Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் உடல்நலம்: விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் உடல்நலம்: விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?

  • லூசி ஆர். கிரீன்
  • அறிவியல் செய்தியாளர் 

விந்தணு

Getty Images

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. 

அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 

இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.

விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

'மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது'

விந்தணு

விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது, 

உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது. 

ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கருவள சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வோரில் இறுக்கமற்ற, தளர்வான பாக்சர் உள்ளாடை (ஜட்டி) பயன்படுத்தியோருக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இறுக்கமான உள்ளாடை அணிந்தோர் கொண்டிருந்த நீந்திச்செல்லும் சக்தியுடைய 33 சதவீத விந்தணுக்களைவிட 17 சதவீதம் அதிக விந்தணுக்களை இறுக்கமற்ற உள்ளாடை அணிந்திருந்தோர் பெற்றிருந்தனர். 

ஆனால், விந்தணுவின் வடிவமோ, டிஎன்ஏயின் தரமோ யாருக்கும் பாதிக்கப்படவில்லை. 

இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'

உள்ளாடைக்குள் நிலவும் அதிக வெப்பம் இந்தப் பிரச்சனையின் மூலக்காரணம் என்ற அனுமானத்தோடு, இந்த ஆண்களின் வயது, உடல் எடை குறியீடு மற்றும் புகை பிடித்தல், சுடுநீரில் குளிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விந்தணுவை பாதிக்கக்கூடிய பிற அம்சங்களையும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு இதனை ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 

விந்தணுவை உற்பத்தி செய்ய விதைப்பைகளுக்கு ஆணையிடும் மூளையின் ஒரு ஹார்மோன்தான் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்). இந்த வகையான ஹார்மோன் இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோரிடம் 14 சதவீதம் குறைவாக இருந்தது 'ஹூமன் ரிபுராடக்ஷன்' பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 

விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கு அதிக ஹார்மோனை சுரக்க செய்வதும், இறுக்கமான உள்ளாடை அணிகின்றபோது விந்தணுக்களை குறைப்பதையும் இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்) கட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்குறி நோயியல் பேராசிரியர் ஆலன் பேஸி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இறுக்கமான உள்ளாடை அணிவது விதைப்பைகளில் சேதமடைய செய்வதை, வேறுபட்ட உள்ளாடை வகைகளை அணிந்த ஆண்களிடன் காணப்படும் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் மாறுபடுகின்ற நிலை (ஃஎப்எஸ்ஹெச்) காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

இனப்பெருக்கம் ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு

விந்தணு

இந்த ஆய்வு விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றியது. ஆண்மைத்தன்மை பற்றியதல்ல. 

எந்த வகையான உள்ளாடைகளை அணிந்தாலும், விந்தணு எண்ணிக்கை இயல்பாகவே இருக்கிறது. 

ஆனால், குறைவான விந்தணு உற்பத்தி நிலையிலுள்ள சில ஆண்களுக்கு, இறுக்கமான உள்ளாடை அணிவதை மாற்றிக்கொண்டு தளர்வான உள்ளாடைகளை அணிவது உதவலாம் என்று பேராசிரியர் ஆலன் பேஸி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"இறுக்கமான உள்ளாடையால் பாதிப்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆண்கள் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்வதற்கு மலிவான, எளிய முயற்சி இருப்பதையும் இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

"விந்தணு அதிகரிப்பதற்கு சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. எனவே முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள்" என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஜோர்ஜ் சாவெரோ பிபிசியிடம் கூறியுள்ளார். 

"மலட்டுத்தன்மை என்பது வெறுமனே பெண்களை சார்ந்த பிரச்சனையல்ல. இனப்பெருக்கம் என்பது ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு. எனவே, கருவளத்திற்கு ஆண்களின் பங்களிப்பு பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்" என்று டாக்டர் ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி கோவணத்தை உரிமம் எடுத்து ஆகோ ஓகோ என விற்பார்கள் இந்த அறிவு பூர்வ விஞ்ஞானிகள்😂🤣

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமணத்தை இறுக்கிக் கட்டினால் பிரயோசனமில்லை!

spacer.png

ஆனால் அண்டிராயர் ஒகே.

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. 

கோவணம் கட்டுறதை நக்கலடிச்ச சனமெல்லாம் இனி தொள தொளக்க கோவணத்தை கட்டிக்கொண்டு திரியப்போயினம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:
14 hours ago, கிருபன் said:

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. 

கோவணம் கட்டுறதை நக்கலடிச்ச சனமெல்லாம் இனி தொள தொளக்க கோவணத்தை கட்டிக்கொண்டு திரியப்போயினம்.:grin:

நான் இப்ப ஒரு 15 வருடமா பொக்சர் தான் போடுவது.
இதன் பலனையும் ஒருக்கா சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இப்ப ஒரு 15 வருடமா பொக்சர் தான் போடுவது.
இதன் பலனையும் ஒருக்கா சொல்லுங்கோ.

உங்கடை பொக்சர் இப்பிடி இருக்குமா? 😎

Saravanan (@Saravan00937828) | Twitter

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

28 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இப்ப ஒரு 15 வருடமா பொக்சர் தான் போடுவது.
இதன் பலனையும் ஒருக்கா சொல்லுங்கோ.

உங்கடை பொக்சர் இப்பிடி இருக்குமா

ஐயா நான் கேட்டது பலன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா நான் கேட்டது பலன்.

பலன் பயங்கரமாய் வேலை செய்யும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

பலன் பயங்கரமாய் வேலை செய்யும். :cool:

அட சீ இந்த கோதாரிகளை வேளைக்கே சொல்லி தொலைத்திருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இதாலை.... கோவணமே கட்டாமல் இருக்கிற   ஆட்களுக்கு, ஒரு பிரச்சினையும் வராது தானே... 🤓

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, தமிழ் சிறி said:

இதாலை.... கோவணமே கட்டாமல் இருக்கிற   ஆட்களுக்கு, ஒரு பிரச்சினையும் வராது தானே... 🤓

 மட்டக்களப்பிலை எனக்கு தெரிஞ்ச ஹாஜியார் கோவணம் கட்டுறதேயில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 மட்டக்களப்பிலை எனக்கு தெரிஞ்ச ஹாஜியார் கோவணம் கட்டுறதேயில்லை.😎

மட்டக்களப்பு ஹாஜியார்.... கோவணம் கட்டுறதில்லை என்று,  நீங்கள் எப்பிடி கண்டுபிடிச்சனீங்கள்⁉️ 😁 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 04:25, உடையார் said:

இனி கோவணத்தை உரிமம் எடுத்து ஆகோ ஓகோ என விற்பார்கள் இந்த அறிவு பூர்வ விஞ்ஞானிகள்😂🤣

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் ...

என்ன சுகம் என்ன சுகம். உன்னிடம் நான் கண்ட சுகம். 😂

13 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இப்ப ஒரு 15 வருடமா பொக்சர் தான் போடுவது.
இதன் பலனையும் ஒருக்கா சொல்லுங்கோ.

செத்த கிளிக்கு சிருங்காரம் எதற்கு 😜

இந்த விடயம் வயது வந்தோர்க்கு மட்டும். இளையோருக்கோ முதியோருக்கோ தொடர்ப்பானதல்ல. 😂

3 hours ago, தமிழ் சிறி said:

இதாலை.... கோவணமே கட்டாமல் இருக்கிற   ஆட்களுக்கு, ஒரு பிரச்சினையும் வராது தானே... 🤓

பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். உமக்கேன் கவலை. 😜

3 hours ago, குமாரசாமி said:

 மட்டக்களப்பிலை எனக்கு தெரிஞ்ச ஹாஜியார் கோவணம் கட்டுறதேயில்லை.😎

அவர் ஹாஜியாரா அல்லது ஹாஜியாரினியா என்று தெளிவுறச்  சொல்லுங்கள்.  😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு ஹாஜியார்.... கோவணம் கட்டுறதில்லை என்று,  நீங்கள் எப்பிடி கண்டுபிடிச்சனீங்கள்⁉️😁😂

அவரது நடையை வத்து அனுமானித்திருப்பார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

என்ன சுகம் என்ன சுகம். உன்னிடம் நான் கண்ட சுகம். 😂

செத்த கிளிக்கு சிருங்காரம் எதற்கு 😜

இந்த விடயம் வயது வந்தோர்க்கு மட்டும். இளையோருக்கோ முதியோருக்கோ தொடர்ப்பானதல்ல. 😂

பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். உமக்கேன் கவலை. 😜

அவர் ஹாஜியாரா அல்லது ஹாஜியாரினியா என்று தெளிவுறச்  சொல்லுங்கள்.  😀

ஓதம் வந்தால் என்ன செய்வீர்கள்😄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

ஓதம் வந்தால் என்ன செய்வீர்கள்😄

அது மகா கொடுமை. 😢

அப்படி வந்த ஒருவரை தெரியும். எப்போதுமே வேட்டிதான் கட்டுவார். மிகவும் மெதுவாகத்தான் நடப்பார். ஒருவருக்கும் அப்படியொரு நிலை வரக்கூடாது. 

ஆனால் ஆரம்பத்திலேயே வைத்தியரை அணுகினால் சிறிய சத்திர சிகிச்சையுடன் சரி செய்யலாம் என நினைக்கிறேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

எனக்கும் தெரிந்த ஒரு வயதான உடையார் இப்படி கஷ்டப்பாட்டார்; கவனமாக இருக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

எனக்கும் தெரிந்த ஒரு வயதான உடையார் இப்படி கஷ்டப்பாட்டார்; கவனமாக இருக்கனும்

சின்ன ஒரு டவுட்டு....

நீங்கள் இளமையானவர்தானே... 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு ஹாஜியார்.... கோவணம் கட்டுறதில்லை என்று,  நீங்கள் எப்பிடி கண்டுபிடிச்சனீங்கள்⁉️😁😂

 சிறித்தம்பி!  நீங்கள் கேட்டபடியாலை சொல்லுறன். :cool:
முன்னொரு காலத்திலை நான் பட்டிக்கலோவிலை இருக்கேக்கை ஒரு ஹாஜியார் வீட்டிலை அவர்ரை கணக்கு வழக்கு பாக்க போறனான் கண்டியளோ. ஆள் நிலபுலத்தோடை பெரிய பணக்காரன். சட்டபூர்வமாய் இரண்டு மனிசிமார். அதோடை வயல் பண்ணை வீட்டிலை புல்லுபுடுங்கிற இரண்டு மூண்டு சின்ன வீடு வேறை.நான் கணக்குவழக்கு பாக்கிறதாலை ஹாஜியின்ரைஉள் விசயம் முழுக்க எனக்கு தெரிய வேண்டி வரும் தானே சிறித்தம்பி..😁

🩲👙

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

அவர் ஹாஜியாரா அல்லது ஹாஜியாரினியா என்று தெளிவுறச்  சொல்லுங்கள்.  😀

 உங்களுக்கு எப்பிடி விளங்கப்படுத்துறது எண்டு எனக்கு தெரியேல்லை....இருந்தாலும் இரத்தினச் சுருக்கமாய் சொல்லுறன். என்ரை வாழ்க்கையிலை முதன் முதலாய்  வட்டிலப்பம் அங்கைதான் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டனான்.அவையளுக்கு சின்னப்பொடியன் எண்டு என் மேலை அளவு கடந்த பாசம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

 உங்களுக்கு எப்பிடி விளங்கப்படுத்துறது எண்டு எனக்கு தெரியேல்லை....இருந்தாலும் இரத்தினச் சுருக்கமாய் சொல்லுறன். என்ரை வாழ்க்கையிலை முதன் முதலாய்  வட்டிலப்பம் அங்கைதான் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டனான்.அவையளுக்கு சின்னப்பொடியன் எண்டு என் மேலை அளவு கடந்த பாசம். :cool:

அந்த சின்னக் குமாரசாமியாக நான் இருந்திருக்கக் கூடாதோ  😤

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 சிறித்தம்பி!  நீங்கள் கேட்டபடியாலை சொல்லுறன். :cool:
முன்னொரு காலத்திலை நான் பட்டிக்கலோவிலை இருக்கேக்கை ஒரு ஹாஜியார் வீட்டிலை அவர்ரை கணக்கு வழக்கு பாக்க போறனான் கண்டியளோ. ஆள் நிலபுலத்தோடை பெரிய பணக்காரன். சட்டபூர்வமாய் இரண்டு மனிசிமார். அதோடை வயல் பண்ணை வீட்டிலை புல்லுபுடுங்கிற இரண்டு மூண்டு சின்ன வீடு வேறை.நான் கணக்குவழக்கு பாக்கிறதாலை ஹாஜியின்ரைஉள் விசயம் முழுக்க எனக்கு தெரிய வேண்டி வரும் தானே சிறித்தம்பி..😁

🩲👙

குமாரசாமி அண்ணை... ஹாஜியார் வீட்டுக்கு, கணக்கு வழக்கு பார்க்கப் போனால்...
அதை மட்டும், பாத்திட்டு வாறதை விட்டுட்டு....
அவர்.. கோவணம், கட்டுறவாரா? 
என்ற... ஆராய்ச்சியில் இறங்கிய உங்களை நினைக்க சிரிப்பு வருகுது. :grin:

ஹாஜியார்.... 5 பேரை  மேய்த்துக் கொண்டு திரிவதால்...
ஒவ்வொருத்தர் வீட்டுக்குப் போகும் போதும்...
கோவணத்தை அவிட்டு... மினக்கெட, ⏱️ நேரம் வீணாக போகும்  என்பதால்...
அந்த இழவு, கோவணத்தையே... கட்டாமல் விட்டுட்டார்  போலுள்ளது. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.