Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பொங்கும் சித்தம் தங்கும் சக்தி லிங்கமாய் தோன்றுகின்ற
அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் நலம் நலமே

அண்ணாமலையானே சிவமே அண்ணாமலையானே
அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே

ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் வாழ்த்தவே அருளைபொழியும் ஜோதீசா
ஆயிரம் ஆயிரம் அற்புதம் செய்யும் ஆதிலிங்கனே அருணேசா

அக்னி லிங்க கோலம் காட்டும் அண்ணாமலையே
அம்மையப்பனாக வாழும் அருணாசலனே

அஷ்ட லிங்கம் ஆதி லிங்கம் ஜோதிலிங்கமாய் தோன்றுகின்ற
அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் சுகம் வருமே

அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே

அன்பை ஏற்கும் உள்ளம் எல்லாம் 
அண்ணாமலை உண்ணாமுலை கோயிலன்றோ

ஆவுடை மேலே ஆதரவாகும்
அழகிய லிங்கம் நீ தான் அன்றோ

அமைதி சேர்த்து துயர்கள் போக்கும் கருணை இறைவா உன்முகமே
நினைத்த கணமே நிலை கொடுக்கும் நேசம் கொண்டது உன்பதமே

தயைபுரிவாயே பெருமானே
தமிழைக் கேட்கும் மலையானே

ஆலயம் அசலம் அமரும் சிவமே
அண்ணாமலை உண்ணாமுலை கோலமன்றோ

அடியடியாக கிரிவலம் செல்ல
ஐயனுன் அருளே துணையன்றோ

அடிக்கு ஒன்றாய் அமைந்து காவல் அளிப்பதுந்தன் திருவுருவே
அலைந்த உள்ளம் அமைந்து வாழ அன்பைப் பொழிவது பெருவரமே

அனலைத் தாங்கும் பெருமானே
நினைவில் என்றும் நிலை நீயே
 

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணக் கண் கோடி

       வேண்டும் கஃபாவை

ஹஜ்ஜுக் காட்சிக் கிணையாக

       உலகில் எதுவுமே இல்லை!

தீனோர்கள் கூடு மிடம்

       திரு நபிகள் பிறந்த இடம்

வானோர்கள் வாழ்த்தி நிற்கும்

       வல்லோனின் புனித இடம்

இதயம் கவருமிடம்

       இன்பமெல்லாம் பொங்குமிடம்

வதைக்கும் பாவமெல்லாம்

       ஓடி மறையும் ஒரே இடம்

லட்சக் கணக்கில் மக்களையெல்லாம்

       அங்கே காணலாம்

லட்சியத் தூதர் இப்றாஹீம் நபி

       தலத்தைக் காணலாம்

தூய்மை நிறைந்த ஹஜ்ருல் அஸ்வத்

       கல்லைக் காணலாம்

துன்பம் நீக்கும் ஜம்ஜம் கிணற்றை

       அங்கே காணலாம்

அன்னை கதீஜா நாயகியாரின்

       கோட்டையைக் காணலாம்ளூ

لَبَّيْكْ لَبَّيْكْ اَللّٰهُمَّ لَبَّيْكْ

       اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ

لَكَ وَالْمُلْكُ لَبَّيْكْ  لَاشَرِيْكَ لَكْ

       لَبَّيْكْ لَبَّيْكَ .

தல்பியாவை முழங்கிக் கொண்டே

       வலம் வரும் கூட்டம்

தன்மை ஓங்கும் இறைவன் அருளே

       அவர்களின் நாட்டம்

கல் மனம் உருகும் துஆவைக் கேட்டு

       கண்ணீர்ப் பெருகுமே

கல்பினில் பக்தி ஆகிய நூரே

       எழும்பும் எப்போதுமே

காவலன் அல்லாஹ் நினைவு எழுந்து

       கவலையும் தீருமே –எல்லாக்(2)

(لَبَّيْكْ)

துல்   ஹஜ் மாதம் எட்டாம் பிறையில்

       மக்காவில் இருந்தே

துல்லியமான இஹ்ரா மென்னும்

வெண்ணாடை அணிந்தே

மினாவலிருக்கும் மஸ்ஜிதில் கைபில்

கூடாரம் அடித்து

மேன்மை வாய்ந்த ஐந்து வேளைத்

தொழுகையை முடித்து

மேதினில் போற்றும் தௌஹீத்

       நெறியை மேலாய் மதிப்பார்கள் !

(لَبَّيْكْ)

அடுத்த நாளில் அரபாத் அடைந்து

       ஜபலர் ரஹ்மத்திலே

அரும்பகல் கழித்து கண்ணீர் வடித்து

       துஆவும் ஓதியே

அன்று இரவு மஜ்தலிபாவில்

       அனைவரும் தங்குவார்

அருளாம் மக்ரிபு இஷாவும் தொழுது

       திக்ரும் முழங்குவார்

அமைதியாகத் தொழுது முடிந்ததும்

       ஆயத்த மாகிடுவார்! (2)

 (لَبَّيْكْ)

அடுத்து கல்லைப் பொறுக்குவார்கள்

       ஷைத்தானை விரட்ட

அழகுறும் மினா சென்று அங்கே

       கூடுவார் யாவரும்

எடுத்தக் கல்லை வீசி எறிவார்

       ஷைத்தான் மீதிலே

இங்கித ஹாஜிகள் குர்பானிக் கொடுத்து

       தலை முடி நீக்கிடுவார்

இஹ்ராம் என்னும் வெண்ணிறை

       ஆடையைக் களைந்திடுவார்களே!

 ( لَبَّيْكْ)

அன்று மாலை மக்கா வந்து

       தவாபு செய்த பின்னே

அழகிய ஸபர் மர்வா யென்னும்

       மலைக்கு இடையினிலே

ஆர்வமுடனே ஏழு முறைகள்

       தொங்கோட்டம் ஓடியே

மீண்டும் புனித மினாவுக்கு வந்து

       இரு தினம் தங்கியே

மறுபடியும் கல்லை எடுத்து எறிவார்

       ஷைத்தானை நோக்கியே!

لَبَّيْكْ

அற்புதமான ஹஜ்ஜை முடித்த

       ஹாஜிகள் எல்லோரும்

அன்று பிறந்தக் குழந்தையைப்

       போல பாவம் நீங்கிடுவார்

நற் பயன் தந்திடும் கஃபா வந்து

       தவாபு செய்திடுவார்

நாயன் அல்லாஹ்வின் கடமை

       முடித்த நன்மை எய்திடுவார்

நிறைவு செய்த ரஹ்மானுக்கே

       நன்றிகள் கூறிடுவார் – மகிழ்ந்து (2)

لَبَّيْكْ

இறுதி கடமையை பூர்த்தி செய்த

       ஹாஜிகள் யாவரும்

இதயந் தன்னில் தூய்மையான

       ஆர்வங் கொண்டவராய்

மறை நபி முஹம்மது ரசூலுல்லாஹ்வின்

       மதீனா நகர்ச் சென்று

மனிதருள் மாணிக்கம் அண்ணல்

       நபியை ஜியாரத் செய்திடுவார்

மனங் கனிந்து கண்ணீர் வடித்து

       ஸலாமும் கூறிடுவார்!

இதய ஸலவாத் ஓதிடுவார்! (2)

யா நபி ஸலாம் அலைக்கும்

       யாரசூல் ஸலாம் அலைக்கும்

யா ஹபீப் ஸலாம் அலைக்கும்

       ஸலவாத் துல்லாஹி அலைக்கும்!

(நிறைவு)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெக்காளி அம்மனுக்கு 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென, மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு மயல்கொடு, திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற, மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
யினிமை பெறுவது மிருபத மடைவது, மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி, னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட, நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ, னருளாரூர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடு நடவிய, பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!
(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால
தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!
(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!
(சீதா கல்யாண)

சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர
பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!
(சீதா கல்யாண)

நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார
ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!
(சீதா கல்யாண)

பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத
சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!
(சீதா கல்யாண)
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும்

நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும்
என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும்

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் ..

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும்
முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும்
தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும்
மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும்

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான்
செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான்
சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான்
சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான்.

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு
பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர
வேறோர் வலைச்சி வலை வீசிட
நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகையாளும் ஈஸ்வரா ஓம்சக்தி ஈஸ்வரா
அருள்மழையே ஈஸ்வரா அருணாச்சல ஈஸ்வரா

ஒளிவடிவாய் காட்சிதரும் உயர்ந்தவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலிநடனம் புரிந்தவனே கயிலாய ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நலம்வழங்கும் நாயகனே நான்வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தலம்வருவோர் வேண்டுவதை தருவபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

குலம்தழைக்க செய்பவனே குறைத்தீர்க்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உமையவளின் துணைவனே உனைப்பணிந்தோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தவமிருந்தால் பெரும்பயனைத் தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

சுமையெனவே வரும்துன்பம் தீர்ப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எமையாளும் ஒருதெய்வம் நீதானே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எளியவரின் அன்புதனை ஏற்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலைபலவும் மண்ணுலகில் நிலை நிறுத்தும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அணுவுக்குள் அணுவாக இருப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உனது அருள் இல்லாமல் எது நடக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கனவெல்லாம் நனவாக கைகொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

மனமுருக வேண்டிக்கொண்டால் மனமிறங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அனைத்துயிரும் வாழ்ந்திடவே அருள்கொடுக்கம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தனமுடனே நல்லறிவு தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சபூதமானவனே பணிந்திடுவோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அஞ்சிடுவோர் துயர்துடைக்கும் ஆண்டவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நெஞ்சிலே குடியிருந்து நிழல் கொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நஞ்சுதனை உண்டவனே நான் வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

வஞ்சகரின் மனம்தெளிய வைப்பவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சமுடன் பசிதீர்க்கும் பரம்பொருளே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

Anupallavi
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு  

Saranangal
1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு  - சீர்

2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு  - சீர் 

3.பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு -- சீர்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரணத்தானை (விருத்தம்) - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

வாரணத்தானை அயனை விண்ணோரை
வாரணத்தானை அயனை விண்ணோரை

மலர்க்கரத்து வாரணத்தானை
மகத்து வென்றோன் மைந்தனை

வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை
துவச வாரணத்தானை துணைநயந்தானை

வயலருணை வாரணத்தானை
வாரணத்தானை துணைநயந்தானை

வயலருணை வாரணத்தானை
திறை கொண்ட யானையை வாழ்த்துவனே

வாரணத்தானை திறை கொண்ட யானையை
வாழ்த்துவனே வாழ்த்துவனே வாழ்த்துவனே . . .

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீப

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே

அருள் வித்தகம ருப்புடைய பெருமாளே
அருள் வித்தகம ருப்புடைய பெருமாளே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருளாடி அழைத்தோம் மாரியாத்தா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமுறை : முதல் திருமுறை 116 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : மயிலை சற்குருநாத ஓதுவார்

இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப் பெறாததால், இது தலப்பெயர் இல்லாத பொதுத் திருப்பதிகங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் - இத்தலம் இக்காலத்தில் "திருச்செங்கோடு" என்று வழங்கப்பெறுகின்றது.

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (01)

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (02)

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (03)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (04)

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (05)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (06)

"இப்பதிகத்தில் எழாவது செய்யுள் சிதைந்து போயிற்று."

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (08)

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம். ..... (09)

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (10)

பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே. ..... (11)
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் கையேந்துங்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓதுவோம் வாருங்கள் ... லாயிலாஹ இல்லல்லாஹ் || இசை முரசு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நிறைந்தோனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாதவ கோகுல யமுனா தீரத்தில்
எதுகுல கிருஷ்ணனின் நடனம்

எதுகுல கிருஷ்ணனின் நடனம்

ராதா முரளி கோபிகானம்
ராசக்ரீடை வினோதம்

ராசக்ரீடை வினோதம்

கோவிந்தா ஜெய் ஜெய் கோபாலா
கோவிந்தா ஜெய் ஜெய் கோபாலா

காளிங்க நர்த்தனம் ஆடிய சரணம்
கோபியர் சிந்தையில் கண்ணனின் வடிவம்

வேதங்கள் போற்றும் வேணுகோபாலன்
நவநீத நாட்டியம் அரங்கேற்றம்

ஆநிரை மேய்த்தவன் தாமரை கமலன்
ஆடிட மயங்கிடும் ஆய்ச்சியர் இதயம்

கோபியர் கொஞ்சிடும் கோகுல கண்ணனின்
குரவை கூத்து யகாந்தம்

தேவகி காணாத பாலனின் நடனம்
மாதவன் மேனியில் மாலைகள் புரளும்

ஆவினம் பூவினம் யாவையும் மகிழ
ஆனந்த மோகன நாட்டியம்

கோகுல கண்ணனின் திருநடனம்
அதை கண்டவர் வாழ்வினில் சுகம் பெருகும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி 
வேண்டி வேண்டுகிறேன்

முருகா வரவேண்டும் அருள் தரவேண்டும்
சரவணபவ சொல்லி உருகுது மனமே

பரிவோடு பாசம் அன்பினை ஊட்டும்
அன்னையை நீ எனக்கு கொடுத்தாய்

நெறியோடு வாழ நல்வழிகாட்டும்
தந்தையை உலகில் நீ கொடுத்தாய்

தாய்வழி தந்து தங்கிடும் நல்ல துணைவியை
இங்கு நீ கொடுத்தாய்

யாழ்குழல் தோற்கும் வகையிலே
கொஞ்சும் குழந்தைகள் தம்மை நீ கொடுத்தாய்

குழல் தந்தாய் உயிர் தந்தாய்
விழிரெண்டில் உயிர் தந்தாய்

நலம் தந்தாய் வளம் தந்தாய்
நிலையான மதி தந்தாய்

திருவாசல் தோறும் அருள்கீதம் ஓதும்
குழந்தைவேல் உன்னை நான் தொழுவேன்

மறவாமல் வெற்றிமலைபோல் அருளும்
தணிகைவேல் தன்னை நான் மறவேன்

படைவீடு கொண்ட கதிரேசன் புகழை
திசையாயும் சென்று சேர்த்திடுவேன்

மயிலேறி கந்தன் விளையாடும் அழகை
மனதார பாடி மகிழ்ந்திடுவேன்

பாலாலே அபிஷேகம் பட்டாடை அலங்காரம்
பாலாட்டி கற்பூரம் கண்டாலே ஆனந்தம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேதம் போற்றும் நாயகனே
ஞானம் வழங்கும் புண்ணியனே
அருகம்புல் மாலை அணிந்திடுவோனே
அகந்தைகள் யாவும் அழித்திடுவோனே
கஜமுக உருவினில்
வரம் அருளும் குணநிதி நீ

எங்கும் அருள் செய்யும் திருமூல பொருளோனே
தந்தமுடன் தொந்தியுடன் காட்சி தருவோனே

சின்னஞ்சிறு கண்ணால் பலர் சிந்தை தொடுவோனே
நம்பி உனை வந்தால் நலம் வாழ்வில் கொடுப்போனே
சுத்தத்தின் வடிவான ப்ரணவமே
ப்ரம்மச்சரியத்தின் உருவமே
குறைகள் களைபவனே
குறைகள் களைபவனே
காரணத்தில் மகிழ்பவனே

வேதம் தரும் உண்மைகளை
விளங்கும்படி கேட்க
வேழமுகன் அகலச்செவி
விந்தைபல காட்டும்

கருணைமனம் தெய்வங்களின்
சிம்மாசனம் ஆகும்
கணநாயகன் அமர்ந்த சிறுபத்மம்
அதை காட்டும்
எங்கும் நிறைந்திருக்கும் கணபதி
எழுதும் எழுத்துக்கெல்லாம் அதிபதி
மஞ்சளில் ஜொலிப்பவனே
மஞ்சளில் ஜொலிப்பவனே
மகிமைகள் அளிப்பவனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரிசூடும் சிவனோடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயிஃப் நகரத்து வீதியிலே... எங்கள் தாஹா ரசூல் நபி || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் – (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர் - (2)
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன் - (2)

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர் - (2)
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே - (2)

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம் - (2)
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன் - (2)

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மயில் வாகனனே !
சிவ பாலசுப்ரயமண்யனே வா !
என் இச்சையெல்லாம் உன் மேலே ! வைத்தேன் !
எள்ளளவும்  பயமில்லையே ! 

அலைகடல் ஓரத்திலே !
எங்கள் அன்பான சண்முகனே !
அலையா மனம் தந்தாய் ! உனக்கு 
ஆனந்த கோடி நமஸ்காரம் !

கொச்சை  மொழி ஆனாலும் !
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் !
இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா !
எங்கும் சாந்தி நிலவுதப்பா !

 வெள்ளம் அது பல்லம் தனிலே !
பாயும் தம்மை போல்  உள்ளம்தனிலே !
நீ மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் !
எங்கள் கள்வம் எல்லாம் கரைந்ததப்பா !

நெஞ்சமதில் குடில் அமைத்தேன் !
அதில் நேர்மை என்னும் தீபம் வைத்தேன் !
வெஞ்சிலம்பு கொஞ்சும் வேலா ! முருகா !
சேவற்கொடி மயில் வேலா !

செந்தூர் கடல் ஓரம் ! முருகா !
சிங்கார மயில்வாகனா !
செந்தூர பொட்டழகா ! உந்தன் !
சேவடி நான் சரணம் !
சேவடி நான் சரணம் ! முருகா !
சேவடி நான் சரணம் !

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்னப் பாத மெடுத்து 
செல்லக் கண்ணா வாடா
முத்துப் பவழ வாய் குவித்து
முத்தம் ஒன்று தாடா
(சின்னச் சின்ன)

சுற்றிச் சுழலும் கருவிழி கண்டு
உள்ளம் மயங்குதடா
பற்றிக் கட்டிக் கொஞ்சிஅணைக்க
நெஞ்சம் ஏங்குதடா
(சின்னச் சின்ன)

பாயும் யமுனா நதியை அன்றுன்
பாதம் தொட்டதடா
சீறும் காளிங்கன் தலை மீதுந்தன்
பாதம் பட்டதடா

உன்னைத் தாயாய் எந்தன் சேயாய்
அழைத்தேன் வருவாயோ?
மார்பில் உதைத்துப் பாதம் பதித்து
இன்பம் தருவாயோ?
(சின்னச் சின்ன)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று கேட்பவன் அரசன் மறந்தால் 
நின்று கேட்பவன் இறைவன் 
நடுவில் மனிதன் வாழுகிறான் - வீணில் 
மனம் தடுமாறுகிறான் 
இறைவா... இறைவா... 
(அன்று) 

மனம் போல் மாங்கல்யம் என்பார் 
தன் மனமே சகலமும் என்பார் 
தெரிந்தும் குணத்தை இழக்கிறான் 
இதயம் குலைந்து தவிக்கிறான் 
இறைவா... இறைவா... 
(அன்று) 

அடிக்கும் அவன் கை அணைக்கும் 
புவி அனைத்தும் தலைவன் இயக்கம் 
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான் 
தன்னை அடித்தால் பழிக்கிறான் 
இறைவா... இறைவா... 
(அன்று) 

கற்றது கை மண் அளவு 
கரை கண்டவர் இங்கே குறைவு 
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன் 
யாவும் அருள்வான் நம் இறைவன் 
இறைவா... இறைவா... 
(அன்று)
 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.