Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப் பரவலாக்கம் நாட்டை பிளக்கும் – வீரசேகர


Recommended Posts

அதிகாரப் பரவலாக்கம் நாட்டை பிளக்கும் – வீரசேகர

sarath-weerasekera-geneva-960x540.jpg?189db0&189db0

 

அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிளவுப்படுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதால் பாரிய பிரச்சினைகளை ஏற்படும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

மாகாண சபை முறைமை இல்லாமல் தற்போது இரண்டு வருடங்களை நாம் கடந்து விட்டோம். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக- பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராய வேண்டும். இதனால், நாடு பின்நோக்கி நகர்ந்துள்ளதா, அல்லது நன்மை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். நிதி விவகாரம் குறித்து பார்க்க வேண்டும்.

வளர்ந்துவரும் ஒரு நாட்டில் நிதியை அநாவசியமாக பயன்படுத்தக்கூடாது. இதனால்தான் மாகாணசபை முறைமை குறித்து ஆராயவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” – என்றார்.

https://newuthayan.com/அதிகாரப்-பரவலாக்கம்-நாட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, செண்பகம் said:

அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதால் பாரிய பிரச்சினைகளை ஏற்படும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும்.

தான் சொல்வது என்னவென்று இவருக்கே விளங்கிச்சோ என்னவோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தான் சொல்வது என்னவென்று இவருக்கே விளங்கிச்சோ என்னவோ? 

ஆளுக்கு நிறை மப்பு என்று நினைக்கிறன், முக்கால்வாசி  சிங்கள அரசியல் வியாதிகள் இதே நிலைமையில் தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.