Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றிவேல் முருகனுக்கு

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீராடும் கண்களோடு

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ 
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே 
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் 
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்வின் இனிமை வழங்கும் இறைவா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லலிதா நவரத்தின மாலை பாடல்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்று கேட்பவன் அரசன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக மக்கள் யாவருக்கும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸுப்ஹான மௌலித் - அஸ்ஸலாமு அலைக்க

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரம்பிடித்தென்னை வழி நடத்தும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவும் மெய்ப்பொருளும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"
பழநி ஷண்முக சுந்தர ஓதுவார்
திருப்புகழ் 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்

   பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க்

      கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
         எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா


சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகமூட் நபிகள் பிரானே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

நோயின் சோதணை போதும் இறைவா...
வாழும் வழியருள் எந்தன் இறைவா...
பாவம் பொருத்து பலாய்கள் நோயை...
நீக்கி வாழ்வில் அருள் சுகம் தருவாய்
கோபமிருந்தால் காமில் நபியின் முகத்தின் பொருட்டால் நோயை போக்கு...
கோடி உயிரின் பாவம் தீரும் வேந்தர் நபியின் முகத்தின் அருளால்...

(நோயின் சோதணை) 

தாங்க முடியா நோயின் பிடியில் காலம் கசக்கிறதே!
பாவமறிந்தே பூமியில் எங்கும் செய்த கோபமிதே!
இறைவன் நாடும் விருப்பம் மறுத்து ...
வாழும் முறை ஏனோ....
கோடி உயிரின் கேடில் விளைந்த ...
இறைவன் சோதணையோ...!

தன் நலம் போதும் என்ற வாழ்க்கை என்றும் வேண்டாமே!
மார்க்கத்தில் பூத்திட்ட சொற்க்கள் ஏற்று வாழ்வோமே..!
மன்னெல்லாம் போராடி காத்தும் ஏதும் பயனில்லை...
இறைஏகன் முகம் நாடி ஏந்தும் கைக்கு ஈடில்லை...

இறைவா எங்கள் நிலமை...
உன்னை மறந்தே வந்த வறுமை...
மனதாய் உம்மை ஏந்தும் ...
கைகளோ நிறைந்தால் போதும்...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)
 
கொள்ளை நோயின் கோர பிடியில் நாளும் கடக்கிறதே ...
என்ன பாவம் செய்தோம் என்று அறியா நிலைதனிலே...
இறையை துதித்து போற்றி மகிழும் இல்லம் உறங்கிடுதே...
வணக்கம் மறந்து வாழ்ந்த யாவும் வணங்க தவிக்கிறதே...
மண்னகம் முழுதும் நியாயமற்று போனதே...
வின்னகம் நோக்கி ஏந்தும் கரம் இல்லையே ...
பாவங்கள் செய்திட மணம் தடை இல்லையே...
சோதணை அடைந்தும் இறை பயம் இல்லையே...

இறைவா எங்கள் மனதில் ...
நிரப்பிடு உந்தன் பயத்தை ...
பிஞ்சுகள் உள்ளம் பார்த்து...
அருள்வாய் பிழையை தீர்த்து ...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

உலகின் ஆசை உள்ளத்தில் முழுதாய் நிறைந்து கான்கிறதே...
இறைவன் காட்டிய மார்க்க வழியில் நடக்க மறுக்கிறதே...
சொத்து சோபனம் இருந்தால் போதும் என்ற ஆசையிலே...
கியாம நாளை மறந்து நாமும் வாழும் நிலை இதுவே...

பாவத்தை தினம் தினம் கண்கள் மூடி செய்கின்றோம்...
சோதணை வந்தால் மட்டும் இறைவனை பார்க்கின்றோம்...
வாழ்க்கையின் ஆசையிலே ஹராம் ஹலால் மறக்கின்றோம்...
இறையோனின் கோபம் தரும் பாவம் வாழ்வில் செய்கின்றோம்...

இறைவா பாவி எமக்கு...
நோய்பலாயை சுகமாய் ஆக்கு...
இனிதாய் உன்னை போற்றும் ....
வணக்கத்தை வாழ்வில் ஆக்கு...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை 
எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல 
ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே

கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே 
பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ திரு இருதயமே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிஸ் செங்காலன் முருகன் பாடல் 

 

மயிலாடும் பாறையிலே என் மனச நானும் விட்டுபுட்டன்..பாடல் (முருகன் காவடி) - மகாநதி சோபனா

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
   கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
   ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்!     (கண்ணன் மனநிலையை..)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள் 
    காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம் 
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம்--என்னும் 
     அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்     (கண்ணன் மனநிலையை..)


ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
   அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே 
    சொல்லி வருவையடி தங்கமே தங்கம்!       (கண்ணன் மனநிலையை..)


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
   நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
   பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!  (கண்ணன் மனநிலையை..)

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஸ்ஸல்லாம் அஸ்ஸல்லாம்

மாஷா அல்லாஹ் அல்லாஹ் 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.