Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்:  பேரவை வேண்டுகோள்

தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய   அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்ற வகையிலும் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் நமக்கென்று ஒரு தூய, ஒற்றுமையான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. தேர்தல் அரசியலில் குதித்து நிற்பவர்களின் பிரிவுகள், முரண்பாடுகள், சுயநலப் போக்குகள், பேச்சுக்கள் தொடர்பில் மக்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்திருக்கின்றார்கள். இவை மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து எமது பயணத்தை திசைமாற்றிவிடுமோ என்ற கவலையும் ஏற்பட்டிருக்கின்றது.

போதிய அளவு அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள ஒரு தேசிய இனமாகிய நாம் சில விடயங்கள் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம். அரசியல்வாதிகளை விமர்சிக்கமுன் பொது மக்களாகிய நாம் எம்மை சீர்செய்துகொள்ள முடியுமா? என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.

வருமானத்திற்கும் சலுகைகளுக்குமாக நாம் ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிப்போமாக இருந்தால் அவரை இலஞ்சம் வாங்க வேண்டாம் என்றோ, சலுகைகளுக்கு விலை போகவேண்டாம் என்றோ கேட்டுக்கொள்ளும் தார்மீக உரிமை நமக்கு இல்லாமல் போய்விடும்.

பொருத்தமற்ற அரசியல் பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்துவிட்டு அல்லும் பகலும் அவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. புனிதமான, கொள்கை அடிப்படையிலான அரசியல் பாதையை வடிவமைக்க வேண்டிய நொந்து போன ஒரு இனம் சாக்கடை அரசியலை வளர்த்துவிட்டு, பின் அதிலிருந்து தூர விலகி நின்று, இது சாக்கடை அரசியல் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது.

பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு, வாக்களிக்காமல் இருந்துவிட்டு பின் தெரிவுசெய்யப்படும் அரசியல் பிரதிநிதிகளை விமர்சிப்பதும் ஒரு பொறுப்பற்ற செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

எனவே எமது அரசியலை தூய்மைப்படுத்த பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற பாரிய பொறுப்பு என் முன்னே எழுந்து நிற்கின்றது.

பலவகையான போராட்டங்களினூடும் படிப்பினைகளினூடும் பயணித்த எம் தமிழ் மக்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளை நன்கு சிந்தித்து தெரிவு செய்வது கடினமாதொன்றாக இருக்காது. இம்முறை என்றுமில்லாதவாறு எம்முன்னே பல தெரிவுகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

தூய அரசியலை வடிவமைக்க பொருத்தமானவர்களை எதனை வைத்து தெரிவு செய்வது? என்று ஒரு கேள்வி எழுகின்றது.

தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்துணிவு, நேச சக்திகளை அரவணைத்து ஒற்றுமைப்படுத்தும் ஆளுமை, வெளிப்படைத்தன்மை, குற்றச்சாட்டுக்கள் எழும்பொழுது பொறுப்புக்கூறும் பெருந்தன்மை, தவறுகள் இருப்பின் அதனை ஏற்று திருத்திக் கொள்ள முயலும் மனப்பக்குவம், திறமை, எமது இலக்கு நோக்கிய நகர்வுகளை துறைசார் வல்லுநர்களையும் இணைத்து திட்டமிடும் ஆற்றல், சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளின் நல்ல முயற்சிகளை பாராட்டி ஊக்கப்படுத்தும் பெருந்தன்மை போன்ற நல்ல இயல்புகளோடு முக்கியமாக, முயலுவோம்.

எம்மிடையே பல சிந்தனை வேறுபாடுகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஒருவரின் சிந்தனையும் தீர்மானமும் போன்று இன்னொருவரின் சிந்தனையும் முடிவும் இருக்காது, இது இயற்கை. இன்னொருவரின் சிந்தனையையும், முடிவுகளையும், அதற்கான அவர் சார்ந்த காரணங்களையும் விளங்கிக் கொள்ள முயல்வது பயன்தரும். எமது சிந்தனையை வலுக்கட்டாயமாக இன்னொருவரின் மீது திணிக்க முயல்வதோ, கோபம் கொள்வதோ அர்த்தமற்றது. ஆனால் எமது நீண்டகால அபிலாசைகளை அடைவதற்காக எமது அடிப்படைகளினின்று விலகாது, வேறுபாடுகளை மறந்து கைகோர்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எமது பொது நோக்கங்களுக்காக சகோதர (சக தமிழ்த் தேசிய) கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.  எனவே எம்மிடையே பகை வளர்க்கும் வார்த்தைப் பிரயோகங்களையும், கருத்துக்களையும் தவிர்த்து பொருத்தமானவர்களை எமது பிரதிநிதிகள் ஆக்குவதில் எமது கவனத்தை குவிப்போம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஒழுக்கம்-நேர்மை-தற்றுணி/

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம்

TPC.jpg

ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது.

எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும்.

எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதனைச் செய்யும் அந்த முகவர்கள் செயல் வீரர்கள் போல நம் மத்தியிலே உலா வருகின்றனர்.வறுமையையும் சமூக சிக்கல் நிலைகளையும் எம்மக்கள் மத்தியிலே திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு அதை தீர்க்கவென தற்காலிக போலிச் சலுகைகளைக் காட்டி அவர்களின் வாக்குகளை விலைபேச முயல்வது மனிதத்துவம் ஆகாது.

தமது வறுமையைப் போக்கவென தமது வாக்குகளைச் சலுகைகளுக்காக விற்கும் எம்மவர்களை கோபித்துக் கொள்வதும் அர்த்தமற்றது. அந்தச் சூழ்நிலைக் கைதிகளின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களால் தடம்மாறி நிற்கும் மக்கள், எம் மக்கள் அல்ல என்று ஆகிவிடாது அவர்களையும் தடம்மாற்றி சலுகைகளுக்காக எமது வாக்குகள் விலைபோகாது என்பதை சரியான முறையில் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நிரூபிப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறு விலை பேசும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது எமது விடியலை நோக்கிய பயணத்திற்கு உரம் சேர்க்கும். எலும்புத் துண்டையும் உணவுத் துண்டையும் காட்டி தமது ஆட்டத்திற்கு ஆட்டி வைக்கப்படும் வட்டரங்கு விலங்குகள் (Circus animals) போல நாம் இல்லை என்பதை தெளிவாக்கும்.பொது விடயங்கள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவேனும் நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நாம் பிரித்தாளப்பட்டு எமது அபிலாசைகள் சிதைக்கப்படுவதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. கோணேசர் கோயிலும் நல்லூர் ஆலயமும் கூட நம் பூர்வீகமல்ல என வாதிடுபவர்களுக்குக்கூட இது வரப்பிரசாதமாக அமைந்துவிடும். இந்த ஒற்றுமைக்காக தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ் தலைவர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இந்த முயற்சிகள் தொடரும்.

இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும்.

எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம்  #தேர்தல்  #ஒற்றுமை #வறுமை  #வாக்கு  #தமிழ்மக்கள்பேரவை

தமிழ் மக்கள் பேரவை

http://globaltamilnews.net/2020/146701/

நியாயமான கோரிக்கை!

போட்டியிடுபவர்களில் பின்வருபவர்கள் சிறந்த பிரதிநிதிகளாக செயற்படுவார்கள் என 50% - 70% நம்பிக்கை உள்ளது.

கூட்டமைப்பில்
வடமாகாணம்: சார்ள்ஸ் நிர்மலநாதன், சசிகலா ரவிராஜ், ஆர்னால்ட்

கிழக்கு மாகாணம்: ---

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில்
கிழக்கு மாகாணம்: ஆத்மலிங்கம் ரவீந்திரன் (ரூபன்),   சோமசுந்தரம்,   கணேசமூர்த்தி

வடமாகாணம்: விக்னேஸ்வரன்,   அனந்தி சசிதரன்,    அருந்தவபாலன்,    மாலினி ஜெனிற்றன்,   சிவசக்தி ஆனந்தன்,   சிவாஜிலிங்கம்,  

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி:
வடமாகாணம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,   மணிவண்ணன்,   சிவபாதம் கஜேந்திரகுமார்,   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

போட்டியிடுபவர்களில் பின்வருபவர்கள் சிறந்த பிரதிநிதிகளாக செயற்படுவார்கள் என 50% - 70% நம்பிக்கை உள்ளது.

கூட்டமைப்பில்
வடமாகாணம்: சார்ள்ஸ் நிர்மலநாதன், சசிகலா ரவிராஜ், ஆர்னால்ட்

கிழக்கு மாகாணம்: ---

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில்
கிழக்கு மாகாணம்: ஆத்மலிங்கம் ரவீந்திரன் (ரூபன்),   சோமசுந்தரம்,   கணேசமூர்த்தி

வடமாகாணம்: விக்னேஸ்வரன்,   அனந்தி சசிதரன்,    அருந்தவபாலன்,    மாலினி ஜெனிற்றன்,   சிவசக்தி ஆனந்தன்,   சிவாஜிலிங்கம்,  

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி:
வடமாகாணம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,   மணிவண்ணன்,   சிவபாதம் கஜேந்திரகுமார்,   

தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன முறை போன்று ஒரு ஆசனமும் எடுக்காது என்றே நினைக்கின்றேன்.

 

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி யாழில் 1 அல்லது 2 ஆசனங்கள் எடுக்கலாம். வன்னியில் ஒன்று எடுக்கலாம்.

கூட்டமைப்பு 3 - 4 ஆசனங்களை யாழிலும், 3 - 4 ஆசனங்களை  வன்னியிலும் எடுக்கலாம். 

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு பாரிய சரிவு வரும். 2 பேர் வெல்லலாம். பிள்ளையான் ஒரு ஆசனம் எடுக்கலாம்.

திருகோணமலையில் சம்பந்தரைத் தவிர வேறு ஒரு தமிழரும் வெல்லமாட்டார்கள்.

அப்பாறையில் அம்மானுக்கும் கோடீஸ்வரனுக்கும் நடக்கும் இழுபறிப் போட்டியில் இரண்டு பேருமே வெல்லாமல் போகலாம் அல்லது மக்கள் tactical ஆக வாக்களித்தால் இருவரில் ஒருவர் வெல்லலாம்.

 

23 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

இதுக்கு முழுத்துணையும் சம்பந்தன், சுமந்திரன் தானே!

21 hours ago, கிருபன் said:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன முறை போன்று ஒரு ஆசனமும் எடுக்காது என்றே நினைக்கின்றேன்.

குறுகிய நலன்களுக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் செயற்பட்டு வந்தாலும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பினரைப் போல தமிழினத்துக்கு விரோதமாக செயற்படாத நிலையில், கட்சிகள் சிதறியுள்ள நிலையில், அவர்களுக்கும் குறைந்தது ஓரிரு ஆசனங்கள் கிடைப்பது நல்லது என்றே நினைக்கிறன்! 

குறைந்தது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவது பாராளுமன்றம் போனால் கிடைக்கும் அனுபவம் தமிழினத்துக்கு நல்லதாக மாறும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.