Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-libirary.gif

யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு....

சிறப்பு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியைக் கேட்ட ...

http://www.tamilwebradio.com

jaffnalibraryplayer.gif

Edited by shanthy

நன்றி சாந்தி அக்கா எம் அறிவுக்களஞ்சியம் எரிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்தியதற்கு

எனக்கொரு கவலை அவ் பெருமை சேர்ந்த நூலகத்தை என் கண்ணால் காண எனக்கு கொடுத்துவைக்கவில்லையே என எரிக்கப்பட்டதாகவே பார்திருகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

எரியும் நினவுகள்

எழுதியவர்: சோமி

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 ஆண்டுகளின் நினைவுகள் இங்கே மீட்கப்படுகின்றன. இக்கட்டுரையாளர் யாழ்பாண நூலகம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிததுள்ளார். ஏறத்தாழ முடிவுறும் நிலையில் உள்ள அந்த ஆவணப்படம் மேலும் தகவல் தரவுகள் சேர்ப்பதற்கும் செம்மைப்படுத்துவதற்கும் ஆர்வலர்களின் ஆதரவுக்காக காத்திருக்கின்றது. யாழ்பாண நூலகம் பற்றிய ஆவணங்கள் (பத்திரிகை நறுக்குகள், நிழற்படங்கள், சிறுவெளியீடுகள், கட்டுரைகள்போன்றவை..) வைததிருப்பவர்கள் தந்துதவினால் ஆவணப்படத்தை நிறைவு செய்து வெளியிட வசதியாக இருக்கும். தொடர்புக்கு:someeth13@gmail.com

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர் .

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?'

என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்......

என்றனர் அவர்கள்.

'சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை'

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

*சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

- கவிஞர் எம்.ஏ.நுஃமான்

இப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார். அவருக்கு கிடைத்த அதே செய்தியை யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள். ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது. அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை. ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும், ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன .

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது. சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா, வண. லோங் அடிகள், இந்திய தூதுவராலய செயலர், அமெரிக்கதூதுவர், பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள், பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது. இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில் யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது. பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிப்பினாலும் உருபெற்ற நூலகம் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ்நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம். தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது. 11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது. யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்பு மையங்கள், சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று.

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது. இளைஞர்கள் கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும், நூலகங்களும் மாறியிருந்தன. சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக்கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர்மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் தருணம் பார்த்திருந்தனர். 1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்கள் தமிழர் கல்வி ஆதாரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது. 1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பொலிச்சர் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும், கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது, தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு, மகிழூந்து என்பன தீக்கிரையாக்கப்பட்டன. 1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல் தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திலும் தீ வைக்கப் பட்டது. அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்கு மூலையில் முதல் தீ வைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவதும் தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர். தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது. அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள். கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில் தெரியவந்தது .

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின் நெருக்கத்திற்குரியவர்களுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.