Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையை காப்போம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவளப்பாறைகள் இல்லையென்றால் நம் நிலைமை என்ன தெரியுமா? 

 

செயற்கை பவளப்பாறை: தமிழகத்தின் முன்னோடி திட்டம் 

 

ஆஸ்திரேலியாவில் உள்ள உலக அதிசயத்தில் ஒன்றான பெருந் தடுப்புப் பவளத்திட்டு

 

  • Replies 152
  • Views 26.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

உடையார் உங்கள் பதிவுகளுக்கு முதல் கோடி பாராட்டுக்கள்.இப்படியான திரிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு எமது உறவகளுக்கு நேரம் இல்லை.அவர்கள் ஆராச்சிகளில் வலு பிசி.

நன்றி சுவைப்பிரியன் கருத்திற்கு 

பேரழிவாக மாறக்கூடிய கப்பலின் தற்போதைய நிலை

118768040_3319991388083046_4861951248474837008_o-960x640.jpg?189db0&189db0

 

அம்பாறை – சங்கமன் கந்த கடற்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் விபத்து உள்ளாகி தீப்பற்றிய கப்பலில் இருந்து தீப்பரவல் காரணமாக இலங்கை கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாய நிலை இதுவரை நீங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று 38 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தாலும், கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளதால், கப்பல் மிதந்தவாறு இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்போது 22 கடல் மைல் தொலைவில் கப்பல் உள்ளதென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கப்பல் மிக மெதுவாக தெற்கு நோக்கி மிதந்து செல்வதாகவும் கப்பல் 60 அடி ஆழத்தில் உள்ளதாகவும் கப்பலில் இருந்த 23 பேரில் தற்போது 19 பேர் கடற்படையினருடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

இக்கப்பலினால் நாட்டின் கடல் எல்லைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளிக்கையில்,

“நமது கடல் எல்லைக்கு அப்பால் கப்பலைத் தள்ளிச்செல்ல முடியுமாக இருந்தால், அதனை செய்வதே எமது முதலாவது முயற்சி. கப்பலில் இருக்கும் 2,000,72 தொன் மசகு எண்ணெய் கடலில் கலப்பதுதான் இரண்டாவதாக நாம் அடையாளம் கண்டுள்ள பாரதூரமான நிலைமை. அப்படி நடந்தால் அது நமது கடற்பரப்பில் மாத்திரமல்ல முழு உலகத்தையும் பாதிக்கச் செய்யும். அதனை எதிர்கொள்வதற்கு நாடென்ற ரீதியில் எமக்கு இருக்கும் வளங்களும் சக்தியும் குறைவானது. எனவே, எமக்கு இருக்கும் வளங்களின் மூலம் கடல்வாழ் உயிரிழனங்களை எம்மால் பாதுகாக்க முடியாது. அந்த கடல்வாழ் உயிரினங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொண்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதற்காக மேல் நோக்கி வரும்போது மசகு எண்ணெய்யை அவை உட்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்” – என்றார்.

இதேவேளை குறித்த கப்பலானது கப்பலின் உரிமையாளர்களால் சர்வதேச காப்பு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனக் குழு ஒன்று 7ம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/பேரழிவாக-மாறக்கூடிய-கப்ப/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காடு வளர்ப்பு பற்றி நம்மாழ்வார் கூறியது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களோடு இணைந்து காடுகளை வளர்ப்பது எப்படி?-நம்மாழ்வார்-பகுதி 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 ஏக்கரில் குறுங்காடு... வழி காட்டிய நம்மாழ்வார்!

நமக்குப் பேரரணாக இருந்த காடுகளை அழித்தோம்; இயற்கையைச் சிதைத்தோம்; புயல், மழை, வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற வடிவங்களில், இயற்கையின் கோபத்தைச் சம்பாதித்தோம். ‘இப்போதாவது இயற்கையைச் சீரமைக்காவிட்டால், நாம் இன்னும் நிறைய இயற்கைப் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு விதையை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவருடைய அறிவுரைப்படி 15 ஏக்கர் நிலத்தில் சூழலியல் காக்கும் அடர் வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன். அந்தச் சூழலியல் காக்கும் அடர் வனத்துக்குள் 500 வாழைகளும், கிராம்பும் சாகுபடி செய்து, தற்சார்பு வாழ்வியல் முறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் குணசேகரன்.  

நிருபர் -  துரை.வேம்பையன்
வீடியோ -  நா.ராஜமுருகன்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இயற்கை காடுகள் எல்லாம்,  கான்கிரீட் காடுகளாக 
மாற்றிக்கொண்டே போவதால், மழையின்மை, பருவநிலையில் 
மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை மீண்டும் பழைய நிலைக்கு 
மாற்றவேண்டுமானால் இழந்த காடுகளை  மீட்க வேண்டும். 
குறுகிய காலத்தில் அடர் காடுகளை வளர்க்க உதவும்

 

புதிய காடுகளை உருவாக்குவோம் 

 ஒருபோதும் காடாக இருந்திராத நிலத்தில் விதைகளை விதைப்பதோ அல்லது மரங்களை நடுவதோ காடு வளர்ப்பு ஆகும். மீண்டும் காடாக்குதல் என்பது முற்றிலுமாக அழிந்து போன, உதாரணமாக மரங்கள் வெட்டப்பட்ட காட்டை மீண்டும் உருவாக்குவதாகும். நூறாண்டு காலமாக பல்வேறு நாடுகள் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்கொண்டு வருகின்றன. காடுகளை மீண்டும் உருவாக்கவும் உயிரியற் பல்வகைமை வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் உதவவும் அரசாங்கங்களும் அரசு சாரா அமைப்புகளும் காடு வளர்ப்பு திட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றன. (இங்கிலாந்தில் காடு வளர்ப்பு என்பது நிலத்தை சட்ட ரீதியாக அரசு காடாக மாற்றுவதைக் குறிக்கப்படும்.) காடுகளின் வளத்தைப் பெருக்க நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

நேர்மறை வினைகள் - மரம் நடுவது, காடு வளர்ப்பது மற்றும் காட்டின் பயனை விளம்பரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
எதிர்மறை வினைகள் - வனப்பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் மூலம் காடுகளை அழிப்பதைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது
இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் காடு வளர்ப்பது என்ற நேர்மறை வினையாகும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

7000 சதுர அடியில் அமைந்துள்ள குறுங்காடு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Brazilian Couple turned a Desert into Forest with 4 Million Trees | Tamil | Dharani

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Permaculture instructor Andrew Millison journeys to India to film the epic work of the Paani Foundation’s Water Cup Competition. We tour the village of Garavadi, in Maharashtra, who competed in the 2019 competition to install the most amount of water harvesting structures in a 45 day period. Guided by Paani Foundation’s chief advisor, Dr. Avinash Pol, we visit the work and see the effects of a watershed-scale groundwater restoration project that has dramatically improved the lives, economy, ecology and stability of this village, all in 45 days!

பானி அறக்கட்டளையின் நீர் கோப்பை போட்டியின் காவியப் படத்தை படமாக்க பெர்மாகல்ச்சர் பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரூ மில்லிசன் இந்தியா செல்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள காரவாடி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்கிறோம், அவர் 2019 போட்டியில் 45 நாள் காலகட்டத்தில் அதிக அளவு நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவ போட்டியிட்டார். பானி அறக்கட்டளையின் தலைமை ஆலோசகர் டாக்டர் அவினாஷ் பொல் அவர்களால் வழிநடத்தப்பட்டு, இந்த கிராமத்தின் வாழ்க்கை, பொருளாதாரம், சூழலியல் மற்றும் ஸ்திரத்தன்மையை 45 நாட்களில் வியத்தகு முறையில் மேம்படுத்திய நீர்நிலை அளவிலான நிலத்தடி நீர் மறுசீரமைப்பு திட்டத்தின் விளைவுகளை நாங்கள் காண்கிறோம்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியவாகி முறை பற்றி திரு ராஜ சுந்தர் அவர்களின் தெளிவான விளக்கம்|Part 1

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்களை இணைக்கும் உடையாருக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பஞ்சமே வராது இவரை போல் அனைவரும் செய்தால்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்பற்றாக்குறையால் விவசாயத்தைக் கைவிடும் நிலையில் மூதூர் விவசாயிகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100 ஏக்கர் காடு 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கன்பராவிலும் The National Arboretum ஒன்று உள்ளது.. உலகிலும் அவுஸ்ரேலியாவிலும் அருகி வரும் மர இனங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட வனமாகும்

2003 ஆண்டில் கன்பராவில் ஏற்பட்ட காட்டு தீயிற்கு பின் இந்த காட்டுதிட்டம் உருவாக்கப்பட்டது..அதைப்பற்றிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதனா மருத்துவமனைக் கழிவுகளை மயானத்தில் கொட்டியதால் போராட்டம்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை செம்மணியில் புதைப்பதற்கு எதிர்ப்பு

 
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்திற்குள் புதைக்கும் செயற்பாடு பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் 3 தினங்களிற்கு முன்னர் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாணத்தில் ஜே.சி.பி்இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு அக் குழியிலே கழிவுகளை கொட்டப்பட்டுள்ளன

இவ்வாறு கொட்டிய கழிவுகளை நல்லூர்ப் பிரதேச சபையினர் அவதானித்து போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் அவ்வாறு பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதவேண்டாம் என அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு குழியில் கொண்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மூடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் பிரதேச்சபை உறுப்பினர்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது, இந்த கழிவுகளை மூடுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டோம் எனக் கூறியுள்ளனர்.

தமது சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயாணத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த விடயத்தை கண்டித்து நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மயானத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இடம்பெற்ற சமயம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசார் சம்ப இடத்திற்கு வந்து வீதி தடையை விலக்கி போக்குவரத்துக்கு ஒத்துழைத்ததோடு இவ் விடயம் தொடர்பில் உரிய தீர்வை எட்டுமாறும் கூறினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில. விதிமுறையை மீறிய வகையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய்க் கழிவுகளும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இரகசியமாக எரியூட்டப்பட்டமை , பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் அதிகளவான மருந்துகள் குடியிருப்பின் மத்தியில் இரகசியமாக தீ இட்டு எரித்தமை போன்ற சம்பவங்கள் வெளிவந்தமை போன்று தற்போது 3வது சம்பவமும் வெளிவந்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

 

http://www.ilakku.org/வைத்தியசாலையின்-மருத்து/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Canada Garbage Day And Collection

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

 

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதிவு: செப்டம்பர் 14,  2020 05:24 AM
வாஷிங்டன், 

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒருமாதமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன.


மேலும் பெரும் தீ காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் தவித்து வருகின்றனர். கொளுந்து விட்டு எரியும் நெருப்பு காரணமாக கலிபோர்னியாவின் பெரும்பகுதியில் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் 28 இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கலிபோர்னியாவில் பற்றிய நெருப்பு அங்கிருந்து ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. ஒரேகான் மாகாணத்தில் இதுவரை 10 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது.

ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் 5 சிறிய நகரங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார்.மேலும் நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று வாஷிங்டன் மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சுமார் 2 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகிவிட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாகாணத்தில் மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

இதனிடையே ஒரேகான் மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே ஒருவர் காட்டுத்தீக்கு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் வாஷிங்டன் மாகாணத்தில் நேற்று முன்தினம் 1 வயதான பச்சிளம் குழந்தை காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் மூலம் மேற்குத் கடற்கரையோர மாகாணங்களில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர ஆயிரக்கணக் கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/09/14052454/Crews-search-for-survivors-as-wildfires-in-western.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்று சூழல்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.