Jump to content

அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா

June 27, 2020

-கனடாவில் இருந்து எஸ்.பத்மநாதன்

டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி.

%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-2.j

அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகள் பலவற்று க்கு இலக்கிய பயணம் செய்த சஞ்சிகையாளர். வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்த இலக் கிய தியாகி. உன்னதமான சொற்பொழிவாளர் என்பதுடன் அசுரத்தனமான உழைப்பாளியுமாவார். இலங்கையின் எழுத்தாளர் பரம்பரையின் பிதாமகன். மொத்தத்தில் உலகறிந்த “மல்லிகை” என்ற மாதாந்த சஞ்சிகையினை தொடர்ந்து நடாத்தி ஓய்வு பெற்ற அதி உன்னத மானுடன்.

 

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த திரு.திருமதி.ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணி யாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந் து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியா னார். அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக் கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியுள்ளார். தற் போது தனது 93வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மகோன்னத படைப்பாளியாக மாறியுள்ளார். இளம் பராயத்தில் தனது தகப்பனாரின் முடிதிருத்தும் தொழிலகத்தில் தானும் ஒரு தொழிலாளியாக இணைந்து கொண்டு தந்தைக்கு உதவி வந்தார்.

 

அக்காலத்தில் யாழ்மண்ணில் நிலவி வந்த சாதிய கட்டமைப்புகளை மீறி எழ வேண்டிய தேவையை நன்குணர்ந்த திரு. ஜீவா அதற்கான வல் லமைகளை தன்னுள் வளர்த்துக் கொண்டிருந்தார். தெரிழலகத்துக்கு வருகை தரும் கார்த்தி கேயன் மாஸ்டர், பொன்.கந்தையா, அ.வைத்திலிங்க ம், பிரம்ம ஸ்ரீ இராமசாமி ஐயர், அரியரெத்தினம், எம்.ஸி.சுப்பிரமணியம் போன்ற கம்யூனிச சித்தாந்திகளுடன் சகவாசம் கொண்டு அரசியல் அறிவினை பெற்றுக் கொண்டார். அதன் காரணமாக இவரது முடிதிருத்தும் நிலையம் ஒரு அரிய அரசியல், இலக்கிய கூடமாக மாறியது. அதனால் இவரது பட்டறிவு பல மடங்காக அதிகரித்தது. ஜீவா இயல்பாகவே எதனையும் தேடல் செய்து கொண்டிருப்பவர்.

 

யாழ் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பூபாலசிங்கம் புத்தகக் கடையில் உள்ள நூல்களை வாசிக்கம் வழக்கத்தினை கொண்டிருந்தார். பூபாலசிங்கம் ஒரு கம்யூனிஸ வாதி என்பதால் இவருக்கு அங்கு எது வித தடைகளும் இருக்கவில்லை. அதனால் அக்கால கட்டத்தில் பிரபலமான எழுத்தாளர்களா ன மாக்கிம் கோக்கி, டால்ஸ்டாய், ஒஸ்ரவோத்தி, ஜூலியஸ் பியூஜிக், சரச் சந்திரா, விந்தன் ஆகியோரது நூல்களை வாசித்து தெளிவு பெற்றார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஒருவர் இத் தகைய அறிஞர்களது எழுத்துக்களை வாசித்து விளங்கிக் கொண்டிருந்தமை வியப்புக்குரியதாகும். வாசிப்பதோடு மாத்திரம் நின்று விடாது தானும் எழுத முயன்றார்.

 

அந்த வேளையில் தமிழ் நாட்டிலிருந்து அரசியல் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்து தலை மறைவாக வாழ்ந்து வந்த தோழர் ப.ஜீவானந்தத்தை இவர் சந்தித்தார். இருவரும் இடதுசாரிகள் ஆவர். அவரது தொடர்பினால் இவர் தனது பெயரையும் டொமினிக் ஜீவா என மாற்றிக் கொண்டார்.

சலூன் தொழிலாளியாக வாழ்ந்து கொண்டு பெரும் எழுத்தாளனாக விளங்குவதற்கு அவரது அபார திறமையும், கூரிய பார்வையுமே காரணமாகும். அந்த வேளையில் வெளி வந்து கொண்டிருந்த “சுதந்திரன்” பத்திரிகை அவரது படைப்புக்களுக்கு இடம் கொடுத்தது. அதனால் 1948 ல் “எழுத்தாளன்” என்ற புனை பெயரில் தனது முதலாவது சிறுகதையை எழுதி வெளியிட் டார்.

 

தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதி வந்த வேளையில் 1956ம் ஆண்டு இவரது சிறு கதைக்கு சுதந்திரனால் பரிசு வழங்கப்பட்டது. அன்று முதல் இவர் நாடறிந்த எழுத்தாளரானார். அதைத் தொடர்ந்து ஜீவா இந்திய சஞ்சிகைகளுக்கும் தனது படைப்புக்களை அனுப்ப ஆரம்பித்தார். அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த விஜயபாஸ்கரனின் “சரஸ்வதி” சஞ்சிகையும், மற்றும் “தாமரை” சஞ்சிகையும் இவரது படைப்புக்களை விரும்பி பிரசுரித்து வந்தன. இவற்றில் வெளி வந்த சிறுகதைகள் பின்னர் தொகுப்புக்களாவும் வெளியிடப் பட்டன. சரஸ்வதி சஞ்சிகை 1958ல் இவரது புகைப் படத்தினை அட்டையில் பிரசுரித்து இவரைக் கௌரவித்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும். சரஸ்வதியில் வெளிவந்த சிறுகதைக ளின் தொகுப்பான “தண்ணீரும் கண்ணீரும்” 1960ல் நூல் வடிவில் வெளிவந்தது.

தொடர்ந்து இவரது சிறந்த சிறுகதையான “பாதுகை” 1963ல் வெளிவந்தது. அடுத்து “தாமரை” சஞ்சிகை யும் இவரது படத்தினை அட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. இக்கால கட்டத்தில் டொமினிக் ஜீவாவின் படைப்புக்கள் ஈழத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் தொடர் ந்து வெளி வந்து கொண்டிருந்தன. பேராசிரியர் கைலாசபதியின் உதிவியினால் இவரது படைப்புக்கள் தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்து கொண்டிருந்தன. பேராசிரியர் கா.சிவத்தம்பியும் இவருடன் தொடர்பில் இருந்தார்.

டொமினிக் ஜீவாவினால் 1961ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தண்ணீரும் கண்ணீரும்”, 1963ல் வெளியிடப்பட்ட “பாதுகை” ஆகிய இரண்டும் சிறந்த சிறுகதை தொகுதிகளாக அகில இலங்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டன. அத்துடன் சாகித்திய மண்டலத்தின் பரிசினைப் பெற்ற முதலாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையினையும் பெற்றார். அதன் காரணமாக டொமினிக் ஜீவாவும் சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராகவும் ஏற்றுக் கொள்ளப்பட் டார். அதனையடுத்து இவரது தகுதியும், திறமையும் உயர்வடைந்தன. அன்று முதல் இந்தியாவில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பிரபல சஞ்சிகைகளான கல்கி, தாமரை, கணையாழி, சமூக நிழல், மக்கள் செய்தி, ஜன சக்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ், சிகரம், தீபம், சகாப்தம், தினக் கதிர், இதயம் பேசுகின்றது , சாவி ஆகிய சஞ்சிகைகள் இவரை அடிக்கடி பேட்டி கண்டு பிரசுரித்து வந்ததன.

அது மாத்திரமன்றி இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்களும் இவரை தமது விழாக்களில் உரையாற்ற வரவழைத்து கொண்டிரு ந்தன. வானொலிகளும் அடிக்கடி இவரை செவ்வி கண்டு ஒலி பரப்பிவந்தன. அது அவரது பொற்காலம் என்றே கூற வேண்டும். இவருக்கு கிடைத்த மதிப்பும், மரியாதையும் அக்காலத்தில் வேறெந்த எழுத்தாளர்களுக்கும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் பிறந்த இவரை எழுத்தாளனாக்கியது தமிழ் நாடு, மனிதனாக்கியது தமிழ் நாடு. சாதி பாகுபாட்டினைக் கடந்து யோகம் பெற்றதும் அங்கு தான்.

சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தன் “எழுத்து ஒரு தொழிலோ, பிழைப்போ அல்ல. அது நமக்கு கிடைக்கும் யோகம். அந்த யோகம் நமது ஜீவிதம்” நண்பர் ஜீவாவுக்கு எனது வாழ்த்துக்கள்! என எழுதி பதிவு செய்தார். ஜீவாவின் வாழ்வில் 1966ஆகஸ்ட் 15ம் திகதி ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அன்று தான் அவரது “மல்லிகை” என்ற சஞ்சிகை முதன்முதலாக வெளிவந்தது. மல்லிகை மங்களகரமான பெயர், மணம் பரப்பும் பெயர். அதனால் வாசகர்கள் அனைவருக்கும் அப்பெயர் பிடித்துக் கொண்டது. வெளியீட்டு விழா அவரது சலூனின் பின்புறத்திலேயே நிகழ்ந்தது. அதில் நானும் கலந்து கொண்டமை இன்னும் என் நினைவில் நிற்கின்றது. இந்நிகழ்ச்சி மிக சிலருடனேயே நிகழ்ந்தது. இந்நிகழ்ச்சியினை விரும்பாத சிலர் இவருக்கு ஏன் இந்த வேலை? என பலர் முனகிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஜீவாவின் இலக்கிய தாகம் சிறப்புறத் தொடர்ந்தது.

முற்போக்கு எழுத்தாளர் அணியை உருவாக்குவதில். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், தமிழகத்தின் சஞ்சிகைகளின் தரத்துக்கு இதனை உயர்த்துதல் என்பதே அவரது இலட்சியமாயிற்று. இதனால் சாதாரண பேச்சு வழக்கிலேயே கதைகள் பல வெளிவந்தன. ஜனரஞ்சக எழுத்து, யதார்த்தம் என்றெல்லாம் பேசப்பட்டது.

மல்லிகையை வெளியே எப்படி விற்பனை செய்வதென்பது கேள்விக் குறியாயிற்று. ஊர்களில் புத்தகக் கடை கள் எதுவுமில்லை. ஒரு சைக்கிளில் புறப்பட்டு ஊர் ஊராகச் செல்வார். திருமண வீடு, இழவு வீடு, சாமத்திய சடங்கு வீடு என ஒன்றும் தவறாமல் சென்று அங்கு வருவோர்களுக்கு விற்று விடுவார். வழி யில் எவரைக் கண்டாலும் பேச்சுக் கொடுப்பார். அவமானங்கள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாங்கிக் கொள்வார். இவ்வாறு பல வருடங்கள் ஓடின. பின்பு பல எழுத்தாளர்கள் இவரது மலருக்கு எழுதத் தலைப்பட்டனர். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலரும் எழுதி வந்தார்கள். இதன் காரணமாக ஓர் எழுத்தாளர் பரம்பரையே உருவாகிற்று, தனி மனித நிறுவனமாகவே மல்லிகை இயங்கி வந்தது.

சந்திரசேகரம் என்பவர் மாத்திரமே அச்சுக் கோப்பார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜீவாவின் எண்ணத்தில் உதித்தது தான் “மல்லிகைப் பந்தல்” என்ற நூல் வெளியீட்டு களமாகும். மல்லிகையின் அட்டைப் பட ஓவியங்களை திரட்டி நூலாக்கி மல்லிகை மூலமே வெளியிட்டார். இந்த வேளையில் பல்வேறு உள்ளுர் யுத்தங்களால் பாதிப்படைந்தார். சஞ்சிகைக்கு பேப்பர்கள் இல்லாமல் போயிற்று. அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டது. எல்லாவற்றையும் முறியடி த்து மல்லிகை வெற்றிகரமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், துரைமோகன், பிறேம்ஜி, பேராசிரியர்கள் சிவத்தம்பி, மற்றும் மௌனகுரு, எம்.சமீம், டானியல், சுமந்திரன், நுஃமான், தெனியான், நீர்வை பொன்னையன், சபா ஜெயராஜா, ரகுநாதன், நீர்வை பொன்னையன் போன்ற நூற்றுக் கண க்கான எழுத்தாளர்கள் அன்று எழுதி வந்தனர். தமிழியல் சார்பில் முக்கிய தடம் பதித்தது. மலையகம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு என மல்லிகை பிரதேச ரீதியில் விரிவடைந்தது. ஜீவா சிங்கள எழுத்தாளர்களுடனும் தொடர்பினை பேணி வந்தார். மல்லிகை பந்தலின் கீழ் வளர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இன்னமும் ஊரின் பல பகுதிகளில் இருந்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

இக் காலத்தில் தான் நாட்டில் உள்நாட்டு யுத்தங்களளால் நிலைமை சின்னா பின்னமாகியது. அவரது அடுத்த அத்தியாயம் 1997ல் ஆரம்பித்தது. கொழும்புக்கு இடம் பெயர்ந்து ஸ்ரீகதிரே சன் வீதியில் தங்கி சஞ்சிகையினை வெளியிட்டார். போர் நெருக்கடிகளின் போதும் அவர் ஓய்ந்து விடவில்லை. மகன் திலீபனின் உதவியுடன் சில நிறுவன வேலைகளை மேற்கொண் டு வந்தார். செல்வம், மணியம். எஸ்.வி.தம்பையா போன்றோரின் ஆதரவுடன் மல்லிகையை மீளக்கட்டி எழுப்பினார். அங்கிருந்து “மல்லிகை” அகில இலங்கைக்கும், அந்நிய நாடுகளுக் கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளற்ற ஒரு சமூக மறுமலற்சி சஞ்சிகையாக மிளிர்ந்தது. இலங்கையின் தமிழ் சஞ்சிகைகளின் தந்தை என ஜீவா பலராலும் அழைக்கப்பட்டார். இத னால் தான் இதே கருத்தை அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான ஜனாப் அஸ்வர் ஜீவாவைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையொன்றை ஆற்றினார். ஜீவாவின் “மல்லிகை பந்தல்” நிகழ்ச்சி கொழும்பிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. புற க்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியிலுள்ள 201ம் இலக்க கட்டிடத்தில் இருந்து மல்லிகை வெளிவந்தது. ஆண்டு தோறும் மல்லிகையின் ஆண்டு மலரினை வெளியிட்டு வந்தார்.

“யாழ்ப்பாணத்து சகோதர உணர்வுகளை தனது மல்லிகை மூலம் சிறைப்பிடித்துக் கொண்டு கொழும் புக்கு வருகின்ற ஜீவா” என சிங்கள எழுத்தாளர்கள் கூறினார்கள். புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு எழுதத் தூண்டினார். பல்வேறு சுமைகளையும் தாங்கிக் கொண்டு பல நூல்க ளை மல்லிகைப் பந்தல் ஊடாக வெளியிட்டார். எழுபதுக்கு மேற்பட்ட நூல்கள் இங்கிருந்து வெளிவந்தன. அவற்றுள் அவரது சொந்தப் படைப்புக்கள் இருபது வரையில் அடங்கும். இவையெல்லாம் சிறுகதைகள்,கட்டுரைகள், கவிதைகள், அனுபவப் பகிர்வுகள், செவ்விகள், கேள்வி பதில்கள் என பலதரப் பட்டவை. டாக்டர் முருகானந்தன் மல்லிகையின் மிக நீண்ட கால எழுத்தாளராவார். இன்றும் கூட அடிக்கடி ஜீவாவை வந்து சந்தித்து அவரது உடல் நிலை பற்றி விசாரித்து வருகின்றார்.

“மண் புழுவாக இருந்து மனிதனானவன்” என அடிக்கடி தன்னைப் பற்றி கூறிக் கொள்ளும் ஜீவா புகை பிடிக்கும் பழக்கமற்றவர். தின ம் வெள்ளை வேட்டியும், நஷனலும் அணிபவர். வெளி நாடுகளுக்கு செல்லும் போதும் அதே ஆடைகளை தான் அணிந்து வந்தார். எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் அவர் ஒரே இலட்சிய புருஷராகவே திகழ்ந்தவராவார்.

ஜீவாவைப் பற்றி பல அறிஞர்களும், நிறுவனங்களும் கூறியவை மனம் கொள்ளத் தக்கவை. ஜீவா ஒரு வரலாற்று சின்னம் மாத்திரமல்ல அவர் வரலாற்றின் பொருளும் கூட. பேராசிரியர் கா. சிவத்தம்பி. “ஜீவா ஈழம்பெற்ற ஓர் பெரிய எழுத்தாளர். அற்புதமான மனிதர்”- செங்கை ஆழியான். “ஜீவா ஒரு அற்புதமான மனிதர், சுத்தமான ஓர் ஆத்மா”- பிறேம்ஜி. “ஜீவாவுக்கு விடுமுறை இல்லை மூச்சைவிடும் உயிரைப் போல” – சுதாராஜ். “முஸ்லீம் அல்லாத ஒருவர் முஸ்லீம்களின் இலக்கியத்துக்கு உயரிய பங்கினைச் செய்தவர்” – ஆப்டீன். “ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தவர்” – காலம் செல்வம். “மண்ணையும், மக்களையும் இலக்கியத்தையம், முழு மானுடத்தையும் நேசித்த வரலாற்று நாயகன்” – க.நவம். “One Man Thinker” – கொழும்பு தமிழ்ச் சங்கம். “ஈழத்து தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்” 2014- ஜூலை 17. கொழும்பு தமிழ் சங்கம்.

ஜீவா தனது வரலாற்றினை எழுதி முடித்தவர். இதற்கு இவர் கொடுத்த தலைப்பு வித்தியாச மானது. “எழுதப் படாத கவிதைக்கு வரையப் படாத சித்திரம்”. எதற்காக இப்படி பெயர் வைத்தார் என்று இன்னமும் புரியவில்லை. வாழ்க்கையில் நொந்து வேதனைப்பட்ட ஒருவரின் முனகலாக இது இருக்கலாம். அவரது மனச்சுமை அவ்வளவும் இங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த அவரது நண்பர் திரு.கந்தையா குமாரசாமி மொழி பெயர்த்துள்ளார். “Undrawn portrait for unwritten Poetry” என்ற ஆங்கிலத் தலைப்பு இந்நூலுக்கு வைக்கப் பட்டுள்ளது. இந்நூலில் அவரது எழுத்துக்களை வாசித்தால் கண்கள் பனிக்கும். புழுப்போல் சமூகத்தில் கிடந்து நெளிந்தவர் அவர். எவரது உதிவியும் இன்றி நிமிர்ந்து நின்றவர். எனினும் இன்று உலகெங்குமுள்ள பலரின் இதழ்களினால் உச்சரிக்கப்படுபவர்.

ஜீவா பல்வேறு கால கட்டங்களில் பெற்ற கௌரவங்கள், பரிசில்கள் கணக்கற்றவை. அவற்றுள் சில பின்வருமாறு: * சாகித்திய மணடல பரிசு (1961) “தண்ணீரும் கண்ணீரும்” சிறுகதை தொகுதி. * சாகித்திய மண்டல பிரிசு (1963) “பாதுகை” சிறுகதை தொகுதி. *மூதறிஞர் விருது (1998) அகில இலங்கை கம்பன் கழகம். * கௌரவ முதுமானிப் பட்டம் (2001) யாழ் பல்கலைக் கழகம். (இக்கௌவரவத்தை சில காரணங்களால் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.) * சாகித்திய ரத்னா (2205) இலங்கை அரசு. *இலக்கிய விருது (2009) கொடகே சிங்கள நிறுவனம். * அகேனம் விருது (2010) கனடா எட்டாவது சர்வதேச தமிழ்ப்பட விழாக் குழு. * இயல் விருது (2013) வாழ் நாள் சாதனையாளர் – கனடா. * ஈழத் தமிழ் எழுச்சியின் சின்னம் (2014) கொழும்பு தமிழ்ச் சங்கம். *இலக்கிய விருது (2014) கொழும்பு தமிழ்ச் சங்கம். * “தேச நேத்ரு” இலங்கை பிரதமர் விருது.
*“கல்லில் நார் உரித்த அற்புதமான மனிதன்” * “யாழ்ப்பாணத்தில் ஒரு சகாப்தம்” என்றும் 1987ம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டது போன்றும், “ஜீவா தான் ஈழத் தமிழரின் தேசிய இலக்கியம்” என தினகரன் பத்திரிகையினால் புகழப் பட்டது போன்றும் அவரது வாழ்வு இன்று இல்லை. ஜீவா இன்று முதுமையின் பிடியில் சிக்கி தளர்ந்து போயுள்ளார்.

“மல்லிகை”யின் 50வது ஆண்டு மலரை வெளியிட்டு விட்டு ஓய்வு பெறுவேன்” என்று கூறிய ஜீவா அதற்கு முன்பே ஓய்வு பெற வேண்டி ஏற்பட்டு விட்டது. அவரது மறதி நோய் எல்லாவற்றையும் இழக்கச் செய்துள்ளது. மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், எழுத்தாளர்கள், மல்லிகை, மல்லிகை பந்தல் எதுவுமே தெரியாது. “எனது மனதுக்கு நான் எப்போதுமே வேலி போட்டவனல்ல” என்றவர் இன்று வேலியை போட்டு விட்டார். கிழித்துப் போட்ட நாராக கட்டிலில் படுத்திருக்கின்றார். கட்டிலும், ஒரு காற்றாடியும் அவ ரது அறையில் அவரை ஆசுவாசப் படுத்துகின்றன.

ஜீவாவை நேரடியாக சந்திப்பதற்காக ஜனவரி 19ம் திகதி நான் கனடாவில் இருந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது. என்னைக் கண்டதும் தனது நஷனலை எடுத்துப் போட்டுக் கொண் டார். கையும் தந்தார். என்னை அவருக்குத் தெரியும் என்று தான் நான் நினைத்தேன். முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னரே நான் அவரைப் பார்ப்பதற்கு சென்றிருந்தேன். என் சகோதரன் செல்வமும் கூடவே வந்திருந்தான். ஒரு சிரிப்பினை மாத்திரம் உதிர்த்து விட்டு மீண்டும் படுக்கையில் வீழ்ந்து விட்டார். அவரது கைத் தசைகள் ஒட்டிப் போய் உலர்ந்திருந் தன. கண்கள் ஒளி இழந்திருந்தன. சிம்மக் குரல் அங்கு இல்லை. என்னால் தொடர்ந்து அங்கு இருக்க முடியவில்லை. மகன் திலீபனுடன் உரையாடி விட்டு புறப்பட்டேன். அவரது சாகித் திய ரத்னா, தேச நேத்ரு (தேசத்தின் கண்) போன்ற விருதுகள் என்னுள் பரந்து சென்றன. தனது 93வது வயதில் வாடும் இந்த இலக்கிய சீவன் என்னவெல்லாம் எண்ணுகின்றது என்று தெரியவில்லை. “காலம் ஒரு கயிற்றரவு”.

http://thinakkural.lk/article/49625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு மாபெரும் மேதை.வசந்தா சலூனில் காத்திருக்கும் நேரத்தில் நான் அந்தந்த மாத மல்லிகை இதழ்களைப் படித்து விடுவேன்.சிலசமயம் நினைத்து பார்த்தால் முதுமை மட்டுமல்ல மறதியும் கூட ஒரு வரமே ......!  🌹

 பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை சஞ்சிகை முதலில் வெளிவந்த போது எனக்கு ஐந்து வயது அந்த இலக்கிய மேதையின் வரலாறு படிக்கும் போது

இறுதியில் கண்கள் கசிந்தன 

பகிர்வுக்கு நன்றிகள் கிருபன்  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய சொந்த இடம் நெடுந்தீவு என்றுதான் அறிந்திருந்தேன். எது சரி என்பதை யாராவது தெளிவுபடுத்துங்கள்.

நன்றி கிருபன். 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.