போதும் மார்ச் மாதம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையரொருவர் அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. என்ற போதும் தற்போது வரையில் இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்ற தேர்தலானது ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜுன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டுமாக இருந்தால் மே மாத இறுதியிலிருந்து தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிக்க முடியா விட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/243986?ref=breaking-news

10 minutes ago, போல் said:

ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வரும் வரை இந்த வித்தைக்காரரை நம்ப முடியாது. 

  • தொடங்கியவர்
15 minutes ago, ampanai said:

வர்த்தமானியில் வரும் வரை இந்த வித்தைக்காரரை நம்ப முடியாது. 

ஏப்பிரல் 25 நடக்க இருந்த தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பதால் இன்னொரு வர்த்தமானி அறிவித்தல் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் போர்க்குற்றவாளி மகிந்த தரப்பு போர்க்குற்றவாளிகளுக்கும் போர்க்குற்றவாளி கோட்டாபய தரப்பு போர்க்குற்றவாளிகளுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் வலுப்பெறுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

  • தொடங்கியவர்

தேர்தலை ஒத்திவைக்குமாறு பிக்குகள் முன்னணி கோரிக்கை

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும், தேசிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தங்காலையில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த குறித்த முன்னணியின் தலைவர் வண.ஹந்துகல ரத்தணபால, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தை விட, தற்போது நாட்டின் நிலை முற்றாக மாறிவிட்டது என்றும் நாடு, ஆபத்தான நிலையில் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாடு, கொரோனா வைரஸ் ஆபத்தில் இருக்கும் போது, அது முற்றாக அகற்றப்படாமல், பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயிப்பது, இந்த ஆபத்தை வேகப்படுத்துகின்றது என்றும் எவ்வாறாயினும், பொதுத் தேவை நடத்தவும் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் மலிவான அரசியல் இலாபம் தேடுவதற்குமே, அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, கொரோனா அச்சுறுத்தில் இருந்து, நாட்டை முற்றாக பாதுகாக்க வேண்டும் என்பதே, தங்களது முன்னணியின் முதலாவது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றம் இயங்காமல் உள்ளது. தேர்தல்கள் ஆணையகத்தால், தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டில் கடுமையான நெருக்கடியை உண்டாக்குவதோடு, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றது. எனவே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு, நாங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதல-ஒததவககமற-பகககள-மனனண-கரகக/175-248971

கொஞ்ச நாளைக்கு மக்களுக்கு ஒரு டென்ஷன் இல்லை. 

பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானித்தது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு !

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/80395

வெளியானது வர்த்தமானி ! பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 20 |

p>பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Screenshot_20200420-222129_Drive.jpg

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து சுகாதார பணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய பேச்சுவர்த்தையில் தீர்மானங்கள் எதனையும் அறிவிக்காதவிடத்தும், ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானம் எடுத்திருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நாளை சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த புதிய சவால்

sri lanka elections 2020 Mahinda Rajapaksa Gotabaya RajapaksaLAKRUWAN WANNIARACHCHI / getty images இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (இடது) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (வலது)

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உரிய முறையில் நடத்திக் கொள்ள முடியாத நிலைமைக்கு மத்தியில் தேர்தல் பிற்போடப்பட்டது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட தருணத்திலேயே இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருந்தது.

முதலாவது நோயாளர் மார்ச் மாதம் 11ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவுவதற்கான அபாய நிலைமை ஏற்பட்டது. 

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மார்ச் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நாட்டில் அச்சுறுத்தலுடனான நிலைமையொன்று தோன்றியுள்ள பின்னணியில், தேர்தலை பிற்போட வேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமானால் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

 

இதற்கமைய தேதி நிர்ணயிக்கப்படாது நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் இதற்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தன. 

ஊரடங்கு சட்டம் நேற்றைய தினம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னணியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று மாலை இடம்பெற்றது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர மற்றும் எஸ்.இரத்னஜீவன் ஹுல், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர். 

இதன்போது அனைவரது இணக்கப்பாட்டுடன் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் எட்டப்பட்டு, அதன் வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. 

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது பிற்போடும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டு, மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி மூன்று மாதங்களின் பின்னர் தேர்தல் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

இது அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு முரணானதா என பிபிசி தமிழ் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான எஸ்.இரத்னஜீவன் ஹுலிடம் வினவியது.

தேர்தலை நடத்துவதற்கான தேதியை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வசமே காணப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 129ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

நாடு இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத நிலைமையொன்றை எதிர்கொள்ளும் பட்சத்தில், தேர்தல் தேதியை அறிவிக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழு வசமே காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

sri lanka elections 2020Getty Images கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் அதிக எண்ணைக்கையில் மக்களும், ஊழியர்களும் ஒரே இடத்தில கூடாமல் பார்த்துக்கொள்வது பெரும் சவாலாக இருக்கப்போகிறது.

நாட்டில் கொரோனா தொற்று தொடருமேயானால் தேர்தல் மீண்டும் பிற்போடப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என பிபிசி தமிழ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.ரத்னஜீவன் ஹுலிடம் வினவியது. 

அவ்வாறான நிலைமையொன்றை நாடு எதிர்கொள்ளுமேயானால், தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான அதிகாரம் தங்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

ஜனாதிபதிக்கும் தீர்மானமொன்றை எடுப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தேர்தல் நடத்தப்பட முடியாத நிலைமை தொடர்ந்து, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகுமானால் அந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான தீர்மானமொன்று எட்டப்படும் என ரத்னஜீவன் ஹுலிடம் வினவப்பட்டது. 

அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடியே தீர்மானமொன்றை எட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கூட எவரேனும் உயர் நீதிமன்றத்தை நாடி தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரேயானால், அதனை தான் தனிப்பட்ட ரீதியில் வரவேற்பதாகவும் அவர் கூறினார். 

ரத்னஜீவன் ஹுல் ரத்னஜீவன் ஹுல்

இந்த தேர்தலை நடத்துவதற்கு தாங்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா தொற்று காரணமாக நிறுவனமொன்று அதிகூடியதாக 50 பணியாளர்களை மாத்திரமே கடமைகளுக்கு அழைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதை அவர் நினைவூட்டினார். 

எனினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 50திற்கும் அதிகமான பணியாளர்கள் அவசியம் என கூறிய அவர், அதனை எவ்வாறு செய்ய போகின்றோம் என்பதே சவாலாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தேர்தலொன்றை நடத்தும் போது அவ்வாறான நடைமுறைகளை கையாள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறான பல சவால்களை எதிர்கொண்டே இந்த தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் குறிப்பிட்டார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-52364285

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ..............ஆ வடை  போச்சே .

  • தொடங்கியவர்

வர்த்தமானிக்கு எதிராக விரைவில் மனுத்தாக்கல்?

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகள் சிலவும் சமூக அமைப்புகளுமே, இவ்வாறு மனுத்தாக்கல் செய்யவுள்ளனவென அறியமுடிகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் திகதி குறிக்கப்பட்டுள்ள ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்தமுடியாத நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு புதிய அமர்வு கூடப்படவேண்டும். எனினும், தற்போதைய நிலைமையிலான அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

ஆகையால், பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான உத்தரவை பிறபிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்து உத்தரவிடுமாறு கோரியே, மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு, சில தரப்புகள் முயற்சிக்கின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதால், இணையத்தளத்தின் ஊடாக, மனுவைத் தாக்கல் செய்வதற்கு அத்தரப்பு கலந்தாலோசித்து வருகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வரததமனகக-எதரக-வரவல-மனததககல/175-249086

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

பொதுத் தேர்லில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள், விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னதாக, மாவட்டத் தேர்தல்கள் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்குமாறு,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் அதற்கான கால அவகாசத்தை, தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

எனவே, தபால்மூலம் வாக்களிக்கவுள்ளோர் விண்ணப்பங்களை, மே 4 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தபால்மூல-வாக்களிப்புக்கான-விண்ணப்பத்-திகதி-அறிவிப்பு/175-249091

  • தொடங்கியவர்
On 20/4/2020 at 19:52, போல் said:

மேலும் போர்க்குற்றவாளி மகிந்த தரப்பு போர்க்குற்றவாளிகளுக்கும் போர்க்குற்றவாளி கோட்டாபய தரப்பு போர்க்குற்றவாளிகளுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் வலுப்பெறுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

ராஜபக்சாக்களுக்கு இடையில் அதிகார மோதல்-முக்கிய செய்திகள்

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு இடையிலான அதிகார மோதலின் பிடியில் கொரோனாவிற்கு எதிராக போராட்டம் சிக்கித் தவிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு என்ற போர்வையில் நாடாளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்ய தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மறுபுறத்தில் மக்களின் உயிர்களைப் பற்றியும் கவலை கொள்ளாது எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மஹிந்த ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் ஜனநாயகம் மிகவும் முக்கியமானது என்ற போதிலும் அதனை விடவும் மக்களின் பாதுகாப்பு அதனை விடவும் முதன்மையானது என மங்கள தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141773

 

19 minutes ago, போல் said:

மறுபுறத்தில் மக்களின் உயிர்களைப் பற்றியும் கவலை கொள்ளாது எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மஹிந்த ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

49.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கையாலாகாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு; பாராளுமன்றை சபாநாயகர் கூட்டலாம்: ஹக்கீம்

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதன் மூலம்,  பாராளுமன்றத்தைக் கலைப்பதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மார்ச் 2 இல் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வலுவற்றதாகிவிட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

“அரசாங்கம் இப்போது செயற்படும் முறை ஜனநாயக விழுமியங்களை மீறி சர்வாதிகார போக்கில் செல்வதற்கான வழியைத்தான் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் பாராளுமன்றத்தை சபாநாயரே கூட்ட முடியும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூடிப் பேச வேண்டும். அரசாங்கக் கட்சியும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம்” எனவும் ஹக்கீம் தினக்குரலுக்குத் தெரிவி

 

கோவிட் 19 பீதியில் மக்களை இருத்திவிட்டு, அதனை தமது அரசியல் நலன்களுக்கு அரசாங்கம் பயன்படுத்துவதையிட்டு கேள்விக்கு உட்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு இருக்கின்றது” என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்திருக்கின்றார்.

பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததையடுத்து அரசியலில் பெரும் சர்ச்சை ஒன்று உருவாகியிருக்கின்றது. அரசியலமைப்பு ரீதியான ஒரு சர்ச்சையாகவும் இது உருமாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று தேர்தல் ஆணைக்குவில் இடம்பெற்ற கூட்டத்திலும் கடுமையான வாதங்களை ஹக்கீம் முன்வைத்திருந்தார். இந்த சர்ச்சை குறித்து ஹக்கீமிடம் கேட்ட போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“பாராளுமன்றத்தின் பதவிக்காலம் செப்டம்பர் வரை இருக்கின்றது. 2020 செப்டம்பர் மாதம் வரையில் அதிகாரத்தில் இருப்பதற்காகவே 2015 இல் மக்கள் ஆணையை பாராளுமன்றத்துக்கு வழங்கியிருந்தார்கள். இந்த ஆணை இருக்கத்தக்கதாக பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதகாலத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என அரசியலமைப்பின் மூலம் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தியே தன்னுடைய சுய விருப்பின்படி மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

மார்ச் 2 இல் பாராளுமன்றத்தை கலைத்தவர், புதிய பாராளுமன்றத்தை ஜூன் 2 திகதிக்கு முன்னர் கூட்டவில்லையெனில் பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கான வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வறிதானதாகிவிடும். ஏனெனில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த 3 மாத காலத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

அரசியலமைப்பு மூலமான காப்பீடு ஒன்றை அது தருகின்றது. அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் கண்காணிப்பதற்குத்தான் பாராளுமன்றம் இருக்கின்றது. அவ்வாறான பாராளுமன்றம் இல்லாமல் நாம் முன் செல்ல முடியாது. இவ்வாறு பாராளுமன்றம் இல்லாதிருப்பது ஜனநாயக விழுமியங்களை முற்றாக மழுங்கடிக்கும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் சரியாவை. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஜனநாயக வரைமுறைகளை மீறி இந்த நாட்டை சர்வாதிகார போக்கில் நாட்டைக் கொண்டு செல்வதற்கான முயற்சியாகத்தான் உள்ளது.

 

இதனைவிட சுமந்திரன் நுகேகொட நீதிமன்றத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது, அரசாங்கம் ஊரடங்கைக்கூட, சட்டவிரோதமாகத்தான் நடைமுறைப்படுத்துகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கோவிட்ட 19 பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் சட்டரீதியாகச் செய்யாமல், மக்களைப் பீதியில் வைத்துக்கொண்டு அடக்குமுறையை நோக்கியே அரசாங்கம் செல்கின்றது என்றே தற்போதைய அரசின் செயற்பாடுகளை நோக்கும் போது தோன்றுகின்றது. மக்கள் பீதியால் எந்தக் கேள்வியும் கேட்காமல் அரசாங்கத்துக்குக் கட்டுபடுகின்றார்கள் என்பதால், இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆட்சியைக்கொண்டு செல்ல முடியாது.

ஜனாதிபதிக்குள்ள மக்கள் ஆணை அவருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கானதே தவிர, பாராளுமன்றத்தையும், அதனுடைய அதிகாரங்களையும் அவராகவே கையகப்படுத்தி அதனைப் பயன்படுத்துவதற்கான ஆணையல்ல.

ஜூன் 2 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு திகதியை – அதாவது ஜூன் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தினமாக தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்திருப்பதன் மூலம், (பின்னர் அதனையும் பின்போட்டாலும் கூட) பாராளுமன்றம் இல்லாமல் ஜனாதிபதியே தனி ஒருவராக நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான ஒரு வாய்ப்பை தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. இது ஒரு தவறான விடயம். சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு செயற்படும் என நாம் எதிர்பார்க்கவில்லை.

அதனைவிட தேர்தலைக் கூட. சுயாதீனமான தேர்தலாக இருக்கப்போவதில்லை. தற்போது அரசாங்கக் கட்சி சார்பானவர்கள் தமது பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். அரசாங்கம் உதவிகளையும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதையும் செய்துகொண்டுள்ளது. இதனை அவர்கள் தமது பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்துகின்றார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு காலகட்டதில் இவ்வாறு நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கின்றது. இது அப்பட்டமாகத் தெரிகின்றது.

ஒரு பிரதான கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், தேர்தலில் போட்டியிடும் கூட்டணி ஒன்றின் பொதுச் செயலாளராக இருக்கும் பசில் ராஜபக்‌ஷ, கோவிட் 19 குறித்த செலலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதன் மூலம் அதில் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். தமது தேர்தல் பிரச்சாரத்தையும் இதன் மூலமாக அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். இதனைக்கூட கேள்விக்குட்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்” எனவும் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

http://thinakkural.lk/article/39241

 

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலை 3 மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும்….

April 24, 2020

Caffe.jpg

பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (caffe) அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்நிபந்தனைகள் உள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தற்போது ஆரம்பித்திருக்க வேண்டியது முக்கியம் எனவும், இதுவரை பதிவாயிள்ள கொரோனா தொற்றாளர்களை நோக்கும் இடத்து எதிர்காலத்தில் இன்னும் அதிகமானவர்கள் இனம் காணப்படும் சூழல் நிலவுவதாகவும் அதனால் தேர்தலுக்கான சூழல் உருவாக்கப்படுவது சாத்தியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவது நடைமுறையில் கடினமானது எனக் குறிப்பிட்ட அவர்,  சில வேற்பாளர்கள் உணவு பொதிகளை வழங்கி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இவ்வாறான தேர்தல் விதிகளுக்கு முரணான செயற்பாட்டின் மூலம் மக்களே பாதிப்படைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச சார்பு கட்சிகள் மாத்திரமே தற்போதைய நிலைமையை சரிவர பயன்படுத்திக்கொள்வதாகவும் மற்ற கட்சிகளும், குழுக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கோருவதற்கான சூழல் ஏற்றதாக இல்லை எனவும் எனவே மேற்குறித்த காரணங்களை மையயப்படுத்தி பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் மனாஸ் மக்கீம் கோரியுள்ளார்.

 

http://globaltamilnews.net/2020/141461/

4 hours ago, கிருபன் said:

பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (caffe) அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ம்ம். தேர்தல் ஜூன்ல நடக்கிறது சாத்தியம் இல்ல.
மகிந்த கோஷ்டி யார்ட கழுத்தை திருக்கப்போதோ தெரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மங்களவின் கடிதம் தவறான தகவல்களைக் கொண்டுள்ளது: ஜனாதிபதி பதில் கடிதம்

gotha-mangala-300x218.jpgஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மங்கள சமரவீர கடந்த 28ஆம் திகதி தனக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு தனது செயலாளரின் மூலம் நேற்று பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மங்கள சமரவீரவின் கடிதம் பல்வேறு பிழையான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகையதொரு கடிதம் அனுப்பிவைக்கப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக்கு அமைவாக தீர்ப்பதற்கும் அரச செலவுகளை அனுமதிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை’ என சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது. பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் அரசியலமைப்பின் 150(3) பிரிவின் கீழ் இடைக்கால கணக்கின் மூலம் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டு 03மாத காலத்திற்கான செலவுகளுக்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

 

புதிய தாராளவாத சமூக பொருளாதார தத்துவத்தை தனது கொள்கையாக கொண்ட முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கவலை தெரிவித்திருப்பதாகவும் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/39926

 

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

In இலங்கை     May 2, 2020 10:49 am GMT     0 Comments     1179     by : Jeyachandran Vithushan

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு அண்மையில் வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி சரித குணரத்னவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக தேர்தல் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி என் ஜே. அபேசேகர, பேராசிரியர் ரட்னஜீவ ஹூல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/தேர்தல்-ஆணைக்குழு-வெளியி/

  • தொடங்கியவர்

முக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது

பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் போட்டி இலக்கங்களை தெரிவு செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் ஜூன்20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுத் தேர்தலுக்கான திகதி மேலும் பின்தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வர்த்தமானி அறிவித்தலும் ஒத்திவைக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/142363

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.