Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்லாந்தின் கதை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தின் கதை..

பின்லாந்து மீது என் கவனம் முதலில் ஈர்க்கப் பட்டது 90 களில் ஈழத்தமிழ் எழுத்தாளரான உதயணன் அவர்களால் பின்லாந்தின் கலேவலா என்ற காவியம் தமிழுக்கு முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்ட செய்தியைப் பார்த்த போது தான். சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, இரு பெரும் குண்டர்களின் நடுவே நெருக்குவாரப் பட்டு பஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணி போல இருக்கும் ஒரு ஸ்கண்டினேவிய தேசமாக பின்லாந்து இருக்கிறது. மேற்கில் சுவீடன், மற்றும் பொத்னியா வளைகுடா வடக்கில் கொஞ்சம் நோர்வேயின் நிலப்பகுதியோடு பரன்ற்ஸ் கடல் பகுதி கிழக்கில் இராட்சத ரஷ்யா, தெற்கில் பால்ரிக் கடல் என்று உலக வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு பிரதேசத்தில் இருக்கும் பின்லாந்தின் கதை தனித்துவமானது. 

ஏன் பின்லாந்தின் கதை? 

உலகின் 190+ நாடுகள் இருக்கும் போது ஏன் பின்லாந்து பற்றி எழுத வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் இரு பலம் வாய்ந்த நாடுகளிடையே இருந்து , அவற்றால் ஆளப்பட்டு, பின்னர் ரஷ்யா என்ற இராட்சத சக்தியினால் நெருக்குதலுக்குள்ளான பின்லாந்து எப்படித் தனது தனித்தன்மையை (தேசிய அடையாளத்தை) பேணிக் கொண்டது என்று அறிந்து கொள்ள பின்லாந்துக் கதை உதவும்.

முற்கால பின்லாந்து..மிகச் சுருக்கமாக..

பின்லாந்தின் இக்கால மக்களை பிறப்புரிமை ரீதியாக ஆராய்ந்தால் அவர்கள் 75% வைக்கிங் என்ற கடலோடி மக்களையும் 25% கிழக்கில் ரஷ்யாவில் இருந்து வந்த படையெடுப்பு/குடியேறிகளால் ஸ்லாவிக் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். 1800 வரை சுவீடனால் ஆட்சி செய்யப்பட்ட பின்லாந்து, ரஷ்யாவின் ஆதிக்கத்தில் சுவீடன் பலமிழந்து போகவே, ரஷ்ய ஆக்கிரமிப்பினுள் வருகிறது. ஆனால் 1917 இல் ரஷ்ய தொழிலாளர் புரட்சி வரையில், ஆட்சி செய்த ரஷ்ய மன்னர்களால் பின்லாந்திற்கு சுயாட்சி வழங்கப் பட்டு தனியாக விடப்பட்டதால் அவர்களே தங்களை ஆண்டு கொள்கின்றனர். இந்த சுயாட்சியின் மிக முக்கியமான அங்கமாக, பின்லாந்தில் பின்னிஷ்  மொழியே உத்தியோக பூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டமை இருக்கிறது!

பின்னிஷ் மொழி...பின்லாந்தின் தேசிய அடையாளம்

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இருந்து மிகவும் வேறுபட்ட நான்கு ஐரோப்பிய மொழிகளில் பின்னிஷ் மொழியும் ஒன்று. இதனால், பின்னிஷ் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த மக்கள் கூட்டத்தினரைத் தவிர வெளியாட்களால் பின்னிஷ் மொழியைக் கற்றுத் தேர்வது மிகக் கடினம்! இதனால் இன்று கூட ஏழு பில்லியன் உலகசனத்தொகையில், ஆறு மில்லியன் பின்னிஷ் மக்கள் மட்டுமே இந்த மொழியில் சரளமாக இருக்கின்றனர். பின்லாந்தில், ஒருவர் அரச வேலையில் அமர வேண்டுமானால் மிக முக்கியமான தகுதியாக பின்னிஷ் மொழித் தேர்ச்சி முக்கிய தகுதியாக இருக்கிறது. 

இன்னொரு பதிவில், கிருபன் தேசியம் என்பது மொழி, மதம் அல்லது நிலப்பரப்பினால் நிர்ணயிக்கப் படும் ஒரு மக்கள் கூட்டத்தினரிடையேயான இணைப்புணர்வு என்று குறிப்பிட்டதை இங்கே நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். பின்னிஷ் மொழி பின்லாந்தின் தேசிய அடையாளத்தின் ஒரு முக்கிய பாகம்! 

பின்லாந்தின் மற்றைய தேசிய அடையாளம்..நிலம்!

1917 ரஷ்ய புரட்சி வரை, பின்லாந்து ரஷ்ய மன்னர்களால் சுயாட்சி அதிகாரம் வழங்கப் பட்டிருந்தது என்று பார்த்தோம். 1918 இல், ரஷ்யாவில் மன்னராட்சி வீழ்ந்த பின்னர், பின்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்து கொள்கிறது. ஆனால், ரஷ்யாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட இடது சாரிகளும் பின்லாந்தில் இருந்ததால், ரஷ்யாவின் போக்கில் செல்ல அவர்கள் முற்பட்டு ஒரு உள்நாட்டுப் போரை ஆரம்பிக்கின்றனர். ஆனால், 1919 இலேயே வெள்ளை அணிகள் (Whites) என அழைக்கப் பட்ட பின்லாந்து அரச படைகள் வெற்றி பெற்றதுடன் பின்லாந்து குடியரசாக மாறியது. இந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, துரித கதியிலேயே சமரசம் ஏற்பட்டு, முன்னர் சோசலிஸ்டுகளாக போரிட்ட சோசலிச ஜனநாயகப் பிரிவினரும் உள்வாங்கப் பட்டு , பின்லாந்து ஒரு அமைதியான தேசமாக உருவாகிய போது ஆண்டு 1926.

இராட்சதன் நிழலில் பின்லாந்து

1939 இல், பிரிட்டனைத்  தனிமை செய்யும் நோக்குடன், ஹிற்லரின் ஜேர்மனியும் ஸ்ராலினின் ரஷ்யாவும் ஒரு இரகசிய பகை தவிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. இந்த இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு அங்கம், பின்லாந்தை ரஷ்யா எடுத்துக் கொள்ளலாம், ஜேர்மனி எதிர்க்காது என்பதாகும். தனக்கு அருகில் இருக்கும் ரஷ்யாவின் பலம் அறிந்து பின்லாந்து 1932 இலேயே ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. ஆனால், 1939 இல், பின்லாந்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காகவே, ரஷ்யா ஹெல்சிங்கியின் மிக அருகில் தனக்கு கடற்படைதளம் வேண்டும் எனவும், பின்லாந்தின் கரேலியன் (Karelia) பிரதேசத்தின் எல்லைக் கோட்டை பின்னோக்கி நகர்த்துமாறும் கோரிக்கை விடுக்கிறது. இந்த பின்லாந்தின் கரேலியன் பிரதேசம் ரஷ்யாவின் முக்கிய நகரான லெனின்கிராட்டில் இருந்து சில பத்து மைல்கள் தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசம். நேச நாட்டுப் படைகள் பின்லாந்து வழியாக லெனின்கிராட்டை ஆக்கிரமிக்கக் கூடும் என்ற பயத்தின் விளைவே இந்த எல்லை பின்னகர்த்தல் கோரிக்கை! பின்லாந்து இந்த கோரிக்கைகளை நிராகரித்து விடவே, 1939 இல் ரஷ்யா பின்லாந்து மீது படையெடுத்து கரேலியன் பிரதேசம் நோக்கி நகர ஆரம்பிக்கிறது. 

குளிர்கால யுத்தம்

வழமையாகக் கிடைக்கும் ஜேர்மனியின் இராணுவ தளபாட உதவியும் இல்லாமல், உதவிக்கு வருவர் என்று எதிர்பார்த்த பிரான்சும் பிரிட்டனும் கைவிட்ட நிலையில், பின்லாந்தின் சிறிய அளவிலான படைகள் ஏறத்தாழ கெரில்லா வழியில் நடாத்திய போர் தான் குளிர் கால யுத்தம். 100,000 பின்லாந்து படைகளைப் பலி கொண்ட இந்த யுத்தம் ஆறு மாதங்கள் வரை நடந்தது. பின்லாந்தின் தென்கிழக்குப் பகுதியை ரஷ்யாவிடம் இழந்த பின்னர், சமாதான ஒப்பந்தம் மூலம் குளிர்கால யுத்தம் முடிவுக்கு வருகிறது. இரண்டாம் உலகப் போரின் முக்கிய திருப்பு முனையாக, 1941 இல் ஜேர்மனி ரஷ்யாவைத் தாக்கிப் படையெடுக்கிறது. இந்த தாக்குதலில், ஜேர்மனியின் அச்சு நாட்டுக் கூட்டணியில் சேராமலே, ரஷ்யாமீதான படையெடுப்பிற்கு பின்லாந்து ஆதரவு கொடுத்தமை வரலாற்றில் பெரிதாகப் பேசப்படாத விடயம். அச்சு நாடுகளின் பட்டியலில் பின்லாந்து இடம் பெறாமல் இருக்க ஒரு காரணம், அது போலந்து, உக்ரைன் போன்று அல்லாமல், யூதர்களை அழிக்க வேண்டும் என்ற ஜேர்மனியின் கோரிக்கையை முற்றாக மறுத்தமையே காரணம் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

பின்லாந்தின் இன்னொரு தேசிய அடையாளம்..வீரம் நிறைந்த தியாகம்

குளிர்கால யுத்தத்தின் போது, ரஷ்ய தரைப்படையின் ஒரு பகுதியான 500,000 போர்வீரர்களை பின்லாந்தின் முழு இராணுவப் படையும்- 120,000 பேர் -எதிர்த்துப் போரிட்டனர். இந்த அசம நிலையான போரின் போது கூட, ரஷ்யப் படைகள் மிகுந்த எதிர்ப்பை எதிர்கொண்டன. சில பிரதேசங்களில், பின்னிஷ் படையினர் இறக்கி விடப் பட்ட போது அவர்கள் தப்பி வருவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லாமலே "ஒரு வழிப் பாதையாக" இறக்கி விடப் பட்டனர். இன்றும் பின்லாந்தின் பல நகரங்களில் துயிலுமில்லங்களில் இப்படியாக "ஒரு வழிப்பாதையில் சென்ற வீரர்களின்" நினைவுகள் பேணப்படுகின்றன. 

தூர நோக்கில் வெல்லப் பட்ட பின்லாந்து தேசியம் 

குளிர்கால யுத்தமும், பின்னர் 1941 இன் ஜேர்மனிய சார்பு யுத்தமும் நடந்து கொண்டிருக்கும் போதே, பின்லாந்து ரஷ்யா என்ற பாரிய நாட்டுடன் எவ்வாறு நீண்ட காலப் போக்கில் சமாதானமாக வாழ்வது என்றும் தொடர்ந்து சிந்தித்து திட்டமிட்டு வந்தது. பின்லாந்தின் ரஷ்யாவுடனான போரின் மூர்க்கம் காரணமாக ஸ்ராலின் 1940 மார்ச் மாத சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, பின்னிஷ் படைகளுடன் மோதுவதை விரும்பவில்லை. ஜேர்மனி நோர்வேயை ஆக்கிரமித்தாலும், ரஷ்யாவை நோக்கி நகரும் திட்டத்திற்கு பின்லாந்து அவசியமாகலாம் என்பதால், பின்லாந்தை சுதந்திர நாடாகவே விட்டு வைத்தது.

நிலத்தைக் கொடுத்து..சுதந்திரத்தைப் பாதுகாத்த பின்லாந்து..

ஜூலை 1944 இல், குளிர்கால யுத்தத்தில் ரஷ்யாவினால் கைப்பற்றப் பட்ட கரேலிய பிரதேசத்தை மீளக்கைப்பற்றிய கையோடு, பின்லாந்தின் தூதுக் குழு மொஸ்கோவுக்குப் பேச்சு வார்த்தைக்காகச் செல்கிறது. 1939 இல் ரஷ்யா கேட்ட அதே கரேலியா பிரதேசம், ஹெல்சிங்கியின் அருகில் ஒரு ரஷ்யத் தளம், ஆர்ட்டிக் கடலில் இருந்த பின்லாந்தின் உலோகச் சுரங்கங்கள் சில, மேலும் போரிழப்பின் நட்ட ஈடாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என பெரும் நிபந்தனைகளோடு ரஷ்யா பின்லாந்தை சுதந்திர நாடாக இருக்க அனுமதிக்கிறது. லத்வியா போன்ற ஏனைய பால்டிக் பிரதேசங்களை தன்னுடைய கம்யூனிச குடியரசில் சேர்த்துக் கொள்கிறது.  

- தொடரும்

தொகுப்பு: ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்: 

1. உத்தியோகபூர்வ பின்லாந்து வரலாற்று இணையத் தளம்   
https://finland.fi/life-society/main-outlines-of-finnish-history/

2. "Upheaval: Turning Point for Nations in Crisis" Jared Diamond (2019).  

Edited by Justin
spelling

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து நாட்டின் கதையை தொகுத்துத் தருவதற்கு நன்றி ஜஸ்ரின்.

ஐரோப்பாவில் பின்லாந்து நாட்டுக்கு 2000 களில் 12 வருடங்கள் தொழில்நிமித்தம் அடிக்கடி பயணித்திருக்கின்றேன். அவர்களின் வரலாற்றை “suana” பார்ட்டிகளிலும், பின்னேர பொழுதுபோக்குகளிலும் கேட்டிருக்கின்றேன்.  இப்போதும் இரண்டு வருடங்கள் கட்டாய இராணுவ சேவை உள்ள நாடு. ஒரு பக்கம் ரஷ்யாவும், மறுபக்கம் ஸ்வீடனுன் இருந்தும் தனித்துவமான மொழியையும், ஓர்மத்தையும் கொண்டவர்கள். அதிகம் வழவழவென்று பேசமாட்டார்கள். ஆனால் சொல்லவேண்டியதை நேரே முகத்துக்கு நேரே சொல்வார்கள். வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் தேவையான பல படிப்பினைகளை அவர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் எடுத்துள்ளேன்.😊

Finnish மொழியில் sisu என்று ஒரு சொல் உள்ளது. இதற்கு நேரடி ஆங்கில வார்த்தை இல்லை. எதையும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஓர்மம் என்பது எனது புரிதல். 

SISU

To the Finnish people, sisu has a mystical, almost magical meaning. Sisu is a unique Finnish concept. It is a Finnish term that can be roughly translated into English as strength of will, determination, perseverance, and acting rationally in the face of adversity.

Sisu is not momentary courage, but the ability to sustain that courage. It is a word that cannot be fully translated. It defines the Finnish people and their character.  It stands for the philosophy that what must be done will be done, regardless of cost.

https://www.finlandia.edu/about/our-finnish-heritage/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தின் கதை..-2 

வரலாற்றின் சம்பவங்களை சில காலங்கள் கழித்து மீளப் பார்ப்பதில் சில நன்மைகள் உண்டு. சமகாலத்தில் தெரியவராத சில மேலதிகத் தகவல்கள் பிற்காலத்தில் வெளிவந்து புதிய வெளிச்சத்தை சம்பவங்கள் மீது பாய்ச்சும். புதிய வியாக்கியானம் சாத்தியமாகும். எதிர்காலத்தை எதிர்வுகூற இந்த புதிய வியாக்கியானம் சிறிதளவாவது உதவும். இதை வரலாற்று மீளாய்வு (historical revisionism) என்பர்.  

1941 இல் எட்டிய சமாதானத்தை 1939 இல் எட்டியிருக்க முடியாதா?

1939 இல் ரஷ்யா கேட்டதை விட மேலதிகமாகக் கொடுத்துத் தான் 1941 இல் பின்லாந்து சமாதானம் செய்து கொள்கிறது. அப்படியானால் 1939 இலேயே ரஷ்யா கேட்டதைக் கொடுத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாமே என்ற கேள்வி இயற்கையாக எழுந்தது. இதற்கான பதில் சில காலங்கள் கழித்து பின்லாந்து நோக்கிய ஸ்ராலினின் இராணுவத் திட்டம் புரிந்த போது கிடைத்தது. ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போர் முடிவில் ரஷ்யா நடந்து கொண்ட அதே பொம்மை அரசு நிறுவும் வழியில் பின்லாந்தின் பெரும்பகுதியை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் திட்டம் ஸ்ராலினுக்கு இருந்தது. ஒரு இராணுவத்தளத்தை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொண்டு உள்ளே வந்த பின்னர், ரஷ்ய மொழி பேசும் ஸ்லாவிய மக்களை கொஞ்சம் கொஞ்சமா அதிகரித்து, அந்த மக்களின் உதவியுடன் முழு நாட்டையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நடைமுறை நீண்டகால  ரஷ்ய அணுகுமுறை (செவஸ்தபோல் ரஷ்யத் தளத்தை உள்ளடக்கிய கிரிமியாவை உக்ரைனிடமிருந்து சில வருடங்கள் முன்பு கூட ரஷ்யா கவர்ந்திருந்தது).

எனவே, பின்லாந்துக்கு உவப்பான வகையில் சமாதான ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டு ரஷ்யாவின் முன்னேற்றத்தைத் தடுக்க  1939 குளிர்கால யுத்தம் அவசியமாக இருந்தது. ஆறு மாதங்களில் பேரழிவின் பின்னர் பின்லாந்து சமாதானத்திற்குப் போன போது, ரஷ்யாவுக்கு பின்னிஷ் மக்கள் ஏனைய பால்டிக் நாடுகளின் மக்களை விட ஓர்மம் மிக்கவர்கள் என்பது புலனாகியிருந்தது. இந்த அறிவே அடுத்த 50 வருடங்கள் கம்யூனிச ரஷ்யா எப்படி பின்லாந்தை நடத்தியது என்பதற்கு அடிப்படையானது. 

எதை இழப்பது..எதைப் பற்றிக் கொள்வது? 

பின்லாந்துத் தேசியத்தின் மூன்று தூண்களாக மொழி, நிலம், போர் ஓர்மம் இருந்தன எனப்பார்த்தோம். 1941 இற்குப் பின்னர் ரஷ்யாவின் நிழலில் தனித்துவத்தோடு நிலைக்க வேண்டுமானால் பின்லாந்து சில தெரிவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. நிலத்தில் ஒரு பகுதி இழப்பு, பெருந்தொகை நட்ட ஈடு என்பவை ஏற்கனவே பார்த்தோம். இந்த தெரிவுகளின் அடிநாதம்: "பின்லாந்து தனித்துவமாக இருக்கும் அதே நேரம், ரஷ்யாவை ஆக்கிரமிப்பிற்கு தூண்டும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது" என்பதாகும்.

வெளியுறவில் மாற்றங்கள்

1991 வரையில் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமிடையே நடந்த பனிப்போரில் சுவிசைப் போலவே பின்லாந்தும் நடு நிலையைப் பேணியது. அந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவுடன் குறிப்பிடத்தக்க அளவில் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிய, ஆனால் கம்யூனிச நாடல்லாத தேசமாக பின்லாந்து இருந்தது, இந்த தனித்துவமான வெளியுறவுக் கொள்கையின் அறிகுறி. 

உள்ளக மாற்றங்கள்

பின்லாந்தின் அரசியல் தலைமை, ஊடகங்கள், மக்கள் என எல்லோருமே ஒரு புரிந்துணர்வுடன் சில குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்தனர். மேற்கத்தைய ஜனநாயகத்தின் பண்புகளான திறந்த தேர்தல், பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றை கூட பின்லாந்து மாற்றியது என்றால் இன்று நம்பக் கடினாமகத் தான் இருக்கிறது. ஆனால், அடக்கு முறை இல்லாமல், மக்களிடம் ஒழித்து மறைக்காமல் இந்த மாற்றங்கள் நடந்தன. பின்லாந்தின் தலைமையை உற்றுக் கவனித்தால் 1946 முதல் 1981 வரை இரண்டே இரண்டு ஜனாதிபதிகள் தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். Paasikivi , Kekkonen ஆகிய இந்த இரு தலைவர்களும் மிகக் கவனமாக வளர்த்தெடுத்த பின்லாந்தின் தேசியம் காக்கும் உள்ளக/வெளியுறவுக் கொள்கைகளை தொடர வேண்டுமென்ற ஒரே குறிக்கோளினால், பின்லாந்தின் பாராளுமன்றம் ஒரு கட்டத்தில் தேர்தலைப் பின்போட்டு இவர்கள் இருவரும் பின்லாந்தின் தலைவர்களாக இருக்க உதவியது. 

"என்ன விலை கொடுத்தாவது காரியம் முடிக்கப்படும்..!"

 "what must be done will be done, regardless of cost..."
மேலே கிருபன் குறிப்பிட்டிருக்கும் பின்லாந்து வாழ்க்கைத் தத்துவச் சொல்லான Sisu (சிஸூ) இதைத் தான் செயல் வடிவில் குறிக்கிறது. இங்கே பின்லாந்து தன் தேசிய அடையாளத்தை தக்க வைப்பதை இலக்காகக் கொண்டிருந்தது (காரியம்), அதற்காக கொடுத்த விலை, மக்களின் உயிர்கள், நிலத்தின் ஒரு பகுதி, வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் என்பனவாக இருந்திருக்கின்றன. இதில் எதை இறுக்கிப் பிடித்துக் கொள்வது, எதைக் கை நழுவ விடுவது என்ற முடிவை தொடர்ந்த சிந்தனையாலும், பரீட்சாத்த வழிகளாலும் பின்லாந்தின் மக்கள் எடுத்தனர்! வாழ்க்கை முறை, தனி மனித சுதந்திரம் என்பவற்றை பேரம் பேசலுக்கு அப்பாற்பட்ட அம்சங்களாகக் கருதும் நாடுகள்/இனங்களைப் பொறுத்தவரை, பின்லாந்து ரஷ்யாவிடம் அடங்கி இருந்த ஒரு தேசமாகவே பார்க்கின்றன. இந்த அடங்கியிருத்தலை Finlandization என்று நக்கலாகக் குறிப்பிடும் ஒரு வழக்கமும் இருந்தது. ஆனால், வெளியாரின் உதவியில் தங்கியிருக்காமல், தாமாகவே தங்கள் சுதந்திர நிலையைப் பாதுகாத்துக் கொள்கிற ஒரு நீண்ட காலத்திட்டத்தை பின்லாந்து வகுத்துக் கொண்டதாகவே சார்பற்ற வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

 இதை நான் எழுத ஒரு காரணம் இன்று தமிழ் தேசியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று எழுந்திருக்கும் கேள்விக்கு விடை தேடும் முயற்சியின் ஒரு அங்கம். தமிழ் தேசியத்தின் தூண்கள் எவை? இந்த தூண்களை இன்னும் இரண்டு தலைமுறைகள் பாதுகாத்து வைத்திருக்க எவற்றை நாம் இழப்பது ஏற்புடையது? எவற்றை நாம் இழக்காமல் இருக்க வேண்டும்?  

- முற்றும்-

தொகுப்பு: -ஜஸ்ரின்.

பிரதான மூலங்கள்: 

1. உத்தியோகபூர்வ பின்லாந்து வரலாற்று இணையத் தளம்   
https://finland.fi/life-society/main-outlines-of-finnish-history/

2. "Upheaval: Turning Point for Nations in Crisis" Jared Diamond (2019).  

  • கருத்துக்கள உறவுகள்

தொடராக எழுதுவதற்கு நன்றி ஜஸ்ரின் அண்ணே.

நன்றி ஜஸ்ரின். பின்லாந்தின் ஹெல்சிங்கி , சென்ற் பீற்றர்ஸ்பேர்க் இரண்டும் நான் இம்முறை விடுமுறைக்கு திட்டமிட்ட நகரங்கள். கொரோனா பயண திட்டத்தை குலைத்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து தேசத்தில் நான் வாழ்ந்தாலும் இப்படியான அரசியல் பார்வையில் நான் இதுவரை பின்லாந்தினது வரலாற்றைப் அறிந்துகொள்ள முயலவில்லை.

ஆனால் ஒரு விடையம் உண்மை,

சரி என்றால் சரி தவறு என்றால் தவறுதான். தவிர சிசு எனும் சொல் "எதற்கும் தயார்" என்பதைக் குறிக்கும். எனவேதான் பிலாந்தின் இராணுவத்த்ல் தற்போது பாவனையிலிருக்கும் இராணுவ வாகனங்கள் அதிகமானவையில் உற்பத்திப்பெயர் "சிசு" 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

பின்லாந்து தேசத்தில் நான் வாழ்ந்தாலும் இப்படியான அரசியல் பார்வையில் நான் இதுவரை பின்லாந்தினது வரலாற்றைப் அறிந்துகொள்ள முயலவில்லை.

ஆனால் ஒரு விடையம் உண்மை,

சரி என்றால் சரி தவறு என்றால் தவறுதான். தவிர சிசு எனும் சொல் "எதற்கும் தயார்" என்பதைக் குறிக்கும். எனவேதான் பிலாந்தின் இராணுவத்த்ல் தற்போது பாவனையிலிருக்கும் இராணுவ வாகனங்கள் அதிகமானவையில் உற்பத்திப்பெயர் "சிசு" 
 
எழுஞாயிறு, எழுதும் போது உங்களை நினைத்தேன். இன்னும் நேட்டோ உறுப்புரிமை பற்றி பின்லாந்தில் உள்ள கட்சிகள் பேசத்தயங்குவதாக அறிந்தேன். எனவே இப்போதும் சூழ் நிலைக்கேற்ப இசையும் கொள்கை இருக்கும் போல. 

சிவலிங்கம் (உதயணன்) அவர்களை சந்தித்திருக்கிறீர்களா?  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நன்றி ஜஸ்ரின். பின்லாந்தின் ஹெல்சிங்கி , சென்ற் பீற்றர்ஸ்பேர்க் இரண்டும் நான் இம்முறை விடுமுறைக்கு திட்டமிட்ட நகரங்கள். கொரோனா பயண திட்டத்தை குலைத்துவிட்டது. 

இது நானும் போக விரும்பும் ஒரு பயணம்.

ஹெல்சிங்கியில் இருந்து பீட்டர்ஸ்பேர்க் போக விசா தேவையில்லை என்றும், இல்லை குறித்த கப்பல்களில் போனால் மட்டுமே விசா தேவையில்ல ஏனைய வழிகளுக்கு தேவை என்றும் குழப்பமான தகவல்கள். ரஸ்ய வீசா எடுப்பதாயின் - அது ஒரு பெரிய புரோசஸ்.

எனக்கு ஆடம்பர கப்பல் பயணம் பிடிக்காது, அதிவேக ரயில் 2-1/2 மணியில் போகுதாம். 

கொரோனா முடிந்ததும் போய் வந்து விபரத்தை ஒரு பயண கட்டுரையாக போட்டு விடுங்கள்.

7 hours ago, Justin said:

பின்லாந்தின் கதை..-2 

வரலாற்றின் சம்பவங்களை சில காலங்கள் கழித்து மீளப் பார்ப்பதில் சில நன்மைகள் உண்டு. சமகாலத்தில் தெரியவராத சில மேலதிகத் தகவல்கள் பிற்காலத்தில் வெளிவந்து புதிய வெளிச்சத்தை சம்பவங்கள் மீது பாய்ச்சும். புதிய வியாக்கியானம் சாத்தியமாகும். எதிர்காலத்தை எதிர்வுகூற இந்த புதிய வியாக்கியானம் சிறிதளவாவது உதவும். இதை வரலாற்று மீளாய்வு (historical revisionism) என்பர்.  

1941 இல் எட்டிய சமாதானத்தை 1939 இல் எட்டியிருக்க முடியாதா?

1939 இல் ரஷ்யா கேட்டதை விட மேலதிகமாகக் கொடுத்துத் தான் 1941 இல் பின்லாந்து சமாதானம் செய்து கொள்கிறது. அப்படியானால் 1939 இலேயே ரஷ்யா கேட்டதைக் கொடுத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாமே என்ற கேள்வி இயற்கையாக எழுந்தது. இதற்கான பதில் சில காலங்கள் கழித்து பின்லாந்து நோக்கிய ஸ்ராலினின் இராணுவத் திட்டம் புரிந்த போது கிடைத்தது. ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போர் முடிவில் ரஷ்யா நடந்து கொண்ட அதே பொம்மை அரசு நிறுவும் வழியில் பின்லாந்தின் பெரும்பகுதியை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் திட்டம் ஸ்ராலினுக்கு இருந்தது. ஒரு இராணுவத்தளத்தை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொண்டு உள்ளே வந்த பின்னர், ரஷ்ய மொழி பேசும் ஸ்லாவிய மக்களை கொஞ்சம் கொஞ்சமா அதிகரித்து, அந்த மக்களின் உதவியுடன் முழு நாட்டையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நடைமுறை நீண்டகால  ரஷ்ய அணுகுமுறை (செவஸ்தபோல் ரஷ்யத் தளத்தை உள்ளடக்கிய கிரிமியாவை உக்ரைனிடமிருந்து சில வருடங்கள் முன்பு கூட ரஷ்யா கவர்ந்திருந்தது).

எனவே, பின்லாந்துக்கு உவப்பான வகையில் சமாதான ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டு ரஷ்யாவின் முன்னேற்றத்தைத் தடுக்க  1939 குளிர்கால யுத்தம் அவசியமாக இருந்தது. ஆறு மாதங்களில் பேரழிவின் பின்னர் பின்லாந்து சமாதானத்திற்குப் போன போது, ரஷ்யாவுக்கு பின்னிஷ் மக்கள் ஏனைய பால்டிக் நாடுகளின் மக்களை விட ஓர்மம் மிக்கவர்கள் என்பது புலனாகியிருந்தது. இந்த அறிவே அடுத்த 50 வருடங்கள் கம்யூனிச ரஷ்யா எப்படி பின்லாந்தை நடத்தியது என்பதற்கு அடிப்படையானது. 

எதை இழப்பது..எதைப் பற்றிக் கொள்வது? 

பின்லாந்துத் தேசியத்தின் மூன்று தூண்களாக மொழி, நிலம், போர் ஓர்மம் இருந்தன எனப்பார்த்தோம். 1941 இற்குப் பின்னர் ரஷ்யாவின் நிழலில் தனித்துவத்தோடு நிலைக்க வேண்டுமானால் பின்லாந்து சில தெரிவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. நிலத்தில் ஒரு பகுதி இழப்பு, பெருந்தொகை நட்ட ஈடு என்பவை ஏற்கனவே பார்த்தோம். இந்த தெரிவுகளின் அடிநாதம்: "பின்லாந்து தனித்துவமாக இருக்கும் அதே நேரம், ரஷ்யாவை ஆக்கிரமிப்பிற்கு தூண்டும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது" என்பதாகும்.

வெளியுறவில் மாற்றங்கள்

1991 வரையில் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமிடையே நடந்த பனிப்போரில் சுவிசைப் போலவே பின்லாந்தும் நடு நிலையைப் பேணியது. அந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவுடன் குறிப்பிடத்தக்க அளவில் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிய, ஆனால் கம்யூனிச நாடல்லாத தேசமாக பின்லாந்து இருந்தது, இந்த தனித்துவமான வெளியுறவுக் கொள்கையின் அறிகுறி. 

உள்ளக மாற்றங்கள்

பின்லாந்தின் அரசியல் தலைமை, ஊடகங்கள், மக்கள் என எல்லோருமே ஒரு புரிந்துணர்வுடன் சில குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்தனர். மேற்கத்தைய ஜனநாயகத்தின் பண்புகளான திறந்த தேர்தல், பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றை கூட பின்லாந்து மாற்றியது என்றால் இன்று நம்பக் கடினாமகத் தான் இருக்கிறது. ஆனால், அடக்கு முறை இல்லாமல், மக்களிடம் ஒழித்து மறைக்காமல் இந்த மாற்றங்கள் நடந்தன. பின்லாந்தின் தலைமையை உற்றுக் கவனித்தால் 1946 முதல் 1981 வரை இரண்டே இரண்டு ஜனாதிபதிகள் தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். Paasikivi , Kekkonen ஆகிய இந்த இரு தலைவர்களும் மிகக் கவனமாக வளர்த்தெடுத்த பின்லாந்தின் தேசியம் காக்கும் உள்ளக/வெளியுறவுக் கொள்கைகளை தொடர வேண்டுமென்ற ஒரே குறிக்கோளினால், பின்லாந்தின் பாராளுமன்றம் ஒரு கட்டத்தில் தேர்தலைப் பின்போட்டு இவர்கள் இருவரும் பின்லாந்தின் தலைவர்களாக இருக்க உதவியது. 

"என்ன விலை கொடுத்தாவது காரியம் முடிக்கப்படும்..!"

 "what must be done will be done, regardless of cost..."
மேலே கிருபன் குறிப்பிட்டிருக்கும் பின்லாந்து வாழ்க்கைத் தத்துவச் சொல்லான Sisu (சிஸூ) இதைத் தான் செயல் வடிவில் குறிக்கிறது. இங்கே பின்லாந்து தன் தேசிய அடையாளத்தை தக்க வைப்பதை இலக்காகக் கொண்டிருந்தது (காரியம்), அதற்காக கொடுத்த விலை, மக்களின் உயிர்கள், நிலத்தின் ஒரு பகுதி, வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் என்பனவாக இருந்திருக்கின்றன. இதில் எதை இறுக்கிப் பிடித்துக் கொள்வது, எதைக் கை நழுவ விடுவது என்ற முடிவை தொடர்ந்த சிந்தனையாலும், பரீட்சாத்த வழிகளாலும் பின்லாந்தின் மக்கள் எடுத்தனர்! வாழ்க்கை முறை, தனி மனித சுதந்திரம் என்பவற்றை பேரம் பேசலுக்கு அப்பாற்பட்ட அம்சங்களாகக் கருதும் நாடுகள்/இனங்களைப் பொறுத்தவரை, பின்லாந்து ரஷ்யாவிடம் அடங்கி இருந்த ஒரு தேசமாகவே பார்க்கின்றன. இந்த அடங்கியிருத்தலை Finlandization என்று நக்கலாகக் குறிப்பிடும் ஒரு வழக்கமும் இருந்தது. ஆனால், வெளியாரின் உதவியில் தங்கியிருக்காமல், தாமாகவே தங்கள் சுதந்திர நிலையைப் பாதுகாத்துக் கொள்கிற ஒரு நீண்ட காலத்திட்டத்தை பின்லாந்து வகுத்துக் கொண்டதாகவே சார்பற்ற வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

 இதை நான் எழுத ஒரு காரணம் இன்று தமிழ் தேசியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று எழுந்திருக்கும் கேள்விக்கு விடை தேடும் முயற்சியின் ஒரு அங்கம். தமிழ் தேசியத்தின் தூண்கள் எவை? இந்த தூண்களை இன்னும் இரண்டு தலைமுறைகள் பாதுகாத்து வைத்திருக்க எவற்றை நாம் இழப்பது ஏற்புடையது? எவற்றை நாம் இழக்காமல் இருக்க வேண்டும்?  

- முற்றும்-

தொகுப்பு: -ஜஸ்ரின்.

பிரதான மூலங்கள்: 

1. உத்தியோகபூர்வ பின்லாந்து வரலாற்று இணையத் தளம்   
https://finland.fi/life-society/main-outlines-of-finnish-history/

2. "Upheaval: Turning Point for Nations in Crisis" Jared Diamond (2019).  

அற்புதம் அண்ணா. இது கதையல்ல பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பின்லாந்தில் 1997 லிருந்து வாழ்கிறேன் ஆனால் முதல் ஆறு வருடங்கள் பின்லாந்தின் ஆர்டிக் வட்டகைக் கோட்டுக்கு அருகாமையில் அதாவது ஆர்டிக் வட்டககிக் கோட்டிலிருந்து 6.4 கிலோமீறர் தூரத்திலுள்ள என்னுமிடத்தில்தான் வசித்தேன் 2003 ஆரம்பத்திலேயே தலைநகர் கெல்சிங்கி வந்தேன் அப்போதுதான் இலங்கையிலிருந்து ஓரளவு அதிகமானவர்கள் பின்லாந்துநோக்கிப்பயணப்பட்ட நேரம் அதஙாரணமாகவும் அவரது வயது மூப்பு மற்றும் பிற காரணங்களாலும் தமிழ் சமூகத்தில் அனைவருடனும் உறவாடுவதில் ஓரளவு ஒதுங்கியேயிருந்தார். அதன்பின்பு அவரது மூத்தமகன் தவிர அனைத்துப் பிள்ளைகளும் அமெரிக்க கனடா என தொழில் படிப்பு திருமணம் எனப்பிறகாரணிகளால் நாடு மாறிவிட்டார்கள். என்னவோ தெரியவில்லை சூழல் அவரை ஒருதடவையேனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. 

செம்மொழி மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட அஸ்கோ பார்ப்போலா அவர்களுடன் சிவலிங்கம் அவர்களுக்கு நல்ல நட்பு இருந்தது. ஆனால் திரு சிவலிங்கம் அவர்களது மூத்த மகன் எனது நெருங்கிய நண்பர் இதுதான் காலத்தின் கோலம்.

ஒரு எழுத்தில் அவர் இறுதியில் யாழ் சென்று அவரது வீட்டைப் பார்வையிட்டு அவ்வீட்டை அவரது உறவினர்களில் யாருக்கோ விற்பனை செய்துவிட்டார் பின்னாளில் அவரும் அவரது பிள்ளைகளும் தவறான முடிவாக வருந்தியதாக அறிந்தேன்.

நேட்டோ விடையத்தில் பின்லாந்து மிகவும் அவதானமாகவே இருக்கிறது பெரும்பான்மையான கொள்கை வகுப்பாளர்களுக்கு நேட்டோவில் இணைவது அவ்வளவாக விருப்பம் இல்லை காரணம் உடைந்த சோவியத் யூனியனுக்கு முன்பான காலத்தில் பின்லாந்து சோவியத்துடன் வர்த்தக்கத் தொடர்புகளை அதிகமாகக் கொண்டிருந்தது அவ்வேளையில் பின்லாந்து செழுமைமிக்க பொருளாதார நிலையிலிருக்கக் காரணம் சோவியத் யூனியனே. அதனது தாக்கம் எப்போது உணரப்பட்டதெனில் உக்ரைனுடன் அண்மையில் ரஸ்யா முரண்பட்டு கிரீமியாவில் துருப்புகள் இரக்கபடும்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடையினால் பின்லாந்து தனது உற்பத்திப்பொருளை ரஸ்யாவிற்கு விற்கமுடியாமல் போய்விட்டது பின்லாந்தின் பால்பொருதள் மற்றும் குறிப்பிட்ட உணவுப்பொருதளது தரம் மிகவும் கணிசமான உயர்தரமானதாகும். அவ்வேளையில் அப்பொருதள் எல்லாம் விற்பனை வாய்ப்பிழந்து உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் அதே போன்று பலமடங்கு வியாபாரச் சேதாரத்தை சோவியத் பிழவின்போது பின்லாந்து சந்தித்தது ஆகவே அதுபோன்ற பிரச்சனையை பொருளாதார ரீதியிலும் தவிர என்னதான் நேட்டொப் படைகள் பின்லாந்துடன் நின்றாலும் இரோப்பாவில் மிக நீண்ட இரு நாடுகளுக்கிடையிலான எல்லையைக்கொண்ட நாடாக விளங்கும் பின்லாந்துக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் ஏற்படும் சின்ன உரசல்கூட ஐரோப்பிய ஒன்றியத்தால் எதிர்காலத்தில் ஈடுகட்டமுடியாத நஸ்டத்தைத் தரும் ஏனெனில் ரஸ்யாவின் பலம் அப்படியானது. 

தன்னுடைய நாட்டு மக்கள் மகிழ்சியாக இருக்க களியாட்டங்கள் இசைநிகழ்சிகள் போன்றவற்றுக்காகச் பல டிரில்லியன் யூரோக்களைச் செலவுசெய்து அவையும் ஒரு நாட்டில் முதலீடே எனச்சொல்லும் ஒரு அரசாங்கத்தின் கொள்கைவகுப்பாளர்கள் ரஸ்யாவுடம் பொருதுவதற்கான எந்தக் காரணங்களையும் தவிர்க்கவேசெய்வர். 

தவிர கெல்சிங்கியின் நகர்புறத்தில் புதிதாகச் சேவையிலீடுபடுத்தத் திட்டமிட்ட ஒரு ட்ராம் சேவையின் பாதையினை அமைக்கும்போது அப்பகுதியின் அருகாமையில் காணப்படும் சிறுவர் கின்ரர்கார்டனில் பராமரிக்கப்படும் சிறுவர்கள் பகல்தூக்கம் கொள்வதில் இடையூறுகள் இருக்கக்கூடாது என சாலைப்பணியில் அதற்கமைய நேர அட்டவணையை திட்டமிட்டு அக்கட்டுமானப்பணியின் காலதாமதத்தினால் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நகர நிர்வாகம் ஏற்றுகொள்ளக்கூடிய மன்ப்பாங்குள்ள அரசியற் கொள்கைவகுப்பாளர்களுள்ள நாட்டில்.

உலகில் மிகவும் கொடூரமானதும் ஆனால் அவேளைய போர்க்காலச் சூழலையும் வளங்களையும் கொண்டு பனிப்போரினை எதிர்கொண்டநாட்டின் ஒப்பீட்டளவான வெற்றி என்பது பின்லாந்துக்கே என வரலாற்றியலாளர்கள் இப்போது கூறுமளவுக்கான "சிசு" என்பது பின்லாந்துக்கு இப்போதுமுள்ளது.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.