Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து

எல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து

கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று.  இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், அந்த வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன.

இப்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மார்பு தொடர்பான அறிகுறிகளுடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாகவும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 
நிதி ஆயோக் ஒத்துழைப்புடன் நடைபெறுகிற வாராந்திர தேசிய மருத்துவ கிராண்ட் ரவுண்ட்ஸ் கலந்தாலோசனையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா, இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய், மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் ஆகியோர் கலந்து கொண்டு இது தொடர்பான கருத்துகளை எடுத்து வைத்தனர்.

அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறிய கருத்துகள் இவை-

“கடந்த 8 மாதங்களில் கொரோனா வைரஸ் பற்றிய நிறைய கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உத்திகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வைரஸ் நிமோனியா என நாம் நினைத்ததில் இருந்து நுரையீரலுக்கு அப்பாலும் கொரோனாவால் பல வெளிப்பாடுகள் உள்ளன. இது பல கூடுதல் நுரையீரல் வெளிப்பாடுகளை ஏற்படுத்துகிறது. அடிப்படையில் இந்த வைரஸ் ‘ஏசிஇ2’ ஏற்பிகள் மூலம் செல்களுக்குள் நுழைகிறது என்பதையே இது அடிப்படையாக கொண்டது. அவை மேல் காற்றுப்பாதைகள், நுரையீரல்களில் ஏராளமாக இருந்தாலும், பல உறுப்புகளிலும் உள்ளன. இதனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

இப்படி பல நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

பெரும்பாலான நுரையீரல் வெளிப்பாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் நுரையீரல் வெளிப்பாடுகளுடன் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.

இந்த தொற்றுநோயின்போது, டாக்டர்களாகிய நாங்கள் எப்போது நோயாளியை சந்தேகிக்க வேண்டும், சிகிச்சை தர வேண்டும் அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சையை அளிக்க முடியும்” என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா.

இந்த கலந்தாலோசனையின்போது, மருத்துவ நிபுணர்கள், கொரோனா அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளுடன் வந்த பலருக்கு பக்கவாதம், இதயத்தில் அடைப்புகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான வெளிப்பாடுகள் இருந்ததையும் எடுத்துக்கூறினர்.

மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் கூறும்போது, “ஆரம்பத்தில் கொரோனா, வைரஸ் நிமோனியாவாக தொடங்கியவை. இப்போது அது பல அமைப்பு நோயாக மாறி இருக்கிறது” என்கிறார். மேலும், சுவாச அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் தொற்று லேசாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, கடுமையானதாக இருக்கிறதா என்பதை வகைப்படுத்துவதை, மற்ற உறுப்பு தொடர்புகளுடன் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

35 வயதான ஒருவர் தலைவலி மற்றும் வாந்தியுடன் வந்ததாகவும், ஆனால் அவர் ‘கார்டிகல் வெயின் த்ரோம்போசிஸ்’ பிரச்சினையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டறிந்ததாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய வழிகாட்டும் நெறிமுறைகள்படி பார்த்தால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லை என கூறினார்.

டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சில நோயாளிகளில் மூளை சம்பந்தப்பட்டிருக்கிறது. அது ரத்த உறைதலுக்கு வழிநடத்தும். பக்கவாதம் ஏற்படலாம் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம். என்செபலிடிஸ் (மூளை வீக்கம்) அல்லது பிற சிக்கல்களுக்கு வழிநடத்தவும் கூடும்” என சுட்டிக்காட்டினார்.

டாக்டர் அம்புஜ் ராய், மிக குறைந்த துடிப்பு விகிதத்துடன் வந்த ஒரு நோயாளி பற்றி கூறினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, இதயத்துடிப்பை மேம்படுத்த சில மருந்துகள் அளிக்கப்பட்டனவாம். வழக்கமாக அப்படிப்பட்டவர்களுக்கு பேஸ்மேக்கர் வைப்பது உண்டு. ஆனால் இந்த பிரச்சினை, கொரோனா வைரசால்தான் என உணர்ந்ததால், பேஸ்மேக்கர் வைக்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சை மூலமே அந்த நோயாளியின் இதயத்துடிப்பு படிப்படியாக மேம்படுத்தப்பட்டதாம்.

சில நேரங்களில், இதயத்தின் மின்துடிப்பு அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்படலாம், இது சுய வரம்புக்கு உட்பட்டது. காலப்போக்கில் மேம்படுகிறது. எனவே வழக்கமாக நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பேஸ்மேக்கர் இந்த தருணத்தில் தேவைப்படுவதில்லை. இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் சான்றகள் தேவை என்கிறார் டாக்டர் அம்புஜ்ராய்.

இப்படி பல சிக்கல்களுக்கு வழிநடத்தக்கூடிய கொரோனா நம்மை நெருங்காமல் நாம் விவேகமாக தற்காத்துக்கொள்வதுதான் நல்லது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/28003423/1823173/Coronavirus-Contagion-can-affect-all-organs-of-the.vpf

 

  • 4 weeks later...

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு -வெளிவந்துள்ள அதிர வைக்கும் ஆய்வு முடிவு

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கொரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இவ்வாறான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் த வால் ஸ்டிரீட் மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, இதய கோளாறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பிறக்கும்போது இருந்த இதயத்தின் தசை செல்களுடன்தான் நாம் பெரும்பாலும் இறக்கிறோம், எனவே, இதய தசைகளில் உள்ள செல்கள் இறக்க நேரிடும் வகையில் ஏதேனும் நடந்தால், அது மீளமுடியாத, இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கும் என்று வோஷிங்டனில் உள்ள இதய மருத்துவத் துறை இயக்குநர் சார்லெஸ் முர்ரே தெரிவித்துள்ளதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவ கால காய்ச்சல் மற்றும் இதர தொற்றுநோய்களுக்குப் பிறகு கூட சில நோயாளிகளுக்கு நெஞ்செரிச்சல், இதயத் துடிப்பில் சீரற்றத் தன்மை, ஏன் இதய செயலிழப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கொரோனா பாதித்து பலியானவர்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில், இதய நாளங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவியிருந்ததும், அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் இதயத்தை பரிசோதித்த போதும் கிடைத்த தகவல்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/151151?ref=home-imp-parsely

இதயத்தையும் குறிவைக்கும் கரோனா

world-heart-day  

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் அது நுரையீரலைத் தாக்கும் புதியதொரு வைரஸ் என்று மட்டுமே அறியப்பட்டது. அதன் பாதிப்புகள் உலக அளவில் தீவிரமானதும், அது ரத்தக்குழாய் வழியாக உடலுக்குள் புகுந்து இதயம், மூளை, சிறுநீரகம் எனப் பலதரப்பட்ட உறுப்புகளையும் தாக்கக்கூடிய வேறுபட்ட வைரஸ் என்பது தெரியவந்தது. முதன்முதலில், இத்தாலியில் கரோனா தொற்றால் இறந்துபோன ஒருவரின் உடலை ஆராய்ந்தபோது அவரது ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகள் காணப்பட்டதும், இதயத்தில் அழற்சி (Myocarditis) தோன்றியிருந்ததும் அதை உறுதிப்படுத்தியது.

உலகில் ஆண்டுதோறும் இதய நோய்களால் ஒரு கோடியே 70 லட்சம் பேர் இறக்கின்றனர். அத்தோடு கரோனா பாதிப்பும் சேர்ந்துகொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வில் கரோனா தொற்றாளர்களுக்கு நுரையீரலுக்கு மட்டுமன்றி இதயத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ரத்தம் உறைவதன் வழியாக கரோனா தொற்றாளர்களுக்கு மரணம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் வழங்கப்படுவது வாடிக்கையானது.

வெளிச்சம் கொடுத்த ஆய்வுகள்

பொதுவாக, ஆக்ஸிஜன் இல்லாமல் இதயம் அவதிப்படும்போது அதன் தசைகள் அழியத் தொடங்கும். அப்போது, ரத்தத்தில் ட்ரோபோனின் (Troponin) எனும் இதய நொதி அதிகரிக்கும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கும் முக்கியத் தடயம் இது. கரோனா தொற்றாளர்களில் பலருக்கும் இந்த நொதி அதிகமாகக் காணப்பட்டதாலும் அவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாலும் கரோனா வைரஸ் இதயத் தசைகளைப் பாதிப்பது உறுதியானது. ஆனால், அது கரோனாவின் நேரடித் தாக்குதல் இல்லை; கரோனாவுக்கு எதிராகப் புயலெனக் கிளம்பும் தடுப்பாற்றல் புரதங்கள் உண்டாக்கும் அழற்சி நிலை என்றே கருதப்பட்டது. அதனால், கரோனா சிகிச்சையில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள் புகுந்தன.

அண்மையில், இந்தப் புரிதலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நேரடியாகவும் இதயத்தைத் தாக்கக்கூடும் என்பதே அது. சான்ஃபிரான்சிஸ்கோவில் கிளாட்ஸ்டோன் ஆராய்ச்சி நிறுவனம் (Gladstone Institute) செயற்கையாக வளர்க்கப்பட்ட இதயத் தசைகளுக்குள் கரோனா கிருமிகளைச் செலுத்தியபோது இதய செல்கள் எல்லாமே அணில் கொறித்த பழம்போல் சிறு சிறு துண்டுகளாகப் பிளந்து காணப்பட்டன. இதுவரை எந்த ஒரு வைரஸ் பாதிப்பிலும் காணப்படாத அரிய தோற்றம் இது. இதேபோன்று ஜெர்மனியில் 49 வயது இளைஞருக்கு கரோனா பாதித்தபோது எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. படத்திலும் இதயத் தசைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடலியல் செயல்பாட்டின்படி இதய செல்கள் ஒருமுறை இறந்துவிட்டால் அது நிரந்தர இழப்பாகிவிடும். கல்லீரல்போல் மறுவளர்ச்சிக்கு அங்கு வழியில்லை. இந்தக் கொடிய விளைவால் கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இதயத் தசைகள் வீங்குவது (Cardiomyopathy), சீரற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation) எனத் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு நாட்பட்ட நோயாக மாறிவிடுகின்றன. அப்போது இதயம் இயல்பாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இதய விசை குறைந்து, உடலுக்குள் அனுப்பப்படும் ரத்த அளவும் குறைந்து போகிறது. இதனால், பயனாளிக்குக் கடுமையாகச் சோர்வு ஏற்படுகிறது; மாடி ஏறினால் மூச்சு வாங்குகிறது; சிறிது வேகமாக நடந்தால்கூட நெஞ்சு வலிக்கிறது; அதிகம் வியர்க்கிறது.

இந்த ஆய்வின் அடுத்த புரிதல் என்னவென்றால், இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்கெனவே இதய நோய் உள்ள கரோனா தொற்றாளர்களுக்குத்தான் ஏற்படும் என்பதில்லை; இதுவரை இதய நோய் இல்லாதவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு புதிதாக உருவாகக்கூடும் என்பது. 27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஓஜோ கரோனாவிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பில் இறந்தது இதை உறுதிப்படுத்தியது.

‘ஸ்டாடின்’ தரும் பாதுகாப்பு

இதய நோய், நீரிழிவு, உடற்பருமன் போன்ற துணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று நம்பப்படும் சூழலில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஸ்டாடின் குறித்த ஆய்வு ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கமாக இதயத் தமனி நோய் (CAD) உள்ளவர்களுக்கும், கொலஸ்ட்ரால் கூடுதலாக இருப்பவர்களுக்கும் ஸ்டாடின் வகை மருந்துகளைக் கொடுப்பது உண்டு. இந்த மருந்துகள் ரத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்படாமல் பார்த்துக்கொள்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் சான் டய்கோ மருத்துவ மையத்தில் (San Diego Medical Centre) நடைபெற்ற அந்த ஆய்வில் ஸ்டாடின் மருந்துகளுக்கு கரோனா வைரஸை நேரடியாகத் தாக்கி அழிக்கும் திறன் உள்ளது அறியப்பட்டுள்ளது. எப்படியெனில், கரோனா கிருமிகள் மனித செல் உறைகளில் உள்ள ‘ஏஸ்2’ புரத ஏற்பிகளோடு இணைவதை ஸ்டாடின் மருந்து தடுத்துவிடுகிறது; அங்குள்ள கொழுப்பை அகற்றிவிடுகிறது. ஆகவே, கரோனா கிருமிகள் இவர்கள் உடலுக்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடிவதில்லை. இதன் பலனால், இவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு பாதி அளவுக்குக் குறைந்துவிடுகிறது. நோய் விரைவில் குணமாகவும் இது வழி அமைக்கிறது. கரோனா தொற்றைக் குணப்படுத்த இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள ஸ்டாடின் மருந்து இரட்டைப் பாதுகாப்பு தருகிறது எனும் செய்தி ஆறுதல் அளிக்கிறது.

ஆக, ‘ஃபெவிபிரவீர்’, ‘ரெம்டெசிவீர்’ போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கரோனா தொற்றியதுமே எடுத்துக்கொள்ள வேண்டியதும், கரோனாவில் மீண்டவர்கள் அனைவரும் மருத்துவர் கூறும் கால இடைவெளியில் மறுபரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதும் தற்போது கட்டாயமாகியுள்ளது. நம் சுகாதாரத் துறை இதற்கான ஏற்பாடுகளைப் பெருநகரங்களில் செய்துவருகிறது. இவற்றை மாவட்ட அளவிலும் நகராட்சி அளவிலும் நீட்டித்தால் சிறு நகரங்களில், கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். மக்களும் மறுபரிசோதனைகளை அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு : gganesan95@gmail.com

செப்டம்பர் 29: உலக இதய தினம்

https://www.hindutamil.in/news/

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதயத்தை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் அஜீத் ஆனந்த கிருஷ்ண பிள்ளை

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன – உலக சுகாதார அமைப்பு

உலகில் கொரோனா பரவல் காரணமாக 93%மான நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிலவும் கொரோனா பாதிப்பு காரணமாக 130 நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் இது தொடர்பான நிதியுதவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள மனநலம் தொடர்பான நிகழ்வில் பிரபலங்கள், உலகத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. எனவே பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.ilakku.org/கொரோனாவால்-மனநலம்-சார்ந்/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

 

கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் சீன் பின்னி கூறும்போது, “இதய நோயால் பாதிக்கப்பட்டவர் களின் இதயம், வைரசால் சேதம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும், முந்தைய நோய்கள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கும் இதய சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.


அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி பத்திரிகை நடத்திய ஆய்விலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளுக்கு 25-30 சதவீதம் பேருக்கு இதயத்தில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/02012236/US-expert-warns-of-corona-virus-attacking-heart.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.