Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மறுபெயர் ஈழம்: சிங்கள இனவாதிகளை கடுப்பேற்றிய த கார்டியன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eelam-696x380.jpg

பிரித்தானியாவின் புகழ்பெற்ற இணையத்தளங்களில் ஒன்றான த.கார்டியன் ஊடகம், இலங்கையின் மறுபெயராக ஈழம் என குறிப்பிட்டுள்ளது.

பண்டைய இலங்கை ஈழம் என அழைக்கப்பட்ட வரலாற்று உண்மையை, இன்றைய சிங்கள இனவாதிகள் பலர் ஏற்பதில்லை. ஈழம் என்பது விடுதலைப் புலிகளினால் உருவாகக்ப்பட்ட இலட்சிய நிலம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஈழம், புலம்பெயர் தமிழர்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் என்ற ஒற்றை அர்த்தத்தையே இனவாதிகள் கற்பித்து வந்தனர்.

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் ஆங்கிலத்தில் ஈழம் தொடர்பான வரலாற்று தகவல்களை வெளிப்படையாக கூறியிருந்தது, சிங்கள இனவாதிகள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் த கார்டியன் இதழ், சுற்றுலா தொடர்பாக கேள்வி பதில் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கேட்கப்பட்ட கேள்வியொன்று- ஈழம் என்பது எந்த பிரபல சுற்றுலா தீவின் மறு பெயர் என கேட்கப்பட்டிருந்தது.

https://www.pagetamil.com/124445/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பூர்வீகப்பெயர் ஈழம்- கார்டியனில் வெளியான தகவலிற்கு எதிராக இலங்கை தூதரகம் போர்க்கொடி

கார்டியனில் வெளியான போக்குவரத்து புதிர் ஒன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கார்டியனிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை தூதரகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனை அகற்றவேண்டும் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவதுguardian-logo-448x309-300x207.jpg

பிரபலமான எந்த சுற்றுலாப்பயண தீவின் பூர்வீக பெயர் ஈழம்? என்ற இந்த இரண்டவாது புதிர் கேள்விக்கு இலங்கை சரியான விடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட தீவின் சமீபத்தைய கிளர்ச்சி அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப்புலிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ,சிறுவர்களை பலவந்தமாக சேர்த்து போரில் ஈடுபடுத்திய, ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொலை செய்த அமைப்பு.

 

ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு அது.
ஈழம் என்பது இலங்கையின் வடக்குகிழக்கில் தனிநாட்டை உருவாக்கும் இந்த அமைப்பின் கொள்கையை குறிப்பது, இது 1976 இல் அறிமுகப்படுத்தப்பட்டது,மேலும் ஈழம் என்பது இலங்கையின் சுதேசிய பெயராக ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை.

எழுத்தாளர் தடைசெய்யப்பட்ட அமைப்பையும் அவர்களின் கொள்கையையும் போக்குவரத்து தொடர்பான புதிரில் குறிப்பிட்டார் ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொள்கையை பரப்புவதற்கான தீய முயற்சி போல இது தோன்றுகின்றது,துல்லியமற்ற ஆராயப்படாத உள்ளடக்கங்களை வெளியிடுவதன் மூலம் இது உங்கள் பத்திரிகையின் ஆசிரிய பீட கொள்கைக்கு முரணாக உள்ளது.
குறிப்பிட்ட கட்டுரையிலிருந்து அந்த உள்ளடக்கத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது வரவேற்கப்படும், மேலும் இது தொடர்பில் மன்னிப்பு கோரவேண்டும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/41993

 

 

EYI3eoAXsAIsbTe-210x300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்

இலங்கை

பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'த கார்டியன்' பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள 'உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன் ஃப்ரைடே?' என்ற சுற்றுலா வினா விடைப் போட்டி ("Travel quiz: do you know your islands, Man Friday?") மூலமாகவே இந்த சர்ச்சை வெடித்துள்ளது

இந்த போட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட வினா ஒன்றினால் இந்த சர்ச்சை தோன்றியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த போட்டியின் இரண்டாவது வினாவானது, ஈழம் என்பது எந்த பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீக பெயர்? என வினவப்பட்டுள்ளது.

இந்த வினாவிற்கான தெரிவு செய்யப்பட வேண்டிய விடைகளில் இலங்கையும் இடம் பெற்றுள்ளதே இந்த சர்ச்சைக்கான காரணம் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

எவரேனும் ஒருவர் சரியான பதிலாக இலங்கையை குறிப்பிடும் பட்சத்தில், அதில் இந்த தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியை நடத்திய அமைப்பின் முழுப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மேலதிக விளக்கம் வெளியிடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவிக்கிறது.

இந்த தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு 'த கார்டியன்' பத்திரிகைக்கு அந்த நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் பல்வேறு விடயங்களை 'த கார்டியன்' நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், அதில் சிறுவர் போராளிகள் இடம் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த அமைப்பினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் பிரிட்டினுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு உருவான இந்த அமைப்பின் சித்தாந்தம் ஈழம் என குறிப்பிடுகிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் என்ற பெயர் ஒருபோதும் இலங்கையின் பூர்வீகப் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தி கார்டியன் பத்திரிகை, இலங்கை தீவு தொடர்பான அந்தக் கேள்வியை தமது இணையப் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டது.

"சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னரே ஈழம் என்று இலங்கை அழைக்கப்பட்டது"

புஸ்பரட்ணம்படத்தின் காப்புரிமைUMA CHANDRA PRAGASH Image captionபுஸ்பரட்ணம்

இலங்கை அல்லது சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்றே இலங்கை அழைக்கப்பட்டதாக தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட்டினப்பாலை, சோழர் கல்வெட்டுக்கள், இராஜராஜ சோழம் போன்ற வரலாற்று இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் ஈழம் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டமைக்கான பல்வேறு சான்றுகள் இன்றும் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஈழம் என்ற பெயரை இந்த அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதற்காக, முன்னர் பயன்படுத்தியதை இல்லை என அரசாங்கத்தால் கூற முடியாது என பேராசிரியர் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் ஈழம் என்று சொல்ல முடியாது என்பது வேறு என கூறும் அவர், ஈழம் என்று சொல்லப்பட்டதை இல்லை என கூறுவதும் தவறு என்றும் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்திலிருந்து இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டமைக்கான பல்வேறு சான்றுகள் காணப்படுவதாகவும் பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52699833

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,

அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,

வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்

நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்

ஏமாப்ப இனிது துஞ்சி."

-- பட்டினபாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.