Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம்

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

 

காத்மாண்டு:

இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார்.

 
நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பாராளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதால் விவாதம் நடைபெறவில்லை. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முதலில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெறுகிறது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

275 உறுப்பினர்கள் கொண்ட சபையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மசோதா நிறைவேறும். பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், மேல் சபையான தேசிய சபைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அங்கும் இதேபோன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். தேசிய சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டமாக்கப்படும்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13154159/1607496/Nepal-Parliament-set-to-vote-on-new-map-which-covers.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம்: அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம்: அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
 

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.
பதிவு: ஜூன் 14,  2020 04:00 AM
காட்மாண்டு,

ஏற்கனவே லடாக், சிக்கிம் உள்ளிட்ட எல்லை பகுதியில் சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இப்போது நேபாளமும் தன் பங்குக்கு இந்தியாவுக்கு இடையூறு செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகள் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா. இந்த பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சுலாவையும் லிபுலேக் பகுதிகையும் இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் திறந்து வைத்தார்.

இந்த சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக குற்றம்சாட்டிய நேபாளம், சாலையை திறந்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து இந்தியா விளக்கம் அளித்த போதிலும் நேபாள அரசு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை.

இந்த நிலையில், இந்தியாவின் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை அந்த நாட்டு அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதை வன்மையாக கண்டித்துள்ள இந்தியா, நேபாளத்தின் புதிய வரைபடம் தன்னிச்சையானது என்றும், அதற்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் கூறி இருக்கிறது.

ஆனால் தாங்கள் தயாரித்துள்ள புதிய வரைபடம் சரியானதுதான் என்றும், இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த நவம்பர் மாதம் முதலே இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நேபாள அரசு கூறி உள்ளது. இந்த விவகாரம் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்திய-நேபாள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் சீதாமார்கி மாவட்டத்தில் நேபாள எல்லையை யொட்டி அமைந்துள்ள பன்டிஜங்கி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நேபாள ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலி ஆனார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். ஒருவரை அவர்கள் பிடித்துச் சென்றனர்.

மோதல் போக்கு

நேபாளத்தின் இந்த செயல் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசின் செயல்பாடுகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து நேபாளத்துக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சப்ளை தொடரும் என்று நேபாள அரசுக்கு இந்தியா உறுதி அளித்து இருக்கிறது. என்றாலும் நேபாள அரசு இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடிக்கிறது.

3 இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் நேபாள அரசு திருத்தம் செய்தது. இதற்கு ஒப்புதலை பெறுவதற் காக நேபாள அரசு நேற்று நாடாளுமன்றத்தை கூட்டியது.

நாடாளுமன்ற கீழ்சபை கூட்டத்தில் அரசியல் சாசன திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா (நேபாளம்), ராஷ்ட்ரீய பிரஜாதந்திரா ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளும் மசோதாவை ஆதரித்தன.

இந்த மசோதா பின்னர் மேல்-சபையில் (தேசிய அசெம்ப்ளி) நிறைவேறியதும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படும்.

நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு ஆதரவாக அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த செயற்கையான பரவலாக்கம் எந்தவித வரலாற்று உண்மையையோ, ஆதாரத்தையோ அடிப்படையாக கொண்டது அல்ல. இதை ஏற்க முடியாது. இது எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தற்போதைய புரிந்துணர்வுக்கு எதிரானது’ என்று தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/India/2020/06/14022031/New-map-with-Indian-parts-Constitutional-Amendment.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல,எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது -ராஜ்நாத் சிங்

இந்திய-நேபாள உறவு  சாதாரணமானது அல்ல,எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது -ராஜ்நாத் சிங்

 

இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல, உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பதிவு: ஜூன் 15,  2020 15:38 PM
புதுடெல்லி

நேபாளத்துடனான அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில்,பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்,  நேபாளத்திற்கு இந்தியர்களிடையே ஒருபோதும் கசப்பு இருக்க முடியாது" என்று கூறி உள்ளார்.

பா,ஜனதா கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-


லிபுலேக்கிலிருந்து தார்ச்சுலா வரை சாலை அமைப்பதன் காரணமாக நேபாள மக்களிடையே ஏதேனும் தவறான கருத்து எழுந்திருந்தால், நாம் ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஒரு தீர்வைக் காணலாம்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிணைப்பு சாதாரணமானது அல்ல. நாங்கள் ரோட்டி-பேட்டியால்' பிணைக்கப்பட்டுள்ளோம், உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது.இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அரசு தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் என கூறினார்

 

https://www.dailythanthi.com/News/India/2020/06/15153845/IndiaNepal-Ties-Bound-By-RotiBeti-No-One-Can-Break.vpf

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல,எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது -ராஜ்நாத் சிங்

இந்திய-நேபாள உறவு  சாதாரணமானது அல்ல,எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது -ராஜ்நாத் சிங்

 

இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல, உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பதிவு: ஜூன் 15,  2020 15:38 PM
புதுடெல்லி

நேபாளத்துடனான அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில்,பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்,  நேபாளத்திற்கு இந்தியர்களிடையே ஒருபோதும் கசப்பு இருக்க முடியாது" என்று கூறி உள்ளார்.

பா,ஜனதா கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-


லிபுலேக்கிலிருந்து தார்ச்சுலா வரை சாலை அமைப்பதன் காரணமாக நேபாள மக்களிடையே ஏதேனும் தவறான கருத்து எழுந்திருந்தால், நாம் ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஒரு தீர்வைக் காணலாம்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிணைப்பு சாதாரணமானது அல்ல. நாங்கள் ரோட்டி-பேட்டியால்' பிணைக்கப்பட்டுள்ளோம், உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது.இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அரசு தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் என கூறினார்

 

https://www.dailythanthi.com/News/India/2020/06/15153845/IndiaNepal-Ties-Bound-By-RotiBeti-No-One-Can-Break.vpf

உடைக்க முடியாது என்று சீனாவுக்கு கூறுகிறாரா ராஜ்நாத் சிங். 😂😂 

ஏற்கனவே பாரிய வெடிப்பல்ல பிழவு ஏற்பட்டுவிட்டதை நேபாளம் தெழிவாகக் கூறிவிட்டதே மினிஸ்ரர் ராஜ்நாத் சிங். 😜😜 

உலகில் இந்தியாவுக்கு இருந்த ஒரே ஒரு நட்பு சக்தி இலங்கைத் தமிழர் மட்டுமே. அதையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்தாயிற்று.  இனி என்ன நாங்கள் நாட்டுக் கூத்து பார்க்க வேண்டியதுதான் மிச்சம் 😜😜😜

(வடிவேலுவின் நகைச்சுவைகள் ஏனோ நினைவிற்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. 😂😂)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் நேபாளம் மோதுவதற்கு காரணம் என்ன? - அரசியல் வல்லுநர்கள் கருத்து

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் நேபாளம் மோதுவதற்கு காரணம் என்ன? - அரசியல் வல்லுநர்கள் கருத்து

 

எல்லை பிரச்சினையில் நேபாளம் இந்தியாவுடன் மோதுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பதிவு: ஜூன் 16,  2020 04:30 AM
புதுடெல்லி, 

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையே நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.


இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக நகர்த்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், பல தசாப்தங்களாக எல்லை பிரச்சினையும் நிலவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளதுதான்.

இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேறியது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இந்த சேர்க்கை விரிவாக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் கூறுகிறது. இந்த பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் வலுவான பொருளாதார ஆதரவு, உள்நாட்டு அரசியல் சலசலப்புகள், நேபாள இளம் தலைமுறையின் விருப்பங்கள் மற்றும் இந்தியாவின் மெத்தனப்போக்கு ஆகியவையே நேபாளத்தின் நடவடிக்கைக்கு காரணம் என மூத்த அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2008 முதல் 2011 வரை நேபாளத்துக்கான இந்திய தூதராக பணியாற்றிய ராக்கேஷ் சூட் இதுபற்றி கூறுகையில் “இரு நாடுகளும் தங்களின் நட்புரவை மிகவும் ஆபத்தான நிலைக்கு அனுமதித்துள்ளன. இந்தியா நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பத்திலேயே முன் வந்திருக்க வேண்டும். தற்போது நேபாளர்கள் ஆழமாக இறங்கிவிட்டார்கள். இதில் இருந்து வெளிவருவது கடினம்“ என கூறினார்.

அரசியல் சலசலப்பு

2013 முதல் 2017-ம் ஆண்டு வரை நேபாளத்திற்கான இந்திய தூதராக பணியாற்றிய தூதர் ரஞ்சித் ரே, “நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது நிலையை பலப்படுத்துவதற்கும் உள்நாட்டு அரசியல் சலசலப்புகளை வெல்வதற்கும் புதிய வரைபடத்துடன் முன்னேற முடிவு செய்துள்ளார்“ என்றார்.

மேலும் “இந்தியாவுக்கு எதிரான உணர்வை வளர்ப்பது தேர்தலில் வெற்றிபெற கேபி ஷர்மா ஒலிக்கு உதவியது. தற்போது கொரோனா விவகாரத்தில் அவரது அரசின் மீது எழுந்துள்ள அழுத்தங்களை சமாளிக்க இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை உதவும் என அவர் நினைக்கிறார்“ என்று ரஞ்சித் ரே கூறினார்.

தங்களுக்கு சீனாவின் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக அரசியல் வல்லுனரும், பேராசிரியருமான எம்.டி. முனி கூறுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் “நேபாளம் கிளப்பியுள்ள இந்தப் பிரச்சினையில் சீனா ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மற்றுமொரு முக்கிய காரணம் நேபாளம் புதிய உறவுகளை நோக்கி செல்கிறது. அவர்கள் பழைய கட்டமைப்பை பற்றி கவலைப்படவில்லை. இதற்கு காரணம் சீனாவில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்களாக உள்ளனர் அவர்களின் விருப்பம் புதியதாக உள்ளது அதனை இந்தியாவால் நிறைவேற்ற முடியாது“ எனக் கூறினார்.

இதனிடையே நேபாளம் அனைத்து வகையான அத்தியாவசிய தேவைகளுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியாவுடனான உறவை மோசமடைய விடக்கூடாது என நேபாளத்தின் மூத்த பொருளாதார நிபுணர் போஸ் ராஜ் பாண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “நேபாளஇந்தியா உறவுகளை சேதப்படுத்த அனுமதிக்கக்கூடாது. பிரச்சினையை விரைவாக தீர்க்க ஒரு உரையாடல் தேவை அத்தியாவசிய பொருட்களுக்காக நேபாளம் இந்தியாவை சார்ந்துள்ளது. நேபாள அரசின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், அது நாட்டில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்“ எனக் கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16020437/On-the-boundary-issue-What-is-the-reason-for-a-confrontation.vpf

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

உலகில் இந்தியாவுக்கு இருந்த ஒரே ஒரு நட்பு சக்தி இலங்கைத் தமிழர் மட்டுமே. அதையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்தாயிற்று.  இனி என்ன நாங்கள் நாட்டுக் கூத்து பார்க்க வேண்டியதுதான் மிச்சம்

 

தேசியத் தலைவர் திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்தார்.
கெடுகுடி தலைவரின் சொல்லு கேக்கலையே.

  • கருத்துக்கள உறவுகள்

"""""2008 முதல் 2011 வரை நேபாளத்துக்கான இந்திய தூதராக பணியாற்றிய ராக்கேஷ் சூட் இதுபற்றி கூறுகையில் “இரு நாடுகளும் தங்களின் நட்புரவை மிகவும் ஆபத்தான நிலைக்கு அனுமதித்துள்ளன. இந்தியா நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பத்திலேயே முன் வந்திருக்க வேண்டும். தற்போது நேபாளர்கள் ஆழமாக இறங்கிவிட்டார்கள். இதில் இருந்து வெளிவருவது கடினம்“ என கூறினார்.""""

அப்படிப் போடு அரிவாளை 😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாள-இந்தியா உறவுகள் மோசமடையக்கூடாது; இந்தியாவுக்கு மாற்று சீனா இல்லை- நேபாள பொருளாதார நிபுணர்

நேபாள-இந்தியா உறவுகள் மோசமடையக்கூடாது; இந்தியாவுக்கு மாற்று சீனா இல்லை- நேபாள பொருளாதார நிபுணர்

நேபாள-இந்தியா உறவுகள் மோசமடையக்கூடாது; சீனா இந்தியாவுக்கு மாற்றனதா இல்லை என்று நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஷ் ராஜ் பாண்டேஎச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பதிவு: ஜூன் 16,  2020 12:06 PM
காட்மாண்டு

நேபாளத்தின் முன்னணி பொருளாதார நிபுணர் தெற்காசியா கண்காணிப்பகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே கூறியதாவது:-

நேபாள நாடு அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் அதன் தெற்கு அண்டை நாடுகளைச் சார்ந்து இருப்பதால் நேபாள-இந்தியா உறவு மோசமடையக்கூடாது என்றும் சீனாவை இந்தியாவுக்கு ஒரு "மாற்று" என்று கருதுவது விவேகமற்றது.


நேபாளம்  இந்தியாவின் எல்லைகளால் சூழப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நிலைமை பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும். இந்தியா பதிலடி கொடுத்தால் அது நாட்டில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்" 

நேபாள-இந்தியா உறவுகள் சேதமடைய அனுமதிக்கக் கூடாது, பிரச்சினையை விரைவாக தீர்க்க ஒரு பேச்சுவார்த்தை தேவை.

அத்தியாவசியப் பொருட்களுக்காக நேபாளம் இந்தியாவைச் சார்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து எங்கள் இறக்குமதி மூன்றில் ஒரு பங்காகும், ஆனால் சீனாவிலிருந்து வெறும் 14 சதவீதம் மட்டுமே. அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதைப் பொறுத்தவரை சீனா இந்தியாவுக்கு மாற்றாக இருக்க முடியாது.

நாங்கள் கிழக்கில் மெச்சியில் இருந்து மேற்கில் மகாகாலி வரை இந்தியாவுடன் வர்த்தக புள்ளிகளைக் கொண்டுள்ளோம், ஆனால் வடக்கு சீனா போன்ற அண்டை நாடுகளுடன், எங்களிடம் சில போக்குவரத்து புள்ளிகள் மட்டுமே உள்ளன, அவற்றுக்கும் உள்கட்டமைப்பு இல்லை.

வடக்கிலிருந்து நேபாளத்திற்கு கடல் அணுகல் 4,000 கி.மீ ஆகும், இது கொல்கத்தாவில் இந்தியப் பக்கத்திலிருந்து கிடைத்ததை விட மூன்று மடங்கு அதிக  தூரம் ஆகும்.

எங்கள் ஏற்றுமதியைப் பொருத்தவரை, நமது மொத்த ஏற்றுமதியில் 60 சதவீதத்தை இந்தியா பெறுகிறது, அதே நேரத்தில் சீனாவுக்கு இரண்டு சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

பணம் அனுப்புவதில், இந்தியாவில் இருந்து மொத்தமாக அனுப்பப்படும் பணத்தில் 15 சதவீதத்தை நாங்கள் பெறுகிறோம், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன்) ஒப்பிட்டுப் பார்த்தால், அது 4-5 சதவீதமாக வருகிறது என கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16120613/NepalIndia-ties-shouldnt-deteriorate-China-no-substitute.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கடும் எதிர்ப்பு: 3 இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து வெளியிட்ட வரைபட மசோதா: நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

nepal-s-parliament-unanimously-passes-bill-to-redraw-map-incorporating-3-indian-areas காத்மாண்டு நகரில் உள்ள நாடாளுமன்ற மேலவையில் இன்று மசோதா நிறைவேறிய காட்சி: படம் ஏஎன்ஐ

காத்மாண்டு


இந்தியாவின் 3 எல்லைப்பகுதிகளை இணைத்து நேபாளம் தன்னிட்சையாக வெளியிட்ட வரைபடத்தின் அரசியல் திருத்த மசோதா இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மேல்சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றியது.

நம் நாட்டு எல்லைகளை இணைத்துக் கொண்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அந்த எதிர்ப்பையும் மீறி நேபாளம் செயல்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த அரசியல், நிர்வாக வரைபடத் திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தின் மக்களவையில்(கீழ்சபை) நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மேல்சபையில் நிறைவேற்றியுள்ளது

நேபாள நில திருத்தத்துறை அமைச்சர் பத்மா அர்யால் கடந்த மாதம் 20-ம் தேதி அந்நாட்டின் திருத்தப்பட்ட அரசியல், நிர்வாக ரீதியான வரைபடத்தை வெளியிட்டார். அதில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளான “லிபுலேக்”, “லிம்பியாதுரா”, “கலாபானி” ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்திருந்தது.

ஏற்கெனவே கடந்த 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம், தார்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்தவைத்தபோது நேபாள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்தியா புதிதாக அமைத்துள்ள 80 கி.மீ. சாலை எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த மத்திய அரசு முழுவதும் அந்த சாலை இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என உறுதி செய்தது.

இந்த சம்பவத்தால் மிகுந்த அதிருப்தியில் இருந்த நேபாள அரசு இந்தியத் தூதர் வினய் மோகன் வத்ராவுக்கு சம்மன் அனுப்பிய நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கவாலி, இந்தியாவின் செயலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்.

1592473038756.jpg

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த இந்திய ராணுவத் தலைவர் எம்எம் நரவானே, “நேபாளத்தின் செயலுக்குப் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள், இது சீனாவாக இருக்கலாம்” எனக் குற்றம் சாட்டினார்.

நேபாளம் மற்றும் இந்தியா எல்லைகளுக்கு இடையே இருக்கும் மேற்குப்பகுதிதான் கலாபானி. இரு நாடுகளும் கலாபானியை தங்கள் பகுதியாக உரிமை கொண்டாடுகின்றன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சை நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக நேபாள அரசைக் கண்டித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “ . இந்தியாவின் எல்லைப்பகுதிகளாக இருந்து வரும் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்து திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற மரியாதையும் மதிக்க வேண்டும் என நேபாளத்துக்கு வலியுறுத்துகிறோம்.

நேபாளத்தின் இந்த தன்னிச்சையான செயல் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நிலுவையில் இருக்கும் எல்லைப்புற சிக்கல்களை பேசித் தீர்ப்பதற்கு எதிராக இருக்கிறது. இதுபோன்ற செயற்கையாக தனது எல்லையை விரிவுபடுத்திக்காட்டும் நேபாளத்தின் செயலை ஒருபோதும் இந்தியா ஏற்காது .

1592473071756.jpg

இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவது நேபாளத்துக்குத் தெரியும். நியாயமற்ற வரைபடத்தின் மூலம் நிலப்பகுதிகளை தங்களுடையதாக காட்டும் நேபாளத்தின் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா புதிதாக எல்லை வரைபடத்தை வெளியிட்ட ஆறு மாதங்களில் நேபாளம் புதிதாக இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் எந்த எச்சரிக்கையும் காதில் வாங்காத நேபாள அரசு எல்லைகளைத் திருத்தும் அரசியல் திருத்த மசோதாவை கடந்த சனிக்கிழமை கீழ்சபையில் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்நிலையில் 57 உறுப்பினர்கள் கொண்ட மேலளவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மசோதாவை அறிமுகம் செய்தது நேபாள அரசு. இந்த மசோதாவுக்கு எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காததால் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் கணேஷ் திமில்சினா இன்று அறிவித்தார்

இனி இந்த மசோதா நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் கையொப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கையொப்பமிட்டால் அது அதிகாரபூர்வமாகி நேபாளத்தின் அனைத்து அரசு ஆவணங்களிலும் செல்லத்தக்க வரைபடமாக அங்கீகரிக்கப்படும்

https://www.hindutamil.in/news/world/560006-nepal-s-parliament-unanimously-passes-bill-to-redraw-map-incorporating-3-indian-areas-4.html

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

 

இனி இந்த மசோதா நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் கையொப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கையொப்பமிட்டால் அது அதிகாரபூர்வமாகி நேபாளத்தின் அனைத்து அரசு ஆவணங்களிலும் செல்லத்தக்க வரைபடமாக அங்கீகரிக்கப்படும்

நேபாள அதிபர்.... டக்கென்று ஒரு கையெழுத்தை வைத்து விட்டு, புதிய வரை படத்தை தயாரிக்க வேண்டியதுதானே....

ஏன் தாமதிக்கின்றார்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2020 at 06:31, தமிழ் சிறி said:

நேபாள அதிபர்.... டக்கென்று ஒரு கையெழுத்தை வைத்து விட்டு, புதிய வரை படத்தை தயாரிக்க வேண்டியதுதானே....

ஏன் தாமதிக்கின்றார்? 

புதிய வரைபடத்தை அச்சிட சீனாவுக்குத்தான் ஓடர் போகும் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2020 at 03:31, தமிழ் சிறி said:

நேபாள அதிபர்.... டக்கென்று ஒரு கையெழுத்தை வைத்து விட்டு, புதிய வரை படத்தை தயாரிக்க வேண்டியதுதானே....

ஏன் தாமதிக்கின்றார்? 

இந்தியாவில் இருந்து பெட்டிகள் வந்திறங்கினால் திட்டத்தையே கையைவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.