Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BJP-govt-waived-Rs6860-crore-of-loan-defaulters-alleges-Congress.jpg

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பித்தனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும் அமுலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றன.

வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இதுதொடர்பாக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கிக் கடன் மோசடிப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 24ஆம் திகதி ரிசேர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதிவரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ரிசேர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் தொழிலதிபர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு 5,492 கோடி, ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்திற்கு 4,314 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் நிறுவனத்திற்கு 4,076 கோடி, ரோட்டேமேக் குளோபல் நிறுவனத்திற்கு 2,850 கோடி, குடோஸ் கெமி நிறுவனத்துக்கு 2,326 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்துக்கு 2,212 கோடி, சூம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு 2,012 கோடி, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 1,943 கோடி, பிரீசியஸ் ஜூவெல்லரி அன்ட் டயமண்ட்ஸ் நிறுவனத்துக்கு 1,962 கோடி மற்றும் மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே 1,447 கோடி மற்றும் 1,109 கோடி ரூபாயும் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிற்றர் பதிவில் தெரிவிக்கையில், “நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு இரத்துச் செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசேர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதியமைச்சர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசேர்வ் வங்கி வெளியிட்ருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மத்திய அரசு 6 இலட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை இரத்துச் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

http://athavannews.com/விஜய்-மல்லையா-நிரவ்-மோடி/

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!

மக்களின் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் வங்கிகள்.
என்ன தான் நடக்குது இந்தியாவில்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோவணத்துடன் புதுடெல்லி வரை போய் போராடினார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

மக்களின் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் வங்கிகள்.
என்ன தான் நடக்குது இந்தியாவில்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோவணத்துடன் புதுடெல்லி வரை போய் போராடினார்களே.

பண படைத்தவன் கடன் வாங்கி ஏமற்றினாலும் நம் சமூகத்தில் உயர்ந்தவர்கள், அவனுக்கு வெட்கம் மானம் எதுவுமில்லை, சக ஐமாக திரிவார்கள்,

ஏழை விவசாயிகளுக்கு மானம்தான் பெரிது கடன் கொடுக்கமுடியவில்லையென்றவுடன், தற்கொலைக்கே போகின்றார்கள். 

இரண்டுமாதம் உற்பத்தியை விவசாயிகளுக்கிடையில் பங்கிட்டால் தெரியும் பின் விளைவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை மிகச் சரியான அல்லது தெளிவான தகவலைத் தரவில்லை (வாசகர்களின் பார்வையில்) என்று தோன்றுகிறது. 🤔

இந்த தள்ளுபடியின் சட்ட ரீதியிலான விளைவு (கடனாளி தொடர்பில்,) கணக்காளர் அல்லது தகுதிவாய்ந்த அல்லது விடயமறிந்தவர்கள் தெளிவாக்க  முடியுமா🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கட்டுரை மிகச் சரியான அல்லது தெளிவான தகவலைத் தரவில்லை (வாசகர்களின் பார்வையில்) என்று தோன்றுகிறது. 🤔

இந்த தள்ளுபடியின் சட்ட ரீதியிலான விளைவு (கடனாளி தொடர்பில்,) கணக்காளர் அல்லது தகுதிவாய்ந்த அல்லது விடயமறிந்தவர்கள் தெளிவாக்க  முடியுமா🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்த தள்ளுபடியின் சட்ட ரீதியிலான விளைவு (கடனாளி தொடர்பில்,) கணக்காளர் அல்லது தகுதிவாய்ந்த அல்லது விடயமறிந்தவர்கள் தெளிவாக்க  முடியுமா

நான் கணக்காளர் அல்ல. கடன் பற்றிய formal qualification இல்லை.  

நான் அறிந்த வரைக்கும்,

கடன் தள்ளுபடி என்பது, written off,  வங்கியையும் அதன் balance sheet ஐ  பொறுத்தவரையில். சில வேளைகளில் அது அறவிடமுடியாக் கடன்கள் என்ற வகைக்குள் வரும், balance sheet இல் அப்படி குறிப்பும் இருக்கும்.

பொதுவாக written off என்பது balance sheet குறிப்புகள் நீக்கப்படுவது.    

அனால் கடன் பெற்றவர், சட்டத்தை பொறுத்தவரையில் debt obligation, அதாவது கடனை திருப்பி செலுத்த வேண்டிய சட்டக் கடப்பாட்டில் இல் இருந்து விடுதலை பெறுகிறாரா (இதை statue barred என்று சொல்லப்படும், அதாவது கடன் கொடுத்தவர் சட்டத்தின் அடிப்படையில் debt ஐ enforce பண்ண முடியாது) அல்லது  இல்லையா என்பதையும், கடன் கொடுத்தவர் கடனை வசூலிக்கும் சட்ட அடிப்படையிலான உரிமையும், அதிகாரங்களும், அதன் பிரயோகம்  (debt enforcement) என்பதை வேறு  சட்டங்களே தீர்மானிக்கும்.

உ.ம். UK இல் பொதுவாக தனிப்பட்ட கடன் (தனிப்பட்ட நபர், நிறுவனம், மற்றும் வங்கிகள் இடம் இருந்து) பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல், 6 வருடத்திற்குள் அறவிடப்படவிட்டால், அது statue barred ஆகிவிடும். அதாவது கடனை  சட்டத்தின் அடிப்படையில் enforce பண்ணுவது இல்லாமல் ஆகிவிடும். கடனின் தொகை மற்றும் தன்மையை பொறுத்து, இதை தடுப்பதற்கும் வழி உண்டு. வீடு கடன்களுக்கு (mortgage) statue barred காலம் வேறுபட்டதும், கூடியதும்.

6 வருடத்திற்குள், கடனாளியை, கடன் கொடுத்தவர்  வங்கிரோத்து வரைக்கும் கொண்டு செல்லலாம், அதற்கண பிரத்தியேக செலவுகள் உண்டு.        
  
கடன் statue barred ஆகினாலும், கடனாளியை நீதி மன்றம் கொண்டு சென்றால், நீதி மன்றம்  தீர்மானிப்பதே இறுதி முடிவு.  

UK ஐ பொறுத்தவரை, கடன் statue barred ஆகினால், மிகவும் அரிதான நிலைமைகள் (உ.ம். public money, interest, security, safety) சட்டத்தின் அடிப்படையில் கடனாளி பெற்ற கடனால் குந்தகம் உள்ளது என்றால், நீதி மன்றம் அதில் தலையிடும். அதனால்,  statue barred ஆகிய கடனை அறவிடுவது, தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகவும் கடினமானது.

சில கடன்களுக்கு statue barred ஒரு போதும் ஆகாது. பொதுவாக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் கடன்கள், அரச வரிகள் போன்றவை.      

ரிசெர்வ் வங்கி இந்திய அரசின் ஓர் வங்கி என்பதே எனது புரிதல்.

இந்திய அரசிடம்  இருந்து பெறப்பட்ட கடன், மற்றும் அது public money, ஆதலால் statue barred ஆகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இவர்கள் வாழ்நாள் முழுவதும் (இந்திய அரசால்) துரத்துப்படலாம், அல்லது சிறை, அல்லது ஏதாவது சட்டக் கட்டுப்பாடுகளும் இருக்கவும் வாய்ப்புகள் மிக அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் Bank of England போன்று இந்தியாவில் Reserve Bank of India.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

UK இல் Bank of England போன்று இந்தியாவில் Reserve Bank of India.

மத்திய வங்கி தனியார் நிறுவனகளுக்கு நேரடியாக கடன்.

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து பழக்கிவிடலாம்.

பிரித்தானியர் இந்திய அரசை உருவாக்கி அதிகாரத்தை  கிந்தியர்களிடம் மற்றும் ஆரிய பிரமணிகளிடம் கையளித்தாலும், 60-70 வருடங்களுக்கு பின்பும் கிந்தியர்களிள் மற்றும் ஆரிய பிராமணிகள் அரசை நிர்வகிப்பதற்கு தமது பெட்டிக்கடை சிந்தனையை அறிந்தும் கைவிட முடியாதவர்களாக  இருக்கின்றனர்.    

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய தொகையை ஒரு தனிநபரின் பெயரில் கொடுக்கப்பட்டதா?

தனிப்பட்ட நிறுவனகளாயின், LIMITATION இல்லாலாமல் கம்பனிகளை உருவாக்கி இருப்பார்களா?

அப்படி LIMITATION இன் வரையறையை சட்டத்தின் அடிப்படையில் ஆராயாமல், ஓர் வங்கி, அதுவும் மத்திய வங்கி நேரடியாக அல்லது SANCTION மூலமாக அதனது வியாபார வங்கி ஊடாக இவ்வளுவு பெரிய தொகையை கடனாக கொடுக்குமா?

இவ்வளுவு கடன் பெற்றவர்கள், முறையான auditing மற்றும் executive board இல்லாமல், தனியாக எல்லா நிதி தொடர்பான முடிவுகளையும் எடுத்தார்களா?

முதல் சொன்னது மாதிரியே பெட்டிக்கடை சிந்தனையிலா அரச நிதி நிர்வாகம் நடைபெறுகிறது?
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நன்றி உடையார். 👍

6 hours ago, Kadancha said:

நான் கணக்காளர் அல்ல. கடன் பற்றிய formal qualification இல்லை.  

நான் அறிந்த வரைக்கும்,

கடன் தள்ளுபடி என்பது, written off,  வங்கியையும் அதன் balance sheet ஐ  பொறுத்தவரையில். சில வேளைகளில் அது அறவிடமுடியாக் கடன்கள் என்ற வகைக்குள் வரும், balance sheet இல் அப்படி குறிப்பும் இருக்கும்.

பொதுவாக written off என்பது balance sheet குறிப்புகள் நீக்கப்படுவது.    

அனால் கடன் பெற்றவர், சட்டத்தை பொறுத்தவரையில் debt obligation, அதாவது கடனை திருப்பி செலுத்த வேண்டிய சட்டக் கடப்பாட்டில் இல் இருந்து விடுதலை பெறுகிறாரா (இதை statue barred என்று சொல்லப்படும், அதாவது கடன் கொடுத்தவர் சட்டத்தின் அடிப்படையில் debt ஐ enforce பண்ண முடியாது) அல்லது  இல்லையா என்பதையும், கடன் கொடுத்தவர் கடனை வசூலிக்கும் சட்ட அடிப்படையிலான உரிமையும், அதிகாரங்களும், அதன் பிரயோகம்  (debt enforcement) என்பதை வேறு  சட்டங்களே தீர்மானிக்கும்.

உ.ம். UK இல் பொதுவாக தனிப்பட்ட கடன் (தனிப்பட்ட நபர், நிறுவனம், மற்றும் வங்கிகள் இடம் இருந்து) பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல், 6 வருடத்திற்குள் அறவிடப்படவிட்டால், அது statue barred ஆகிவிடும். அதாவது கடனை  சட்டத்தின் அடிப்படையில் enforce பண்ணுவது இல்லாமல் ஆகிவிடும். கடனின் தொகை மற்றும் தன்மையை பொறுத்து, இதை தடுப்பதற்கும் வழி உண்டு. வீடு கடன்களுக்கு (mortgage) statue barred காலம் வேறுபட்டதும், கூடியதும்.

6 வருடத்திற்குள், கடனாளியை, கடன் கொடுத்தவர்  வங்கிரோத்து வரைக்கும் கொண்டு செல்லலாம், அதற்கண பிரத்தியேக செலவுகள் உண்டு.        
  
கடன் statue barred ஆகினாலும், கடனாளியை நீதி மன்றம் கொண்டு சென்றால், நீதி மன்றம்  தீர்மானிப்பதே இறுதி முடிவு.  

UK ஐ பொறுத்தவரை, கடன் statue barred ஆகினால், மிகவும் அரிதான நிலைமைகள் (உ.ம். public money, interest, security, safety) சட்டத்தின் அடிப்படையில் கடனாளி பெற்ற கடனால் குந்தகம் உள்ளது என்றால், நீதி மன்றம் அதில் தலையிடும். அதனால்,  statue barred ஆகிய கடனை அறவிடுவது, தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகவும் கடினமானது.

சில கடன்களுக்கு statue barred ஒரு போதும் ஆகாது. பொதுவாக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் கடன்கள், அரச வரிகள் போன்றவை.      

ரிசெர்வ் வங்கி இந்திய அரசின் ஓர் வங்கி என்பதே எனது புரிதல்.

இந்திய அரசிடம்  இருந்து பெறப்பட்ட கடன், மற்றும் அது public money, ஆதலால் statue barred ஆகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இவர்கள் வாழ்நாள் முழுவதும் (இந்திய அரசால்) துரத்துப்படலாம், அல்லது சிறை, அல்லது ஏதாவது சட்டக் கட்டுப்பாடுகளும் இருக்கவும் வாய்ப்புகள் மிக அதிகம். 

நன்றி கடஞ்சா 👍

5 hours ago, Kadancha said:

மத்திய வங்கி தனியார் நிறுவனகளுக்கு நேரடியாக கடன்.

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து பழக்கிவிடலாம்.

பிரித்தானியர் இந்திய அரசை உருவாக்கி அதிகாரத்தை  கிந்தியர்களிடம் மற்றும் ஆரிய பிரமணிகளிடம் கையளித்தாலும், 60-70 வருடங்களுக்கு பின்பும் கிந்தியர்களிள் மற்றும் ஆரிய பிராமணிகள் அரசை நிர்வகிப்பதற்கு தமது பெட்டிக்கடை சிந்தனையை அறிந்தும் கைவிட முடியாதவர்களாக  இருக்கின்றனர்.    

அதிகாரத்தையும் அதனால் கிடைக்கும் முன்னுரிமையையும் கைவிட யார்தான் விரும்புவர் 🤥

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?

நொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.

நெல்லை மாநகராட்சிக்குப்பட்ட பகுதி பழைய பேட்டை. இப்பகுதியில் நெசவுத் தொழில் சார்ந்து 700 குடும்பங்கள் உள்ளன. அரசின் தனியார்மயக் கார்ப்பரேட் கொள்கைகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் சிறு தொழில்களில் நெசவும் ஒன்று. அப்படி இருந்தும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவு செய்து வந்துள்ளனர். குறிப்பாக துண்டு தயாரித்து சுற்றுவட்டார துணிக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

“பழைய பேட்டை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்” என்ற நிர்வாக அமைப்பின் கீழ் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். 20 வருடங்களாக கூட்டுறவு சங்கம் முறையாக இயங்கியுள்ளது. கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய PF தொகையையும் முறையாக செலுத்தி வந்துள்ளனர். ஆனால் அதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் முறையாக அரசுக்கு அத்தொகையை கட்டாமல் இருந்துள்ளனர். இதை கண்காணித்து முறைப்படுத்தும் வேலையையும் அரசின் தரப்பில் செய்யவில்லை எனத் தெரிகிறது. PF தொகை கட்டாததால் சங்கத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்திற்கு சீல்வைக்கப்பட்டு விட்டது.

Nellai-news-e1588751001586.jpgஅதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி துறை சார்ந்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அவரோ PF பணத்தை முறையாக கட்டாத அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு பதிலாக தொழிலாளிகளையே ஃபைன் கட்டச் சொல்லியிருக்கிறார். லட்சக்கணக்கில் கட்ட வேண்டி வந்ததால் நெசவாளர்களால் கட்ட முடியவில்லை.

இதனால் என்ன செய்வதென்று அறியாத நிலையில் பலரும் கிடைத்த வேலைக்கு செல்வது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். துணிக்கடைக்கு பெரும்பாலானோர் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பீடி சுற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரனோ ஊரடங்கின் காரணமாக, உணவிற்கும் வழியில்லாமல் 35 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மே 1 அன்று பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு நிவாரணம் வேண்டி சமூக இடைவெளி விட்டு அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை கேட்டு நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அப்பகுதி VAO -வின் புகார் அடிப்படையில் முன்னணியாளர்கள் மீது போலீசு வழக்கு போட்டுள்ளது.

படிக்க:
♦ கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

தன் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி மக்களின் பிரச்சினைகளை களத்தில் ஆய்வு செய்து அதைத் தீர்த்து வைப்பதுதான் VAO வின் வேலை. ஆனால் அவ்வாறு செய்யாமல் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் அம்மக்களிடம் பேசிய மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளது. 4 நாட்களாகியும் இன்னும் உதவிகள் சென்று சேரவில்லை. “பசித்தவனுக்கு உதவி செய்ய அரசு தாமதிப்பது மட்டும் குற்றமில்லையா?” என்று நாம் கேட்க முடியாது. கேட்டால் அதற்கும் வழக்குப் போடலாம். தற்போது வரை தன்னார்வலர்கள்தான் உதவிகள் செய்து வருகின்றனர்.

நெசவாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் :

  1. ஊரடங்கில் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உணவுப் பொருட்கள், நிதி போதுமான அளவு தர வேண்டும்.

முக்கியமாக,

  1. தங்களது கூட்டுறவு சங்கத்திற்கு மீண்டும் உரிமம் தர வேண்டும். இதன் மூலம்தான் தங்களுக்கான நிரந்தரமான வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்.

தமிழகம் முழுவதும் காஞ்சிபுரம், கும்பகோணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான நெசவாளர்களின் நிலைமையும் ஏறக்குறைய இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை அவதானிக்க முடிகிறது. வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கேட்காமலேயே 68,000 கோடி (தற்போது மட்டும்) கடன்தள்ளுபடி செய்யும் அரசு, பழைய பேட்டை போன்ற லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

https://www.vinavu.com/2020/05/06/nellai-weavers-protest-for-corona-relief-work/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.