Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே.கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாகஅறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து
தங்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பியசம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தது உண்மையே.

ஆனால் தமிழ்மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை.சம்பந்தன் எதிர்பார்த்தது போல

* தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய
வாக்குறுதியை அவர் கைவிடவில்லை

* ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை

* இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை
* பதவி,பணம்,சுகபோகங்களுக்காக விலைபோகவில்லை
* சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை
* கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத்
துணை போகவில்லை என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே.

விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை. பேரவை வேறு. தமிழ்மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ்மக்களின் வேண்டுகோளைப் புறந்தள்ளமுடியாது உருவாக்கப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சி தோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

மேலும் நல்லாடசியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் என தலைவர் உட்பட அவரது கட்சியினர் சொன்னது பொய்யா? அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும் எமது மக்களை மட்டுமல்ல அவரது கடசியினரையும் ஏமாற்றியது உண்மையாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/40742

2 hours ago, உடையார் said:

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

சம்பந்தரை விட சுத்துமாத்து சுமந்திரன் தான் விக்கியிரிடம் அதிகம் ஏமாந்திருக்க வேணும். சுமந்திரன் படுற பாட்டை பாத்தாலே புரியும்.

விக்கியரால சுத்துமாத்து சுமந்திரன் தான் நினைச்ச அளவுக்கு தமிழின படுகொலைகாரர்களுக்கு உதவ முடியாம போச்சு என்கிறது வெளிப்படையான உண்மை.

14 hours ago, உடையார் said:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சி தோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இதை யாராலும் மறுக்க முடியாது. 

இப்போது அருந்தவபாலன் சொல்லவருகிறது என்னவென்றால், தாங்களும், தாங்கள் சார்ந்த கட்சியினரும் மிகவும் தூய்மையானவர் என்றும் மக்களை ஏமாற்றாதவர்கள் என்றும் கூறுகிறார்। சம்பந்தர் விக்கி ஐயாவிடம் சில காரியங்களில் தோற்றுவிட்ட்தாகவும் கூறுகிறார்। சம்பந்தர் ஐயாதான் இதட்கு பதிலளிக்க வேண்டும்।

இருந்தாலும் உங்களின் கருத்தில் ஒற்றாயாட்சி, சமஷடி எல்லாம் இல்லை என கூறுகிறீர்கள்। உங்கள் கட்சியின் கொளகை என்னவென இன்னும் தெளிவாக கூறினால் நல்லது। இருந்தாலும் உங்களுடைய கொள்கைகள் பற்றிய எண்ணங்களை மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள்। அப்போது எல்லோருடைய சாயமும் வெளிப்படும்। கொஞ்சம் பொறுத்திருப்போம்। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இப்போது அருந்தவபாலன் சொல்லவருகிறது என்னவென்றால், தாங்களும், தாங்கள் சார்ந்த கட்சியினரும் மிகவும் தூய்மையானவர் என்றும் மக்களை ஏமாற்றாதவர்கள் என்றும் கூறுகிறார்। சம்பந்தர் விக்கி ஐயாவிடம் சில காரியங்களில் தோற்றுவிட்ட்தாகவும் கூறுகிறார்। சம்பந்தர் ஐயாதான் இதட்கு பதிலளிக்க வேண்டும்।

வாக்களிக்காதவன் விமர்சிக்க முடியாது , எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாது, மக்களுக்காக வீதியில் இறங்காதவர் விமர்சிக்க முடியாது ,அப்போ யார்தான் விமர்சிப்பது  
இப்படி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா கூத்தமைப்பினர்...?, அருந்தவபாலன் எங்கே தானும்  தாங்கள் சார்ந்த கட்சியினரும் மிகவும் தூய்மையானவர் என்றும் மக்களை ஏமாற்றாதவர்கள் என்று கூறுகிறார்...?
கூத்தமைப்பை விமர்சித்தால் உடனே இப்படியான அர்த்தமா ....?  ஒன்று மட்டும் உங்கள் கூற்றில் தெளிவாக விளங்குகிறது , கூத்தமைப்பின் மொள்ளமாரித்தனத்தை தோண்டியெடுத்தால் நீங்கள் மட்டும்  திறமா என்று மற்றவர்களை கேட்டு அந்த மொள்ளமாரித்தனத்தை மூடி மறைக்கும் வித்தையை செய்ய முற்படுகிறீர்கள் .
ஆனால் இனிமேலும் இது வேர்க்அவுட் ஆகாது
மக்களுக்காக  வேலையை பாரமெடுத்தவர்கள் ஏன் சொதப்பினார்கள் ,எதில் சொதப்பினர்கள் ,தெரிந்தே சொதப்பினார்களா ,யாருடன் கூட்டு சேர்ந்து யார் கூற்றை நம்பி சொதப்பினார்கள் ,ஆட்டையை போட்ட அத்தனை கால இழுத்தடிப்பிற்கும் யார் அக்கௌண்டபிலிட்டி இப்படி அனைத்திற்கும் பதில் சொல்லவேண்டும் 
அடுத்தவனை வாரி இழுத்து விட்டு விட்டு  ஒளிக்க முடியாது   

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அருமையான கருத்து!

தமிழன படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்க முண்டியடிக்கும் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலுக்கு தக்க பதிலடி.

அருந்தவபாலன் சுயநலத்தை கைவிட்டால் சிறப்பாக மக்களுக்கு தொண்டாற்றலாம்.

ஆளும் வர்க்கத்தின் விசுவாசிகளாக மாறியுள்ள கூட்டமைப்பு! சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த சுரேஸ்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதியரசரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகங்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், சம்பந்தன் முன்னைய அரசாங்கத்தை நம்பிக்கெட்டார் என்றும் அவ்வாறான விடயங்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரது அவ்வாறான கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், சம்பந்தன் தான் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டார் என்றும் விக்னேஸ்வரன் சம்பந்தனுக்குக் கொடுத்த பல உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை என்று கூறியிருப்பதுடன் அரசாங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தியும் பதிலளித்திருந்தார்.

அவரது கருத்து குறித்தும் உண்மை நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் விதத்திலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இங்கே கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான எமது அனுபவம் தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க விழைகின்றோம். முதலாவதாக, விக்னேஸ்வரனின் கூற்றின் பிரகாரம் சிங்கள அரசியல் தலைமை என்பது தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கிறது என்றும் அதன் ஒரு பகுதியாக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் அவர்களது குழுவினரும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மேலும் அதில் என்ன தவறு இருக்கின்றது? இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும், புதிய அரசியல் சாசனங்கள் வருகின்ற போதும் தமிழ் மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது இந்த நாட்டின் அரசியல் வரலாறு.

அதைப் போலவே, விடுதலைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், மகிந்தராஜபக்ச அரசாங்கத்திலும், ரணில்-மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வதற்கு கூச்சநாச்சப்பட வேண்டிய தேவை என்ன? எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தாங்கள் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இதனைக் கூட சுமந்திரன் கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றவில்லை என்ற பாணியிலும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தான் தங்களை ஏமாற்றியவர் என்று சொல்வதானது நகைப்புக்குரிய விடயமாகும்.

விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராகிய பொழுது, அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. மாகாணசபை எந்தவொரு அரசியல் தீர்மானத்தை எடுப்பதற்கும் இவர்கள் தொடர்ச்சியாக முட்டுக்கட்டையாக இருந்தனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படு கொலை ஒன்று நடந்தது என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் பலமுறை முயற்சித்த போதும் இவர்களின் தலையீட்டினால் அது தள்ளிக்கொண்டே போனது. பின்னர் சபை அங்கத்தவர்கள் அனைவரின் ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சியினரே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தனர். ஆகவே யார் யாரை ஏமாற்றினார்கள் என்பதை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும். சுமந்திரன் கடந்த காலத்தில் மக்களுக்குக் கூறிய விடயங்களை மறந்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவுபடுத்துகிறோம்.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்ட சூட்டோடு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சையட் ராட் அல் ஹூசைன் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் மீது அதிருப்தியுற்று கடுமையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்த வேளையில், தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது எனவே ஒரு கலப்புப் பொறிமுறையினூடாக இலங்கையில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு விசாரணை நடத்தி நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் நான்கு விடயங்களை உள்ளடக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தையும் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார்.

அதற்கு அவர் அளித்த விளக்கத்தை நினைவு படுத்த விரும்புகிறோம். ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது முக்கியமல்ல. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, நான் தான் அமெரிக்காவிற்கும் ஜெனிவாவுக்கும் இடையில் பறந்து இந்த கலப்புப்பொறிமுறை யோசனையை முன்வைத்தேன்.

இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் கண்காணிப்புக்குள் தொடர்ந்தும் இருக்கும். அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசாங்கம் இதனை நிறைவேற்றாவிட்டால் ஐ.நா. கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இதனை நானே முயற்சித்து கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். எனவே இதன் வெற்றி தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்றும் சூளுரைத்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் எதனையும் நிறைவேற்றவில்லை. இருந்த போதிலும் 2017ஆம் ஆண்டு அந்தத் தீர்மானத்தில் எத்தகைய மாற்றமுமின்றி 2019ஆம் ஆண்டுவரை இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டாண்டு காலஅவகாசத்தை சுமந்திரன் எம் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதற்கு அவர் கூறிய விளக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் புதிய அரசியல் யாப்பு வரவிருக்கிறது. அதில் ஈழம் என்ற வார்த்தையைத் தவிர, அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று உறுதியளித்திருந்தார். இதே போன்று 2019ஆம் ஆண்டிலும் மேலும் இரண்டாண்டு கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று அதன் பயனை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அனுபவிக்கிறது.

ஓர் புதிய அரசியல் யாப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில், நான்கரை வருடங்களாக அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த அரசு தொடர்ந்து இருந்தால் மாத்திரமே புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வரமுடியும் என்ற அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையகத்திலும் நாடாளுமன்றத்திலும் கடந்த நல்லாட்சி அரசை தொடர்ச்சியாகக் காப்பாற்றி வந்தனர்.

அதேசமயம், இந்த புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துவிடுவேன் என்றும் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவேன் என்றும் கூறியதுடன் அது நிறைவேற்றப்பட்டால் தனது கடமை முடிந்துவிட்டது என்ற அடிப்படையில் தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வேன் என்றும் சுமந்திரன் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

இந்த அரசியல் யாப்பு தொடர்பான கருத்தாடல்களில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, சமஷ்டி இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என்பதிலும் எதுவித மாற்றமுமில்லை, ஆனால் அவை அனைத்தையும் எத்தகைய எதிர்ப்புமின்றி சுமந்திரனும் சம்பந்தனும் ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று புதிய அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று புலுடா விடுகிறார்கள்.

இதனூடாக இவர்கள் விக்னேஸ்வரனை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தையே ஏமாற்றியுள்ளனர். மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் யார் யாரை ஏமாற்றியுள்ளனர் என்பதற்கான சில சான்றுகள் மட்டுமே எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட பொழுதும், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் சரியான தடத்தில் போகவில்லை என்று நாங்கள் கூறியபொழுதும் புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வராமல் ஏமாற்றுகிறார்கள் எனறு நாங்கள் எச்சரித்த பொழுதும் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றும் கூட நீங்கள் நல்லாட்சி அரசு என்று பெயர்சூட்டிய அரசினால் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். மாறாக, சிங்கள ஆட்சியாளர்களை விட விக்னேஸ்வரன் தான் உங்களை ஏமாற்றியதாக நீங்கள் குறிப்பிடுவதனூடாக எவ்வளவு தூரம் நீங்கள் ஆளும் வர்க்கத்தின் விசுவாசியாக மாறியுள்ளீர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளீர்கள்.

தமிழ் மக்கள் உங்களது நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு உங்களது கருத்துகளை முன்வையுங்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142721

20 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாக்களிக்காதவன் விமர்சிக்க முடியாது , எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாது, மக்களுக்காக வீதியில் இறங்காதவர் விமர்சிக்க முடியாது ,அப்போ யார்தான் விமர்சிப்பது  
இப்படி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா கூத்தமைப்பினர்...?, அருந்தவபாலன் எங்கே தானும்  தாங்கள் சார்ந்த கட்சியினரும் மிகவும் தூய்மையானவர் என்றும் மக்களை ஏமாற்றாதவர்கள் என்று கூறுகிறார்...?
கூத்தமைப்பை விமர்சித்தால் உடனே இப்படியான அர்த்தமா ....?  ஒன்று மட்டும் உங்கள் கூற்றில் தெளிவாக விளங்குகிறது , கூத்தமைப்பின் மொள்ளமாரித்தனத்தை தோண்டியெடுத்தால் நீங்கள் மட்டும்  திறமா என்று மற்றவர்களை கேட்டு அந்த மொள்ளமாரித்தனத்தை மூடி மறைக்கும் வித்தையை செய்ய முற்படுகிறீர்கள் .
ஆனால் இனிமேலும் இது வேர்க்அவுட் ஆகாது
மக்களுக்காக  வேலையை பாரமெடுத்தவர்கள் ஏன் சொதப்பினார்கள் ,எதில் சொதப்பினர்கள் ,தெரிந்தே சொதப்பினார்களா ,யாருடன் கூட்டு சேர்ந்து யார் கூற்றை நம்பி சொதப்பினார்கள் ,ஆட்டையை போட்ட அத்தனை கால இழுத்தடிப்பிற்கும் யார் அக்கௌண்டபிலிட்டி இப்படி அனைத்திற்கும் பதில் சொல்லவேண்டும் 
அடுத்தவனை வாரி இழுத்து விட்டு விட்டு  ஒளிக்க முடியாது   

அருந்தவபாலன் ஒரு சுயநலவாதி என ஒரு அன்பர் இங்கு குறிப்பிட்டுள்ளார்। நான் கருது எழுதவேண்டாமென்று இங்கு குறிப்பிடவில்லை। இருந்தாலும் இந்த அருந்தவபாலனின் கூற்றை மீண்டும் வாசித்தால் நல்லது। 

ஆனால் தமிழ்மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை.சம்பந்தன் எதிர்பார்த்தது போல

* தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய
வாக்குறுதியை அவர் கைவிடவில்லை

* ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை

* இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை
* பதவி,பணம்,சுகபோகங்களுக்காக விலைபோகவில்லை
* சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை
* கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத்
துணை போகவில்லை என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே.

இந்த வெள்ளையடிப்பு எப்படி இருக்குது। வெள்ளையடிக்கப்படட கல்லறையாக இல்லாமல் இருந்தால் நல்லதுதான்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.