Jump to content

மறந்த நாள்


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு பேபரிற்காக எழுதியது

மறந்த நாள்

ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை.

பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன். ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை சரி அம்மா ஏதும் அவசரத்திற்கு அடிச்சாவோ தெரியாது போனை தூக்கி கொண்டு போய் கோலுக்கை நிண்டு ஒருக்கா அடிச்சு பாப்பம் என்று நினைத்து.எழும்பி நடக்க வல கால் சின்ன விரல் பாதி திறந்திருந்த கதவிலை படாரெண்டு அடிபட்டு நெட்டி முறிஞ்ச சத்தமும் கேட்டது.அம்மா... என்று மெல்ல முனகியவாறு லைற்றை போட்டு பாத்தன் பாதிநகம் பிய்ந்து இரத்தம் கசிந்தது.அதோடை நித்திரையும் முறிஞ்சு போச்சுது.

மெதுவாய் பிய்ந்த நகத்தை வெட்டிவிட்டு ஒரு பிளாஸ்ரரை சுத்தி கொண்டு. போனை அடிச்சன் போனில்"ஒப அமத்த அங்கய பற்றிக்சாரய நமத "யாரது சிங்களத்தி கதைக்கிறாள் என்ன ஒண்டும் விழங்கேல்லை எண்டு யோசிக்கதான் நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று தமிழிலை சொல்லிச்சிது. ஒரு பத்து நிமிசம் அடிச்சு பாத்தன் திருப்ப திருப்ப அதையே சொல்லி கொண்டிருந்தது. கால் வலியோடை இப்ப சாதுவா தலையும் வலிக்கிற மாதிரி இருந்திது.காலங்காத்தாலை எழும்பியிருந்து திருப்ப திருப்ப கேட்க இது என்ன சுப்பிர பாதமா எண்டு நினைச்சு சரி ஏதும் அவசரமெண்டா திருப்பி எடுப்பினம் தானேஎன்று நினைச்சபடி போய் திரும்ப படுத்தன்.

நித்திரை வரேல்லை கட்டிலிலை அங்கை இங்கை பிரண்டபடி கொஞ்ச நேரத்தாலை நித்திரையா போனன். திடீரெண்டு மனிசி பதறியபடி என்னை அடிச்சு எழுப்பிச்சிது. என்னப்பா நான் வழைமை மாதிரி ஆறு மணிக்கு அலாரம் வைச்சனான் அடிக்கேல்லை ஏழுமணியா போச்சுது நீங்களே அலாரத்தை நிப்பாட்டினது அய்யோ எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது எழும்புங்கோ இனி பஸ் பிடிச்சு போக ஏலாது என்னை காரிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ என்றபடி அவசரமாய் குளியலறையில் நுளைந்தாள். நான் தான் காலைமை போன் எடுக்கிற அவசரத்திலை மணிக்கூட்டு அலாமை மாறி அமத்தி போட்டன் போலை என்றபடி எழும்பி போய் இரண்டு தேதண்ணியை போட்டு ஒண்டை குடிக்கவும் வழைமை போலை வயிற்றை கலக்கியது ரொய்லற்றுக்கை குந்தவும் மனிசி ரொய்லற் கதைவை தட்டி

"என்னப்பா என்ன செய்யிறியள்??" எண்டாள்.

பொறு நல்ல படம் ஒண்டு போகுது பாக்கிறன் குழப்பாதை.

உங்களுக்கு இந்த அவசரத்திலையும் நக்கல் எனக்கு தெரியும் நீங்கள் உதுக்குள்ளை போனால் ஒரு பேப்பரை முழுசா படிச்சு முடிச்சிட்டு தான் வெளியாலை வருவியள் எங்கை என்ன செய்யிறதெண்டு தெரியாத மனிசன் கெதியா வாங்கோ நேரம் போட்டுது.

பின்னை ரொய்லற்றுக்கை இருக்கிற மனிசனிட்டை கதவை தட்டி என்ன செய்யிறியள் எண்டா என்னத்தை சொல்ல.பெரும் பணக்காரனிலை இருந்து பிச்சை காரன் வரை நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்கிற இடம் இதுதான் இதுவும் அவசரமெண்டா என்ன செய்ய. என்றவாறு வெளியில் வந்து வெளிக்கிட்டபடி தேத்தண்ணி போட்டு வைச்சனான் குடிச்சனியா?

உங்களுக்கென்ன 10 மணிக்கு வேலை நல்லா மூசி மூசி நித்திரை கொண்டிட்டு ஆறுதலா எழும்பி போகலாம் எனக்கு 8 மணிக்கு வேலை. வேண்டாம் நேரம் காணாது இருக்கட்டும் பின்னேரம் வந்து சூடாக்கி குடிக்கிறன்.

எட போட்டு வைச்ச தேதண்ணியை குடி எண்டு சொன்னதுக்கு ஏனப்பா கோவிக்கிறாய் சரி சரி வா எனறபடி சப்பாத்தை போட குனிந்து காலை பார்த்தேன்.அடிபட்ட சின்ன விரலும் வீங்கி

எனது வலக்காலில் இரண்டு பெருவிரல்கள் இருந்தது.சப்பாத்து போட முடியாத அளவுக்கு வலி ஒரு மாதிரி சமாளிச்சு சப்பாதை போட்டு கொண்டு வெளியில் லிப்ற் இருக்குமிடத்திற்கு வந்தேன். அதன் கதவில் ஒரு கடதாசியில் " இது வேலை செய்யவில்லை " என்று எழுதி ஒட்டியிருந்தது. நான் மனிசியை பார்க்க பிறகென்ன பாக்கிறியள் அதுதான் எழுதி ஒட்டியிருக்கெல்லோ வேலை செய்யாதெண்டு கெதியா படியாலை இறங்குவம் எண்றபடி மனிசி இறங்க தொடங்க நானும் பினாலை. 4 ம் மாடியிலிருந்து படிவழியாக கால் வலியெடுக்க தாண்டி தாண்டி இறங்கி கொண்டிருக்க.மனிசி என்னை திரும்பி பாத்துஏனப்பா தாண்டுறியள்??

இல்லையப்பா வாழ்க்கையிலை என்ன கஸ்ரம் வந்தாலும் தாண்ட பழகவேணும் எண்டு எனக்கு சின்னவயசிலை என்ரை அம்மம்மா சொல்லி தந்தவா அதுதான் தாண்டுறன்.

இப்ப என்னை வேலையிடத்துக்கு காரிலை கொண்டு போய் விட சொன்னது பெரிய கஸ்ரமோ

அய்யோ அதில்லையப்பா காத்தாலை கதவு காலிலை அடிச்சு போட்டுது அதுதான் தாண்டுறன் சரி சரி நீ நட என்றபடி மனிசியை வேலையிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு நேரத்தை பார்த்தேன் 8.30 எனக்கு 10மணிக்குதான் வேலை. திரும்ப வீட்டிற்கு போய் போக நேரம் காணாது. சப்பாத்து இறுக்க காலும் வலி கூடிகொண்டே போக சிற்றிக்குள்ளை(நகரமத்தி) போய் செருப்பு கடையிலை

ஒரு செருப்பு வாங்கி போட்டால் நல்லது பிறகு அங்கையிருந்து அப்பிடியே கைவே (அதி வேக வீதி)எடுத்து வேலைக்கு போகலாம் என நினைத்து சிற்றிக்குள்ளை போய் செருப்பு கடையடிக்கு போட்டன் ஆனால் கார் விட இடம் கிடைக்கேல்லை சரி ஒடிப்போய் ஒரு செருப்பை எடுத்து கொண்டு ஒடியாறதுதானே எண்டு நினைச்சு காரை எமேஜென்சி சிக்னலை போட்டு நடை பாதையிலை விட்டிட்டு ஓடிப்போய் கடைக்குள்ளை புகுந்தன்.

கால்வலி மாறும் மட்டும் நாலைஞ்சு நாளைக்கு போட்டிட்டு எறியிறதுதானே எதுக்கு விலையான செருப்பு வாங்குவான் என்று நினைத்து 9.90யுரோக்கு ஒரு செருப்பை வாங்கி கொண்டு ஓடியந்து பாத்தன் அதுக்கிடையிலை பொலிஸ்காரன் வந்து 30யுரோ தண்டம் எழுதிவைச்சிட்டு போய்கொண்டிருந்தான். சரி என்ன செய்யிறது 39.90யுரோக்கு செருப்பு வாங்கினது எண்டு நினைச்சு கொள்ளுவம் என்று நினைத்தபடி காரை கிளப்பினேன் நான் நின்ற இடத்திலிருந்து எனது வேலையிடம் ஒரு 50 கி்.மீ தூரம் வரும் கைவேயிலை போனால் அரை மணித்தியாலத்திலை போயிடலாம் எனவே காரை கைவேயில் ஏத்தி ஒரு 10 கி. மீ தூரம் ஒடியிருப்பன் முன்னால் போன வாகனங்கள் எல்லாம் எமெஜென்சி சிக்னலை போட்டபடி மெதுவாக ஓடி பின்னர் அப்படியே வீதியில் எல்லாம் அசையாமல நின்று விட்டன.

சரி கிழிஞ்சுது போ ஏதோ விபத்து பேலை காரை கைவேயிலை திருப்பி கொண்டா ஓட ஏலும் கொஞ்ச நேரத்திலை ஓட வெளிக்கிட்டா சரி. நேரத்தை பார்த்தேன் மணி 9.30 ஆகியிருந்தது சரி என்ன நடந்திருக்கும் எண்டு றேடியொவிலை TRAFIC F.M கேட்டா தெரியும் என நினைத்து சி.டி யிலை போய் கொண்டிருந்த "எங்கே செல்லும் இந்த பாதை " தமிழ்பாட்டை நிறுத்தி விட்டு TRAFIC F.M மை போட்டேன் அதில் "குட்பாய் மை லவ்வர் குட்பாய் மை பிறெண்ஸ்" என்று பாட்டு போய் கொண்டிருந்தது. அட போய் தொலையடா இப்ப செய்தியை போடுவியா என்று நினைக்க பாட்டை நிறுத்தி செய்தி போனது பெரிய லொறி ஒண்டு விபத்திற்குள்ளாகி வீதியிலை குறுக்கை பிரண்டு போய்கிடக்கு அதலைதான் 10 கி.மீ தூரத்துக்கு வாகன நெரிசல் என்று அறிவிச்சாங்கள்.

அட அந்த லெறி றைவருக்கு என்ன நடந்திருக்கும் பாவம் காயப் பட்டானா?? அல்லது போயிட்டானா என்று ஒரு நல்ல பாவப்படும் சிந்தனை கூட எனக்கு வரேல்லை உடைன நான் நினைச்சன் அட பிரண்டதுதான் பிரண்டான் பாதையிலை ஒரு ஓரமா பிரண்டிருக்க கூடாதா. நடு றோட்டிலை கவிண்டு இப்ப எனக்கு வேலைக்கும் போக ஏலாமல் போட்டுது என்று நினைச்சபடி சரி முதலாளிக்கு போன் அடிச்சு விபரத்தை சொல்லுவம் என்று நினைச்சபோததான் நான் காலை அவசரத்தில் கைதொலைபேசியை கையை விட்டு விட்டு வந்தது ஞாபகத்தக்கு வந்தது. இனியென்ன போய் முதலாளியும் தாறதை வாங்குவம் என்றபடி எறும்பை விட மெதுவாக காரை ஓடிக்கொண்டிக்க என்ரை கார் கணணி பேசியது "உங்கள் வாகனத்தில் எரிபொருள் குறைந்தளவே உள்ளது " அப்பதான் திடுக்கிட்டு பார்த்தேன் மஞ்சள் லைற் எரிந்து கொண்டிருந்தது.

இப்ப எதுவுமே செய்யிற மாதிரி இல்லை சாதாரணமா ஓடினால் இன்னுமொரு 10 கி.மீ லை ஒரு பெற்றொல் செற் இருக்கு தப்பிடலாம் ஆனால் இப்பிடி ஊர்ந்து கொண்டு போனால் நடு றோட்டிலைதான் நிக்கவேணும் எதுக்கும் கடைசி லைனை பிடிச்சு ஓடினால் பெற்றோல் முடிஞ்சு கார் நிண்டாலும் அப்பிடியே கரையிலை நிப்பாட்டலாம் எண்டு நினைச்சு ஒரு மாதிரி கடைசி லைனுக்கு வந்திட்டன் ஆனால் நேரம் 10 மணியையும் தாண்டிவிட்டது அரை மணித்தியாலத்திலை ஒரு கி.மீ தூரம்தான் ஓடியிருப்பன் கார் மீண்டும் கதைத்தது " உங்கள் எரி பொருள் தீர்ந்து விட்டது இயந்திரத்தை நிறுத்தவும்" என்று இறுதியாய் கதைத்தது் சரி நான் நினைச்சபடி நடு றோட்டுத்தான் இண்டைக்கு. காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அருகிலிருந்த S.O.S போனில் அழைத்து விபரத்தை சொன்னேன்.

நிங்கள் நிற்கின்ற பகுதியில் வாகன நெரிசலாய் இருப்பதால் பாதை தெளிவானதும் உதவியாளர் எரி பொருளுடன் வருவார் என்று சொல்லி கார் என்ன கலர் அதின்ரை நம்பர் பெற்றோலா டீசலா என்ற விபரம் எல்லாம் எடுத்து விட்டு நன்றி வணக்கம் சொன்னார்கள். 11.30 தாண்டிவிட்டது எந்த வாகனமும் அசையவில்லை வெய்யில் ஏற ஏற தண்ணி தாகமும் எடுத்தது தண்ணி போத்தல் ஏதாவது இருக்குமா என்று கார் டிக்கியைபோய் திறந்து பார்தேன் ஓயில் கான் தான் இருந்தது. இதே ஊராய் அல்லது இந்தியாவாய் இருந்தால் செய்தி கேள்வி பட்டதும் இளனி சோடா ஏன் தோசை மசாலை வடை கூட கொண்டந்து விக்க தொடங்கியிருப்பாங்கள் இது கண்டறியாத வெளி நாடு ஒண்டும் இல்லை நடு றொட்டிலை காய வேண்டிகிடக்கு எண்டு நினைச்சன்.

ஒரு மாதிரி 11.30மணியளவிலை றோட்டு கிளியராகி பெற்றொலும் வந்து வேலைக்கு போய் முதலாளியிட்டை பம்மினபடி மன்னிப்பு கேட்டு நடந்ததை நடிச்சு காட்டி காலவலியோடை வேலையையும் முடிச்சிட்டு பின்னேரம் வீட்டை வந்து விரலிலை இரந்த பிளாஸ்ரரை களட்டிஎறிஞ்சிட்டு குளிப்பம் எண்டு குளியலறைக்கை புகுந்து தண்ணியை திறந்திட்டு தலையை நீட்ட வீட்டு போன் விடாமல் அடிச்சிது அட ஆரெண்டு பாப்பம் எண்டு துவாயை எடுத்து சுத்தி கொண்டு படுக்கையறைக்கு ஓடியந்தன் மீண்டும் அதே கதவு அதே இடத்தில் அச்சு பிசகாமல் படாரெண்டு அடித்தது. அய்யோ என்றபடி வாயில் வந்ததையெல்லாம் திட்டி கதவை எட்டி உதைந்து விட்டு போனை எடுத்து கலோ என்றேன் மறு பக்கம் அம்மா

" தம்பி காத்தாலை இருந்து உனக்கு அடிச்சு கொண்டேயிருக்கிறன் லைன் கிடைக்கேல்லை இண்டைக்கு உன்ரை பிறந்த நாள் அல்லோ அததான் வாழ்த்து சொல்ல அடிச்சனான் பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பிடி பிறந்த நாள் நல்லா போச்சுதோ "

ஓமம்மா அந்த மாதிரி போச்சுது என்று சொல்லி கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனை வைத்தேன். அப்போதுதான் தெரியும் காத்தாலை போன் வந்ததிலை இருந்து நடந்த குளப்பத்திலை எனக்கு இண்டைக்குஎன்ரை பிறந்தநாள் எண்டதே மறந்து போச்சு.மீண்டும் போய் குளித்த விட்டு வந்து மீண்டும் கால் விரலில் ஒரு பிளாஸ்ரரை ஒட்டிகொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைக்க மனிசி வேலை முடிந்து வந்து கதவை திறந்தபடி "என்னப்பா இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ நான் உங்களுக்கு ஒரு சேட்டும் வாங்கி வைச்சிருந்தனான் காலைமை நேரம் பிந்தினதாலை தர ஏலாமல் போச்சுது இந்தாங்கோ போட்டு பாருங்கோ" என்று சேட்டை நீட்டியபடி சரி காலைமை காலிலை ஏதோ அடிச்சதெண்டனிங்களல்லோ இப்ப எப்பிடியிருக்குஎன்றாள் நானும் சேட்டை போட்டு பார்த்தபடி" பட்ட காலிலேயே படும்" எண்டவும் மனிசி ஒன்றும் புரியாமல் என்னை பாத்தபடி இந்த மனிசன் எப்பவும் இப்பிடித்தான் நான் ஒண்டு கேட்டா தாணெண்டு சொல்லும் என்றபடி தொலை காட்சியை போட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி உங்க வீட்டு கதை, கதையாய் வந்ததும் அழகுதான் :blink:

Posted

ஓய் கடுப்பி கடுப்பை ஏத்தாதையும் எனக்கு விசர் வந்தா கடிச்சு போடுவன் கவனம் :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சாத்திரி அண்ணா..நல்லா இருக்கு கதை...

சொந்த கதையை அழகா சொல்லி இருக்கீங்க.... :P :P

Posted

சரி சரி உண்மை கதைதான் யாவும் கற்பனை எண்டு எழுத மறந்து போனன் இப்ப சந்தோசமா எல்லாரிற்கும் :D

Posted

சாத்திரி, கதையினை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியண்ணே! இப்ப உங்களின்ட கால் வீக்கம் எப்படியிருக்கு?

கதை கற்பனையெனில் சிலசமயம் கனவில நொன்டி நடக்கேக்க நாய் துரத்தும் கவனம். :icon_idea::rolleyes:

Posted

ஹும் கதை வாசிக்கும் போது சிரிப்பு வந்தாலும் , பாவம் சாத்திரியண்ணா இப்படி பிறந்த நாள் அன்று கஸ்டப்பட்டுருக்காரே, கஸ்டமான நாளாப் போச்சே எண்டு நினைக்க கவலையாவும் இருந்திச்சு.கஸ்டம் வந்தால் ஒரேதா வரும் எண்டு சொல்லுவினமே அது இதுதான் போல. ஹும் கதை நல்லா எழுதியிருக்குறீங்கள். பாராட்டுக்கள். ! :lol:

Posted

ம்ம் கோயில்ல சரியான கூட்டம். காலேல வீட்டில காரில அந்த ஹீலை போட்டுக்கிட்டு ஏறினன். பிறகு கோயிலடிக்கு போனா அங்க எவ்வளவு கூட்டம். கார் விடவே இடமில்லாமல் பொலீஸ்காரன் தூரமாக எங்கையோ கைய காட்ட அங்க கொண்டு போய் காரை பார்க் பண்ணிட்டு திரும்ப அந்த ஹீலோட நடக்க தொட்டங்கின நான் கோயிலுக்க போய் அரிச்சனை பண்ணி, பிறகு தேரில வந்த அம்பாளை கும்பிட்டுட்டு, கடையள் எல்லாம் தேடி அடிச்சு பிடிச்சு ஒரு புது மொடல் சாரீ எனக்கும் கோலம் சாரீ அம்மாக்குமெண்டு வாங்கி கொண்டு வந்து அங்க வித்த ஒரு சர்பத்தையும் ஒரு கப் மோரையும் குடிச்சுட்டு மாம,மாமியோட களைச்சுப்போய் ஹீலையும் அப்பாடா எண்டு கழட்டி வைச்சிட்டு அந்த புல்லில இருந்தன். பக்கத்தில ஒரு வெள்ளைக்காரி. சாறி கட்டி இருக்கா..இல்லை இல்லை கட்ட முயன்றிருக்கா. தொங்கலை தூக்கி தலையில போட்டுக்கொண்டு இருந்தவ கொஞ்ச நேரத்தால பிள்ளை கரைச்சல் படுத்த எழும்பி போனா. திரும்பி பார்த்தா அவா இருந்தது எங்கட " ஒரு பேப்பர்" க்கு மேல! எனக்கு வந்த கோவத்துக்கு....." எல்லாம் நேரமடி" என்று அவா காதூ படவே சொன்னன். விளங்காது எண்டு நெச்சு சொல்லல. அவ கூட எழும்பி போனது ஒரு தமிழ் பொண்ணு விளங்கி இருக்குமெண்டு தெரியும். ஆனால் கேட்டிச்சோ என்னவோ. சரியெண்டு ஆசுவாசுமா இருந்து நம்ம யாழ் நினைவோட எடுத்து பிரிச்சு படிக்க தொடங்கினன். எல்லா இடமும் ஒழுங்கா பார்க்காம பறந்து பறந்து ததன் பார்த்தன் பொறுமையில்லாமல். அப்பத்தான் சாத்திரி அண்ணாவோட " மறந்த நாள்" கண்ணில பட்டிச்சு. சரி எண்டு இருந்து வாசிச்சா. " தொடரும்" எண்டு வேறொரு பக்கத்தை காட்ட சரி எண்டு அதை தேடி பிடிச்சு வாசிக்க பஞ்சு முட்டாய் வாங்கியபடி மச்சான் வந்தான். கண்டுக்காம இருக்க " இந்தாங்கோ இப்போ எடுத்தா உண்டு இனி அப்புறம் இல்லை" எண்டு வெருட்டினான். " ஏன் இவ்ளோத்தையும் நீரே சாப்ப்டுற ஐடியாவோ.." என்று அவனோடு கொஞ்ச நேரம் வாயாடியதில் நேரம் போயிட்டுது. சரி எண்டு மிச்சத்தை வாசிக்க தொடங்க மாம " எழும்புங்கோ..ஏதும் வெட்டு குத்து ஐடியாவோ தெரியாது வீச்சா கிளம்புவம்" எண்டு சொல்ல பேப்பரை மடிச்சு பாக்குள்ள வைச்சுட்டு திரும்ப ஹீலையும் போட்டுக்கிட்டு கெந்தி கெந்தி நடந்தன். காரில வாசிப்பம் எண்டு தான் வைச்சன். பாக்குள்ள புல்லா சாமானுகள் பூட்டேலாம இருக்க சரி ் எண்டு பூட்டாம பேப்பரை கொஞ்சம் வெளியில் தெரியும் படி விட்டபடி தோளில போட்டுண்டு வந்தன். நான் கெந்தி கெந்தி நடக்க பேப்பருக்கு என்ன ஆச்சோ தெரியல. காரில வந்து இருந்து படிப்பம் எண்டு பாக்கை பார்த்தால் அந்த " ஒரு பேப்பரை" காணேல்லை. :lol:

என்னடாப்பா காலேலயே இந்தாளுக்கு இந்த நிலமை ..அப்புறம் என்னாச்சோ எண்டு அறிய துடிச்சால் எங்க இருந்திச்சு. கடைசியில இப்ப தான் யாழில கண்டன். உடனே போய் வாசிச்சிட்டன்ல. B)

...............................

நல்லா இருக்கு கதை சாத்திரி அண்ணா. "ஹம் "கோயில ஒரு ரேடியோ அண்ட் ஒரு பேப்பர் ஆக்கள் இருந்தாங்க. அங்க போனேன். சிலவேளை சாத்திரி அண்ணா இருப்பாரோ எண்டு அண்ணா தேடினார். யாரையோ கேட்டு கூட பார்த்தார். " பேப்பருக்கு எழுதுரவை ஆருமே வரல எண்டுட்டாங்க" அதுவும் அந்த அக்கா எங்க அண்ணாவை ஏதோ இதே சாட்டில தன்னோட கதைக்க வந்த போல பார்க்க :angry: எனக்கு ஒரு மாதிரியா போச்சு. ஆளை இழுத்துண்டு வந்துட்டன்.

Posted

நல்லா இருக்கு கதை சாத்திரி அண்ணா. "ஹம் "கோயில ஒரு ரேடியோ அண்ட் ஒரு பேப்பர் ஆக்கள் இருந்தாங்க. அங்க போனேன். சிலவேளை சாத்திரி அண்ணா இருப்பாரோ எண்டு அண்ணா தேடினார். யாரையோ கேட்டு கூட பார்த்தார். " பேப்பருக்கு எழுதுரவை ஆருமே வரல எண்டுட்டாங்க" அதுவும் அந்த அக்கா எங்க அண்ணாவை ஏதோ இதே சாட்டில தன்னோட கதைக்க வந்த போல பார்க்க எனக்கு ஒரு மாதிரியா போச்சு. ஆளை இழுத்துண்டு வந்துட்டன். (பிரியசகி எழுதியது)

பிரிய சகிஉங்கடை கவலை விழங்குது சரி கதையை இப்பபடிச்சு முடிச்சிட்டீங்கள் தானே . மற்றபடி உந்த ஒருபேப்பர் காரங்கள் சாத்திரியை யாரோ தேடிவருகினம் எண்டு வயித்தெரிச்சல் பட்டிருப்பாங்கள் அதுதான் ஒரு மாதிரி பாத்திரப்பாங்கள் பிறகு தண்ணீர் பந்தலிலை மோர் தண்ணியை குடிச்சு வயித்தை குளிர வைச்சிருப்பாங்கள் :lol::lol::o

Posted

அப்போ நீங்கள் உண்மையாவே வரலயா?

நான் டென்சன் ஆனதில வடிவா விசாரிக்கல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம்ம் கோயில்ல சரியான கூட்டம். காலேல வீட்டில காரில அந்த ஹீலை போட்டுக்கிட்டு ஏறினன். பிறகு கோயிலடிக்கு போனா அங்க எவ்வளவு கூட்டம். கார் விடவே இடமில்லாமல் பொலீஸ்காரன் தூரமாக எங்கையோ கைய காட்ட அங்க கொண்டு போய் காரை பார்க் பண்ணிட்டு திரும்ப அந்த ஹீலோட நடக்க தொட்டங்கின நான் கோயிலுக்க போய் அரிச்சனை பண்ணி, பிறகு தேரில வந்த அம்பாளை கும்பிட்டுட்டு, கடையள் எல்லாம் தேடி அடிச்சு பிடிச்சு ஒரு புது மொடல் சாரீ எனக்கும் கோலம் சாரீ அம்மாக்குமெண்டு வாங்கி கொண்டு வந்து அங்க வித்த ஒரு சர்பத்தையும் ஒரு கப் மோரையும் குடிச்சுட்டு மாம,மாமியோட களைச்சுப்போய் ஹீலையும் அப்பாடா எண்டு கழட்டி வைச்சிட்டு அந்த புல்லில இருந்தன். பக்கத்தில ஒரு வெள்ளைக்காரி. சாறி கட்டி இருக்கா..இல்லை இல்லை கட்ட முயன்றிருக்கா. தொங்கலை தூக்கி தலையில போட்டுக்கொண்டு இருந்தவ கொஞ்ச நேரத்தால பிள்ளை கரைச்சல் படுத்த எழும்பி போனா. திரும்பி பார்த்தா அவா இருந்தது எங்கட " ஒரு பேப்பர்" க்கு மேல! எனக்கு வந்த கோவத்துக்கு....." எல்லாம் நேரமடி" என்று அவா காதூ படவே சொன்னன். விளங்காது எண்டு நெச்சு சொல்லல. அவ கூட எழும்பி போனது ஒரு தமிழ் பொண்ணு விளங்கி இருக்குமெண்டு தெரியும். ஆனால் கேட்டிச்சோ என்னவோ. சரியெண்டு ஆசுவாசுமா இருந்து நம்ம யாழ் நினைவோட எடுத்து பிரிச்சு படிக்க தொடங்கினன். எல்லா இடமும் ஒழுங்கா பார்க்காம பறந்து பறந்து ததன் பார்த்தன் பொறுமையில்லாமல். அப்பத்தான் சாத்திரி அண்ணாவோட " மறந்த நாள்" கண்ணில பட்டிச்சு. சரி எண்டு இருந்து வாசிச்சா. " தொடரும்" எண்டு வேறொரு பக்கத்தை காட்ட சரி எண்டு அதை தேடி பிடிச்சு வாசிக்க பஞ்சு முட்டாய் வாங்கியபடி மச்சான் வந்தான். கண்டுக்காம இருக்க " இந்தாங்கோ இப்போ எடுத்தா உண்டு இனி அப்புறம் இல்லை" எண்டு வெருட்டினான். " ஏன் இவ்ளோத்தையும் நீரே சாப்ப்டுற ஐடியாவோ.." என்று அவனோடு கொஞ்ச நேரம் வாயாடியதில் நேரம் போயிட்டுது. சரி எண்டு மிச்சத்தை வாசிக்க தொடங்க மாம " எழும்புங்கோ..ஏதும் வெட்டு குத்து ஐடியாவோ தெரியாது வீச்சா கிளம்புவம்" எண்டு சொல்ல பேப்பரை மடிச்சு பாக்குள்ள வைச்சுட்டு திரும்ப ஹீலையும் போட்டுக்கிட்டு கெந்தி கெந்தி நடந்தன். காரில வாசிப்பம் எண்டு தான் வைச்சன். பாக்குள்ள புல்லா சாமானுகள் பூட்டேலாம இருக்க சரி ் எண்டு பூட்டாம பேப்பரை கொஞ்சம் வெளியில் தெரியும் படி விட்டபடி தோளில போட்டுண்டு வந்தன். நான் கெந்தி கெந்தி நடக்க பேப்பருக்கு என்ன ஆச்சோ தெரியல. காரில வந்து இருந்து படிப்பம் எண்டு பாக்கை பார்த்தால் அந்த " ஒரு பேப்பரை" காணேல்லை. :lol:

என்னடாப்பா காலேலயே இந்தாளுக்கு இந்த நிலமை ..அப்புறம் என்னாச்சோ எண்டு அறிய துடிச்சால் எங்க இருந்திச்சு. கடைசியில இப்ப தான் யாழில கண்டன். உடனே போய் வாசிச்சிட்டன்ல. B)

...............................

நல்லா இருக்கு கதை சாத்திரி அண்ணா. "ஹம் "கோயில ஒரு ரேடியோ அண்ட் ஒரு பேப்பர் ஆக்கள் இருந்தாங்க. அங்க போனேன். சிலவேளை சாத்திரி அண்ணா இருப்பாரோ எண்டு அண்ணா தேடினார். யாரையோ கேட்டு கூட பார்த்தார். " பேப்பருக்கு எழுதுரவை ஆருமே வரல எண்டுட்டாங்க" அதுவும் அந்த அக்கா எங்க அண்ணாவை ஏதோ இதே சாட்டில தன்னோட கதைக்க வந்த போல பார்க்க :angry: எனக்கு ஒரு மாதிரியா போச்சு. ஆளை இழுத்துண்டு வந்துட்டன்.

சா சகி.. ஒரு கதைக்கைக்காக இவ்வளவு கஸ்ட பட்டு இருக்கீங்க.

உங்க நிலமை யாருக்கும் வர கூடது. :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி அரசியல் கதை என்றாலும் சுவரிசயமாக எழுதுகிறார். தொடர்கதை என்றாலும் அதிலும் அழகாக எழுதுகிறார். பிறந்த நாளில் நடந்த சம்பவத்தையும் விறு விறுப்பாக எழுதுகிறார். எப்படி இவரால் முடிகிறது என்று வியக்கிறேன்.

உங்க ஜேர்மனியில் கோவில் திருவிழாக்களின் போது புடவைகளும் விக்கிறார்களா சகி?. சிட்னி முருகன் கோவிலில் தண்ணீர்பந்தல், அன்னதானம் மட்டுமே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.