Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

நீங்கள் எந்த துறை என்று தெரியவில்லை. IT என்றால்.... புதிய ஆட்களுக்கு இந்த மாதிரி கேட்ப்பார்களோ தெரியவில்லை.

ஆனால் நெடுக்கர் மற்றும் உடையார் சொன்னது தான் நான் அனுபவப்பட்டது.

இந்த ஒட்டக கிரந்தம் எல்லாம் contracting வேலைகளில் இல்லை. 

இன்டெர்வியூ ஒன்றில், ஒரு மேனேஜர் சும்மா புளுகினார். இரண்டு கேள்விகளில், வந்திருப்பவர் வேலை செய்வாரோ, இல்லையோ என்று பிடித்து விடுவேன் என்றார்.

அந்த இரண்டு கேள்விகளிலேயே, உம்முடன் வேலை செய்ய முடியுமோ, இல்லையோ என்று நானும் பிடித்து விடுவேன் அல்லவா என்றேன். அங்கிருந்த வேறு ஆட்கள் கொல் என்று சிரிக்க, மேனேஜருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. ஐ லைக் தட் என்றார்.

10 நிமிடத்தில் முடிந்து போன இன்டெர்வியூ, அங்கேயே வேலையினை கான்போர்ம் பண்ணியதுடன்.... ஒன்றரை மணிநேரம், வேறு பல விடயங்களை பேசுவதில் முடிந்தது. அது team work உதாரணம்.

இனொரு இடத்தில், ரிப்போர்டிங் மேனேஜர் உடன் அவரது பாஸ்சும் உக்கார்ந்து கொண்டார். ரிப்போர்டிங் மேனேஜர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்ததும், அல்லது சொல்லி முடிக்கும் போது, அவர் இடையிடையே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரோட சரி வராது என்று தோன்றியது. would you mind me asking some questions என்றேன்.

sure என்றார். இங்கே இவளவு காலமாக வேலை செய்கிறாய் என்றேன். சுமார் 13 மாதம் என்றார். ரிப்போர்டிங் மேனேஜர் 6 வருடங்கள்.

நான் சொன்னேன். நான் ஒரு contractor ஆக பல interview
போயிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். என்னை, ரிப்போர்டிங் மேனேஜர் உடன் பேச விட்டால் தானே இந்த வேலை எனக்கு பொருத்தமானதா என்று நான் முடிவு செய்ய முடியும். அதே போல, உனக்கு ரிப்போர்ட் பண்ணுபவர், நான் சரியாக பொருந்துவேனா என தீர்மானிக்க முடியும்.

இன்டெர்வியூ ஒரு இரு வழி நடவடிக்கை ஆகவே, ரிப்போர்டிங் மேனேஜர் செலக்ட் செய்பவரை, நீ தனியே இன்டெர்வியூ பண்ணுவதே சரியானது. இங்கிருந்து எமது வேலைகளை குழப்புவது சரியான முறை அல்லவே என்றேன்.

சாரி சொல்லி வெளியேற எழுந்தார். நானும், நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன். அடுத்து வருபவருக்கு, பாஸ் தொந்தரவு இன்றி முறையாக நடந்து இருக்கும்.

சிலவேளைகளில், மூன்று, நான்கு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து, technical interview என்று தொடங்குவார்கள். முதலாவது கேள்வி இலகுவாகவே இருக்கும். பதிலை ஓழுங்காக சொல்லி  அதிலிருந்து இழுத்துக் கொண்டு போய்.... அந்த கேள்வியின் நீட்சியாக... இன்னொரு விசயம் அதில இருக்கிறது பார்த்திருப்பாயே... எனக்கு ஒரு ப்ராஜெக்ட் ல இப்படி ஒரு பிரச்சனை வந்தது... அதனை இப்படி செய்தேன்... என்று கொண்டு போகவேண்டும். உனக்கு அப்படி பிரச்சனைகள் ஏதும் வந்ததா என்று கேட்க வேண்டும்.

அவருக்கு ஓம் என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று குழம்பி விடுவார். அவர் சடையிறதை அப்படியே உணரலாம். 
 
இது எமது authority இணை உறுதிப்படுத்தும் வேலை.

அப்படி செய்யும் போது, ஆகா, இவன் நமக்கு இங்கினையே ஆப்படிக்க போறான் போலை கிடக்குது என்று 'ஐயா... எனக்கு கேட்கத்தான் தெரியும், பதில் தெரியாது' என்பது போல.... மேனேஜர் இடம்... அவ்வளவு தான் கேள்விகள்... I am happy with technical skiils என்று முடித்து விடுவார்.

சிலவேளை அவர் தரமான வேலையாள் ஆக இருந்தால், பேச்சு அதே வழியில் வேகமாக நகர்ந்து போகையில்.... 'நாம் இருவரும்... அடுத்தவர்களை போரடித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா' என்று சரியான நேரத்தில் சொல்ல, மேனேஜர் சிரித்துக் கொண்டே, நோர்மல் கேள்விகளுக்கு நகர்வார்.

இன்டெர்வியூ ஒரு உளவியல் கலை. 15 நிமிடம் முதல் 40 நிமிடத்துக்குள் நம்மை வித்து விட வேண்டும். முதல் 10 நிமிடம், அவர்கள் தமது நிறுவனம், ப்ராஜெக்ட் பற்றி சொல்லி அடுத்த 10 நிமிடம் முதல் எம்மிடம் பந்தினை எறிவார்கள். அதனை லாவகமாக கையாள்வதே இன்டெர்வியூ தந்திரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

வீட்ட இரூங்கோ காசு தாறம் எண்டு அரசாங்கமே சொல்லும் போது நீங்கள் நேர்முக தேர்வொடு வாறீங்கள்..

நீங்கள் சொன்னது நிரந்தர வேலை ஆட்களுக்கு அரசு தரும் உதவி. உங்கள் நிறுவனம் சம்பளம் தருவதாக தவறாக நினைக்காதீர்கள். இன்று பல நிறுவனங்கள் வேலை இழப்புகள் குறித்து அறிவித்து பலருக்கு அதிர்சியினை கொடுத்துள்ளார்கள்.

Travis Perkins to cut 2,500 jobs and shut 165 stores in UK

Jaguar Land Rover to cut more than 1,000 agency staff in UK

Bleak day for UK as Centrica, Johnson Matthey and Heathrow announce big job losses.

Airline job losses could be on scale of 1980s mining industry, report warns

UK GDP falls by record 20.4% in April as lockdown paralyses economy

*********

பிரதமர் ஜஸ்டின், உங்களுக்கு காசினை தனது பாக்கெட்டில் இருந்து தரவில்லை. வரிப்பணம் வர, நிறுவனங்கள் இயங்க வேண்டும். நாம் வேலைக்கு போயே ஆக வேண்டும்.

இப்போது, முட்டை முதல் வந்ததா, கோழி முதல் வந்ததா என்பது போல, நிறுவனத்துக்கு வருமானம் வர, அவர்களது பொருட்களை, சேவைகளை வாங்குபவர்களிடம் காசு இருக்க வேண்டும்.

அந்த காசு புழங்க வேண்டும் என உங்களுக்கு பணம் தந்து , பொருளாதாரத்தினை முடுக்கி விடுவதே அரசு செய்வது. 

*********

லோக்கடவுன் தொடங்கியவுடன் முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் காண்ட்ராக்டர்கள் தான்.

இன்றில் இருந்து, இங்கே UK இல் எல்லாம் ஓரளவுக்கு நார்மலா வருகுது.

முதலில் வேலைக்கு தேவையானவர்களும் காண்ட்ராக்டர்கள் தான். இனி இன்டெர்வியூக்கள் தொடங்கி விடும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 20:12, ரதி said:

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

எதுக்கெடுத்தாலும் பெண்ணியம் என்று குதிப்பவர்கள்  கூட ஆண்கள் மூளைப்பக்கம்  இருந்துதான் சிந்தனை ஏன் இப்படி இருக்க கூடாது .

ஓடிக்கொண்டு வரும் அழகான காரை அந்த ஆழகான  பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பாதுகாப்பாய் காரில் அவவின் வீட்டுக்கு போகச்சொல்லி விட்டு உயிர்காத்த நண்பனுடன் கதைத்தவாறு நடையை கட்டி இருப்பம் எப்பவும் பெண்கள் வயதானவர்கள் முன்னுக்கு என்று நமக்கு வரும்  interview ஆட்க்கள் பெண்களாக இருந்தால் அநேகமா இதுதான் என் பதிலா இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீங்கள் தொடர்ந்து நடையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்........!

அழகான பெண்ணிடம் போன கார் மீண்டும் உங்களிடம் வந்து சேர வேண்டும்......!

அப்படியே வந்தாலும் அது காராக வருமா கறார் ஆக வருமோ தெரியாது......!    🤔

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

நீங்கள் தொடர்ந்து நடையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்........!

அழகான பெண்ணிடம் போன கார் மீண்டும் உங்களிடம் வந்து சேர வேண்டும்......!

அப்படியே வந்தாலும் அது காராக வருமா கறார் ஆக வருமோ தெரியாது......!    🤔

என்னெண்டு லைசென்ஸ் பாஸ் பண்ணுதுகள் என்ற பலத்த சந்தேகம் உண்டு இது நேர்முகதேர்வுக்குத்தானே அந்த கதை ரியல் வேறை 😄

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை இந்த நேர்முக தேர்வு செய்பவர்கள் /தொழில் தருனர் எல்லோருமே சுயநலவாதிகள் ‌. கடந்த‌ 25 வருடங்களாக பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் கம்பனிகளில் வேலை செய்து அலுத்து விட்டது.

இப்பொழுது எனக்கென்ன்று சுயமாக எதாவது கட்டியெழுப்ப முயல்கின்றேன். அதற்கான நேரம் வந்து விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, colomban said:

என்னை பொறுத்தவரை இந்த நேர்முக தேர்வு செய்பவர்கள் /தொழில் தருனர் எல்லோருமே சுயநலவாதிகள் ‌. கடந்த‌ 25 வருடங்களாக பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் கம்பனிகளில் வேலை செய்து அலுத்து விட்டது.

இப்பொழுது எனக்கென்ன்று சுயமாக எதாவது கட்டியெழுப்ப முயல்கின்றேன். அதற்கான நேரம் வந்து விட்டது 

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

அதுதான் ஓமனக்குட்டியை பத்தி விலாவாரியா சொன்னவர் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

1 hour ago, Nathamuni said:

அதுதான் ஓமனக்குட்டியை பத்தி விலாவாரியா சொன்னவர் தானே.

உண்மை மனம் சோர்ந்துபோய் சொல்லிகின்றேன். எல்லா கம்பனிகளும் அப்படித்தான்.
இனிமேல் எந்த பெரிய கம்பனி கூப்பிட்டலும் போக மாட்டேன். ஒரு பெட்டிக்கடையாவது போட்டு வாழுவேன்
எனக்குன்று ஒரு உருவாக்க வேண்டும் என்பது ஒரு ஆசை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

உண்மை மனம் சோர்ந்துபோய் சொல்லிகின்றேன். எல்லா கம்பனிகளும் அப்படித்தான்.
இனிமேல் எந்த பெரிய கம்பனி கூப்பிட்டலும் போக மாட்டேன். ஒரு பெட்டிக்கடையாவது போட்டு வாழுவேன்
எனக்குன்று ஒரு உருவாக்க வேண்டும் என்பது ஒரு ஆசை.

பெட்டிக்கடை எல்லாத்தையும் விட்டுப்போட்டு, ஒன்லைனில் ஏதாவது செய்யப்பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎06‎-‎2020 at 17:42, பெருமாள் said:

எதுக்கெடுத்தாலும் பெண்ணியம் என்று குதிப்பவர்கள்  கூட ஆண்கள் மூளைப்பக்கம்  இருந்துதான் சிந்தனை ஏன் இப்படி இருக்க கூடாது .

ஓடிக்கொண்டு வரும் அழகான காரை அந்த ஆழகான  பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பாதுகாப்பாய் காரில் அவவின் வீட்டுக்கு போகச்சொல்லி விட்டு உயிர்காத்த நண்பனுடன் கதைத்தவாறு நடையை கட்டி இருப்பம் எப்பவும் பெண்கள் வயதானவர்கள் முன்னுக்கு என்று நமக்கு வரும்  interview ஆட்க்கள் பெண்களாக இருந்தால் அநேகமா இதுதான் என் பதிலா இருக்கும் .

போன கார் திரும்பி வராது என்று அவர்களுக்கும் தெரியும்  ...சொந்தக் காரையே ஒழுங்காய் பாதுகாக்க தெரியாதவரை நம்பி எப்படி உங்களுக்கு வேலை கொடுப்பார்கள் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

அது இன்ரவியூ வைக்கும் ஆட்களின் தலையெழுத்து .முக்கியமாய் இன்ரவியூவ் பண்ணுபவர்கள்  என்ன உடல் மொழி புரிகிறார்கள் என்று பார்க்கணும் அந்த இடத்தில் நீங்கள்  இருந்தால் சொல்லவே வேண்டாம் வந்த வேகத்திலேயே திரும்பி விடுவேன் .😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.