Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது!

Featured Replies

ஒரு வலைக்குறிப்பிலிருந்து:

தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது!

'தா தா தைதை.. தத்தை தை...தை... தித்தித்தை' என சொர்ணமால்யா தேவதாசியாக பெரியார் படத்தில் ஆடி இருப்பார். தேவதாசி முறை என்பது அபத்தம் என்கிறார்கள். இதை கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு பார்த்தால் அதில் மறை(த)ந்துள்ள உண்மைகள் விளங்கும்.

நான்முகன் வேதமும், நாரணன் பாதமும் அனைவருக்கும் பொது என்று பார்ப்பனர்கள் சொன்னால் எதோ பொல்லாததைச் சொல்வதாக பார்ப்பன நிந்தனை செய்கிறார்கள். அறிவிலிகளின் பேச்சு ஆதி காலம் தொட்டே இருக்கிறது. நாம் இந்த தேவதாசி முறையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். அதில் உள்ள பெண்கள் இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் தொண்டு செய்து வந்தார்கள். எது போன்ற தொண்டு? கோவில்களில் கலைநிகழ்ச்சி நடத்துதல், இறைவனை வேதம் ஓதி போற்றுபவர்களின் கால்களை அமுக்குதல், மற்றும் வேதம் ஓதுபவர்களின் மனைவிமார்கள் பிறந்தகத்துக்கு பிரசவத்துக்காக சென்ற நாட்களில் ஒரு மனைவி ஸ்தானத்தில் இருந்து 'திருப்தி' படுத்துதல் போன்ற புனிதமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். காமம் பாவம் அல்ல என்பதால் தான் சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் உயிர்ப்பிக்கப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சளி, மலம், சிறுநீர் போல, விந்தும் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். பெண்கள் பிரசவ காலத்தில் பிறந்தகத்துக்கு செல்லும் போது ஆண்கள் எல்லாரும் சாமியார்கள் ஆகிவிட முடியாது. அதனால் தான் பொதுப்படுத்தப்பட்ட தேவதாசி பெண்களை மேற்கண்ட தொழிலுக்கு வைத்து இருந்தார்கள்.

சமபந்தி போஜனம் என்கிறார்களே, இன்று அது போல் தேவதாசிகள் அனைத்து மேல் சாதியினருக்கும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதன் மூலம் சமத்துவம் அங்கே கடைபிடிக்கப்பட்டது என்பதை அறிவார்களா மூடர்க ?

இதெல்லாம் தெரியாத இராமசாமி நாயக்கன் 'உங்காத்து பெண்களை ஏன் தேவதாசி ஆக்கக்கூடாது?' என்ற குதர்க்கமான கேள்வி கேட்டு வழிவழிவந்த அந்த புனிதமான இறைவன் சேவையை நிறுத்திவிட்டார்.

அதன் விளைவு? சுத்தமில்லாத பெண்களுடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வேண்டாத வியாதிகளான கொனேரிய, சிலிபஸ் மற்றும் உயிர்கொல்லி நோயான எஸ்ட்ஸுக்கும் எல்லா சாதியினரும் பலியாக வேண்டி இருக்கிறது. பொதுவில் பார்த்து வந்த நிர்வாண நடனங்களை இப்பொழுது சிடி போட்டு மறைவாக பார்க்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

மீண்டும் சொல்கிறேன். காமம் தவறல்ல. முறையாக அனுபவிக்கப்பட வேண்டும். அதற்குத்தான் தேவதாசி என்ற முறையை நம் முன்னோர்கள் 'வைத்து' இருந்தார்கள். நண்பர்களே சிந்திப்பீர்.

http://www.tamilnadutalk.com/portal/index....mp;#entry130664

  • கருத்துக்கள உறவுகள்

தேவதாசி முறையும் தேவையில்ல... தாசிகளும் தேவையில்ல.. சரியான தனி மனித ஒழுக்கமும் மன அடக்கமும் தரும் பயிற்சிகளும்.. முயற்சிகளும் இருக்கும் என்றால் மனிதனால் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ முடியும்..!

நம்ம சித்தர்களும் சுவாமிகளும் சந்நியாசம் போய் பிரமச்சாரியம் காத்து வாழவில்லையா.. அவங்க யோகம் படிச்சு.. மனசை ஆளக்கற்றுக் கொண்டதால வெறும் உடல் தூண்டல்களுக்கு துலங்கல் என்று நிற்கல்ல. எனவே பாடசாலைகளில் பாலியல் கல்வியோட.. யோகக் கல்வியும் மனவடக்கப் பயிற்சிகளும்..சொல்லிக் கொடுக்கும் போது.. சிறுவயதிலேயே பாலியல் என்பதன் சரியான நிலையை விளங்கிக் கொண்டு.. தாசி தாசன் தேடாமல்.. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் கட்டுமானத்துக்குள் நிற்பார்கள்..! அதுதான் அவசியமே தவிர தாசி.. என்று கட்டுப்பாடற்ற மனிதரில் கண்டபடி எழும் பாலியல் இச்சைகளை தீர்க்க பாலியல் அடிமைகளாக பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் பாவிக்கிறதை அனுமதிக்க முடியாது. கூடாது..!

தேவ தாசிகள் தேவைன்னா பெண்களும் தங்களுக்கு தங்க அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துக்க தேவ தாசன்கள் வேணும் என்றுவீனம்..! இப்படியே போயிட்டிருந்தா... இறுதியில்.. வீதியோரக் குழந்தைகளும்.. கொண்டோம் விற்பனையும் தான் சூடுபிடிக்கும். மனித சமூகம் ஒழுக்கம் கெட்டு.. நிற்கும்..!

விலங்குகளில இயற்கையாவே சில கட்டுப்பாடுகள் இருக்கு. மனிதரில பகுத்தறிவை வளர்த்து அந்தக் கட்டுப்பாட்டைக் குறைச்சிருக்கு இயற்கை..! ஆனால் மனிதன் பகுத்தறிவை.. சிறுமையான சிந்தனைகளுக்கு பாவிச்சு.. அடிமைத்தனம் மூலம்.. அதிகாரத்தின் மூலம்.. பாலியல் இச்சைகளை தீர்த்துக்க நினைக்கிறான். அது உரிமையியல் சமத்துவம் மற்றும் தனிமனித ஒழுக்கம் வேண்டும்... நாகரிக பகுத்தறிவு நிலை மனித உலகுக்கு..அவசியமில்லை..!

எயிட்ஸே இந்தக் கறுமங்களைக் கட்டுப்படுத்தத்தானே உருவாக்கினது. குறிப்பா ஒரு பால் சேர்கையை கட்டுப்படுத்த..! நல்ல காலம் எயிட்சும் இல்லைன்னா நம்மாக்கல கட்டுப்படுத்த ஏலாது. :wub: :P

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இவ் வலைப்பதிவானது ஜாதி வெறி பிடித்த ஒரு காமபிசாசால் எழுதப்பட்டிருகிறது ஆக சுத்தமான பெண்களிடம் இவர் செல்லாமல் ஏன் இவரது சுத்தமான குடுமப்த்தில் இருந்து பெண்ணை கொடுக்க முடியாது இவர் சொல்லுவது போல காமம் பாவம் இல்லை என்றால் இவரின் குடும்பத்துக்கும் பொருந்துமல்லவா.பெரியார் அன்று சொன்னது முற்றிலும் சரியானது.

இவரின் கூற்றுப்படி ஆண்கள் 365 நாளும் காமத்திலதான் வாழ வேண்டுமா?அது நடைமுறை சாத்தியமானதா அல்லது இப்படி வன்புணர்வு உணர்சி கொண்ட இக்கட்டுரையாளர் போன்று நாம் ச்ந்திக்க தலைப்படோம்.பெண் பிரசவத்துக்காக தாய்வீட்ட போனால் வேறு மனை நாடுவாராம் ஆக ஒரு அரிப்பின் உச்சத்தில் இருந்து இக்கட்டுரையை மன்னிக்கணும் இந்த குப்பையை வரைந்திருகிறார் ஒரு பார்பணன் ஒருவர் மிக அருமையாக தம் குணத்தை வெளிகொனர்ந்ததுக்கு நன்றிகள்

வளர்க்க வேண்டியது ஆன்மீகத்தை அல்ல, அறிவியலை.

பல மதங்களையும் கடவுள்களையும் உருவாக்கி ஆன்மீகத்தின் சிகரமாக விளங்கும் இந்தியா எயிட்ஸ் அதிகமாக உள்ள நாடுகளின் முதலிடத்தைப் பிடிக்க போட்டி போடுகிறது.

வளர்ச்சியடைந்த ஐரோபிய நாடுகளில் பாலியல் ஒழுக்கமின்மை மலிந்திருந்தாலும் எயிட்சை பாரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயா பாலியல் தொழில் அதிகமாக நடைபெறும் தாய்லாந்திலும் அறிவூட்டல் மூலம் எயிட்சைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

வளர்க்க வேண்டியது ஆன்மீகத்தை அல்ல, அறிவியலை.

பல மதங்களையும் கடவுள்களையும் உருவாக்கி ஆன்மீகத்தின் சிகரமாக விளங்கும் இந்தியா எயிட்ஸ் அதிகமாக உள்ள நாடுகளின் முதலிடத்தைப் பிடிக்க போட்டி போடுகிறது.

வளர்ச்சியடைந்த ஐரோபிய நாடுகளில் பாலியல் ஒழுக்கமின்மை மலிந்திருந்தாலும் எயிட்சை பாரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயா பாலியல் தொழில் அதிகமாக நடைபெறும் தாய்லாந்திலும் அறிவூட்டல் மூலம் எயிட்சைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்

வளர்க்க வேண்டியது ஆன்மீகத்தை அல்ல, அறிவியலை.

பல மதங்களையும் கடவுள்களையும் உருவாக்கி ஆன்மீகத்தின் சிகரமாக விளங்கும் இந்தியா எயிட்ஸ் அதிகமாக உள்ள நாடுகளின் முதலிடத்தைப் பிடிக்க போட்டி போடுகிறது.

:wub:

அது சரி தேவசாசி என்றா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வளர்க்க வேண்டியது ஆன்மீகத்தை அல்ல, அறிவியலை.

பல மதங்களையும் கடவுள்களையும் உருவாக்கி ஆன்மீகத்தின் சிகரமாக விளங்கும் இந்தியா எயிட்ஸ் அதிகமாக உள்ள நாடுகளின் முதலிடத்தைப் பிடிக்க போட்டி போடுகிறது.

வளர்ச்சியடைந்த ஐரோபிய நாடுகளில் பாலியல் ஒழுக்கமின்மை மலிந்திருந்தாலும் எயிட்சை பாரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயா பாலியல் தொழில் அதிகமாக நடைபெறும் தாய்லாந்திலும் அறிவூட்டல் மூலம் எயிட்சைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்

  • தொடங்கியவர்

இவரின் இன்னொரு கீழ்தரமான சிந்தனையுடன் கூடிய பதிவு

குலக்கல்வி திட்டத்தின் நன்மைகள்!

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒப்புக் கொள்' - இது ஒரு பொன் மொழி. நம் கையே நமக்கு உதவி என்கிற இந்த அருமையான சொற்றொடரை உணர்ந்து கொண்டு செயல்பட்டவர்களில் முக்கியமானவர் மறைந்த நம் முன்னாள் முதல்வர் மூதறிஞர் என்று அழைக்கப்பட்ட மூத்த அறிஞர் இராஜ கோபால் ஆச்சாரியார் அவர்கள்.

பகவத் கீதையை நன்கு ஆழமாக படித்து மொழி பெயர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களின் பெயர்களில் முதல் பெயர் நம் மூதறிஞர் இராஜாஜி அவர்களுடையது. பகவத் கீதையை வெறும் தத்துவ நூலாகப் பார்க்காமல் அதில் உள்ள நான்கு வருணங்களைப் பற்றி மனம் ஒன்றி நன்கு ஆராய்ந்ததில் இராஜாஜி அவர்கள் தெளிவு பெற்றார்கள். அதாவது வருண அமைப்பின் சிறப்பே அதில் உள்ள நான்கு பிரிவுகள் தான். அவற்றின் சிறப்பு பற்றி பலரும் எழுதிவிட்டதால் நான் இங்கு இராஜாஜியின் வருண அமைப்பின் மீது பொதிந்த பார்வையை மட்டுமே சிறப்பித்துக் கூறுவது நல்லது எனக் கருதுகிறேன்.

அதாவது நான்கு வருணத்தார்கள் அவரவருக்கு தெரிந்த தொழிலை குலத்தொழிலாக செய்து வந்து, நான்கு வருணமும் சேர்ந்தே வாழ்ந்து வந்தார்கள். பார்ப்பனன் திருமணம் மற்றும் தெவசம் போன்ற வீட்டு விசேசங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அது போல் சூத்திரனும் முக்கியமாவன். அவன் சுடுகாட்டில் காவல் காக்கவில்லை என்றால் அது பிராமணர் உடலென்றாலும் நாய் நரி வந்து குதறி வைக்கும். எனவே நான்கு வருண சமூக அமைப்பு, சூத்திரனையும் அணைத்துச் செல்லும் அமைப்பாகத் தான் இருந்தது. ஒருவருக்கொருவர் பேதம் பார்க்கும் சூழ்நிலையோ, அதுபற்றி சிந்தனையே இல்லாது அவரவர் கடமை இது என தத்தமது கர்ம சிந்தனையில் மட்டுமே இருந்து கர்ம யோகவாக செய்து வாழ்ந்து வந்தார்கள்.

பகவான் கிருஷ்ணன் கீதையில் அருளியபடி இராம இராஜ்ஜியமாகவே வெள்ளையர்கள் ஆட்சிக்கு முன் புனித பாரதம் ஒளிர்ந்து வந்தது. வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகும், இராமசாமி நாயக்கரின் துர்போதனைக்குப் பிறகும் நிலைமை தடுமாற ஆரம்பித்து, மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். இது போன்ற சமயத்தில் தான் நம் இராஜாஜி அவர்கள் சிந்தித்து இதற்கு காரணம் அறிந்து கொண்டார். அவருக்கு வழி சொல்லியது புனித கீதை.

அதாவது அவரவருக்கு உண்டான தொழில் எதுவோ அது முறையாக பயிற்று விக்கப்பட்டால் அடுத்தவர்கள் செய்யும் தொழிலில் நுழைந்து அடுத்தவருக்கு கெடுதல் செய்ய மாட்டார். தற்போது பாருங்கள் செட்டியார் செய்து வந்த வியாபார வேலைகளையும், பிராமணாள் உணவகங்களையும் நாடார்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதனால் பிராமணரும் செட்டியார்களும் தமக்கு தெரியாத வேலைகளை செய்து கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். இது சமூக நீதிக்கு எதிரானது. அதாவது அவனுக்கென்று இருக்கும் தொழிலை அவன் தானே செய்ய வேண்டும். இதை பெரியவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

'அவரரவர் குடும்பத்துக்கு உண்டான தொழிலை பள்ளியில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால் குழந்தைகளுக்கு நன்கு பதியும். நாம் அடுத்தவர்களின் பிழைப்பைக் கெடுக்க கூடாது' என்று குழந்தைகள் உணர்ந்து கொண்டு அதன்படி நடப்பார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? ஏட்டுக் கல்வியை விட ஒரு தொழிலை அதுவும் நன்கு தெரிந்த தொழிலை கற்றுக் கொண்டால் லோகத்தில் ஜீவிப்பது சுலபம் என்று நம் பேரன்புக்குரிய மாமனிதர் இராஜாஜி அவர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

வாழ்க மூதறிஞர் ராஜாஜி அவர்களின் புகழ்.

  • 2 weeks later...

உந்த ஆராய்ச்சிகளை விட்டுட்டு முதலில் எய்ட்ஸ்க்கு மருந்தைக் கண்டு பிடிங்கப்பா புண்ணியமாகப் போகும். :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆராய்ச்சிகளை விட்டுட்டு முதலில் எய்ட்ஸ்க்கு மருந்தைக் கண்டு பிடிங்கப்பா புண்ணியமாகப் போகும். :D:o:D

உள்ளதை விட தீவிரமான ஒரு வைரஸைக் கண்டுபிடிக்கனும் என்றிருக்கிறம்.. உங்களுக்கு மருந்து வேணுமோ..! தனிமனித ஒழுக்கத்தை ஆண்களும் பெண்களும் பேணினால் எயிட்ஸ்.. யாருக்கும் வராது.. பெற்றோரில் இருந்து பிள்ளைகளுக்கும் நுழையாது. எயிட்ஸ் இருக்கனும்.. இருந்தால் தான்.. சில எல்லைகள் வரையறுக்கப்படும்..! இல்ல தறிகெட்டுப் போயிடும்..! :P :lol:

உள்ளதை விட தீவிரமான ஒரு வைரஸைக் கண்டுபிடிக்கனும் என்றிருக்கிறம்.. உங்களுக்கு மருந்து வேணுமோ..! தனிமனித ஒழுக்கத்தை ஆண்களும் பெண்களும் பேணினால் எயிட்ஸ்.. யாருக்கும் வராது.. பெற்றோரில் இருந்து பிள்ளைகளுக்கும் நுழையாது. எயிட்ஸ் இருக்கனும்.. இருந்தால் தான்.. சில எல்லைகள் வரையறுக்கப்படும்..! இல்ல தறிகெட்டுப் போயிடும்..! :P :blink:

மேல்நாட்டவர் பாதுகாப்புடன் ஒழுக்கத்தை மீறலாம்.

ஏழை நாட்டவரே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

மேல்நாட்டவர் பாதுகாப்புடன் ஒழுக்கத்தை மீறலாம்.

ஏழை நாட்டவரே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள். :(

மேல்நாட்டினர் தான் ஒரூ காலத்தில் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றும் கணிசமான அளவுக்கு அவர்களிடையே எயிட்ஸ் தொற்று இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக யாழ் குடாநாட்டை நோக்கினால் அங்கு எயிட்ஸ் வரக் காரணம்.. அகதியாக ஓடி வந்து மேற்குலகில் தறிகெட்ட தமிழர்களாலும் வெளிநாட்டுப் பணியாளர்களும்.. கொழும்பில் மேய்ந்த தமிழர்களாலும் தான் என்றால்.. நம்பக் கஸ்டம் தான் ஆனால் அதுதான் உண்மை..!

மேற்குலக நடைமுறைகளை கொப்பியடிக்க வெளிக்கிட்டுத்தான் இந்த நிலைமை..! மேற்குலக தொடர்புகளால் தான் எயிட்ஸே புகுந்து கொண்டது..! அப்படி இருக்க.. மேற்குலகத்தவர்கள் பாதுகாப்போட இருக்கினம்.. ஒழுக்கத்தை மீறினாலும் என்பது தவறு. மேற்குலக பாதுகாப்பு நடைமுறைகள் எயிட்ஸ் தொற்றைக் குறைக்கலாமே தவிர 100% தடுக்க முடியாது. அதுமட்டுமன்றி சுரண்டல் பொருளாதாரத்தில் வறிய நாடுகளிடம் சுரண்டிய பணத்தில் தான் மேற்குலகம் பாதுகாப்பு நடைமுறைகளைச் செய்கிறது. வறிய நாடுகளுக்கு அதுவும் முடியாது எனும் போது தனி மனித ஒழுக்கம் என்ற காசுச் செலவில்லாத சமூக அவசியத்தை வலியுறுத்துவதும் கடைப்பிடிக்க கட்டாயப்படுத்துவதும் தான் நோய்த் தொற்றைத் தவிர்க்கும். குறிப்பாக வன்னியில் உள்ளது போன்ற நடைமுறைகள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தேவசாசி என்றா என்ன?

இதிலை இருக்கு...

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6729927.stm

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி தேவசாசி என்றா என்ன?

இந்த கேள்வியினுாடக என்னத்தை எதிர்பார்க்கிறீர்கள்.. அதற்கான பதில் மேலே தெளிவாக சொல்லப்பட்டு இருந்து அதை கேட்கிறீர்கள் என்றால்...

நான் என்னத்தை சொல்ல.. <_<:huh:

  • 2 weeks later...

சபேசன் அண்ணா தகவலிற்கு நன்றி................. :lol:

கிஷாண் அண்ணா வாசித்து பார்தனான் ஒன்றும் விளங்கவில்லை அது தான் கேட்டேன் பிறகும் பெரிசா விளங்கவில்லை விட்டாச்சு........ :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.