Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பாவம் என்ன.....😁

வியாபாரம் கொஞ்சம் ஓடினால் ஆளும் பறந்திடுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2020 at 01:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

கேள்வி (23) நீங்கள் பெற்ற விருதுகள் எத்தனை?.எங்கெங்கு அவற்றைப் பெற்றீர்கள்?.

நான் இதுவரை விருதுகள் எவற்றையும் பெறவில்லை. என் நூல்கள் விருதுகளுக்குத் தகுதியானவையா என்பதுக்குமப்பால் நான்குபேரின் முடியில் ஒருவரின் எழுத்துத் தங்கியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு அந்த நான்குபேரின் பரிந்துரைப்பில் எனக்கு விருது கிடைக்கவேண்டும் என்று நான் எண்ணுவதும் இல்லை. அதற்காக உள்ள இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருது வழங்குநர்களுக்கும் என் கதைகளை அனுப்பிக்கொண்டிருப்பதும் இல்லை. நான் யாழ் இணையத்தில் என் கதைகளை பகிர்ந்துகொள்வதுடன் திருப்தியடைகிறேன். சிலர் கேட்டால் மட்டும் சில தளங்களுக்கு என்கதையை அனுப்பிவைப்பது. மற்றப்படி தகுதியே இல்லாத சிலரின் எழுத்துக்கு அவரின் முகத்துக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கிடைத்திருக்கும் விருதுகளை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.

நல்லதொரு நேர்காணல், நன்றி பகிர்வுக்கு. 

கேள்வி 8: கேள்வியும் பதிலும் ஒத்துவரவில்லை

கேள்வி 23: மனதிற்கு கஷ்டமாக இருக்கு, யாழ்களம் சார்பாக சுமேக்கு என்ன விருது கொடுக்கலாம் - யாழ்கள உறவுகளிடமிருந்து எதிர்பார்கின்றேன் என்ன விருது கொடுக்கலாமென கூறுங்கள் 

எனது தெரிவு 

யாழ்கள இலக்கியவாதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 21:51, தோழி said:

//இன்னும் சிலர் எப்போதும்போல் தரமான எழுத்துக்கள் மட்டுமே எழுத்துலகில் நிலைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கில் தடைக்கற்களாகவும் உள்ளனர். நாடுப்புறப் பாடல்கள் எப்படி இன்றும் எம் பண்பாட்டு விழுமியங்களை இலகுநடையில் சொல்கின்றனவோ அவ்வாறே அனைத்து புலம்பெயர் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்கூட வருங்காலத்துக்கு எம் வாழ்வியலை, எம் துன்பங்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக இருக்கப்போகின்றன என்பதை உணர்ந்து, பேதமின்றி அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதும் ஏற்குக்கொள்வதும் புலம்பெயர் எதிர்காலச் சமூகத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாகவும் எமக்கான ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் எனலாம்.//

அருமை தோழி ! மிக நேர்த்தியான கேள்விகளும் சிறப்பான பதில்களும் ! பல்வேறு விதமான சமூகம் சார்ந்த சிந்தனைகளை  உங்கள் எண்ணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாராட்டுக்களும் பகிர்ந்தமைக்கு நன்றியும் உரித்தாகட்டும்

நன்றி தோழி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் .

16 hours ago, nige said:

யாழ்களத்தில் எழுதத் தொடங்கி ஒருவர் எழுத்தாளர் ஆனதையிட்டு மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி

10 hours ago, நிலாமதி said:

 நல்லதொரு விளக்கமான பதில் கொடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் .   பாதிக்க படடவர்கள் தாமாக முன் வந்தாலன்றி  அவர்களுக்கு விடுதலை இல்லை . உங்களை து பல  கதைகளில் பல சமுதாய சீர் கேடுகளை சுட்டிக்   காட்டுவதாயிருக்கும் . மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .  

நன்றி அக்கா கருத்துக்கும் வருகைக்கும்.

8 hours ago, குமாரசாமி said:

பாவம் என்ன.....😁

நான் ஒண்டும் வேறை வழியில்லாமல் இங்க இருக்கேல்லை . எனக்குப் பிடிச்சுப் போனதால மட்டும்தான் நிக்கிறன் கண்டியளோ😀 

8 hours ago, ஈழப்பிரியன் said:

வியாபாரம் கொஞ்சம் ஓடினால் ஆளும் பறந்திடுமோ?

சீச்சீ ரதிக்குப் போட்டியா யாழ் இணையத்தை வாங்குவதில் மும்மரமாகத்தான் இருப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

நல்லதொரு நேர்காணல், நன்றி பகிர்வுக்கு. 

கேள்வி 8: கேள்வியும் பதிலும் ஒத்துவரவில்லை

கேள்வி 23: மனதிற்கு கஷ்டமாக இருக்கு, யாழ்களம் சார்பாக சுமேக்கு என்ன விருது கொடுக்கலாம் - யாழ்கள உறவுகளிடமிருந்து எதிர்பார்கின்றேன் என்ன விருது கொடுக்கலாமென கூறுங்கள் 

சரி அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எப்படியாக இருக்கும் என்று கூறுங்கள்.

எனக்கு விருது கிடைக்கவில்லை என்றுநான் எப்போதும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் எழுத்துக்கள் அந்தத் தரத்துக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும். இது என் வீடு போல். அதனால் இங்கு அதை சொல்கிறேன் உடையார். 😀😎

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரி அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் எப்படியாக இருக்கும் என்று கூறுங்கள்.

எனக்கு விருது கிடைக்கவில்லை என்றுநான் எப்போதும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் எழுத்துக்கள் அந்தத் தரத்துக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும். இது என் வீடு போல். அதனால் இங்கு அதை சொல்கிறேன் உடையார். 😀😎

உங்கள் தன்னடக்கத்தால் கோபுரமாக உயர்ந்து கொண்டே போகின்றீர்கள்👍

"ஆமா அது அரசியல் சாராத இலக்கியம்தான்" என கூறியிருக்கலாம் 😂 சும்மா பகிடி எங்கட சுமேயை கலாய்த்தது,  பொழுது போகனுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

உங்கள் தன்னடக்கத்தால் கோபுரமாக உயர்ந்து கொண்டே போகின்றீர்கள்👍

"ஆமா அது அரசியல் சாராத இலக்கியம்தான்" என கூறியிருக்கலாம் 😂 சும்மா பகிடி எங்கட சுமேயை கலாய்த்தது,  பொழுது போகனுமே

ஐயையோ உங்கள் கலாய்ப்பு தாங்க முடியாமல் இருக்கே 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நேர்காணல் சிறப்பாக இருந்தது.....பாராட்டுக்கள் சகோதரி......!

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

--- இந்தப் பதிலில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு......!

அமரர் கல்கியின் "பொன்னியின்செல்வன்" முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சரித்திர நாவலாகும். அதில் கற்பனை என்பது மிகச் சொற்பமே. அதில் வரும்  முக்கிய பாத்திரங்கள் எல்லோரும்  நிஜமாக வாழ்ந்து மறைந்த அரசர்களே.....!

---- பேரரசர்  சுந்தரசோழன் ..... அவரின் குமாரர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் (பின்னாளில் இராஜஇராஜசோழன் ), மகள் இளவரசி குந்தவை, அவள் கணவன் வாணர்குல வீரன் வந்தியத்தேவன்.... செம்பியன்மாதேவி , சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தகன், வானதி , பாண்டிய உளவாளி ரவிதாசன், நந்தினி, பழுவேட்டரையர்கள், சம்புவரையர்......என்று பலர் நிஜமானவர்களே.....!

--- நாவலை தொய்வில்லாமல் நகர்த்தவும் சுவை கூட்டவும் ஓரிரு  பாத்திரங்கள் உதாரணமாக ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, ராக்காயி போன்றவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்.....!

--- எம் கண்முன் நடைபெறாத என்று சொல்லும்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்றவர்களின் காலங்களும்தான் எமக்குத் தெரியாது. அதற்காக இல்லையென்று ஆகிவிடாதே.....!

நான் இதை எழுதும்முன் நிறைய யோசித்தேன். நீங்களும் முடிந்தால் மேலோட்டமாகவாவது  "பொன்னியின்செல்வனை"படித்து பார்க்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்.தவறான தகவல்களைத் தரக்கூடாது என்றுதான்......!

இந்தக் கதையை வாசித்த கனபேர் களத்தில் இருப்பீர்கள், உங்கள் கருத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://akkinikkunchu.com/?p=121613

அக்கினிக்குஞ்சு இணையத்தில் என் நேர்காணலுக்காக லிங்க் வேலை செய்யவில்லை என்று கேட்டால் வேறொரு லிங்கில் இப்ப போட்டிருக்கு என்கின்றனர். என்ன நடக்குது என்றே புரியவில்லை. யாழ்களம் யாழ்களம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 19:01, suvy said:

உங்களது நேர்காணல் சிறப்பாக இருந்தது.....பாராட்டுக்கள் சகோதரி......!

கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

--- இந்தப் பதிலில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு......!

அமரர் கல்கியின் "பொன்னியின்செல்வன்" முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சரித்திர நாவலாகும். அதில் கற்பனை என்பது மிகச் சொற்பமே. அதில் வரும்  முக்கிய பாத்திரங்கள் எல்லோரும்  நிஜமாக வாழ்ந்து மறைந்த அரசர்களே.....!

---- பேரரசர்  சுந்தரசோழன் ..... அவரின் குமாரர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் (பின்னாளில் இராஜஇராஜசோழன் ), மகள் இளவரசி குந்தவை, அவள் கணவன் வாணர்குல வீரன் வந்தியத்தேவன்.... செம்பியன்மாதேவி , சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தகன், வானதி , பாண்டிய உளவாளி ரவிதாசன், நந்தினி, பழுவேட்டரையர்கள், சம்புவரையர்......என்று பலர் நிஜமானவர்களே.....!

--- நாவலை தொய்வில்லாமல் நகர்த்தவும் சுவை கூட்டவும் ஓரிரு  பாத்திரங்கள் உதாரணமாக ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, ராக்காயி போன்றவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்.....!

--- எம் கண்முன் நடைபெறாத என்று சொல்லும்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்றவர்களின் காலங்களும்தான் எமக்குத் தெரியாது. அதற்காக இல்லையென்று ஆகிவிடாதே.....!

நான் இதை எழுதும்முன் நிறைய யோசித்தேன். நீங்களும் முடிந்தால் மேலோட்டமாகவாவது  "பொன்னியின்செல்வனை"படித்து பார்க்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்.தவறான தகவல்களைத் தரக்கூடாது என்றுதான்......!

இந்தக் கதையை வாசித்த கனபேர் களத்தில் இருப்பீர்கள், உங்கள் கருத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்......! 

அண்ணா உங்கள் புரிதல் தவறானது. இந்தப் பொன்னியின் செல்வன் வரலாற்றில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வைத்து மிகச் சொற்பமான உண்மையான தகவல்களை வாசிப்பினூடாகப் பெற்றுக்கொண்டு கல்கி அவர்களால் தமிழரின் எழுச்சிமிக்க காலத்தை புனைவுகளினூடாகக் கண்முன்  கொண்டுவந்த ஒரு வரலாறு சார்ந்த படைப்பேயன்றி அது அரசியல் சார்ந்த நாவலே அல்ல.

அரசியல் சார்ந்த என்னும்போது எழுதப்படும் ஒரு நாவலோ கட்டுரையோ கவிதையோ அக்கால அரசியலிலோ, மக்களிடையேயோ ஒரு தாக்கத்தை, அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும். கடந்த 2009 வரையான ஈழத்து இலக்கியங்களை வேண்டுமானால் அரசியல் சார்ந்தது எனக் கொள்ளலாம்.

சாண்டில்யன், அகிலன் இன்னும் பலர்கூட கல்கியைப் போன்று வரலாற்று நாவல்களை எழுதியுள்ளனர் 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தகவலுக்காகத்தான் எழுதினேன்......விவாதத்துக்காக அல்ல ......!

சாண்டில்யன் கதைகளில் கற்பனைப் பாத்திரங்கள்தான் அதிகம். வர்ணனைகளும் நிறைய நிறைய இருக்கும்.அவர் உலவவிட்ட கதாநாயகர்கள் எங்கும் எதிலும் தோல்வியடைய மாட்டார்கள் நிறைய சண்டை போடுவார்கள் அதைவிட நிறைய காதலிப்பார்கள் எம். ஜி. ஆர் மாதிரி.அதில் வரலாறு சொற்பம்தான். மஞ்சளழகி, காஞ்சனையை இருபது பக்கம் வர்ணித்திருப்பார், வரலாறு நாலுபக்கமும் இருக்காது ஆனால் வாசிக்க சுகமாய் இருக்கும்....!

அகிலன் பெரும்பாலும் சமூகநாவல்கள்தான் எழுதியிருக்கிறார். சரித்திரநாவல்கள் எழுதினாரோ தெரியவில்லை.நான் படிக்கவில்லை.....!

பொன்னியின்செல்வனை இவற்றுக்குள் சேர்க்கமுடியாது.அதன் நாயகன் ஆதித்யகரிகாலனால் அனுப்பப்படும் சிறந்த உளவாளி மட்டுமே. அவர் பெரிதாக சண்டைகள் போடவில்லை.பல இடங்களில் மாட்டுப்பட்டுக்கொண்டு பிறரால்தான் காப்பாற்றி தப்ப வைக்கப் படுகிறார்.சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவை.....!

என்வரை திருப்தி இல்லைதான் , ஆயினும் நீங்கள் ஒரு எழுத்தாளர் + ஆய்வுகள் செய்பவர் அதனால் நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

நான் உங்களுக்குப் பதில் எழுதமுன்னர் ஒரு பேராசிரியரிடம் என் வாதத்தை வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்ட பின்னரே உங்களுக்குத் பதில் எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.