Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களைத்த மனசு களிப்புற ......!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

629174182_1472732147547830_4923696247090

பொடியன் பொல்லாதவன் ......! 😂

  • Replies 708
  • Views 122.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

628031791_1458283185890441_2254606768898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


osorendtpSf3a67ui04t9091 1lt5c17g2019m807f1 ,h3er7v8:éiirc50
 ·

மார்ச் 28, 2010 அன்று சீனாவில் ஒரு பெரிய மாரத்தான் ஓட்டப்பந்தயம் (Zheng-Kai International Marathon) நடந்தது. அந்தப் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் உலகையே வியக்க வைத்தது.

கென்யாவைச் சேர்ந்த ஜாக்குலின் என்ற வீராங்கனை அந்தப் பந்தயத்தில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்.அவர் முதலிடத்தில் வந்து வெற்றி பெற்றால் அவருக்கு $15,000 (சுமார் 12 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகை கிடைத்திருக்கும்.பந்தயத்தின் 10 வது கிலோமீட்டர் தூரத்தை அவர் கடந்தபோது சீனாவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரரை அவர் கவனித்தார்.

அந்த வீரருக்கு இரண்டு கைகளும் இல்லை. தாகத்தினால் தண்ணீர் குடிக்க முயன்ற அவரால் அங்கிருந்த மேஜையில் இருந்த தண்ணீர்க் கோப்பையை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.மற்ற வீரர்கள் அவரை முந்திக்கொண்டு ஓடியபோது ஜாக்குலின் தனது வேகத்தைக் குறைத்தார்.வெற்றி பெறுவதை விட அந்த வீரருக்கு உதவுவது முக்கியம் என்று நினைத்தார்.10-வது கிலோமீட்டரில் இருந்து 38-வது கிலோமீட்டர் வரை அதாவது சுமார் 28 கிலோமீட்டர் தூரம் அந்த வீரருடனேயே ஓடினார்.ஒவ்வொரு தண்ணீர் நிலையத்திலும் அவரே தண்ணீரை எடுத்து அந்த வீரருக்குப் புகட்டினார்.

கடைசி 4 கிலோமீட்டர் தூரம் இருந்தபோதுதான் ஜாக்குலின் மீண்டும் வேகமாக ஓடத் தொடங்கினார்.அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் (நேரம்: 2:38:02). முதலிடம் வந்தவரை விட வெறும் 68 நொடிகள் மட்டுமே அவர் பின்தங்கியிருந்தார்.இந்தத் தியாகத்தால் அவருக்கு சுமார் $9,000 (சுமார் 7.5 லட்சம் ரூபாய்) இழப்பு ஏற்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை இழந்த பிறகும் ஜாக்குலின் அதற்காக வருத்தப்படவில்லை. அந்த வீரரின் உயிரைக் காப்பாற்றிய திருப்தியே அவருக்குப் போதுமானதாக இருந்தது......!

633497895_25844729151802936_205341612036

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

597431214_1267938355364507_4286928936069

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


tdnSpsooer1659413 u40lf5337683agcmal3iu238h5gc0uth0ac05ca0i2
 ·

போர்ச்சுகல் நாட்டின் சிறிய நகரம் ஒன்றில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தான் அந்தச் சிறுவன். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள். நான்காவதாக ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா என்ற கவலையில் கருவிலேயே கலைத்துவிட நினைத்த அம்மா, கடைசி நிமிடத்தில் மனம் மாறியதால் அவன் உயிராக வந்து பிறந்தான்.

தகரக்கூரை வேய்ந்த சிறிய வீடு. அம்மா சமையல் வேலை செய்தும், அப்பா நகராட்சிப் பூங்காவில் வேலைசெய்தும் அவர்களை வளர்த்தனர். கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ தினங்களில்கூடப் பிள்ளைகளுக்குப் புத்தாடை வாங்கித் தர முடியாத வறுமை. படிக்க இயலாத அந்தச் சிறுவன், கால்பந்து மீது வெறிகொண்டு அலைந்தான். சில ஆண்டுகளிலேயே போர்ச்சுகல் தேசமே போற்றும் வீரனாக உருவெடுத்தான்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற மகத்தான வீரரின் கதை இது. கால்பந்து உலக ஜாம்பவான்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். தான் விளையாடிய கிளப்களுக்கும் தன் தேசத்துக்கும் அதிக கோப்பைகளை வென்று கொடுத்த வீரர். ஐரோப்பாவில் அதிக கோல் அடித்த வீரர், அதிக விருதுகள் வாங்கிய வீரர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களைப் பட்டியல் எடுத்தால், முதல் ஐந்து இடங்களுக்குள் வருவார்.

இவ்வளவு சம்பாதித்தாலும் அவரிடம் பணிவு இருக்கிறது. ரொனால்டோவின் தந்தை குடிபோதைக்கு அடிமையாகி இறந்துபோனார். அதனால் அவர் மதுவைத் தொடுவதில்லை. நாடு முழுக்க குழந்தைகளின் கல்வி மற்றும் கால்பந்து அகாடமிகளுக்குத் தன் அறக்கட்டளை மூலம் உதவி செய்கிறார். விளையாட்டு வீரர்கள் பலர் உடலில் டாட்டு குத்திக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக ரத்த தானம் செய்துவரும் ரொனால்டோ, அந்தக் காரணத்துக்காகவே டாட்டூ குத்திக்கொள்ளவில்லை. அரிதான முன்மாதிரி ரொனால்டோ!

யானை ......!

641427714_916882641130097_71977895937453

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


repSodsntofafclg325il477h 29hh2f4fith621m0umm1f2titihml0fi1l
 ·

தோனி என்னடா பண்ணினார் தோனி என்னடா செஞ்சார் என்று எல்லோரும் கேட்கிறார்கள்

இன்னிக்கி தோனி இல்லனா இந்தியா உலகத்துல இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளில் தோல்வியே பெற்று வந்த இந்திய அணி கபில்தேவ் க்கு பிறகு முதன்முதலாக உலக கோப்பையில் முத்தமிட வைத்தவன் அவன்

அதன்பின் ரோகித் சர்மாவும் இறுதிவரை சென்று கடைசி கட்டத்தில் தவறவிட்டார் ஆனாலும் அதற்கு இணையான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 என்ற இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் தோனிக்கு பிறகு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்

இப்படி இரண்டு சாம்ராஜ்யத்தின் கீழ் உருவான இந்த இந்திய அணி இப்போது இன்னொரு கோப்பையை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது தோனி இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டி ஜெயிக்கும் அதற்கு அவர் களத்தில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கிடையாது. மைதானத்தில் இருந்தாலே போதும் தோனி என்பது வெறும் பெயரல்ல அது ஒரு மந்திரம்

ஆனால் தோனி மற்றும் ரோகித் என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கும் மிகப் பெரிய ஜாம்பவான் என்றால் அது ஹரியானாவின் சூறாவளி கப்பில் தேவ் அவர் விளையாடிய காலத்தில் நாம் கிரிக்கெட் பார்க்கவில்லை நான் பிறக்கவில்லை என்பதால் அவரின் புகழ் எனக்கு அந்த அளவுக்கு தெரியாமல் போய்விட்டது மூன்று ஜாம்பவான்களுக்கும் வெற்றி வணக்கத்தை இந்திய அணி இந்த கோப்பையை வென்று கொடுக்கும்

MS Dhoni.....!

648979073_2287391618437764_5622144045884

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


rtonepodSsetg4à1636 6L1 1m 8u1:0tg7s63u2grm1ca1m a80tl89ic3h
 ·

2026 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே (CSK) அணி உண்மையிலேயே மிரட்டலாகத்தான் தெரிகிறது! ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிஎஸ்கே இந்த முறை கையில் எடுத்துள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பலம் மற்றும்

🏏"பேட்டிங் மற்றும் எக்ஸ்-ஃபேக்டர் (X-Factor)

* சஞ்சு சாம்சன் & ஆயுஷ் மத்ரே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டிரேட் (Trade) செய்தது இந்த ஆண்டின் மிகப்பெரிய திருப்புமுனை. டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடி ஃபார்ம், சிஎஸ்கே-வின் டாப் ஆர்டருக்கு ஒரு பெரிய பலம். இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால், ருதுராஜ் உடன் அவர் தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்புள்ளது.

* ருதுராஜ் கேப்டன் ருதுராஜின் நிதானமும், ஷிவம் துபே

சிதறடிக்கும் அதிரடியும் சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருக்கும்.

* டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis): 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரெவிஸ், மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழியக் காத்திருக்கிறார்.

பந்துவீச்சு கூட்டணி

* மட் ஹென்றி & நைதன் எல்லிஸ்: டி20 உலகக்கோப்பையில் மட் ஹென்றி காட்டிய வேகம் மற்றும் நைதன் எல்லிஸின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம்.

* கலீல் அகமது & நூர் அகமது: பவர்பிளே ஓவர்களில் கலீல் அகமதுவின் இடதுகை வேகப்பந்து வீச்சும், நூர் அகமதுவின் மாயாஜால சுழலும் எதிரணிகளைத் திணறடிக்கும்.

🔥" இளம் திறமைகள் மற்றும் அனுபவம்

* பிரசாந்த் வீர் & கார்த்திக் சர்மா: இந்த இரு இளம் வீரர்களையும் தலா ₹14.20 கோடி கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள இவர்கள் ஜடேஜா மற்றும் தோனியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'பியூச்சர் ஸ்டார்ஸ்' ஆகப் பார்க்கப்படுகிறார்கள்.

* MS தோனி: 'தல' தோனி இந்த முறையும் ஃபினிஷராக கடைசி 2-3 ஓவர்களில் களமிறங்கி ஆட்டத்தை முடிக்கத் தயாராக இருக்கிறார்.

நிச்சயமாக, அனுபவம் மற்றும் இளமைத் துடிப்பு என சிஎஸ்கே இந்த முறை ஒரு "ஸ்பெஷல்" கலவையை உருவாக்கி இருக்கிறது. ஜடேஜா போன்ற ஒரு ஜாம்பவான் இல்லாதது குறையாகத் தெரிந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் புதிய இளம் வீரர்களின் வருகை அந்த இடத்தை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிப்பு சரியாக இருந்தால், 6-வது ஐபிஎல் கோப்பையைச் சென்னை ஏந்துவது உறுதி! #WhistlePodu

சிஎஸ்கே-வின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மார்ச் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

Voir la traduction......!

652584724_2364994253985078_2499318433247

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.